பதினொன்றாவது சென்னை பன்னாட்டு ஆவணப்பட குறும்பட விழா 2023

author
0 minutes, 2 seconds Read
This entry is part 11 of 18 in the series 5 மார்ச் 2023

சுப்ரபாரதிமணியன்

பதினொன்றாவது சென்னை பன்னாட்டு ஆவணப்பட குறும்பட விழா 2023 சென்னையில் 20-ம் தேதி ஆரம்பித்தது இந்த திரைப்பட துவக்க விழாவில் பேராசிரியர் மார்க்ஸ் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் , உலக சினிமா பாஸ்கரன் போன்றோர் கலந்து கொண்டார்கள் ,பேரா மார்க்ஸ் விழாவின் துவக்க உரை நடத்தும்போது ” திரைப்படம் என்பது கற்பனையும் கற்பிதங்களும் கொண்டது. ஆனால் ஆவணப்படம் என்பது உண்மைகளை மட்டும் தருவது. நேரடியாக மக்கள் பங்கு பெற்ற அனுபவம் ஆவணப்படத்தில் இருக்கும். வரலாற்றில் மறைந்து போகும் பல விஷயங்கள் உள்ளன. வரலாற்றில் மறைந்து போகும் பல சாதனைகளும் செய்கிறார்கள் ஆனால் வரலாறு மறந்து போகக்கூடாது என்று பதிவு செய்யும் ஒரு துறை தான் ஆவணப்படம்” என்றார். சுப்ரபாரதி மணியன் பேசும் போது ” பல திரைப்பட விழாக்களுக்கு செய்திருந்தாலும் முழுமையாக குறும்பட ஆவணப்பட விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை அமுதம் அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.அப்படி இரு விழாக்களை திருப்பூரில் நடத்தியிருக்கிறேன், இந்த ஆவணப்படங்கள் படங்கள் நிஜத்தன்மை கொண்டவை .திரைப்படங்களில், திரைப்பட்த்துறைக்குச் செல்வதற்குரிய விசிட்டிங் கார்டாக பலர் பயன்படுத்தினாலும் அவை பல்வேறு தரப்பு மக்களின் பல்வேறு நிலம், நிலை சார்ந்த மக்களின் வாழ்க்கையை சரியாக பதிவு செய்து கொண்டிருப்பவை என்றார்.
துவக்க விழா படமாக அன் டாக்குமெண்டெட் என்ற ஒரு படம் திரையிடப்பட்டது. இது பில்லேண்டு நாட்டில் வசிக்கும் சரியான ஆவணங்கள் இல்லாமல் அகதிகளாக இருக்கும் மக்களைப் பற்றிய ஒரு ஆவணப்படம். முதல் காட்சியிலேயே ஒரு கடற்கரை. அங்கு ஓரத்தில் அலை அடித்து ஒதுங்கும் புல்லாங்குழலும் போத்தலையும் பாக்கலாம். அது நமக்கு தரும் ஒரு படிவம் அதிர்ச்சியை தருகிறது, எந்த தரவுகளும் டாக்குமெண்ட்டும் இல்லாத அகதிகளை வாழ்க்கை சொல்லப்பட்டிருக்கிறது, புகலிட அகதியாக யோசித்து ஓமர் அறிமுகமாகிறார், அமீரா தான் வாழ்ந்த வாழ்க்கையை கண்ணீர் மல்க சொல்கிறார்,
சில அகதிகளை சிலர் அழைத்து சிறு அளவில் சாப்பாடு தருகிறார்கள். விருந்துகளில் அவர்களை ஒரு பங்காக ஆக்கிக் கொள்கிறார்க.ள் அவர்கள் குடும்பத்தோடு உறவு வைத்துக் கொள்ள முடிவதில்லை. எங்கோ வெளிநாடுகளில் இருக்கும் அகதிகள் வீடியோ மூலம் தங்கள் குடும்ப உறுப்பினர்களை பார்த்து கண்ணீர் வடிக்கிறார்கள். எங்களுக்கென்று ராஜ்ஜியம் எதுவும் இல்லை. எங்கே போக யாரிடம் போக என்று கேட்கிறார்கள். ரெசிடென்ஸ் பர்மிட் என்பது அவர்களுக்கு ஒரு கனவாகவே இருக்கிறது இந்த சூழலில் பிறந்த நாளும் வருகிறது அந்த பிறந்த நாளை சுற்றி இருப்பவர்கள் சிறு கொண்டாட்டங்களாக பிறந்தநாளுக்கான அர்த்தத்தை உண்டு பண்ணுகிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் இலங்கையில் அகதிகள் குறித்த நிலையை இந்த படம் ஞாபகப்படுத்தியது குடியுரிமை இல்லாமல் இருப்பது, குடியுரிமை அடிப்படையில்லாமல் இருப்பது ஒரு மனிதன் பிணமாக வாழ்வதற்கு சமமாக இருக்கிறது. இந்தியாவில் லஞ்சம் கொடுத்தால் பணம் கொடுத்தால் குடியுரிமை இல்லாமல் இருக்கும் மக்களும் சுதந்திரமாக இருக்க முடியும். நாடுகளுக்கு இடையிலான எல்லைக்கோடுகள் என்பது இப்படி அகதிகளாக, சம உரிமையாற்றவராக மனிதர்களை ஆக்குகிறது அவர்கள் வேலையின்மைக்கு பொருத்துகிறார்கள். கடத்தல் போன்றவற்றிலும் ஈடுபட வேண்டி இருக்கிறது. நம்முடைய மூதாதையர்கள் பற்றிய விவரங்கள் இருந்தால் தான் நாம் வாழ முடியும் என்பதை அரசு சொல்லிக் கொண்டிருக்கிறது. அரசு போன்றவை பல சமயங்களில் ஆபத்தான அமைப்புகள் தான் என்பதை இந்த ஆவணப்படம் சொல்கிறது. வீடியோ உணர்வுகளை பார்த்து ஆறுதல் கொள்ளும் மனிதர்களுக்கு குடியுரிமை சார்ந்த தரவுகள் கொடுக்கு மகிழ்ச்சிகள் எங்கும் இல்லை என்றாகிறது. முதல் நாளில் வெளியிடப்பட்ட இன்னொரு முக்கியமான குறும்படம் பிரீடம் ஸ்கொயர். அமெரிக்கர்களும் ரசிகர்களும் இந்த ஒரு பயணத்திற்கு தயாராகிறார்கள். வேற்று கிரக பயணத்திற்கு தயாராக உள்ளபோது அவர்கள் என்னென்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பது தான் இந்த படம் சொல்கிறது. காஸ்மிக் ரொமான்டிக் சீசன் என்று வெளி உலக பயணத்தை அவர்கள் வருத்திக் கொள்கிறார்கள். சாப்பாட்டு விஷயங்களில் பொட்டலங்களும் டியூபுகளில் இருக்கிற உணவுகளும் அவளுக்கு தேவையாக இருக்கிறது. ரத்த அழுத்தத்தையும் வேறு உடல் பரிசோதனையோ செய்யக்கூடிய கருவிகளை வைத்துக்கொண்டு தங்களை நிர்வகித்துக் கொள்கிறார்கள மேனிஷ் அண்ட் எக்ஸ்ப்ளோர் கிரியேச்சர் என்பதும் அவர்களுக்கு தெரிகிறது. அவர்கள் நிலவுக்கு போவதால் கற்பனைத்துக் கொள்கிறார்கள். இப்படி பல மாதங்கள் பல நாட்கள் அவர்கள் தனித்து கடலில் விடப்படுவதும் தனித்த பகுதிகளை கண்டறிவதும் காட்டப்படுகிறது ஒரு கற்பனை பயணம் விண்வெளிக்கு செல்வதற்கு முன்னால் அவர்களுக்கான ஒரு ஒத்தையைப் போல இந்த படம் அமைந்திருக்கிறது. பனிப்பிரதேசத்திற்குச் செல்லும் மனிதர்களும் இப்படி பயணம் மேற்கொள்கிறார்கள். அமெரிக்கர்கள் செட் போட்டு நிலவுவுக்கு போவதாக காட்டியிருக்கிறார்கள் என்றார்கள். ஸ்பேஸ் ஒடிசி போன்ற படங்களில் இந்த வகை பயணத்தை காட்டி இருக்கிறார்கள். அமெரிக்கா மனிதர்கள் நிலவில் காலடி வைத்ததும் இந்த ஸ்பேஸ் ஒடிசி படத்தில் உள்ள சந்திரனில் நுழையும் காட்சிகளும் ஒரே மாதிரியாக இருப்பதை உலக சினிமா பாஸ்கர் சுட்டிக்காட்டினார். அமெரிக்கா செய்யும் மந்திர விஷயங்களில் இரவுக்கு போனது கூட ஒன்றாகிப் போனதோ என்ற ஐயத்தை அந்த படம் எழுப்பியதாக சொன்னார் அதேபோல் விண்வெளிக்கு செல்கிற பல பயணங்களுக்கு ஒத்துகையாக சில தங்களை பார்த்துக் கொள்வது தனிமைப்படுத்திக் கொள்வது என்பதை பற்றிய ஒரு ஆவணப்படம் இது. ஒரு வகையில் சுவாரஸ்யம் தருகிறது.

தேய்வழக்கு திரைமொழிகளை அருங்காட்சியகத்துக்கு அனுப்பி விட்டு புத்தம் புதிய திரைமொழிகளை உருவாக்குவதில் முன்னணியாக இருப்பவை ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்கள்.

அது மட்டுமல்ல!

சம காலத்தில் உள்ள உலகின் பிரச்சினைகளை நுட்பமாக விவரித்துக் காட்டுபவை ஆவணப்படங்கள்.

எனவேதான் திரைப்பட விழாக்களிலேயே முக்கியத்துவம் மிக்கது ஆவணப்பட விழாக்கள் என்றார் பாஸ்கரன்..

ஆவணப்பட இயக்குநர் அமுதன் ஒருங்கிணைப்பில், சென்னையில் பத்தாண்டுகள் வெற்றிகரமாக நடந்து 11 வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது ‘சென்னை பன்னாட்டு ஆவணம் மற்றும் குறும்பட விழா’.

11வது சென்னை பன்னாட்டு ஆவணம் & குறும்பட விழா வருகின்ற பிப்ரவரி 20 முதல் 28 வரை நடைபெற்றது.

தேர்வு செய்யப்பட்ட படங்கள் சென்னையில் கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நூலகம், திரையரங்கம் என 11 இடங்களில் திரையிடப்படுகிறது.

திரையிடல் அன்று ஒளிப்பதிவாளர்&இயக்குநர் பிசி ஸ்ரீராம், இயக்குநர் வசந்த், இயக்குநர் கதிர், இயக்குநர் சிஜே பாஸ்கர், இயக்குநர்& கவிஞர் பிருந்தா சாரதி, இயக்குநர் எம்ஆர் பாரதி, நட்சத்திரக் கலைஞர் அர்ச்சனா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்..

விழாவை மறுபக்கம் அமைப்பு, எல்வி பிரசாத் திரைப்படக்கலை கல்லூரி, சாருலதா பதிப்பகம், சென்னை உலக சினிமா விழா ஆகியவை ஒருங்கிணைந்து நடத்தின.

இனி இறுதி நாள் நிகழ்ச்சிகள் பற்றி நண்பர் பாஸ்கரன் அவர்களின் அபிப்ராயங்களைப் பார்ப்போம்

பதினோராவது சென்னை பன்னாட்டு ஆவணம் மற்றும் குறும்பட விழா நிறைவுற்றது.

நிறைவு நாள் விழாவில் வருகின்ற பார்வையாளர்கள்,சிறப்பு விருந்தினர்கள், மற்றும் படைப்பாளிகள் என அனைவரையும் வரவேற்று ‘சென்னை உலக சினிமா விழா’ சார்பில் சூடான கேசரி, வடை, மற்றும் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

திரையிடல் முடிந்ததும் தோழர் அருள்மொழி அவர்கள் படைப்பாளிகளுக்கு விருதுக்கான சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

இவ்விழாவின் சிறப்புகளை மற்றும் தேவைகளை குறித்து மிகச் சிறப்பாக பேசினார்.

நீதிமன்றங்கள் மெல்ல மெல்ல பாசிச ஆட்சியாளர்கள் கைக்குள் அடக்கப் படுவதை கவலையுடன் தெரிவித்தார்.

ஆவணப்படத்திற்காக தொடர்ந்து இயங்கும் தோழர் அமுதனுக்கு அனைவரும் தோள் கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

.

விருது வழங்கும் நிகழ்ச்சி நிறைவுற்றதும் இயக்குநர் சோமிதரன் உருவாக்கிய தாய் நிலம் என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது.

முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு பிறகு ஈழத் தமிழர்கள் நிலம் மற்றும் உரிமைகள் பறிக்கப்படுவதை இந்த ஆவணப்படம் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டியது.

சிங்கள ராணுவம் கடற்கரை தங்குமிடம் நடத்துகிறது.

தமிழர்களுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்து, விவசாயம் செய்து காய்கறிகள் விற்கிறது.

பால் விற்கிறது.

வணிக வளாகம் கட்டி நடத்துகிறது.

சாலையோர உணவகங்கள் நடத்துகிறது.

அன்றாட உபயோகப் பொருட்களை விற்கும் அங்காடி நடத்துகிறது.

மொத்தத்தில் தமிழர்கள் செய்து வரும் தொழில்கள் அனைத்தையும் ராணுவம் செய்து அவர்கள் வயிற்றில் அடிக்கிறது.

கதியற்ற தமிழ் பெண்கள் பாலியல் தொழில் செய்தால் அதை அபகரிக்க சிங்களப் பெண்களைக் கொண்டு பாலியல் தொழில் கூட சிங்கள ராணுவம் நடத்தும்.

தொல்பொருள் கட்டுப்பாட்டு துறை ராணுவத்தின் கீழ் இருக்கிறது.

எனவே தமிழர் தொன்மங்களை அழித்து புத்த விகாரங்களை அமைத்து வரலாற்றை திரிக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது.

ஈழத் தமிழர்களுக்காக நரம்பு புடைக்க கத்தும் சீமானும் அவரது தம்பிகளும் இது பற்றி பேச மாட்டார்கள்.

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என கட்டுக் கம்பி கதையைக் கட்டும் நெடுமாறன் வகையறாக்களும் பேச மாட்டார்கள்.

சோமிதரன் போன்ற நேர்மையான படைப்பாளிகள் தங்கள் ஆவணப்படங்கள் மூலமாக தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

அவரை நாம் பாதுகாப்பாக காப்போம்.

திரையிடல் முடிந்ததும் திட்டமிட்டபடி மாட்டுக்கறி பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.

பதினோராவது சென்னை பன்னாட்டு ஆவணப்படம் மற்றும் குறும்பட விழாவில்

என்னை மிகவும் கவர்ந்த இந்திய ஆவணப்படம் பி பார் பியாஸ் (வெங்காயம்), பி ஃபார் பைசா (பணம்), & பி பார் பானி (தண்ணீர்).

எஸ் பி எஸ் கம்யூனிட்டி மீடியா எனும் அமைப்பினர் தயாரித்த ஆவணப்படம் இது.

பூனா திரைப்படக்கலை கல்லூரியில் பயின்ற இரு மாணவர்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு கிராமத்தில் இந்த அமைப்பை தொடங்கி கிராமத்தில் இருக்கும் பொது மக்களுக்கு திரைப்படக் கலையை கற்றுக் கொடுத்தார்கள்.

அந்த மக்களே தங்கள் வலிகளை வாழ்வியலில் இருக்கும் சிக்கல்களை குறும்படம் மற்றும் ஆவணப்படம் உருவாக்கும் வித்தையை கற்றுக் கொடுத்தார்கள்.

கட்டைவிரல் கேட்கும் குருகுல கல்வி பயின்றவர்கள் அல்ல இந்த மாணவர்கள்.

தூய்மையான இடதுசாரி சிந்தனை உடைய பேராசிரியர்களால் உருவாக்கப்பட்ட மாணவர்கள் இவர்கள்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த பூனா திரைப்பட கல்லூரி இந்திய ஒன்றிய அரசின் தலைமை அமைச்சராக இருந்த ஜவஹர்லால் நேருவால் உருவாக்கப்பட்டது.

அவருக்குப் பின்னால் ஆட்சியில் அமர்ந்த இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் இதற்கு மேலும் மேலும் வசதிகள் செய்து தரப்பட்டது.

ஆனால் இங்கு பணிபுரிந்த கல்லூரி முதல்வர் முதல் பேராசிரியர்கள் அனைவரும் பொதுவுடமை சித்தாந்தவாதிகள்.

காங்கிரஸ் அரசுக்கு எதிராக படம் எடுக்கும் படைப்பாளிகளைத்தான் அவர்கள் உருவாக்கினார்கள்.

ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஒன்றிய அரசின் தலைமை பொறுப்பில் இருந்தவர்கள் இது பற்றி கவலைப்படவில்லை.

இதனை தன்னாட்சி கொண்ட அமைப்பாக கருதி பூரண சுதந்திரம் கொடுத்தார்கள்.

பாசிச பாஜக ஆட்சிக்கு வந்ததும் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.

பிட்டு படம் எடுக்கும் துட்டு படைத்த கோமாளியை கல்லூரி முதல்வர் ஆக்கினார்கள்.

கோமியம் குடிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இப்போது அனுமதி கொடுக்கிறார்கள்.

இனி இங்கிருந்து விவேக் அக்னிஹோத்ரி (காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் எடுத்தவன்), ராஜமவுலி (பாகுபலி மற்றும் ஆர் ஆர் ஆர்) ரிஷப் செட்டி (காந்தாரா) போன்ற விஷத்தை விதைக்கும் வித்தகர்கள் வருவார்கள்.

இந்த மூவருமே திரைப்பட மொழி தெரிந்த வித்தகர்கள்.

அதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.

ஆனால் சமூக நீதி சமூக நல்லிணக்கம் இவற்றுக்கு எதிராக படம் எடுக்கும் பாம்புகள்.

( தமிழிலும் இதுபோன்று வித்தை உடைத்த விஷ பாம்புகள் உள்ளது)

சரி…. சொல்ல வந்த கருத்திற்கு வருகிறேன்.

எஸ் பி எஸ் கம்யூனிட்டி உருவாக்கிய ஐந்து ஆவணப் படங்கள் 11ஆவது சென்னை பன்னாட்டு ஆவணம் மற்றும் குறும்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டன.

இன்று விருது அறிவிக்கப்பட்ட ரூபாய் 25000 பரிசுத்தொகை பெற்ற இந்த படம் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் திரையிடப்பட்டது.

அட்டகாசமான அரங்கம்.

திறன்மிக்க ப்ரொஜெக்டர் மூலம் திரையிடப்பட்டது.

போஸ் எனும் அற்புத ஒலிபெருக்கி மூலம் படத்தில் ஒலிப்பதிவை உள்வாங்க முடிந்தது.

முதலில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள் மாணவிகள் அனைவரையும் போற்றி வணங்கி வாழ்த்துகிறேன்.

அந்தப் பிள்ளைகள் எங்களை கொண்டாடினார்கள்.

வடை பாயாசத்தோடு சோறு போட்டார்கள்.

ஐந்து நட்சத்திர விடுதியில் இருப்பது போன்ற கழிவறையை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தார்கள்.

அடுத்த பிறவி என்ற விடயத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.

பெண்ணாகப் பிறந்து ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசை அன்று துளிர்விட்டது.

இந்த ஆவணப்படம் வெங்காயம் பயிரிடும் விவசாயிகளின் வலியை சொல்லியது.

விவசாயத்திற்கு பயன்படுத்தும் தண்ணீருக்காக அவர்கள் படும் பாட்டை அரும்பாடு பட்டு சொல்லியது.

விவசாயிகளுக்கு மழை ஒரு வரம்.

அதே மழை வரக்கூடாத நேரத்தில் வந்தால் அது கோரம்.

அதுவும் ஆலங்கட்டி மழை வந்தால் விவசாயி கதை முடிந்துவிடும்.

ஆலங்கட்டி மழை வராமல் இருப்பதற்காக

பாரம்பரியமாக கிராமங்களில் கடைப்பிடிக்கும் மூடநம்பிக்கை வழிமுறைகளை செய்வார்கள்.( கழுதைக்கு திருமணம் செய்து வைத்தால் மழை வரும் என்பது போல)

ஒரு கட்டத்தில் மூடநம்பிக்கையை கைவிட்டு விஞ்ஞானம் கற்றுக் கொடுத்த பகுத்தறிவு மூலமாக ஆலங்கட்டி மழையிலிருந்து பயிரை காப்பது எப்படி? என்பதை கற்றுக்கொண்டு பாதுகாக்கும் முயற்சியில் இறங்குவார்கள் விவசாயிகள்.

அரும்பாடு பட்டு உழைத்து, உரம் இட்டு, பூச்சி மருந்திட்டு, மேற்கண்ட செலவுகளுக்காக வட்டிக்கு பணம் வாங்கி வெங்காயத்தை அறுவடை செய்துவிட்டால் கிலோ இரண்டு ரூபாய் கிடைக்கிறது என்று சிரித்துக் கொண்டு சொல்வார் ஒரு விவசாயி.

இந்தக் காட்சியில் ஓ என அலறிவிட்டார்கள் அத்தனை மாணவிகளும்.

இரண்டு ரூபாய்க்கு குறைந்த விலைக்கு நமக்கு கிடைக்கிறது என அந்த மாணவிகள் மகிழவில்லை.

விவசாயியுடன் வலியை உணர்ந்த காரணத்தால் அதிர்ச்சி அடைந்தார்கள்.

அந்த அதிர்ச்சியை மாணவர்கள் அடைவதற்கு இப்படத்தில் இணைந்திருந்த திரை மொழி தான் காரணம்.

இந்த ஆவணப்படத்தில் பயன்பட்டிருந்த திரை மொழிதான் நான் இன்ஷா அல்லாஹ் திரைப்படத்தில் கடைப்பிடித்து இருந்த திரை மொழி.

எனவே தான் இந்த ஆவண படத்தை 11 வது சென்னை பன்னாட்டு ஆவணம் மற்றும் குறும்பட விழாவின் தலைசிறந்த படம் என கொண்டாடினேன்.

என்னைப் போலவே நடுவர்களும் உணர்ந்த காரணத்தினால் இந்த படத்திற்கு சிறந்த ஆவணப்படம் என்ற விருதை அளித்துள்ளார்கள்.

நடுவர்களுக்கு நன்றி.

இந்தப் படத்திற்கு சுப்ரதீப் சக்கரவர்த்தி என்ற ஆவணப்பட இயக்குனர் பெயரால் விருது வழங்கப்படுகிறது.

மோடி தலைமையிலான பாசிச பாஜக ஆட்சிக்கு வந்ததும் முதன் முதலில் தடை செய்தது இவரது ஆவணப்படத்தை தான்.

எனவேதான் ஆண்டுதோறும் இவரது பெயரால் சென்னை பன்னாட்டு ஆவணம் மற்றும் குறும்பட விழாவில் சிறந்த இந்திய ஆவணப்படத்திற்கு விருது வழங்கப்படுகிறது.

பொருத்தமான விருது பொருத்தமான படத்திற்கு போய் சேர்ந்தது. என்கிறார் இயக்குநர் உலக சினிமா பாஸ்கரன்.

அடுத்த ஆண்டில் இன்னும்சிறந்த படங்களுடன் சந்திப்போம்

Series Navigationவலிசி. ஜெயபாரதன் – 90ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *