This entry is part 5 of 14 in the series 28 மே 2023

கோவிந்த் பகவான்

உனக்குள் உறங்கும் இரவு

எலுமிச்சைச் சாறு பிழியும் கருவியைப்போல்

பிழிந்தெடுக்கிற இந்த இரவு

துயர் மிகுந்த நம் நினைவுகளை கசியவிடுகிறது

புளிப்பேறிய சுவைடர்ந்த அவை

தலைக்கேறி தள்ளாடச் செய்கின்றன

அடுக்களை டப்பாவில் அடைக்கப்பட்ட

மீத நினைவுகளையும்

சில தேக்கரண்டி அள்ளிக் கலக்கி

ஒரே மிடறில் சுவைக்கத்தொடங்கியதும்

இந்த இரவு

எனக்குள் ஊறி உறங்குகிறது.

     -கோவிந்த் பகவான்

Series Navigationசி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள்யாதுமாகி