This entry is part 1 of 6 in the series 16 ஜூன் 2024

ஜெயானந்தன்.

அவரவர் வீட்டை திறக்க

அவரவர் சாவி வேண்டும்.

எவர் மனம் திறக்கும்

எவர் மனம் மூடும்

எவருக்கும் தெரியாது.

சில முகங்களில் – துன்ப

ரேகைகள் ஓடும்.

பல முகங்களில் – இன்ப

தூண்கள் தெரியும்.

யாரோடும் வீதியில் நடக்கலாம்.

வீதியெங்கும் காலடிச் சுவடுகள்

ரேகையில் எத்தனை வாழ்க்கை கனவுகள்.

பேசிக்கொண்டே செல்லும் வழியில்

நடைப்பிணங்கள் ஏராளம்.

இன்பமும் துன்பமும் நாடகம்தானே

இதில் நீயும் நானும்

விதிவிலக்கல்ல……………………..!

Series Navigationகனடாவில் தேசிய பழங்குடி மக்கள் தினக்கொண்டாட்டம்