This entry is part 6 of 6 in the series 24 ஆகஸ்ட் 2025

அன்றாடத்தின்

அத்தனை அலுவல்களுக்கிடையிலும்

அமிலமென

அரித்துச் சொட்டுகிறது

வலிகள் தந்த

வார்த்தைகள்

எங்கிருந்து

எப்படி வருகிறதெனும்

பாதைகள்

அறிய முடியாத

பரிதவிப்பில்.

பிறரின்

வார்த்தைகளைக் கொண்டு 

முகவாடலை 

மறைக்க

எத்தனிக்க

யாதொரு

முகமூடிகளற்ற

தவிப்பில்

கழிகிறது

கணங்கள்

கொட்டியவர்

இல்லாதபொழுதும்.

***

-ரவி அல்லது.

ravialladhu@gmail.com

Series Navigationஅசோகமித்திரன் சிறுகதைகள் – 17