This entry is part 6 of 8 in the series 1 பிப்ரவரி 2026

டிட்வா புயல் 2025

என்ன அழுத்தம்
வெளியே வாருங்கள்
இராமநாதபுரம்
உங்கள் நடுவே காற்றழுத்தம்
பிய்த்துக் கொள்கிறது தமிழகம் நேற்றிலிருந்து
குடிசை  மனிதர்கள் நாய்கள் எறும்புகள்
எல்லாமும் ஊறிவிட்டன
“உஸ்! !!!” என்ற சப்தமழை இன்னும் இரு நாளுக்கு மழை
வீங்கி போய் மடங்கி மடங்கி
இரும்புக் கம்பி உடைக்கிற மழை
அறுவடை  முடித்து காசு பார்க்கலாம் என ஏங்கிய
விவசாயிகளுக்கு இந்த மழை
பயிருக்கு ஊற்றிய கண்ணீர்
வெளியே வாருங்கள்
ஓங்கி அழுவதற்கு
ஐம்பதாயிரம் ஹெக்டேர் முழுக்கி நாற்றுகள் அழுக
கார்த்திகை மாதம் கூப்பிடுகிறது மழை.  
                      – பா.சத்தியமோகன்

***

Series Navigationநெஞ்சறியும்தராசு முள்….