ச.சிவபிரகாஷ்
எனக்காக…
இம்முறையேனும்,
வாழ்ந்து பார்க்கிறேன்.
சரி…
சரி,
நானே சரியென,
சமரசமாகி,
கொண்டதால்,
சிலருக்கு,
என்னை,
பிடிக்கவில்லை.
பலரை,
எனக்கு…
பிடிக்கவே,
இல்லை.
எனது,
செயலிலும்,
சரி,
செய்ய வேண்டுவதிலும்,
சரி,
கறார் பழகியதில்,
புறங்களை விட,
அகம்,
காயங்களால்,
அவதியுற்றியிருக்கிறேன்.
அன்பு,
பாராட்டாது போக,
அல்லலும்,
உற்றுயிருக்கிறேன்.
உண்மை
என்னவெனில் !
யாவர்க்கும்
அவரவராய்,
நானும்,
இருப்பதில் தான்,
என்ன பயன்.?
ஒரு,
வனத்தில்
ஆயிரமாயிரம்,
உயிரினம்,
உண்டாம்.
அவை…
உலவி திரிவதும்,
உண்டு,
உறங்குவதும்,-அதன்
உரிமை நிலையிலே.
அப்படி தானே,
ஆகவேண்டும்?
அப்படியுமில்லாமல்…
மனதால்,
நமக்கும்,
மனிதர்களால்,
நாய்க்கும்,
ஏற்படும்,
பயந்த…
மன நிலையே
தொற்றிவிடுகிறது.
நீ!
சீர்படுத்திக்கொள்,
நானே…
சரியென,
சம்பவம் செய்யும்,
மனிதரிடத்தில்.
ஊருக்காக
வாழ்தலை,
விட,
உண்மையான,
விருப்பமதை
வாழ்தலால்,
ஏது கேடு?
இக்கதையை,
சொல்லியே தான்.,
ஏனையரும்
எகிறி குதித்தனர்,
என்னிடத்தில்.
மனம்,
ஒன்று தான்,
போல.
என் வீட்டு,
செடியின்,
பாரிஜாத,
பூவும்.
எதிர்வீட்டு
கொடியில்,
பூத்திருக்கும்
மல்லிகையும்,
தத்தமது
பெருமையே
பேசி,
புளங்காகிதம் கொள்ள,
பறிப்படும்,
நாளை,
அறியாத வரையில்,
பேசி…
வாழ்ந்து விட்டு,
போகட்டும்.
நானும்..
அவ்வாறே,
வாழ்ந்து விட்டு,
போகிறேன்.
ஒரே,
வனத்தில்,
பல
மரங்களின்,
கதை,
வேறு,வேறாக தானே,
இருக்க,
கூடும்.
ச.சிவபிரகாஷ்
- கொடை
- படைப்பும் படைப்பாளியும்
- மனம் போல் வாழ்வு
- சூதாட்டமாக மாறிய தேர்தல் களம் – மக்கள் வெறும் கருவேப்பிலை தான்
- தீரா காதல்…
- ஒரு வன பரப்பில்,பல மரங்கள் …
- “இந்தியாவின் சரக்கு பெட்டகப் புரட்சி: சீனாவின் ஆதிக்கத்திற்குப் பதிலடி கொடுக்குமா CMAS திட்டம்?”
- தருமிமுன் அறுந்துவிழுந்த பொற்கிழி முடிச்சு
- ‘அரண்மனை மியூசியம்’ நாவல் வெளியிடப் பட்டது
- மழைபுராணம் – 18
- இடைவெளி….