This entry is part 4 of 9 in the series 12 ஜூலை 2026

சகியே!

நேற்று நீ

கேணியில் நீர் இறைக்கும் போதுதான் தெரிந்தது. 

உனக்கு 

வயோதிகம் வந்துவிட்டது. 

திண்ணையில் 

உட்கார்ந்து 

இத்தனை வருடம் தின்ற எனக்கு 

வரும்போகும் மனிதர்களிடம் 

பேசியது போதும்.

இனி 

என்னிடம் கொடு 

வடக்கயிறை. 

ராட்டினம் பழசாகி 

போனது போல் 

நீயும் தான்.

Series Navigationமழை புராணம் : 39 ஆலமரம்