சசிகலா விஸ்வநாதன்

[1]
அவினாஷ்
அவினாஷ், அமெரிக்காவிலிருந்து வந்து இரண்டு நாள் ஆகிறது. அம்மா
சாந்தா மெதுவாக கல்யாணப் பேச்சை ஆரம்பித்தாள்.”வீடு ஒன்று வாங்கின
பின் தான் கல்யாணப் பேச்சுன்னு சொன்னே. வீடு வாங்கிட்ட, இப்ப ஜாதகம்
எடுக்கவா?” அவினாஷ் அம்மாவின் முகம் பார்த்தான்; என்ன பரபரப்பு! அப்பா
டீவியில் ஒரு கண்ணும், இவர்கள் பேச்சில் ஒரு காதும் வைத்திருந்தது;
நன்றாகவே தெரிந்தது.
அம்மாவின் நெருங்கிய தோழி, மஹா, ” என்ன! ஒரு சிவப்பியையோ;
கருப்பியையோ, பார்த்து” வைச்சுருக்கியா? ” என்று கிண்டலடிக்க; ” சும்மா
இருங்க அக்கா! நீங்க வேற! நானே, எவளும் சிக்கல்லன்னு, நொந்து
நூடூல்ஸ் ஆயிட்டேன்.” என்றான்.” சும்மா இரு , மஹா! இவனைப் பேசவிடு”
என்றாள்,சாந்தா.” உனக்கு எப்படிப்பட்ட பொண்ணு பார்க்கணும்னு சொல்லு.
ஏதேனும் ஐடியா போட்டு வைச்சுருக்கியா?” என்று கேட்டாள்.”அம்மா. ஜாதகப்
பொருத்தத்தில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. அதெல்லாம் நீ
பார்த்துக்கோ. அமெரிக்காவுக்கு ரிலொகேட் ஆக சம்மதிக்க
வேண்டும்.இன்னுமொரு முக்கியமான விஷயம். கம்ப்யுடர் படித்த பெண்
வேண்டாம். என் ஃபோட்டோ கொடுக்க சம்மதிக்க மாட்டேன். என் சம்பள
விவரம் தர மாட்டேன். பெண்ணுடன் ஃபோனில் பேசிய பின், நானே
ஃபோட்டோ அனுப்பி, நேரில் அந்தப் பெண்ணை தனியாக சந்திக்கிறேன்.”
என்றான் அவினாஷ்.
“இதென்னது; கூத்தா இருக்கு. ஜாதகத்தோடு முதலில் ஃபோட்டோவும்
சம்பள விவரமும் தான் எல்லாரும் கேட்கிறார்கள். அது கொடுக்க முடியாது;
என்றால் எப்படி? எதுவும் நிச்சயமாக ஆகாத நிலையில், நீ தனியாக
பெண்ணை சந்திக்க யார் விடுவார்கள்? போகாத ஊருக்கு வழி கேட்கிற
மாதிரி இருக்கு; நீ போடற கண்டிஷன்கள்! நீயே கம்ப்யூட்டர் இன்ஜினியர்.
ஏன் கம்ப்யூட்டர் படித்த பெண் வேண்டாம்னு சொல்றே” என்று கேட்டாள்
சாந்தா.
2
“ஒரே படிப்பு படித்திருக்க; உனக்கு என்ன தெரியும்; இதை அப்படி
செய்; இப்படி செய் என்று இலவச ஆலோசனைகளில்; வாக்குவாதங்களும்,
கருத்து வேறுபாடுகளும், சண்டைகளும் வருவதை நான் பார்த்திட்டு தானே
இருக்கிறேன். இதெற்கெல்லாம் சரிப்பட்டு வரும் ஒரு பெண்,கிடைக்காமலா
போவாள். அவசரம் என்ன?நிதானமாக பாருங்கள்.” என்று எழுந்து விட்டான்.
அவன் அப்பா சுந்தரேசன் கையிலிருந்த செய்தி தாளை கோபத்துடன்
கீழே வீசினார். அது, “அவனுக்கு இந்த ஜென்மத்தில் கல்யாணம் ஆகாது;”
என்று சொல்வது போல் இருந்தது. சாந்தாவும், மஹாவும் ஒருவரை ஒருவர்
பார்த்துக் கொண்டனர்.
இணையத்தில் திருமண தகவல் மையத்தில் பதிய முற்படும் போது,
சாந்தாவுக்கும் நம்பிக்கை குறைந்த மாதிரி தான் இருந்தது. பெண் வீட்டார்
போடும் கண்டிஷன் மிகவும் வியப்பூட்டுவதாக இருந்தது. பையன், எந்த
பள்ளியில் படித்துள்ளான்; பள்ளி ரேங்க் கார்ட், எந்த காலேஜ், ஸ்கோர்
சர்டிஃபிகேட், இதெல்லாம் கேட்டிருந்தது; சாந்தாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
வேலைக்கு ஆள் எடுக்கப் போகிறார்களா; பெண்ணுக்கு மாப்பிள்ளை
பார்க்கிறார்களா? பிள்ளையின் பெற்றோர்கள்; பையனுடன் வந்து
தங்குவார்களா; அல்லது வரப் போக இருப்பார்களா? பெற்றோரின் பென்ஷன்
விவரங்கள்; வைத்திருக்கும் கார் விவரம்; சம்பளம், சுயமாக சம்பாதித்த
சொத்து விவரம்; கல்யாணத்தில், பெண் வீட்டாரிடமிருந்து பிள்ளை
வீட்டாரின் எதிர்பார்ப்பு… இப்படியாக விவரங்களை, விவரமாக கேட்டிருந்தனர்.
எல்லா இடங்களிலும் சிறு கோடு போட்டு. காலியாக விட்டு, அவினாஷ்
சொன்னபடியே விவரங்கள் பதிந்து, இணையத்திலிருந்து வெளியே வந்த
சாந்தாவுக்கு தலை சுற்றியது.
அந்தக் காலத்தில் எப்படி ஆணும் பெண்ணுமாக ஐந்தாறு
குழந்தைகளுக்கு கல்யாணம் பண்ணி கரையேற்றி; நல்லது, பொல்லாது
பார்த்தார்கள்! ஒத்தை பையனுக்கு பெண் பார்க்க இத்தனை கஷ்டமா?
பெண்ணுக்குத் தெரிந்த இடத்தில் பிள்ளை அமைந்தது; நல்லதாய் போயிற்று.
பெண் வீட்டார் போடும் ஷரத்துகளுக்குக்கு; இவன் போடும் கண்டிஷன்கள்
ஒண்ணுமே இல்லை;என்று நினைத்துக் கொண்டாள். கற்பகாம்பாள் மேல்
பாரத்தைப் போட்டுவிட்டு; அடுத்த வேலையைப் பார்க்க எழுந்தாள்.
அவினாஷ் மூன்று வாரம் லீவு முடிந்து அமெரிக்கா போய்விட்டான்.
தினமும் ஒரு முறை அந்தியும் சந்தியும் தகவல் மையத்தில் ஏதாவது
விசாரிப்பு வந்திருக்கிறதா; என்று பார்க்கும் வேலை வேறு சாந்தாவுக்கு
சேர்ந்து கொண்டது. பரிட்சை ரிஸல்ட்டை எதிர்பார்க்கும் மாணவன் போல்;
இருந்தது, அவள் மனம்.
3
[2]
பவானி
“இன்னைக்கு உனக்கு ட்யுடி இல்லையா; சாவதானமா தூங்கிட்டு
இருக்கே.” என்று பவானியை அவள் அம்மா ஜெயம் எழுப்பினாள்.
“ஆமாம்! நாளையிலிருந்து ஒரு வாரம் நைட் ட்யுடி. என் சீஃப் என்னை
எம். டி என்ட்ரன்ஸ்க்கு படிக்கச் சொல்கிறார். கல்யாணத்திற்காக காத்திருந்து,
நேரத்தை வீணாக்காதே;என்று சொல்கிறார். எனக்கும் சரிதான் என்று
படுகிறது. ஏற்கனவே ஒரு வருஷம் வேஸ்ட் ஆகிவிட்டது.” என்று அலுத்துக்
கொண்டாள் பவானி.
“இன்னிக்கு கொஞ்சம் இந்த மாட்ரிமோனியல் ஸைட்டை பார். நமக்கு
தோதா ஏதானும் வந்திருக்கிறதா; என்று பார்க்கலாம். அமெரிக்க
பிள்ளையாத்துல எல்லாம் சீர் வரிசை “அட் பர்சனல் மீட்’னு போடறா. எல்லா
பசங்களும் கம்ப்யுடர் படிச்ச பொண்ணையே தான் கேட்கிறாங்க. அதான்
அமெரிக்கா போக, வாகாக; ரெடியா இருக்கும் படிப்பு. மத்ததுன்னா அங்க
போயும் ரெண்டு வருஷமாவது படிக்கணும். அதுக்கு லோன் எடுக்கணும்.
இந்த செலவுக்கு பயந்து; அமெரிக்க வரன் எவனும் டாக்டர் லாயர்ன்னா
ஓடியே போயிடறா. மத்த படிப்புகளைப் பற்றி கேட்கவே வேண்டாம்.
ரெஸிடென்ஸி கிடைச்ச அப்புறம் கான்டாக்ட் பண்ணுங்கோன்னு; நாகரிகமாக
சொல்லி தட்டிக் கழிக்கிறா. இதுல இருபது ஜாதகம் எடுத்தா; ஓண்ணு கூட
பொருந்தி வருவதில்லை. என்னடி , பண்ணச் சொல்லற. அமெரிக்காவில
இருக்கிறது ஒண்ணும் ஒசத்தி இல்ல. உன் அக்கா அமெரிக்காவில்
இருக்காளே; உன்னையும் அங்கே பண்ணிக் கொடுத்தா; எங்களுக்கு
அப்புறமும் ஒருத்தொருக்கொருவர் துணையாய் இருக்கலாம்னு தான்
பார்த்தேன். நீ உன் படிப்பைப் பாரு. இந்த வருடம் ஒண்ணும் படிஞ்சு
வரலைன்னா இந்தியாவிலேயே கல்யாணம் பண்ணிண்டு சௌக்கியமாயிரு.
உன் அக்கா புவனிக்கும் இந்தியா வந்தா; இருக்க ஒரு இடமாச்சு. இந்த
மேட்ரிமோனியல் சைட்டை என்னமோ எனக்கு திறக்கத் தெரிவதில்லை.
பாஸ்வேர்டு மறந்துட்டு. முழிக்கிறேன். ஸைட்டை ஓபன் பண்ணியே ஒரு
மாசம் ஆச்சு.” என்றாள்,ஜெயம்.
” சரி, சரி! புலம்பாதே. சூப்பரா ஒரு காஃபி போட்டு ஒரு மிஸ்டு கால்
கொடு. அதுக்குள்ள நான் ஃப்ரஷ் ஆயிட்டு வரேன். இன்னைக்கு ஏதாவது
தேறுமா; என்று பார்க்கலாம். அப்பாவையும் வரச் சொல்லு. ஸைட்டை எப்படி
ஒபன் பண்ணணும்னு ரெண்டு பேருக்கும் சேர்த்தே சொல்லிக்
கொடுத்துடறேன்.” என்றாள்.
4
அடுத்த அரை மணியில் மூவரும் கம்ப்யுடர் முன் அமர்ந்தார்கள்.
.பவானி பத்தாவது முறையாக எப்படி மாட்ரிமோனியல் ஸைட்டுக்குள்
போகணும்னு விளக்கிச் சொன்னாள். அவளுடைய ஹோம் பேஜ் பவானியின்
ஃபோட்டா இல்லாமல் அவள் டாக்டர் என்பதும், மத்திய தரக் குடும்பம் ;
பெண்ணின் ஒரே சகோதரி அமெரிக்காவில் இருப்பதையும்; ” வில்லிங் டு
ரிலொகேட் டு யு.எஸ். ஜாதகப் பொருத்தம் மிகவும் முக்கியம்;என்றும்
காட்டியது.”அம்மா! இந்த ஜாதகப் பொருத்தம் பற்றின கண்டிஷனை
எடுத்துடலாமா;” என்று பவானி கேட்க; அப்பாவின் முறைப்பு அவளுக்கு
பதில் சொல்லிவிட்டது.
அப்பா மகாதேவன் பையன்களின் விவரம் பார்த்துக் கொண்டே
வந்தவர்; “இங்கே பார்! வித்தியாசமான ஒரு பதிவு. கம்ப்யூட்டர் சயின்ஸ்
தவிர எந்தப் படிப்பும் சம்மதம். அமெரிக்காவில் வேலை செய்யும் கம்பெனி
பேர் மட்டும் போட்டிருக்கு. வயசு வித்தியாசம் மூணு வயசுதான். ஒரு
அக்கா. பேங்க் வேலை. கல்யாணம் ஆகி செட்டில்ட் . பையன் H1-B visa.
விவரங்கள் பதிவு செய்திருப்பது பையனின் அம்மா. பையன் பெயர்
‘அவினாஷ்’ னு போட்டிருக்கே,! செட்டியாராய் இருக்குமோ? அப்பா அம்மா
கலப்பு திருமணமாய் இருக்குமோ? மேற் கொண்டு விவரங்கள் ஃபோனில்;னு
போட்டிருக்கு. இதோ பார் இன்னொண்ணு. டாக்டர் வரன். கோயமுத்தூர்
பையன். நக்ஷத்திரம் பொருத்தமாய் இருக்கு. சும்மா அமெரிக்க வரனையே
பார்த்துண்டு டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம். இந்த ரெண்டில் எது
பொருத்தமாய் இருக்கோ; அவர்களிடம் பேசிப் பார்க்கலாம்.” என்றார். இரண்டு
ஜாதகங்களையும் காபி பண்ணி எடுத்து கொடுத்து விட்டு, ஸைட்டிலிருந்து
வெளியே வந்தாள்; பவானி.
[3]
சாந்தா
சாந்தாவின் கண்ணில் பட்டது பவானியின் திருமண குறிப்புகள்.
கண்டிஷன்கள் ஒண்ணும் போடாத அபூர்வமான ஜாதகம். “நட்சத்திரப்
பொருத்தம் இருக்கு. இந்த வரனைப் பார்க்கலாமா?” என்று சுந்தரேசனைக்
கேட்க; ” என்னை ஏன் கேட்கிற? உன் பிள்ளையைக் கேள்.” என்று கடுப்பாக
பதில் வந்தது. “என்னப்பா! இப்படி பேசலாமா? பதிவில் உங்கள் ஃபோன் நம்பர்
தான் கொடுத்து இருக்கிறேன். நாளை, பின்னே யாராவது பேசினால்,
அவாளுக்கு இப்படித்தான் பதில் சொல்வீர்களா?” என்று கேட்க; அவர்
மௌனத்தையே பதிலாக அளித்தார்.
அன்று மாலை கற்பகாம்பாள் கோயிலில் இருக்கும் போது,
சுந்தரேசனுக்கு, ஃபோன் அழைப்பு ஒன்று வந்தது. முன்பின் தெரியாத
5
எண்ணிலிருந்து வரும் எந்த அழைப்பையும் அவர் எடுத்துப் பேசமாட்டார்.
வீட்டிற்கு போவதற்குள் இரண்டு மூன்று தரம் அதே எண்ணிலிருந்து அழைப்பு
வர; வேறு வழியின்றி எடுத்துப் பேசினார்.
“நான் மகாதேவன். தாம்பரத்தில் இருந்து பேசுகிறேன்.
மாட்ரிமோனியல் பதிவின் மூலம் உங்கள் பிள்ளையின் ஜாதகம் கிடைத்தது.
எங்களுக்கு ஜாதகம் பத்துக்குப் பத்தும் பொருத்தியிருக்கிறது. மேலே பேச,
உங்களுக்கு எப்போது நேரம் சௌகரியப்படும்?” என்ற கேள்விக்கு, இப்போது
நான் கோவிலில் இருக்கிறேன். இரவு எட்டு மணிக்கு கூப்பிடுங்கள்.” என்று
ஃபோனை துண்டித்து சாந்தாவிடம் விவரம் சொன்னார்.
வீட்டிற்கு வந்ததும் சாந்தா, சுந்தரேசனிடம், ” நீங்கள் தான்
பேசுங்களேன். எட்டு மணிவரை, ஏன் காத்திருக்கணும்;” என்று, அவருக்கு
அழுத்தம் கொடுக்க முயற்சிக்கவும், சுந்தரேசன், “நீயே பேசு.”என்று சொல்ல;
சாந்தா அவரிடம் எண்ணை வாங்கி தயக்கத்துடன் ஃபோன் பேசலுற்றாள்.
ஃபோனை எடுத்தது; பவானியின் அம்மா; ஜெயம்; என்பதால். சற்றே
எளிதானாள். பரஸ்பர விசாரிப்பகளுக்கப்பின், ஜெயத்தின் முதல் கேள்வியே
சாந்தாவுக்கு சிரிப்பை மூட்டியது. ‘ஏன் கம்ப்யுடர் படித்த பெண் வேண்டாம்னு
போட்டிருக்கேள்?” “அதை நான் சொல்லல்லை. என் பையன் தான்
சொல்கிறான்.” என்று,சொல்லி சிரித்து, “இன்று தான் உங்கள் பெண்ணின்
குறிப்பை நானும் பார்த்தேன். இன்னும் நான் ஜாதகப் பொருத்தம் பார்க்கவே
இல்லை. இன்னும் இரண்டு நாட்கள் கழித்து. ஃபோன் பண்ணவா?” என்று
கேட்க; ” நீங்களும் பொருத்தம் பாருங்கோ! எங்களுக்கு பத்து பொருத்தமும்
பொருந்தி வருகிறது. இடையில் நாம் மீதி விஷயங்களைப் பேசிக்
கொள்ளலாமே.” என்றாள்; ஜெயம்.
“நாம் பேச என்ன இருக்கு? எங்களைச் பொறுத்தவரை எதிர்பார்ப்பு
ஒண்ணும் இல்லை. குழந்தைகளுக்கு மனம் ஒத்துப் போய். அவர்கள் சம்மதம்
சொல்வதுதான் முக்கியம். அவன் போன மாசமே அமெரிக்கா போய்
சேர்ந்துட்டான். இந்த தரம் கல்யாணம் பண்ணித்தான் அனுப்பணும்னு
நினைச்சோம். நீங்க லேட்டா ஃபோன் பண்ணியிருக்கேளே.” என்றாள்.
ஜெயம், ”வேறு ஏதாவது வரன் கூடி வந்திருக்கா?” என்று வினவ; “
அதெல்லாம் இல்லை. பதிவு பண்ணி ஒரு மாசம் தான் ஆகிறது. உங்கள்
ஃபோன் நம்பரும் பெண்ணின் ஃபோன் நம்பரும் மின்முகவரியும் கொடுங்கள்.
நானும் என் நம்பரும் அவினாஷின் ஃபோன் நம்பரும் தருகிறேன். இன்னிக்கே
உங்கள் நம்பர்கள் கொடுத்து வாட்ஸ்அப் மெஸேஜ் போடறேன். நீங்களும்
வாட்ஸ்அப் மெஸேஜ் போட்டு வீக் எண்ட்டில் ஆடியோ காலில், பேச நேரம்
6
ஃபிக்ஸ் பண்ணிக்கோங்கோ. குழந்தைகள் பேசி ஒரு முடிவெடுக்கட்டும்.”
என்றாள் சாந்தா.
ஜெயத்துக்கு, நிஜமாகவே தலை சுற்றியது. சாந்தா விட்டேற்றியாகப்
பேசுவது போல் இருந்தது. “குழந்தைகளுக்கு என்ன தெரியும்? நாம் லௌகீக
விஷயங்கள் பேசிக் கொள்ளலாமே. உங்கள் பிள்ளை என்ன சம்பாத்தியம்
பண்ணறார்? ஃபோட்டோ அனுப்புங்கோ. வீடு வாங்கிட்டாரா?
அமெரிக்காவில் எத்தனை வருடமாக இருக்கார்? உங்கள் எதிர்பார்ப்பு
என்னவாய் இருக்கும்?” என்று கேட்டாள் ஜெயம்.
“ஜெயம்! எங்களைச் பொருத்தவரை எந்த எதிர்பார்ப்பும் இல்லை.
நிசமாகவே அவன் சம்பளம் எத்தனைன்னு எங்களுக்குத் தெரியாது. ஏதேனும்
நான் கேட்டால், அந்தப் பெண், என்னை கல்யாணம் பண்ணப் போகிறாளா;
இல்லை; என் சம்பளத்தையா; என்று குடக்கு முடக்காக பேசுகிறான்.
அவனே தன்னைப்பற்றி எல்லா விவரங்களையும் உங்கள் பெண்ணிடம்
சொல்வதாகச் சொல்லியிருக்கிறான். நீங்களோ, பெண்ணின் தகப்பனாரோ,
அவளை அறிமுகம் செய்ய மெசேஜ் மட்டும் போடுங்கோ. அத்தோடு உங்கள்
வேலை முடிந்தது. உங்கள் பெண் ஃபோன் கால் போட்டு பேசும்போது
அவனை என்ன வேணும்னாலும் கேட்டுக்கட்டும். அவர்களை நாம் நிர்பந்தப்
படுத்தவேண்டாம். எப்போ வீடியோ காலில் பேச வேண்டும், என்பதை
அவர்களே முடிவெடுக்கட்டும். ஒரு வேளை கல்யாணம் வரை இந்த பேச்சை
கொண்டு போக முடியாமல் போனாலும்; பின்னாட்களில் அவர்கள் நல்ல
நண்பர்களாக ஒரு வாய்ப்பு இருக்கும். உங்கள் பெண் அமெரிக்கா போனாலும்,
சரி; போகா விட்டாலும், சரி; சீக்கிரம் கல்யாணம் கூடட்டும்” என்று பதில்
சொன்னாள் சாந்தா.
இந்த முனையில் சுந்தரேசனும், அடுத்த முனையில் ஜெயமும்,
அயர்ந்து தான் போனார்கள். அடுத்த ஐந்து நிமிடங்களில், மகாதேவன்
மற்றும் பவானியின் ஃபோன் எண்ணும் மின் முகவரியும் வந்து சேர; சாந்தா
உடனே அவினாஷிக்கு இன்றைய பேச்சின் விவரங்களை நீளமாக; அவனுக்கு
மெசேஜ் பண்ணி ஃபோன் நம்பர்களும் , மின் முகவரியும் கொடுத்துவிட்டாள்.
அடுத்த அரை மணியில் “தாங்க்ஸ் சாந்தாம்மா. என்ன ஆச்சு; என்ன
ஆச்சுன்னு கேட்காதே. இது தேறுமா; இல்லையா என்பது எனக்கே தெரியாது.
பொறுமையாய் இரு.” என்று அவினாஷிடமிருந்து பதில் வந்தது. சுந்தரேசன்
கோபத்தில் சாந்தாவை ஒருகணம் முறைத்துப் பார்த்துவிட்டு டிவி
செய்தியில் மனதைத் திருப்பினார்.
7
[4]
அவினாஷும் பவானியும்
அவினாஷ் கொஞ்சம் பதட்டமாகத்தான். இருந்தான். சனிக்கிழமை
காலை ஏழு மணிக்கு பேசுவதாக மகாதேவனிடமிருந்து குறுஞ்செய்தி
வந்திருந்தது. அந்த பெண்ணின் தகப்பனார் பேசினால்; தான் அதை எவ்வாறு
எதிர் கொள்வது; என்ற யோசனையில் இருந்தான்.சரியாக ஏழு மணிக்கு முள்
நகர; அவன் ஃபோன் சிணுங்கி குறுஞ்செய்தி ஒன்று வந்ததை அறிவித்தது.
“ஐ ஆம் பூமிகா. ஐ ஹேப்பண்ட் டு ஸீ யுவர் ப்ரொஃபைல் இன்
மேட்ரிமோனியல் டொமைன். ஜஸ்ட் நௌ டயல்ட் யுவர் ஃபாதர். யுவர் மதர்
டுக் தி கால் அண்ட் ஷி கேவ் யுவர் நம்பர். கேன் வி டாக்?”
அவினாஷ் உடனே பதில் அனுப்பினான். “ப்ளீஸ்! கேன் வி டாக்
டுமாரோ அட் திஸ் சேம் டைம்? நௌ; ஐ ஆம் எக்ஸ்பெக்டிங் எ கால்.”
இந்தக் குறுஞ்செய்திக்கு. “ஷ்யுர்! ஐ வில் கால் யு டுமாரோ அட் திஸ் சேம்
டைம்” என்று உடனடியாக பதில் வந்தது.
அடுத்த இரண்டு நிமிடங்களில் மகாதேவனின் அழைப்பு. “என் பெண்
பவானி இப்போது பேசலாமா?” நல்ல வேளையாக அவர் மற்ற விவரம்
ஏதும் கேட்காமல் அழைப்பை துண்டித்துக் கொண்டார். அவினாஷ், தன்
அம்மா, தான் சொன்ன மாதிரியே சரியாகத்தான் இந்த விஷயங்களை
ஹேண்டில் செய்கிறாள்; என்ற நினைப்பு ஓட; அவனையும் அறியாமல்
புன்னகைத்தான். ஓரிரு நொடிகளில், பவானியின் அழைப்பு வந்தது.
இருவருமே முதலில் சற்று பதட்டத்துடன் பேசினாலும், சிறிது நேரத்தில்,
இருவருக்குமே எளிதாக முடிந்தது. சென்னை மருத்துவக் கல்லூரியில் நல்ல
மதிப்பெண்களுடன் தேறிய அவள்; இருதய அறுவை நிபுணராகும் கனவில்
இருப்பது தெரிந்தது. இந்தியாவில் அவளுடைய கனவு ஈடேறுவது பல
வகையாலும் பெருத்த சவால் என்பதால்; அமெரிக்காவில் கார்டியாலஜி
ரெசிடென்சி செய்ய முயலுகிறாள்; என்றும் புரிந்தது.
பவானிக்கு முக்கியமாக அவினாஷின் விசா நிலை பற்றின விவரங்கள்
தேவையாய் இருந்தன. தனது , மண வாழ்க்கையையும் தனது மேற்படிப்பு
மற்றும் மருத்துவப்பணியையும் ஒருங்கிணைத்து எடுத்துச் செல்வது,
அவளுக்கு முக்கியமாக இருந்தது. அவளது சகோதரி புவனியின் உதவியும்
அவளுக்கு கிடைக்கும், என்றாலும், கூடிய மட்டிலும், தானே அதை
நிர்வகித்துச் செய்ய வேண்டும்; என்ற விழைவில் இருந்ததைப் புரிந்து
கொண்டான்.”பவானி! நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. நான் தற்போது
H1-B விசாவில் இருக்கிறேன். மை க்ரீன் கார்ட் இஸ் ஆன் க்யு லைன்.
எனக்கு க்ரீன் கார்ட் எப்போது எனக்கு வரும்; என்பது சொல்லுவதற்கில்லை.
8
க்ரீன் கார்ட் வந்தாலும் நான் அமெரிக்க குடிமகனாக எத்தனை வருடம்
ஆகும்;என்பது பற்றியும் ஒரு தெளிவின்மை உள்ளது. மேலும், என்
வருங்கால மனைவி இதில் எவ்வளவு முனைப்பாக இருப்பாள்; என்பதை
நான் இப்போது அனுமானிக்க இயலாது. அவள் விருப்பத்தை ஒட்டியே நான்
இந்த முடிவை எடுப்பதாக இருக்கிறேன். அமெரிக்க வாழ்க்கையே ஒரு
ஸ்திரத்தன்மை அற்றது. டு பி ஃப்ரான்க்; லைஃப் இஸ் வெரி வெரி ஹார்ட்,டு
லிவ் பை. இன் அமெரிக்கா. ஒன் ஷுட்பி வில்லிங் டு ஃபேஸ் சேலன்ஜஸ்;
ஆன் டே டு டே பேஸிஸ். உங்கள் அக்கா புவனியிடம் இதுபற்றி பேசுங்கள்.
உண்மையாகவே; நீங்கள் யு.எஸ் வர விருப்பமாய் இருக்கிறீர்களா; என்ற
கேள்வியை நீங்களே உங்களுக்குக் கேட்டுக் கொண்டு முடிவு செய்யுங்கள்.
டாக்டர்களின் நிலை சிறிது பரவாயில்லை.அவர்களுக்கு க்ரீன் கார்ட்
கிடைப்பதும்; குடியுரிமை கிடைப்பதும் சற்று எளிது. ஆனால் அதற்கு முன்
அவர்கள் ரெஸிடென்ஸி அட்மிஷன் கிடைக்கணும். அது அயல் நாட்டு
கிராஜுவேட்டுகளுக்கு கிடைப்பது மிகவும் கடினம். டோன்ட் அலௌ யுவர்
செல்ஃப் டு பி புஷ்ட் அரௌண்ட். ப்ளீஸ் மேக் தி சாய்ஸ் ஃபார் யுவர்செல்ப்;
ஆன் யுவர் ஓன் செல்ஃப். மெடிக்கல் ஃபீல்ட் பற்றின விவரம் எனக்கு
அவ்வளவாகத் தெரியாது. எனது நண்பன் சாமுக்கு, இங்கு, மெடிக்கல்
ரெஸிடென்ஸி செய்ய அட்மிஷன் கிடைச்சுருக்கு. அவன் இங்கேயே செட்டில்
ஆகும் தீர்மானத்தில் இருக்கிறான். ஹி மேபி மோர் ஹெல்ப் ஃபுல் டு யூ .
கேன் யு டாக் டு ஹிம் ஃபர்ஸ்ட் அன்ட் தென் வி கேன் ஹேவ் ஃபர்தர்
டிஸ்கஷன். நான் அவனுக்கு உங்களை அறிமுகப்படுத்தி; இப்போதே பேச
சொல்கிறேன். அவன் ரொம்ப நல்ல பையன். வெல் மீனிங் பர்ஸன். யு கேன்
ஹேவ் யுவர் டின்னர் அண்ட் கம் பேக் இன் ஃபிஃப்டீன் மினிட்ஸ்.” என்று
பேச்சை முடித்தான்; அவினாஷ்.
பவானிக்கு அவினாஷிடம் நம்பகத்தன்மையும் உண்மையும்
இருப்பதாகத் தெரிந்தது. தான் ஆறு வருடங்களாக வேலை செய்யும்
கம்பெனியின் பெயரையும் தனது டெசிக்னேஷனையும் குறிப்பிட்டவனிடம்;
பே பேக்கேஜ் பற்றி கேட்பது அநாகரிகம், என்று நினைத்தாள். கம்பெனி
அவனுக்கு க்ரின் கார்ட்டுக்கு ஸ்பான்ஸர் செய்யும் நிலையில்; அவன்
இருப்பதே, அவன் ஒரளவு நல்ல வேலையில் தான் இருப்பான், என
நினைத்தாள். அவள் அறையை விட்டு வெளியே வந்ததும், ஜெயம், “என்னடி!
என்ன ஆச்சு? என்று பதட்டத்துடன் கேட்க; ” அம்மா! தயவு செய்து
அவசரப்படுத்தாதே. இப்போதைக்கு சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இன்னும்
பதினைந்து நிமிடங்களில், எனக்கு ஒரு மணி நேரம் மீட்டிங் இருக்கு. டின்னர்
சாப்பிட்டு போகணும்” என்றாள். “அம்மாவிடம் இப்போதைக்கு, இந்த நண்பன்
9
சாம் பற்றி எதுவும் சொல்லாமல் இருப்பதே சிறந்தது; என்று பவானி
முடிவெடுத்தாள்.
[5]
சாம்
இரவு உணவை துரிதமாக முடித்துக்கொண்டு அறையை தாழ் போட்டுக்
கொண்டவள், அவினாஷையே நினைத்துக் கொண்டிருந்தாள். யோசித்து
செயல்படும் அவனது நிதான குணம் அவளுக்குப் பிடித்திருந்தது.
தன்னைப்பற்றி மட்டும் நினைக்காமல் மற்றவர் கண்ணோட்டத்திலும்
பார்க்கும் குணம் எத்தனை பேருக்கு அமையும்? கண்ணாடியில் பார்த்து
லேசாக முகம் திருத்திக் கொண்டாள். அவள் அவினாஷுக்கு விடுத்த
அழைப்பு ஏற்கப்படாமல் போயிற்று. இப்போது என்ன செய்வது? “
காத்திருக்கிறேன்” என்ற குறுஞ்செய்தி” அனுப்பிய அடுத்த நொடியில்
அவினாஷிடமிருந்து அழைப்பு வந்தது.
“சாரி வீட்டில் புல்தரை சீர் சமன் செய்ய ஆட்கள் வந்திருக்கிறார்கள்.
அவர்களிடம் பேச வேண்டியதாயிற்று. சாம் இன்னும் பத்து நிமிடங்களில்
கூப்பிடுவான். ப்ளிஸ்! ஃபீல் ஃப்ரி டு டாக் டு ஹிம். ஹி வில் க்ளியர் ஆல்
யுவர் டவுட்ஸ்.. பெஸ்ட் விஷஸ் ஃபார் யூ.” என்று அழைப்பை துண்டித்து
விட்டான்.
அவினாஷுக்கு சொந்தமாய் ஒரு வீடு இருந்ததைப் புரிந்து கொண்டாள்
பவானி. தனது வேலை பற்றி, ஒரு நம்பிக்கை இல்லாமலா அவினாஷ்
போன்றவன், வீடு வாங்கி திருமணம் செய்ய முடிவு எடுப்பான்? திருமண
விஷயத்திலும் அவசரம் காட்டாமல் இருந்தது; அவளுக்கு பிடித்திருந்தது.
இப்படி யோசனையில் இருக்கும் போதே; சாமினுடைய அழைப்பு வந்தது.
யுஎஸ்எம்எல்இ தேர்வுகளைப் பற்றியும்,இ. ஸி எஃப் எம் ஜி சர்டிஃபிகேட்
பற்றியும் விவரமாகக் கூறினான்.
“பவானி! நீங்கள் ஒரு வருட காலத்தை வீணாக்கி விட்டீர்கள்.
காலதாமதம் கூடக் கூட ரெஸிடென்ஸி ப்ரோக்காராமில் இடம் கிடைப்பது
மிகவும் அரிது. மேலும், நீங்கள் விரும்பும் கார்டியாலஜி ப்ரோக்ராமில்
ஃபாரின் கிராஜுவேட்ஸ்ஸுக்கு, கிடைப்பது மிகவும் துர்லபம். நீங்கள்
அதற்கு முயற்சி எடுப்பது வீண் என்பதே; எனது கருத்து.
விண்ணப்பதாரர்களின் விசா ஸ்டேட்ஸ் கவனத்தில் எடுத்துக்
கொள்ளப்படும்;என்பது உறுதி, என்றே எனக்குப் படுகிறது. நீங்கள் ஒரு
அமெரிக்க குடியுரிமை பெற்றவரை திருமணம் செய்தாலோ அல்லது க்ரீன்
கார்ட் ஹோல்டரை மணம் புரிந்தாலோ சற்றே எளிதாக இருக்கலாம்.
ஆனால் அதற்காக உங்கள் மனதிற்கு பொருத்தம் இல்லதவரோடு, உங்கள்
10
வாழ்க்கையில் எப்படி பயணிப்பீர்கள்? அதுவும்; அமெரிக்காவில்! யோசித்து
முடிவெடுங்கள். அமெரிக்க குடியுரிமை பெற்றவரோ; க்ரின் கார்ட்
ஹோல்டரோ; உங்கள் திறமையில் நம்பிக்கை வைத்து உங்களை திருமணம்
செய்வார்களா? அவர்களுக்கு உங்களைப்பற்றி என்ன தெரிந்திருக்க கூடும்?
உங்கள் அக்காவால் உங்களை ஸ்பான்ஸர் செய்ய இயலுமா; என்று
பாருங்கள். குறிப்பிட்ட காலத்திற்குள் நீங்கள் எல்லா தேர்வுகளும் எழுதி
இசிஎஃப் எம்ஜி சர்டிஃபிகேட் வாங்கி உங்களுக்கு ரெசிடென்ஸியிலும்
சேர்க்கை கிடைத்தாக வேண்டும். அதெல்லாவற்றிலும் நிறைய ” இஃப் அண்ட்
வெதர்” தடங்கல்கள் உள்ளன. ஆனால் அதிலும் மேலும் ஒரு சிக்கலும்
உள்ளது. எப்போதும் அவர்களுக்கு கடமைப்பட்டு, கட்டுக்குள் இருக்கும்
அபாயம் இருக்கிறதல்லவா?” என்றான்.
“என் பெற்றோரை சிறுவயதிலேயே நாங்கள் இழந்து விட்டதனால்,
மருத்துவர்களான என் அண்ணனும் அண்ணியும் அமெரிக்க குடியுரிமையுடன்
இருப்பதினால் இந்தியாவிலேயே நான் இந்த தேர்வுகளில் தேர்வு பெற்று
அமெரிக்காவுக்கு டூரிஸ்ட் விசாவில் வந்தேன். இங்கு வந்து பெரிய
நகரங்களில் ரெசிடென்ஸி வாய்ப்பு மிகவும் கஷ்டம். அதனால் ஐடஹோ
யூட்டா போன்ற மாகாணங்களில் முயற்சி செய்தேன். அதிர்ஷ்டவசமாக
எனக்கு விண்ணப்பித்த முதல் வருடத்திலேயே ‘இன்டர்னல் மெடிசின்’
ரெசிடென்ஸி கிடைத்து விட்டது. மெடிக்கல் ரெசிடென்ஸி இரண்டு வருடம்.
ஆகவே டூரிஸ்ட் விசாவிலிருந்த எனக்கு ஜே-1 விஸா கிடைத்து விட்டதால்
அமெரிக்க வாழ்க்கை தொடர வாய்ப்புகள் உண்டு. ரெசிடென்ஸி முடிக்கும்
தருவாயில் மருத்துவ பணி கிடைக்க வாய்ப்புகள் அதிகம். பணி
கிடைத்தவுடன் H-1B விசாவுக்கு மாறிவிடலாம். வாய்ப்புகளின் சொர்க்கம்
என்று பேசப்படும் அமெரிக்கா; யாருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்;
என்பதில், மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்; எதார்த்தத்தை புரிந்து
கொள்ள வேண்டும்.”ஸர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட்” என்ற டார்வினின்
பரிணாம கொள்கையே தினமும் அமெரிக்காவை வழிநடத்திச் செல்கிறது.
அமெரிக்காவில் வாய்ப்புக்களும் விஸா ஸ்டேட்ஸும் இணைந்தே
பயணிக்கும் நிலைமைதான்.”
சாம் பேசப்பேச பவானிக்கு தலை சுற்றியது.”ஸாம்! இவ்வளவு ரிஸ்க்
எடுத்து, எதற்காக நான் அமெரிக்கா வரவேண்டும்? இந்தியாவிலும் பார்வார்ட்
கம்யூனிடியை சேர்ந்தவர்களுக்கு எம்.டி படிக்க நிறைய தடைகள் உள்ளன.
எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை;” என்று சொல்லும் போதே
அவள் அழுது விட்டாள்.
11
சாம், பதறி விட்டான். “பவானி! நான் எதார்த்த நிலையைத் சொன்னேன்.
நீங்கள் மனம் தளராதீர்கள். உங்கள் சகோதரியால் உங்களுக்கு உதவி செய்ய
இயலுமா; என்று பாருங்கள். திருமணத்தையும் ரெசிடென்ஸி
சேர்க்கையையும் ஒரு சேர இணைத்து பயணிப்பது இயலாத காரியம்.
உங்களுக்கு முதல் சாய்ஸ்.. திருமணமா; ரெசிடென்ஸியா; என்று
முடிவெடுங்கள். திருமணத்தைப் பற்றி நிதானமாக யோசியுங்கள்.” என்றதும்;
பவானி “ரொம்ப தேங்க்ஸ்! ஐ வில் கான்ட்க்ட் யு ஃபார் ஃபர்தர் கைடன்ஸ்”
என்று அழைப்பைத் துண்டித்தாள்.
பவானிக்கு மீண்டும் அவினாஷுடன் பேசும் ஆர்வம் சுத்தமாக இல்லை.
முதலில் தன் மேற்படிப்புக்கு, தான் என்ன செய்ய வேண்டும்; என்பதை
தீர்மானித்து விட்டு பிறகே அவனிடம் பேச வேண்டும்; என்று நினைத்தாள்.
“ஐ ஸ்போக் டு ஸாம். தேங்க்ஸ் ஃபார் இன்ட்ரொட்யுஸிங் ஹிம். ஐ வில்
ஸ்பீக் டு யு லேட்டர் குட் டே டு யு” என்ற குறுஞ்செய்திக்கு, அவினாஷின்
‘நல்லிரவாகட்டும்’ என்ற பதிலை பார்க்கும் போதே, “கீப் யுவர் ஸ்பிரிட் ஹை.
ஸெர்ச்! யு ஷேல் ஃபைன்ட். கெட் பேக் டு மி, ஃபார் எனி கொயரி, எனி
டைம்”என்ற குறுஞ்செய்தி, சாமிடமிருந்து வந்ததையும் பார்த்து; ‘நன்றி’ என்ற
பதிலையும் அனுப்பினவள்; தன் அக்கா புவனியுடன் நீண்ட நேரம்
பேசிவிட்டே உறங்கச் சென்றாள்.
[6]
அவினாஷும் பூமிகாவும்
காலையில் ஜயத்தின் கேள்விகளை, சமாளித்து பதில் சொன்ன பவானி;
சென்னையிலேயே யுஸ்எம்எல்இ தேர்வுகளை எழுதவும்; இந்தியாவில் எம்.டி
இருக்கைக்கான தேர்வுகளையும் சந்திக்க முடிவெடுத்தாள். அதற்கான
பொருளாதார உதவிகளை புவனியும் அவள் கணவரும் செய்வதாக
வாக்களித்திருந்தது பெரிய துயர் துடைப்பாக இருந்தது. எது முதலில்
கிடைக்கிறதோ; அதில் சேர்ந்து முன்னேற முயற்சிக்கலாம்.; அமெரிக்கா
போய் படிப்பதற்காக, திருமண பந்தத்தை ஒரு கருவியாக உபயோகப்படுத்தக்
கூடாது, என்பதில் மட்டும் தெளிவாக இருக்கவும்; அக்கா புவனிக்கோ, தன்
வருங்கால கணவருக்கோ; தான் சுமையாக இருக்கக் கூடாது; என்றும்
முடிவெடுத்ததும், அவள் மன பாரம் நீங்கியது. தன்னையும் அறியாமல்
”தேங்க் யு டியர் சாம் ஃபார் கைடிங் மி. ஐ வில் ஃபைன்ட் மை ஓன் வே டு
அமெரிக்கா; இஃப் டெஸ்டினி டிஸைட்ஸ் ஸோ.” என்று மனதிற்குள் கூறிக்
கொண்டாள்.
அவினாஷ் காலை காபியுடன் தோட்டத்தில் இருக்கும் போதே,
பூமிகாவின் அழைப்பு வந்தது. பரஸ்பர அறிமுகத்திற்குப் பிறகு, பூமிகா,”
12
உங்கள் பரொஃபைலில் கம்ப்யூட்டர் இன்ஜினியர்ஸ்,மே ப்ளீஸ் எக்ஸ்க்யுஸ் ,
என்று போட்டிருக்கிறீர்ளே; யு யுவர் செல்ஃப் பியிங் எ கம்ப்யூட்டர்
இன்ஜினியர். ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா; என்று கேட்டதும்.
அவினாஷ் புன்னகைத்தான். “இரண்டு காரணங்கள்: இருவரும் கம்ப்யூட்டர்
இன்ஜினியராய் இருக்கும் பல வீடுகளில், யார் கம்ப்யூட்டர் ஃபீல்டில்
திறமைசாலி; என்பதில் வரும் வாக்கு வாதங்களை நான் பார்க்கிறேன்.
சமயத்தில் இது விவாகரத்து வரை போகும் அவலத்தையும் பார்க்கிறேன்.
தவிர கம்ப்யூட்டர் ஃபீல்டில் பணிகள் ஸ்திரத்தன்மையை இழந்து கொண்டே
இருக்கின்றன. மேலும் ‘டார்கட் சேசிங்’ ஹேஸ் பிகம் தி ஆர்டர் ஆஃப் தி டே.
குடும்பத்தில் இருவரும் அலுவலின் இலக்கை நோக்கி ஓடிக் கொண்டே
இருந்தால், வாழ்வு தன் ரசனையை இழந்து விடும். இது எனது சொந்த
கருத்து. பணம் சம்பாதிப்பது மட்டும் வாழ்வின் நிறைவு அல்ல. இருப்பதை
சுவாரஸ்யமாக அனுபவிப்பது ஒரு இன்பம்; இல்லையா?” என்று
வினவினான்.
“ஆம் அவினாஷ் நீங்கள் சொல்வது சரிதான். ஹௌ அபௌட் எ பயோ
கெமிஸ்ட் அட் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் யுனிவர்சிடி டுயிங் எம்.எஸ் வித்
மெரிட் ஸ்காலர்ஷிப்? இந்த ஜுலையிலிருந்து முனைவர் பட்டத்திற்கு பதிவு
செய்து கொள்வதாக இருக்கிறேன். அதனால் என் விசா ஸ்டேட்ஸ்
தொடர்வதில் சிக்கல் ஒன்றும் இருக்காது. என் முனைவர் பட்டம் முடிய
நாலைந்து வருடம் ஆகலாம். இதன் பிறகே எனக்கான பணியை நான் தேட
முடியும். ஆனால்,ஒரு ஸாஃப்ட்வேர் இன்ஜினியர் அளவு என்னால் சம்பாதிக்க
முடியுமா; என்பதை தற்போது கணிக்க இயலாது. இவை உங்களுக்கு சரியாக
இருந்தால்,என் பெற்றோரை உங்கள் பெற்றோரிடம் பேசச் சொல்கிறேன்.
இன்னொரு விஷயமும் உள்ளது. உங்களை விட நான் ஆறு மாதம் வயதில்
பெரியவள்; அதையும் யோசிக்கவும்.”என்று சொன்னாள்.
அவினாஷ், “எனக்கு யோசிக்க சற்று அவகாசம் தேவை. இடையில்
என்னப் பற்றி ஏதாவது தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?” என்று
கேட்கவும், பூமிகா, ”ஆம். ஆர் யு எகனாமிக்கலி ஸ்டேபிள்? டு யு வான்ட் டு
ஸ்டே இன் யு, எஸ், ஃபார் எவர்?” என்று வினவினாள். “பூமிகா!
அமெரிக்காவில் எதுவும் நிச்சயமில்லாததே, நிச்சயம்.அது உங்களுக்குத்
தெரியும். காலையில் எழுந்ததும் ‘ கையில் காஃபி கப்பும், செய்வதற்கு ஒரு
வேலையும், தலைமேல் ஒரு கூரையும் கடந்த ஐந்து வருடமாக தடங்கல்
இல்லாமல் கிடைத்துக் கொண்டு இருப்பதினால் தான், திருமணம் செய்யும்
முடிவை நான் எடுத்துள்ளேன். எனது க்ரீன் கார்ட் பரோசசிங் இஸ் இன்
க்யூ. நான் யுஸ்ஸில் தொடர்ந்து இருப்பேனா இல்லையா; என்பது, நானும்
13
என் மனைவியும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு. காலம்தான் பதில்
சொல்லும். தற்போது’ ஃபாலோ தி ஃப்லோ’ என்னும் மன
நிலைதான்;எனக்கு.நாளை என்ன நடக்கும் என்பது யாருக்குத் தெரியும்?
காத்திருந்து கவனிக்கப்பட வேண்டிய சமாசாரம். சென்ட் மி யுவர் மேரியேஜ்
ப்ரொஃபைல். அடுத்த வாரம் பேசலாம்.” என்று பேச்சை முடித்தான்;
அவினாஷ்.
பூமிகாவுக்கு அவினாஷிடம் பேசியது ஒரு நிறைவைத் தந்தது. இவன்
ஒரு முதிர்ந்த மனத்துடன் வாழ்வை அதன் போக்கில் ஏற்றுக் கொள்ளும்
பக்குவத்தில் இருப்பவன்; என்று கணித்தாள். முனைவர் பட்டத்துக்கு முயற்சி
செய்யும் மாணவியை ஒரு சுமையாகவும் கடப்பாடாகவும் அவினாஷ்
நினைக்கவில்லை; என்பதே அவளுக்கு மலர்வாக இருந்தது. தனது
மேயரியேஜ் ப்ரொஃபைலை அவினாஷுக்கு அனுப்பியதும், உடல் பயிற்சி
செய்ய கிளம்பினாள் .
[7]
அவினாஷும் சாமும்
பூமிகா பேசிய சிறிது நேரத்தில், ஃபோன் திரும்பவும் ஒலித்தது. சாம்
தான். “என்னடா ரொம்ப சந்தோஷமாயிருக்கே போல. பொண்ணுங்க வந்து
மொய்க்கிறாங்களோ!” என்று கேலி பேசினான். “போடா! நீ வேறே! ஏதேனும்
கிண்டி கிளறாதே. அந்த டாக்டர் பொண்ணு பேசினாளா? சின்னப் பொண்ணு.
படிப்பு முடிச்சதும் வீட்டில் கல்யாணத்துக்கு பார்க்கிறாங்க போல. மத்திய தர
குடும்பம், என்று தெரிகிறது. ப்ரைட் ஸ்டூடண்ட். கீழ்பாக்கம் மெடிக்கல்
காலேஜில் முதல் ரேங்க். அமெரிக்காவில டாக்டர்களின் நிலைமை
என்னைவிட உனக்குத்தான் தெரியும்னு; உனக்கு டைரக்ட் பண்ணி
விட்டேன். என்னடா சொல்லுது அது?” என்று அவினாஷ் கேட்டான்.
“ஆமாண்டா! பவானி பேசினாள். அவளுக்கு அமெரிக்க க்ரௌண்ட்
ரியாலிட்டி பற்றி ஒன்றும் தெரியவில்லை. இங்க டாக்டர்கள் நிலைமையை
அப்படியே புட்டு புட்டு வைச்சுட்டேன். அது பேசும்போதே அழுதுடுச்சு.
எனக்கே பாவமாயிடுச்சு. தைரியம் சொல்லி வைச்சுருக்கேன். என்ன
செய்வாள்; என்று கணிக்க முடியல்லை. திரும்பவும் பேசுவதாகச்
சொல்லியிருக்கிறாள். இதோ பார்! அவள் அனுப்பித்த மெசேஜை உனக்கு
அனுப்பறேன். “என்றான்.
“ஏன்டா பாவி! இப்படியா ஒரு சின்னப் பொண்ணை பயமுறுத்துவ.
அப்புறம் பூமிகான்னு ஒரு பொண்ணு பேசினா. நல்ல விவரமான பொண்ணு.
இங்கே ஜான் ஹாப்கின்ஸ்ஸில் மெரிட் ஸ்காலர்ஷிப்பில் படிக்கிறாள்.
மேலே பிஎச்டி படிக்கப் போகிறாள். என்னைவிட ஆறு மாதத்துக்குப்
14
பெரியவள். ஆனா ஒண்ணுடா; இந்த கால பொண்ணுங்க ஹஸ்பெண்டை
நம்புறதை விட, தம் படிப்பையும் வேலையையும் தான் நம்புறாங்க. எங்க
அப்பா மாதிரி கண்ணசைவில் அவங்களை கட்டுப்படுத்த முடியாது. வாயா
வார்த்தையா கேட்காட்டாலும், அவங்க எல்லாத்திலும் சம உரிமை
கேட்பாங்க. சரிப்பட்டு வரவில்லை என்றால் போய்க்கிட்டே இருப்பாங்க.
சும்மா டைவர்ஸ்; அது இதுன்னு இழுத்துக் கிட்டு இருக்க மாட்டாங்க.
ஜஸ்ட் வாக் அவுட்; நினைவுல வைச்சுக்க. உனக்கும் வருங்காலத்தில்
உபயோகப்படும். எல்லா பொண்ணுங்களும் நல்ல மணவாழ்க்கைக்கு
அனுசரிக்கத் தயாராகத்தான் இருக்காங்க. ‘எடுத்தேனா கவுத்தேனா’ன்னு
இருக்கமாட்டாங்க. ஆனால் ஒரு வரம்பு வைச்சுருப்பாங்க. நாமளும் அதைத்
தாண்டாமல் இருக்கணும். பவானி என்ன நினைக்கிறா; என்பது அப்புறம்.
இப்போது பூமிகாவுக்கு நான் என்ன சொல்வதுன்னு யோசிக்கிறேன். அரை
மணி நேரம் பேசினாள். ஒரு முறைகூட அவ குடும்பத்தைச் பற்றி ஒன்றும்
சொல்லவில்லை. என் குடும்பத்தைப் பற்றியும் ஒன்றும் கேட்கவில்லை.
அவளது மேரியேஜ் ப்ரோஃபைலில் கூட அவள் பெற்றோர் விலாசம் ஃபோன்
நம்பர். அவளுடைய படிப்பு, வேலை பற்றித்தான் நிறைய போட்டிருக்கு.
ஃபேமிலி டீடைல்ஸ். “இன் பர்சன்” என்று மட்டும். கொடுத்திருக்கு.
அம்மாவிடம் பேசணும். அந்த பவானி பேசினாள்னா; நீ அவளை
உற்சாகப்படுத்து. ரொம்ப பயமுறுத்தாதே. இப்போதைக்கு அவள் என்னிடம்
பேச மாட்டாள், என்றே தோன்றுகிறது. வர வார இறுதிக்குள் நான்
பூமிகாவுக்கு ஏதேனும் பதில் சொல்லணும்.” என்றான்.
ஃபோனை வைத்தவன்; ஏதோ ஒரு மனோ உந்ததுதலில் அம்மாவிடம்
பேசலுற்றான். சாந்தா, ஃபோனை எடுத்ததும்,” என்னடா காயா ; பழமா?
பவானி என்ன சொன்னா? ” என்று ஆர்வமுடன் கேட்க, “உடனே எல்லாம்
ஒண்ணும் சொல்லமுடியாது. உன் கிட்ட பூமிகான்னு ஒரு பொண்ணு
பேசினாளா? அதைச் சொல்லு” என்றான்.”
“ஆமாடா, பேசினாள். நன்னாதான் பேசினா. ஆனா அந்தப் பொண்ணுக்கு
யாருமில்லையா? அவளே தனக்கு வரன் பார்க்கறாளா? உன்னைவிட ஆறு
மாதத்துக்குள் பெரியவளா வேறு இருக்கா. ரத்ன சுருக்கமா பேசினா.
உன்னோட ஃபோன் நம்பர் கொடுக்கும்படி ஆச்சு. அம்மா தப்பா ஏதாவது
பண்ணிட்டேனா? “என்று கேட்டாள்.
“அதெல்லாம் இல்லேம்மா! அவள் என்னோடு இன்னிக்குப் பேசினா.
ஆறு மாசம் எனக்குப் பெரியவளா; இருந்தா; என்ன? மீதி விஷயம் எல்லாம்
ஒத்து வருதான்னு பாரு.”என்றான்.
15
“அட ராமா! உனக்கு வேற பொண்ணு கிடைக்க மாட்டாளா? அப்பா
என்ன சொல்வாரோ; தெரியல்லை.” என்று புலம்பினாள் சாந்தா.
“அப்பாவை சமாளித்து இத்தனை வருஷமாய் குப்பை கொட்டியிருக்க;
ஏதேனும் செய். உனக்கு நாலு நாள் டைம். எனக்கு அவள் ப்ரோஃபைல்
பார்த்து, அப்பாவை சமாளித்து எனக்கு வியாழக் கிழமைக்குள் மெஸேஜ்
போடு.” என்று ஃபோனைத் துண்டித்தான்.
சாந்தா உடனடியாக, இணையத்தில் போய் பவானி மற்றும் பூமிகா
ஜாதகங்களை டௌன் லோட் செய்து கொண்டாள். சுந்தரேசனை எப்படி
சமாளிப்பது; என்ற கவலை அவளைப் பற்றிக் கொண்டது
[8]
பெற்றோர்கள்
சுந்தரேசன் தீவிரமாக டீவியில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தவர்;
புருவத்தை சுருக்கி ‘என்ன’ என்பது போல் பார்த்தார். அந்த ரெண்டு
ஜாதகங்களும் இவனுக்குப் பொருத்தம் பார்த்ததுண்டு வரலாமா; நீங்களும்
வரேளா? சாந்தா அழைத்தாள்” ஒரு பொண்ணு இவனைவிட ஆறு
மாதத்துக்குள் பெரியவள்; ஆச்சே. அது எதுக்கு?” சுந்தரேசனின் வினா.
மனசில் தைரியத்தைக் கூட்டி, “ஆறு மாசம் தானே! அதனால் என்ன?
மீதி விஷயம் எல்லாம் சரியாய் இருக்கான்னு பார்க்கலாம். இதைப் போய்
பெருசு படுத்த வேண்டாம். அந்தப் பொண்ணு பூமிகா அவனோடு பேசி
இருக்கா. பொருத்தம் இருந்தா மட்டுமே மேலே போகலாம்.” என்றதும்
அரைகுறை மனதுடன் சுந்தரேசன் கிளம்பினார்.
அடுத்த அரை மணியில், மயிலாப்பூர் மாடவீதியில் இருக்கும் அந்த
முதிய ஜோசியர் முன் இருந்தார்கள். “என்ன? அவினாஷுக்கு
கல்யாணத்துக்கு பார்க்க ஆரம்பிச்சாச்சா?” என்றபடியே ஜாதகங்களை அலசி
ஆராய்ந்தார். “சுந்தரேசா! ரெண்டு ஜாதகங்களும் அவினாஷின் ஜாதகத்துக்கு
பொருத்தமாய் உள்ளது. ரெண்டு பொண்களும் யோகசாலிகள் தான்.
பவானியின் ஜாதகம் பத்துக்குப் பத்தும் பொருத்தமாய் உள்ளது. ரொம்ப
சாதுவான பொண்ணு. பூமிகாவின் ஜாதகம் பத்துக்கு எட்டு சரியாய் உள்ளது.
பூமிகா மிகவும் சுய சிந்தனையுள்ள பொண்ணு. எதைப்பற்றியும் தனக்கென
ஒரு கருத்தை அமைத்துக் கொண்டு, அது படிதான் நடப்பாள். மற்றவர்களை
தன்பக்கம் திருப்பும் சாமர்த்தியம் உள்ளவள். மத்தபடி லௌகீக விஷயங்கள்
எப்படின்னு நீங்க விசாரித்து முடிவெடுங்கள்.” என்று தன் கருத்தை சொல்லி
விட்டார்.
16
சுந்தரேசன், ” சாந்தா! இந்த பூமிகா வேண்டாம். இப்படிப் பட்ட
பொண்ணு நம்மை அவினாஷிடமிருந்து பிரித்து விடுவாள். நாம் பவானியை
பார்ப்போம்.” என்றார்.
“வேணாம்! அவனுக்கு யாரைப் பிடிச்சுருக்கோ அவளையே அவன்
கல்யாணம் பண்ணிக்கட்டும். நாம் குடும்ப பின்னணிகளைப் பற்றி நன்கு
விசாரித்து அவனுக்கு சொல்லி விடலாம். இன்னும் எத்தனை ஜாதகங்கள்
பொருந்தி வந்தாலும்; நம் வேலை; விசாரித்து அவனுக்குச் சொல்வதோடு
நிறுத்திக் கொள்வோம். இப்போது தானே இரண்டு ஜாதகங்கள்
வந்திருக்கின்றன! நிதானமாகச் பார்ப்போம். அவசரம் ஒன்றும் இல்லை.
முடிவை அவனிடம் விட்டுவிடலாம். இன்னொருத்தர் வந்து நம்மை
அவனிடமிருந்து நம்மை எப்படி பிரிக்க முடியும்?” என்றாள் சாந்தா.
சுந்தரேசன் யோசனையில் ஆழ்ந்தார். “சரி! குடும்ப பின்னணி பற்றி
விசாரிக்கலாம். எனக்கு என்னவோ பவானியை முன்னெடுத்துப் பார்க்கலாம்;
என்று படுகிறது.” என்று சொன்னார்.
இதற்கு மேல் பேசினால் காரியம் கெட்டுவிடும்; என்று உணர்ந்த
சாந்தா, அப்போதைக்கு மௌனமானாள். வீட்டிற்கு போனவுடன் முதல்
வேலையாக காஃபி கலந்து சுந்தரேசனிடம் கொடுத்தவள், “நீங்கள் பவானியின்
அப்பா மகாதேவனுடன் பேசுங்கள். நான் பூமிகாவின் அம்மாவிடம்
பேசுகிறேன்.”என்றாள். சுந்தரேசன், மகாதேவனுடன் பேச முயல, சாந்தா
பூமிகாவின் தாயார் பிரேமாவிடம் பேச முயன்றாள்.
“ஆமாம்! சாந்தா! எங்களுக்கும் ஜாதகம் பொருந்தி வந்தது. நாம் நேராக
எப்போது சந்திக்கலாம்? நாளை மாலை நான்கு மணி அளவில் நானும்
பூமிகாவின் அப்பாவும் உங்கள் வீட்டிற்கு வரலாமா?” என்றதும், சாந்தா “
தாராளமாக வாருங்கள்.” என்று சொல்லி விட்டு அழைப்பை நிறுத்தினாள்.
அறையை விட்டு வெளிவந்து, “பவானியின் அப்பா பிடி கொடுக்காமல்
பேசுகிறார். பவானி அவினாஷிடம் பேசியிருக்கா; என்பது மட்டும் தெரிகிறது.
ரெண்டு நாள் கழித்து நீயே அவள் அம்மாவிடம் பேசிப்பார்.” என்றதும், சாந்தா,
“சரி! அதை விடுங்கோ! நாளைக்கு பூமிகாவின் அப்பாவும், அம்மாவும்
நாளைக்கு இங்கே வருவதாகச் சொல்லியிருக்கா. என்ன பேசறாள்னு
பார்ப்போம். அவர்கள் வந்து விட்டுப் போனபின் அவினாஷுக்கு ஃபோன்
பண்ணலாம்.” என்றாள்.
மறுநாள் நான்கு மணிக்கு பூமிகாவின் பெற்றோர் பிரேமாவும்
பரமேஸ்வரனும் வந்தனர். பரஸ்பர அறிமுகம் ஆனபின் பிரேமா பேச
ஆரம்பித்தாள். “எங்களைப் பற்றி முக்கியமாக நீங்கள் தெரிந்து கொள்ள
17
வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது.” என்று ஆரம்பிக்க; பரமேஸ்வரன்
தொடர்ந்தார்.
“பிரேமாவும் நானும் இந்த நகரத்தின் பிரபலமான லாயர்கள். வெகு
நாட்களாக பிரிந்து தான் வாழ்ந்து வருகிறோம். மனமொப்பி செய்த காதல்
திருமணம் தான். நீங்கள் ஏதும் தவறாக நினைக்க வேண்டாம். பரஸ்பர
விவாகரத்து என்பது எங்களால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.
எங்களுக்குள் நல்ல புரிதலும் இருக்கிறது. எனினும் நாங்கள் ஏறும் ஏணியின்
உயரம், எங்களைத் தனியே பிரிய சொன்னது. பல வழக்குகளில் நாங்கள்
எதிர் எதிர் தரப்பு வக்கீல்களாக வாதாடி வருகிறோம். தொழில் முறை
சங்கடங்களை தவிர்க்க இயலாது போயிற்று. அவ்வளவுதான். தொழில்
நிமித்தமாக எங்களுக்குள் இருக்கும் மோதல்களும், போட்டியும், அபிப்ராய
பேதங்களும், ஒரு வழக்கை நாங்கள் கையாளும் விதமும் எங்களை தனியே
வாழ வைத்துள்ளன. தொழிலில் ஒருவர்க்கொருவர் சளைத்தவர் இல்லை;
என்று புரிந்துகொண்டு, இளமையிலேயே தனியே வாழ ஆரம்பித்து
விட்டோம். இப்போதும் அப்படியே. அதனால்தான்” கம்ப்யுடர் இன்ஜினியர்ஸ்
மே ப்ளிஸ் எக்ஸ்க்யுஸ்” என்ற வித்தியாசமான வேண்டுதல் எங்களை
கவர்ந்தது. எங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு தடங்கல், எங்கள் ஒரே
மகளான பூமிகாவுக்கு ஏற்பட வேண்டாம்; என்பதே எங்கள் எண்ணம்.
எங்களைச் பற்றிய இந்த விவரத்தை நேரில் உங்களுக்குத் தெரிவிக்கவே
நாங்கள் இப்போது உங்களை சந்திக்க முன் வந்துள்ளோம். ஏற்றுக் கொள்வது
கடினமான விஷயம்தான். பூமிகா பற்றின மீதி விவரங்கள் நீங்கள்
அறிவீர்கள். இனி யோசிக்க வேண்டியது நீங்கள் தான். இது பற்றி நீங்களும்
அவினாஷும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்து எங்களுக்கு தெரிவியுங்கள்.
மீதி விஷயங்களைப் பற்றி பிறகு நாம் பேசலாம்.” என்று பரமேஸ்வரன்
சொல்லி முடித்தார்.
சாந்தாவும் சுந்தரேசனும் ஒரு நிமிடம் கல்லாக உறைந்து விட்டனர்.
சாந்தாவுக்கு, அவினாஷ் கம்ப்யூடர் படித்த பெண் வேண்டாம்; என்று
சொன்னது, ஏன்; என்பது புரிந்தது. பிறகு பொதுவான விஷயங்களைப்பற்றி
எளிதான உரையாடலுடன் அன்றைய சந்திப்பு இனிதே முடிந்தது.
அவினாஷிடம் பேசி முடிவைத் தெரிவிப்பதாகச் சொல்லி அவர்களை
வழியனுப்பி வைத்தார்கள். இன்னும் அவர்கள் அவினாஷின் புகைப்படத்தை
கேட்கவில்லை. இவர்களும்,பூமிகாவின் ஃபோட்டோவைப் பார்க்க ஆர்வம்
காட்டவில்லை; என்பதை உணர்ந்தார்கள். தற்போதைய திருமணங்களில்
முகத்தின் வசீகரம் ஒரு முக்கியமான அங்கமே இல்லை; என்று இருவரும்
18
உணர்ந்தனர். அதிசயமாக சுந்தரேசனே அவினாஷுக்கு இன்றைய சந்திப்பு
பற்றி சற்றே நீளமான குறுஞ் செய்தியை அனுப்பிவைத்தார்.
[9]
பவானி
பவானி,” அம்மா! இப்போதைக்கு எனக்கு கல்யாணம் வேண்டாம். நான்
வாழ்வில் அடுத்து என்ன செய்ய வேண்டும்; என்பதை யோசிக்க அவகாசம்
வேண்டும். யாருக்கும் நான் பாரமா இருக்க விரும்பல்லை.” என்றாள்.
“கல்யாணம் பண்ணிண்டு நன்றாக யோசியேன்! யார் வேண்டாங்கறா?
இப்ப வந்திருக்கிற அமெரிக்க வரன் ஜாதகம் பொருந்தி வந்திருக்கிறது. ஒரு
அக்கா; கல்யாணமாகி செட்டில் ஆயிட்டா. அவனைக் கல்யாணம்
பண்ணிண்டு அமெரிக்கா போ. நிதானமாக யோசித்து ஒரு முடிவுக்கு வா”
என்றாள்;
ஜெயம். “அம்மா! அவனைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? என்னைப்
பற்றித் தான் அவனுக்கு என்ன தெரியும்? எந்த தைரியத்தில் அவனைக்
கல்யாணம் பண்ண முடியும்? எந்த அமெரிக்க மாப்பிள்ளையும் என்னை உப்பு
மூட்டை போல் சுமக்கத் தயாராக இல்லை. அதை நீ புரிஞ்சுக்கோ. நான்
ஒரு டாக்டர். அமெரிக்காவில் அவனுக்கு சமைத்துப் போடவும், குழந்தை
பெத்துக்கவுமா, நான் அமெரிக்கா போறேன்? எனது ப்ரொஃபெஷனில் நான்
முன்னேற வேண்டாமா? இந்தியாவில் எம். டி நுழைவு தேர்வுகளையும்,
அமெரிக்காவுக்கு போகும் முன் உள்ள பூர்வாங்க தேர்வுகளையும் எழுதி
தேர்வு பெற முயற்சி எடுக்கப் போகிறேன். புவனி பண உதவி செய்ய உறுதி
அளித்திருக்கிறாள். எதில் எனக்கு வெற்றி கிட்டுகிறதோ அதை வைத்து
பிற்பாடுதான் கல்யாணப் பேச்சு. இப்போதைக்கு எல்லாத்தையும் நிறுத்து.
என்னை நிம்மதியாகப் படிக்க விடு. இப்பவே கல்யாணத்துக்காக காத்திருந்து
ஒரு வருஷ காலத்தை வீணாக்கி விட்டேன். உங்களுக்குப் புரிகிறதா;
இல்லையா? ” என்றாள்.
ஜெயம் ஒன்றும் விளங்காமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அந்தப் பையன் அவினாஷ், தப்பாக எதேனும் பேசினானா? என்று
மகாதேவன் கேட்டார். “இல்லை! அவர் எனக்கு பெரிய உதவி
செய்திருக்கிறார். நான் சொன்னால் உங்களுக்குப் புரியாது”. அவருக்கு நன்றி
சொல்லத்தான் நான் கடமைப்பட்டுள்ளேன்.” என்று சொல்லியபடி, பவானி
மருத்துவமனைக்குக் கிளம்பினாள்.
அன்று இரவு முதல் வேலையாக அவினாஷுக்கு, “உங்களை தொந்தரவு
படுத்தியதற்கு மன்னிக்கவும். நீங்களும்,உங்கள் நண்பர் சாமும் என்
கண்ணைத் திறந்து பார்க்க கற்பித்து இருக்கிறீர்கள். என் நிலைமை
19
என்னவென்று; இப்போதுதான் புரிகிறது. என் துறையில் என்னை நானே
மேம்படுத்திக் கொண்டால்தான் அமெரிக்காவிலோ; இந்தியாவிலோ நான்
மருத்துவராக முன்னேற முடியும்; என்பதைப் புரிய வைத்துள்ளீர்கள்.
தற்போது நான் திருமணத்திற்கு தயாராக இல்லை. நீங்கள் என்னைத்
தவிர்த்து விடுங்கள். இதை உங்கள் பெற்றோரிடம் தெரிவிக்கவும். நான்
இன்று காலை என் பெற்றோரிடம் தெளிவாக்கிவிட்டேன். உங்கள்
வாழ்க்கையில் உங்கள் மனதிற்கேற்ற பெண்ணைத் தேர்ந்தெடுங்கள்.
உங்களுக்கு என் வாழ்த்துகள். அமெரிக்கா வருவது பற்றி ஏதும் கேள்விகள்
இருந்தால், ஒரு சிநேகிதியாக மட்டும் எண்ணி, நீங்கள் எனக்கு விளக்கம்
கொடுத்து, உதவி செய்ய வேண்டுகிறேன். தங்கள் நண்பரிடம் தொடர்ந்து
எனக்கு ஆலோசனை வழங்க கேட்டுக் கொள்ளுங்கள். நானும் அவரிடம்
பேசுகிறேன். நன்றி.” என்பதாக குறுஞ்செய்தி அனுப்பினாள்.”
“சாம்! மிகவும் நன்றி. அமெரிக்காவில் டாக்டர்கள் நிலைமையை
எனக்கு நன்கு புரிய வைத்துள்ளீர்கள். எவர் மீதும் குதிரை சவாரி செய்து
அமெரிக்கா வருவதில் எனக்குத் துளியும் விருப்பமில்லை. தேர்ந்த
மருத்துவராக பரிமளிக்கவேண்டும்; என்ற கனவை நோக்கி வேகமாக நடக்க
ஆரம்பித்துள்ளேன். என் திருமணம், அதற்கு தடங்கலாக இருப்பதால்;அதை
தற்போது தள்ளி வைத்து, என் பணியில் மட்டும் என் கவனத்தை செலுத்த
என்னை தயாராக்கிக் கொண்டுவிட்டேன். ஏதேனும் சந்தேகம் கேட்கும் போது
ஒரு சிநேகிதியாக மட்டும் நினைத்து; எனக்கு விளக்கம் கொடுக்க
வேண்டுகிறேன். தற்போது யுஎஸ்எம்எல்இ தேர்வுகளுக்கும், இந்தியாவில்
எம்.டி நுழைவு தேர்வுகளுக்கும்; நான் தீவிர முயற்சி செய்யத் திட்டம்
போட்டு இருக்கிறேன். ஏதாவது ஒன்றில் எனக்கு வெற்றி
கிடைத்ததற்கப்புறமே, திருமணம் செய்வது பற்றி யோசிக்க வேண்டும். இதை
உங்கள் நண்பர், அவினாஷிடம் தெரிவிக்கவும். அவருக்கும் நான்
குறுஞ்செய்தி அனுப்பியுள்ளேன். மிகவும் நன்றி.” என்பதாக சாமுக்கும்
குறுஞ்செய்தி அனுப்பி விட்டதும் பவானியின் மனது நிம்மதி அடைந்தது.
[10]
அவினாஷும் சாமும் பவானியும்
வழக்கத்திற்கு மாறாக அப்பாவின் சற்றே நீளமான குறுஞ்செய்தி.”
பூமிகாவின் பெற்றோர் இளமையிலிருந்தே விவாகரத்து இல்லாமல் பிரிந்து
வாழும் அட்வகேட் தம்பதியர். நகரத்தில் பிரபலமான வக்கீல் தம்பதியர்.
அவர்கள் சொல்லாவிட்டால் நமக்குத் தெரிந்ததே இருக்காது. இணக்கமாவும்
நன்றாகவும் பேசினார்கள்; எனினும், எனக்கு இந்த விஷயத்தை ஏற்பது
கடினமாக உள்ளது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்ளை என்னால்
20
புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த விஷயத்தை நாம் ஏற்றுக்
கொண்டால்தான்; இந்த சம்பந்ததத்தை நம்மால் மேலே எடுத்துக் கொண்டு
போக முடியும். திருமண வாழ்க்கையில் அப்படி ஒரு பிடிவாதம் தேவையா?
பூமிகாவின் அம்மா ; ஏன்; அத்தனை பிடிவாதமாக இருக்க வேண்டிய
அவசியம் என்ன? நாளை பூமிகாவும் தன் அம்மா மாதிரி இருப்பாளோ; என்ற
அச்சம் எனக்கு வருகிறது. ஆனால், நீ ஏன் கம்ப்யூட்டர் படித்த பெண்
வேண்டாம்; என்று சொல்கிறாய்; என்பது எனக்குப் புரிகிறது. அவள் உன்னை
விட ஆறு மாசத்துக்குப் பெரியவள்,வேறு.நாம் ஏன் அவசரப் படவேண்டும்?
வேறு ஜாதகம் பார்க்கலாம்; என்று படுகிறது. பவானியின் அப்பா பிடி
கொடுக்காமல் பேசுகிறார். உன் அம்மா உனக்கு என்ன பிடித்தமோ, அதையே
செய்யலாம் என்கிறாள். உன் முடிவு என்ன?” என்பதாக இருந்தது.
அப்பா, நிகழ்கால நடைமுறை ஒன்றும் அறிந்திருக்க வில்லை; என்று
தெரிகிறது; என்று யோசிக்கும் சமயம் பவானியின் குறுஞ்செய்தி வந்தது.
“பரவாயில்லை! பெற்றோரின் அழுத்தத்தையும் மீறி, அந்தப் பெண்
சரியாகத்தான் முடிவெடுத்துள்ளாள்.
“ஆம். சாம் என்னிடமும் பேசினான். அதிகமாக பயமுறுத்தி விட்டானா?
அவன் எதிலும் ‘வெட்டு ஒன்று துண்டு ரெண்டு’ என்று பேசுபவன். ஆனால்
ஒரு ஹானஸ்ட் அண்ட் ஹானரபள் பையன். உன்னை என் சிநேகிதியாகவே
பார்க்கிறேன். மனதில் எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் கவலைப்படாமல்
மேலே உன் வேலைகளைப் பார். எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய
தயாராய் இருக்கிறேன். சாமும் அப்படியே.” என்ற குறுஞ்செய்தியை
பவானிக்கு அனுப்பினான். பிறகு தன் அப்பாவுக்கு “அப்பா! நான் பூமிகாவின்
பெற்றோருடனா வாழப் போகிறேன்? அவர்களது ஒளிவு மறைவற்ற
தன்மையை நாம் பாராட்டத்தானே வேண்டும்? அவர்கள் பிரிந்தே
இருந்தாலும், பூமிகாவுக்கு நல்லதொரு பெற்றோராய்த் தானே
இருந்திருக்கிறார்கள்? தங்கள் வாழ்க்கையில் நடந்த விபரீதம் தங்கள்
பெண்ணை பாதிக்காமல் இருக்க வேண்டும்; என்ற கவலை,
வெளிப்படையாகத் தெரிகிறது. இது பூமிகா மேல் அவர்கள் கொண்டுள்ள
அன்பைத்தானே, காண்பிக்கிறது. கசப்புடனு,ம் அச்சத்துடனும் சேர்ந்து
வாழும் தம்பதியரைவிட இவர்கள், எத்தனையோ மேல் அல்லவா? காலம்
மாறிவிட்டது. அந்தக் காலம் போல் பெண்கள் சொல்வதைத் கேட்டுக்
கொண்டு இருக்கமாட்டார்கள். ஆண்களுக்கு இணையாக படிக்கிறார்கள்;
வேலை பார்த்து சம்பாதிக்கிறார்கள். அவர்களுக்கு என்று தனிப்பட்ட
எண்ணமும் குறிக்கோளும் இருக்கிறது. இந்தப் புரிதல், இந்தக்கால
ஆண்களுக்கு கட்டாயம் தேவை. ஆறு மாசத்துக்குப் நான் பெரியவனா, பூமிகா
21
பெரியவளா, என்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை.தாராளமாக வேற
பெண்ணை நீங்கள் பார்க்கலாம். என் திருமணத்திற்கு அவசரமும் இல்லை.
அது இப்போது இஷ்யு அல்ல. பூமிகாவை “வேண்டாம்’ என்று சொல்ல இந்தக்
காரணங்கள் போதாது. நீங்களும் அம்மாவும் கலந்து ஆலோசித்து எனக்கு
மெசேஜ் அனுப்புங்கள். இந்த வார இறுதிக்குள் பூமிகாவுக்கு, முதலில், இந்த
நிலையை ஏற்றுக் கொண்டேனா என்ற அளவில் நான் முடிவு
சொல்லவேண்டும்” என்று நீண்டதொரு செய்தியை அனுப்பிவைத்தான்.
காலையில் எழுந்ததும் பவானியிடமிருந்து வந்த குறுஞ்செய்தியைப்
படித்த சாம், ” பவானி! நீங்கள் நல்ல முடிவு தான் எடுத்துள்ளீர்கள். உங்கள்
எண்ணப்படி உங்கள் வாழ்க்கை அமையட்டும். கருத்தூன்றி படியுங்கள்.
இந்தியன் மெடிக்கல் க்ரேஜுவேட்ஸ்களுக்கு இந்த தேர்வுகள் ஒரு விஷயமே
இல்லை. நாமெல்லாம் ஹார்ட் வொர்க்குக்கு பழக்கப் பட்டவர்கள். முதல்
தேர்வை எளிதாகத் தாண்ட முடியும். எந்த புக் படிக்கணும்; மாதிரி தேர்வுகள்
கொஸ்டின் பேங்க் பற்றி எல்லாம் விவரமாகச் சொல்கிறேன். எந்த
டென்ஷனும் ஏற்றிக் கொள்ளாமல் நன்றாக படியுங்கள்.”என்று பதிலனுப்ப
பவானி உற்சாகமானாள்.
[11]
அவினாஷும் பூமிகாவும்
அந்த வெள்ளிக்கிழமை மாலை, அவினாஷ் ,” நம் பெற்றோர்களின்
சந்திப்பு என் வீட்டில் நடந்தேறியது. அறிய வேண்டியவை தெரிந்து
கொள்ளப்பட்டன” என்ற குறுஞ்செய்தியை அனுப்பின சிறிது நேரத்திலேயே,
பூமிகாவின் குறுஞ்செய்தி வந்தது.
“இந்த விஷயத்தை உங்கள் பெற்றோர் எப்படி பார்க்கிறார்கள்; என்பது
என் பெற்றோருக்கு மிகவும் முக்கியம். எனக்கும் கூட. அவர்கள் பிரிந்து
வாழ்வது போல், எனக்கும் இது நிகழக் கூடாது என்பதில் கவனமாக
இருக்கிறார்கள். மேலும் அவர்களது வித்தியாசமான வாழ்க்கை என்னை எந்த
விதத்திலும் பாதிக்கக் கூடாது; என்ற பதட்டத்தில் இருக்கிறார்கள். என்னை
முற்றிலும் பாதுகாப்பான இடத்தில் மண முடிக்கவே அவர்கள்
விழைகிறார்கள். பணம் ஒரு பொருட்டல்ல; அவர்களுக்கும்; எனக்கும்
மிகையாக பணம் சம்பாதிக்க இயலலாம்; இயலாமல் கூட போகலாம்.
பரஸ்பர அன்பையும் நம்பிக்கையையும் மட்டுமே நான் முன்னிருத்துகிறேன்.
அவர்களுடைய சமூக சூழலிலும், பணி சூழலிலும், இருப்பவர்களால் கூட
இதை சரியாக பார்க்க முடிவதிவில்லை. யாவரும் என் அம்மாவை குறை
கூறும் மனநிலையில் தான் இருக்கிறார்கள். இதை என் அப்பாவால் ஏற்றுக்
கொள்ள முடியவில்லை. தன்னைப் போலவே தன் மனைவியின்
22
சுதந்திரத்தையும் கருத்தையும் மதிக்கும் ஒரு பையனைக் தேடி அலைகிறார்.
இது போல் ஒரு உன்னதமான பெற்றோருக்கு மகளாகப் பிறந்தது; என்
பாக்கியம். அவர்களது முழு ஆசிகளுடன்தான்; என் திருமணம்
நடக்கவேண்டும்; என்பதில் நானும் உறுதியாக இருக்கிறேன்.”
அதைப் படித்ததும் “நாளை வழக்கமான நேரத்தில் நாம் பேசலாமா;
இப்போது அலுவலக அலுவல்கள் அழைக்கின்றன” என்ற குறுஞ்செய்தியை
அனுப்பிவிட்டு வேலையில் ஆழ்ந்தான் அவினாஷ்.
இரவு வேலை முடிய வெகு நேரம் ஆனதால்; காலையில்
எழுந்திருக்க தாமதம் ஆனது. கையில் காபியுடன் அமரவும், பூமிகாவின்
அழைப்பு வரவும் சரியாக இருந்தது. அவினாஷ் தன்னைப்பற்றிய சிறு
அறிமுகத்துடன் பேச்சை ஆரம்பித்தான். தன் அம்மா சாந்தா அவள்
பெற்றோர் விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும்; அவன்
முடிவுக்கு விட்டுவிட்டாள் என்பதைச் சொன்னதும், பூமிகா; ” ஆன்டி இஸ்
ஷோ ஸோ ஸ்வீட்’ என்று தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தாள்.
அவினாஷ்,” என் அம்மா ஒரு ப்ராக்மேடிக் பர்ஸன். எதிலும் டௌன் டு
இயர்த் ப்ராக்டிகலாதான் இருப்பாள். எதையும், ‘அதனால் என்ன’ என்றே
கடந்து போவாள். நானும் என் அம்மாவும் எப்போதும் ஒரே வேவ்
லெங்க்ன்த்தில் இருக்கிறவர்கள். மோர் ஓவர், வி போத் ஆர் வெரி மச்
இமோஷனலி அட்டாச்ட்.. என் அப்பா அது மாதிரி இல்லை.அவரால் இந்த
விஷயத்தை எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை; எனினும்; அவரிடம்
பேசி சமரசம் செய்ய என்னால் இயலும். நம் இருவருடையே ஏற்படக்கூடிய
இணக்கம் தான் மிக முக்கியம், இல்லையா?”என்றான்.
அவள் தனது ஆராய்ச்சி படிப்பைப் பற்றி விவரமாகச் பேசி; தனது
பெற்றோர் , அவளது பட்டமளிப்பு விழாவுக்கு வருவதாக உள்ளார்கள்;
என்பதைச் சொன்னாள். அவினாஷும், தனது அலுவலக வேலை பற்றியும்,
அதில் தனது வருங்கால முன்னேற்றம் பற்றியும் அவளிடம் சொன்னான்.
அவர்களால் பொதுப்படையாக பல விஷயங்களைப் பேசிக் கொள்ள
முடிந்தது; என்பதே ஒரு இணக்கமான அம்சமாக இருந்தது. பேச்சின்
முடிவில் , மறுநாள் ஞாயிறு காலை இதே நேரத்தில் மீண்டும் பேசலாம்
என்று முடிவெடுத்த நேரம், “கேன் ஐ டாக் டு சாந்தாம்மா? ‘ என்று
கேட்டதில் அவினாஷ் மகிழ்வடைந்தான். ‘ஆன்டி’ என்ற விளிப்பிலிருந்து’
‘சாந்தாம்மாவுக்கு’ மாறியதை அவன் கவனிக்கத் தவறவில்லை.
”வுட் யு கேர் டு கிவ் யுவர் பேரன்ட்ஸ் மொபைல் நம்பர்ஸ்” என்று
கேட்க; ” எஸ்! ஆஃப் கோர்ஸ். யு கேன் டாக் டு ஐதர் ஆஃப் தெம். ஐ வில்
கிவ் யுவர் நம்பர் டு தெம். பட்; ப்ளிஸ் மெஸேஜ் அண்ட் ஃபிக்ஸ் எ டைம்
23
வித் தெம் ஃபார் எ ஃப்ரி அண்ட் அன்டிஸ்டர்ப்ட் கான்வர்சேஷன்.” என்று
அழைப்பைத் துண்டித்தவள்; அடுத்த வினாடி தன் பெற்றோரின் எண்களை
அனுப்பக் தவறவில்லை. அவினாஷ், தன் அம்மாவுடன் இருக்கும் ஒரு
போட்டோவை பூமிகாவுக்கு அனுப்ப; பூமிகா தன் பேராசிரியருடன் இருக்கும்
ஒரு ஃபோட்டோவை அனுப்பி வைத்ததும்; இருவருக்கும் நிறைவைத் தந்தது.
அவினாஷ் பரமேஸ்வரனுக்கு தன்னை அறிமுகம் செய்து கொண்டு,
பேசுவதற்கு நேரம் கேட்க; அவர் “இன்று மாலையில் ஏழு மணிக்கு
பேசலாம்” என்று நேரம் குறித்தார். அன்று டின்னர் முடிந்தும், பூமிகாவின்
பெற்றோருடன் பேசியதில், பூமிகா அவர்களது ஒரே பெண் என்று தெரிந்து
கொண்டான். அன்றைய பேச்சு முழுவதும் பூமிகா பற்றியே தான் இருந்தது.
இருவருக்கும் பூமிகா மேல் இருந்த அளவற்ற அன்பு புரிந்தது. அவள், தன்
பிடிவாதத்தின் பேரிலேயே மேல் படிப்புக்கு அமெரிக்கா வந்திருக்கிறாள்.
எப்போதும் தன் முடிவுகளை தானே எடுக்கும் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க
மாட்டாள்; எதற்கும் எவரையும் சார்ந்து நிற்கும் பெண் அல்ல; என்பது
தெளிவாகத் தெரிந்தது. ஆம். இந்த கல்யாணப் பேச்சையும் அவள் தானே தன்
அம்மாவிடம் பேசி ஆரம்பித்தாள். சாதரணமாக தமிழ்நாட்டில், குறிப்பாக
பிராமண சமுதாயத்தில் கல்யாணப் பெண்ணே இவ்வாறு திருமணம் பேச்சை
முன்னெடுப்பது இல்லை தானே!
நீண்ட சம்பாஷணையை ஒருவாறு முடித்த அவினாஷுக்கு ;
அம்மாவிடம் பேசவேண்டும் போல் இருந்தது. சாந்தா” என்னடா இன்னும்
தூங்க வில்லையா? உடம்பு ஏதும் சரியில்லையா”என்று பதறினாள். ” அம்மா!
அதெல்லாம் இல்லை பவானி எனக்கு எழுதின மெசேஜை உங்களுக்கும்
அப்பாவுக்கும் போட்டு இருக்கிறேன். இனி அவளையோ அவள் வீட்டாரையோ
தொந்தரவு படுத்தாதீர்கள். பூமிகா என்னுடன் தொடர்ந்து பேசிக் கொண்டு
இருக்கிறாள். இன்று, அவள் பெற்றோருடனும் நான் பேசினேன். தி ஃபேமிலி
ஸீம்ஸ் குட் ஃபார் மீ. அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் இருக்கும்.
எல்லாவற்றையும் பொது வெளிக்கு ஒப்பித்தோ; பொதுவெளியை ஒட்டியோ
செய்யவேண்டும்; என்ற எந்த அவசியமும் இல்லை.
“அம்மா! உனக்குக் கிடைக்காத சுதந்திரத்தை நோக்கிப் போகும் இந்தக்
கால பெண்கள்; தன் முடிவை தானே எடுப்பது; தவறா? சொல். ஆணுக்கு
எப்போதும் இருக்கும் சுதந்திரம் பெண்களுக்கு ஏன் கிடைக்கக் கூடாது?
உன்னிடம் அவள் பேசுவாள்; என்று நினைக்கிறேன். உனக்குப் பிடித்தால்,
எனக்கு சரி, என்ற பழைய பல்லவியைப் பாடாதே. எனக்கு உங்கள் இருவரின்
இசைவு முக்கியம்.” என்றான்.
24
“சரிடா! நடப்பது எல்லாம் நன்றாகத் தான் உள்ளது. உன் மனசும் புரிந்து
விட்டது. அவள் அப்பாவிடம் உன் அப்பாவை பேசச் சொல்கிறேன். நானும்
பிரேமா மாமியுடன் பேசுகிறேன். இப்போது நீ படுத்து தூங்கு” என்றாள்
சாந்தா, நிறைவான மனதுடன்.
[12]
பவானி
பவானி தனது எம். டி நுழைவு தேர்வுகளுக்கும் யுஎஸ்எம்எல்இ
தேர்வுகளுக்கும் தன்னை தயார் படுத்திக் கொண்டும்; மருத்துவமனை
வேலைகளிலும் மும்முரமாக இருந்தாள். அம்மா ஜெயம் பவானியின்
பிடிவாதத்தால், மனம் தளர்ந்து போனாலும்; அவள் அப்பா மகாதேவன்,
பவானிக்கு முழுமையாக ஒத்துழைத்தார். “பவானி சொல்வதும் சரிதான்.
முன்பின் தெரியாத பையனை நம்பி எப்படி பவானியை அமெரிக்காவுக்கு
அனுப்புகிறது? புவனிக்கு நன்கு தெரிந்த இடத்திலிருந்து அமெரிக்க வரன்
வந்தது. அப்படி ஏதும் வந்தால் பார்க்கலாம். இல்லையெனில்
இந்தியாவிலேயே ஒரு நல்ல பையன் கிடைக்காமலா போய் விடுவான்? எம்.
டி அட்மிஷன் கிடைச்சுட்டா; இங்கேயே வரன் பார்த்து கல்யாணம் பண்ணி
வைக்கலாம். ரெண்டு குழந்தைகளையும் அமெரிக்காவில் கொடுத்துட்டு,
வயதான காலத்தில் நாம் ஏன் தனியாக இருக்க வேண்டும்;’ என்று அவர்
நினைப்பு ஓடியது.
அடுத்த ஆறு மாதங்களில் பவானி ஒரு முறை எம். டி சேர்க்கைக்கான
நுழைவு தேர்வு எழுதினாள். அவளுடைய ராங்க்கிற்கு ஜெனரல் மெடிசின்
சேர்க்கை கிடைக்கவில்லை. மீண்டும் எம்டி நுழைவு தேர்வு எழுத ,அவளது
ரேங்க் கணிசமாக உயர்ந்தது.
சாம், யுஎஸ்எம்எல்இ தேர்வுகளுக்கு,எந்த புத்கங்களை படிக்க வேண்டும்;
தேர்வு எப்படி இருக்கும்,மாதிரி தேர்வுகள் பற்றின விவரங்கள் அனைத்தையும்
அவளுக்கும் சொல்லி, அவளுக்கு ஊக்கம் அளித்துக் கொண்டே இருந்தான்.
தினம் தினம் ஸாமுடன் குறுஞ்செய்திகளிலோ, அழைப்புகளிலோ அவர்கள்
பேசிக் கொண்டேதான் இருந்தார்கள். தேர்வுகளின் கட்டணங்கள் அவளை
மலைக்க வைத்தது. “வேண்டாம் சாம்! என்னால் இந்த கட்டணங்களை கட்ட
இயலவே இயலாது. ஏன் அமெரிக்க வரன்கள் இந்திய பெண்களை
ஒதுக்குகிறார்கள்; என்பது இப்போது புரிகிறது. இந்தியாவிலேயே, என்ன
செய்ய முடியும்; என்று பார்க்கிறேன்” என்று மனம் நொந்து பேசினாள்.
“இதற்கு உன் அக்கா புவனியின் உதவியை எடுத்துக் கொள்வதில் தவறு
ஏதும் இல்லை. நீ இங்கு டாக்டர் ஆகி வந்து விட்டால் உன் அக்காவுக்கு
மிகவும் எளிதாக இந்த பணத்தை திருப்பி விடலாம். நானும் உனக்கு உதவி
25
செய்கிறேன்; நீ படிப்பதிலும் தேர்வு எழுதுவதிலும் மட்டும் மனம் குவித்து
கவனம் வை. மீதி விஷயங்கள் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளு”என்று
சாம் வற்புறுத்த, பவானி இணங்கினாள்.
அமெரிக்க தேர்வுகளுக்கு புவனி கட்டணம் செலுத்த. படிக்கும்
புத்தகங்களை சாம் தன் பொருப்பில் அனுப்பினான். யுஸ்எம்எல்இ முதல்
இரண்டு தேர்வுகளை ஒரு வருடத்தில் எழுதி தேர்ச்சி பெற்றாள்
ரெசிடென்ஸிக்கு விண்ணப்பம் செய்யும் கட்டணங்களை அவனே கட்டி உதவி
செய்தான் ‘”இதோ பார் பவானி! அமெரிக்காவில் கார்டியாலஜி கனவை நீ
மறந்து விடுவதே நல்லது. உனக்கு, ஒரு இந்திய கிராஜுவேட்டாக
இன்ட்டர்னல் மெடிசின் அல்லது ஃபேமிலி மெடிசின் பீடியாட்ரிக்ஸ் மற்றும்
ஸைக்கியாட்ரி இவைதான் கிடைக்கும். இதில் ஏதாவது உனக்கு உடனே
கிடைத்தாலே நீ அதிர்ஷ்டசாலி, என்று நினைத்துக் கொள்.இதை முடித்து
இரண்டுமூணு வருஷம் வேலை செய்தபின் உனக்கு விருப்பமும்
ஆர்வமாயிருந்தால் கார்டியாலஜி படிக்கலாம். அப்போது நீ அமெரிக்கன்
க்ராஜுவேட். உனக்கு எளிதாக சேர்க்கை கிடைக்கும்.ஆனால் இப்போது வேறு
ப்ரோக்ராமுக்கு விண்ணப்பித்து நேரத்தை வீணாக்காதே. இப்போதே, நீ
க்ராஜுவேட் ஆகி மூன்று வருடம் ஆகி விட்டது. இங்கு ஃப்ரெஷ்
க்ராஜுவேட்ஸுக்குத் தான் முன்னுரிமை கொடுப்பார்கள். புரிந்ததா?
பெக்கர்ஸ் கேனாட் பி சூசர்ஸ்.” என்றதும், வேறு வழியின்றி பவானி தன்
கனவை மறந்து , எதார்த்தத்தை புரிந்து கொண்டாள். பல
மருத்துவமனைகளுக்கும் விண்ணப்பம் அனுப்ப, அவளுக்கு, இறுதியில்
டெட்ராய்ட்டிலும் யூத்தாவிலும் இன்ட்டர்னல் மெடிசின் ரெசிடெனஸி
கிடைத்தது. கிடைத்தது. அவள் இந்த சந்தோஷத்தை சாமிடம் தான்
முதலில் பகிர்ந்து கொண்டாள்.அவனிடம் அதை சொல்லும் போதே நன்றி
உணர்ச்சியால் அவள் குரல் தழுதழுத்தது.
“எனக்கு இங்கு இந்தியாவில் சேர்க்கை எதில் கிடைக்கும்; என்று
தெரியவில்லை. கலந்தாய்வுக்குப் போனால்தான் தெரியும். புகழ் பெற்ற
மருத்துவமனை யில் கிடைக்காவிட்டால், அது பயனில்லை. நான் என்ன
செய்யட்டும்? நீ சொல்.” என்றாள்
” யு மேக் யுவர் டெசிஷன். யு டிஸர்வ் இட். நீ என்ன செய்யவேண்டும்
என்பதை நீதான் முடிவெடுக்க வேண்டும். நௌ! தி சாய்ஸ் இஸ் யுவர்ஸ்.
ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன். அமெரிக்காவில் யூத்தாவில் ஒரு
இந்தியன் டாக்டர் இஸ் வெயிட்டிங் டு கெட் மேரிட் டு யூ! கீப் திஸ்
ஆல்ஸோ இன் யுவர் மைண்ட்” என்றதும் பவானி ஆச்சரியத்தில் சமைத்து
விட்டாள். “சாம் யூ ரியலி மீன் இட்? எனக்கு என்ன சொல்வதென்றே
26
தெரியவில்லை. என் பதிலுக்காக சிறிது நாட்கள் காத்திருக்க முடியுமா?
என்றாள்; ஒரு விதமான திகைப்புடன்.
[13]
பவானி
அறையிலிருந்து உற்சாகமாக வெளி வந்த பவானி,”அம்மா! எனக்கு
அமெரிக்காவில் இரண்டு ஆஸ்பிடலில் ரெசிடென்ஸி கடைத்துள்ளது. இனி
நான் யார் தயவும் இல்லாமல் அமெரிக்காவுக்கு என் சொந்த விசாவில்
போக முடியும். இங்கும் எனது ரேங்க் இம்ப்ரூவ் ஆனதினால் எனக்கு
இங்கும் ஜெனரல் மெடிசின் கிடைக்க வாய்ப்பு உள்ளது.எந்த காலேஜில்
கிடைக்கும்; என்பது, கவுன்சிலிங் போனால்தான் தெரியும்.” இங்கேயே படி.
ரெண்டு பேரையும் அமெரிக்கா அனுப்பிட்டு நாங்க மோட்டுவளையைப்
பார்த்துண்டு இருக்க முடியாது. இங்கேயே ஒரு பையனைப் பார்க்கலாம்”
என்று மகாதேவன் சொன்னார்.
ஜெயம் ”அத்தனை காசு செலவழிச்சு அமெரிக்கா பரிக்ஷை எல்லாம்
பாஸ் பண்ணி வைச்சுருக்கா. அவளுக்கே அமெரிக்கா போக சான்ஸ்
கிடைச்சுருக்கு. அவள் அமெரிக்கா போகட்டும். நம்ம காலத்துக்கு பிறகு
ரெண்டு பொண்களும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருப்பா. இந்த
வாய்ப்பும் வசதியும் எல்லோருக்கும் கிடைக்காது. இன்னிக்கே நான்
மேட்ரிமோனியல்ல போட்டுடறேன். எத்தனை ஜாதகம் வந்து குமியறதுன்னு
பாருங்கோ” என்றாள்.
பவானி, “அம்மா ! அதெல்லாம் வேண்டாம். இந்த ஒரு வருடமாக,
என்னை வழி நடத்தி, எல்லா சமயங்களிலும் எனக்கு உதவி செய்த சாம்,
என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். அமெரிக்காவில்
டாக்டராக இருக்கான். அவனை நான் ஏன் கல்யாணம் செய்து கொள்ளக்
கூடாது? ” என்று வெளிப்படையாகவே கேட்டாள்.
இருவரும் ஸ்தம்பித்து விட்டனர்.” ஓ!அந்த அவினாஷின் நண்பனா?
என்று, முதலில் சுதாரித்துக் கொண்ட ஜெயம்தான் கேட்டாள். “ஆமாம்!
அவன்தான். இவ்வளவு நாட்களும் நான் துவண்டு போகாமல் என்னை
ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தான். எந்த தேர்வுக்கு எப்படி படிக்கணும்,
தேர்வாளர்கள் எதை எதிர்பார்ப்பார்கள்; அதை நான் எப்படி எதிர் கொள்ளணும்;
என்று எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்து, ரெசிடென்ஸிக்கு எப்படி
விண்ணப்பிக்கணும்; ரெசிடென்ஸி நேர்காணலை நான் எப்படி எதிர்
கொள்ளணும்; எல்லாம் அவன்தான் சொல்லிக் கொடுத்தான். அவன்
உதவியின்றி என்னால் இன்னிக்கு நான் டாக்டரா அமெரிக்கா போவது
கனவில் கூட முடிந்திருக்காது. அவனுக்கு நான் அத்தனை கடமைப்பட்டு
27
இருக்கேன். இத்தனை நாளும் என் பேரில் இருந்த அன்பை அவன் சிறிது
கூட வெளிக்காட்டிக் கொள்ளாமல்; என் படிப்பு பற்றின கனவுகளை
நினைவாக்குவதில்தான் அவன் முனைப்பாக இருந்திருக்கிறான். இப்போது
தான் அரைமணி நேரத்துக்கு முன்தான், அவன் தன் அன்பை எனக்கு
சொன்னான். நீங்கள் ஒரு வருடத்திற்கு முன் வரன் பார்த்தீர்களே; ஒரு
பையனாவது என் மேல் நம்பிக்கை வைத்து என் டாக்டர் கனவை
நினைவாக்க நினைத்தானா? எனக்கு இவனை முதலில் அவினாஷின்
நண்பனாகத்தான் தெரியும். பழக பழக, அவன் என் மேல் வைத்திருந்த
நம்பிக்கை மிகப் பெரிது. என் மேல் இருந்த காதலைக் கூட
வெளிப்படுத்தாமல், பொறுமையாக, நானே என் தடங்கல்களை தாண்டும்
வல்லமையையும் உற்சாகத்தையும் தொடர்ந்து கொடுத்திருக்கிறான்.
அவனைத் தவிர வேறு யாரிடம் என்னால் நம்பிக்கையும், அன்பும் கொள்ள
முடியும்; என் வாழ்க்கையை வேறு யாருடன் என்னால் பகிர்ந்து கொள்ள
முடியும்? நீங்களே சொல்லுங்கள். அப்பா! நான் சாமையே கல்யாணம்
செய்து கொள்கிறேன்.” என்றாள்.
“என்ன பவானி! சாம் நல்ல பையனாகவே இருக்கட்டும். அவன் குலம்
கோத்திரம் அறியாமல் எப்படி உன்னை கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறது?
உன் ஃபரண்ட் நல்லவன்தான்; ஃப்ரண்டாவே வைச்சுக்கோ! நாங்க
வேண்டாம்னா சொன்னோம்! கல்யாணத்துக்கு சரிவராது.” அம்மா ஜெயம்
சொன்னாள்.
“அவன் எந்த ஜாதின்னு எனக்கும் தெரியாது! ஜாதியோ மதமோ
பார்க்காமல் தான் அவன் எனக்கு அத்தனை உதவியும் பண்ணியிருக்கான்.
இப்போதும் நான் அவனை கல்யாணம் பண்ணிக்க நிர்பந்திக்கவில்லை. அவன்
அதை அவன் விருப்பமாகத்தான் சொன்னான். அவனை நான் கல்யாணம்
பண்ணிக்கல்லைன்னா, அன்பான மனதை இழக்கும் வருத்தம் எனக்குத்தான்
சேரும். என் வாழ்வு அவனோடு பாதுகாப்பில் மகிழ்ச்சியாக இருக்கும்; என்று
நான் நம்புகிறேன். ப்ளிஸ்! என்னைப் புரிந்து கொள்ளுங்கள்.” என்றாள் பவானி.
ஜெயம்,” என்னப்பா! இப்படி ஒரு குண்டைத் தூக்கி போடுகிறாளே!
என்ன செய்வது? ஊர்ல நாலுபேர் நாலு விதமாக பேச மாட்டோளோ! ஒரு
வருஷமா ஃபோன் பேசினா காதல் வந்துடுமா? அபத்தம்.” என்றாள்.
“முட்டாளா,நீ! அந்தப் பையன் என்னெல்லாம் பவானிக்கு
செய்திருக்கிறான்; அவள் தெளிவாகச் சொன்னாளே! நம் குலம் கோத்திரத்தில்
ஒரு பையனாவது அவளை கன்சிடர் பண்ணினானா? அந்த அவினாஷும்
நல்ல பையன்தான். அவனுக்கு இவள் ஃபீல்டைப் பற்றி ஒன்றும் தெரியாமல்
போனதினால் தான் சாமை இவளுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறான். சாமுக்கு
28
இவளைப் பிடித்துப் போனது; எதேச்சையான விஷயம்; என்றாலும், அவனது
அன்பின் தீவிரம் உனக்குப் புரிகிறதா; இல்லையா? நாலு பேர் நாலு
விதமாக என்ன; நாப்பது விதமாகத்தான் பேசட்டுமே! பவானியின் மனசு தான்
நமக்கு முக்கியம். ஒருத்தரை மனசுலே ஏத்துண்டதக்கப்புறம்
இன்னொருத்தரோடு எப்படி சேர்ந்து வாழ முடியும்? பின்னாட்களில்
ஏதாவது “கன்னா பின்னான்னு” அவள் முடிவெடுத்தா; நம்பளால தாங்க
முடியாது. நமக்கு பொண்ணு முக்கியம்” என்று மகாதேவன் தீர்ப்பு
சொல்லிவிட்டார்.
[14]
அவினாஷும் சாமும்
பிரேமாவும், பரமேஸ்வரனும் அமெரிக்கா போவதற்கு முன்,
சாந்தாவும் சுந்தரேசனும் பிரேமாவின் வீட்டிற்கு சென்று பூமிகாவுக்கு ஒரு
பட்டுப்புடவையும் மோதிரமும் கொடுத்து வந்தனர். அவினாஷிடம்
பூமிகாவின் பெற்றோர் தொடர்ந்து பேசி வந்தனர். பட்டமளிப்பு விழா
முடிந்ததும் அவினாஷின் அழைப்பின் பேரில் பூமிகா அவள் பெற்றோருடன்
வருவதால், சாமும் அவன் அண்ணன் அண்ணியோடு வந்திருந்தான். பூமிகா
சாந்தா அனுப்பியிருந்த புடவையில் வந்திருந்தாள்.
எல்லோரும் காணொளி அழைப்பில் சாந்தாவுடனும், சுந்தரேசனுடனும்
அளவளாவினர். சாம்,பவானிக்கு அமெரிக்காவில் ரெஸிடென்ஸி கிடைத்த
விஷயத்தைச் சொல்லி, திருமணத்திற்காக தான் அவளிடம் ப்ரபோஸ்
செய்திருப்பதையும் சொன்னான்.
” டேய்! அந்தப் பொண்ணு எங்க ஜாதியாச்சே! சின்னப் பொண்ணு டா!
அது ஒத்துக்குமா? அது ஒத்துக்கிட்டாலும் அதோட பேரன்ட்ஸ் ஒத்துக்கு
வாங்களா? ” என்று கேட்டபோது ” காதலுக்கு ஜாதி மதம் தெரியாது
கண்ணும் காதும் கிடையாது. மனசு… மனசு தாண்டா ஒத்துக்கணும். ஏதோ
ஒரு வேகத்துலே அவளுக்கு ரெசிடென்ஸி அட்மிஷன் கிடைச்சன்னிக்கு
சொல்லிட்டேன். அவளோடு பேச ஆரம்பித்த ரெண்டு மாசத்திலேயே நான்
முடிவு பண்ணிட்டேன். ஆனா; அவளுக்குத் தெரியாது. நான் கேட்டவுடன்,
ஆச்சரியப்பட்டுப் போய்ட்டா. கொஞ்சம் டைம் கேட்டுருக்கா. அவ
பேரன்ட்ஸிடம் சொல்ல வேண்டுமில்லையா? அவங்களை மீறி அவள்
எதுவும் செய்ய மாட்டாள். பூமிகா மாதிரி அத்தனை துணிவான பெண்
இல்லை. அவளுக்குத் தன் பலம் என்னவென்றே தெரியாது. நாம்தான்
உற்சாகப்படுத்தி தன்னம்பிக்கையைக் கொடுக்கணும். இப்பவும் தினம் பேசிக்
கொண்டுதான் இருக்கிறோம். விசா சம்பந்தமாகவும் அமெரிக்கா ட்ராவல்
சம்பந்தமாகவும். மத்தியதர குடும்பம் போல் தெரிகிறது. விசா ஃபீஸ் ட்ராவல்
29
டிக்கெட் எல்லாத்துக்கும் அவள் அக்காதான் உதவி பண்ணுறாங்க போல்
தெரிகிறது. இப்போது நான் எந்த உரிமையில் பண்ணமுடியும்? காத்திருக்கத்
தான் வேண்டும்”
[15]
பவானி
ஒரு வாரத்துக்குப் பிறகு பவானி,” அப்பா! அம்மா ! நீங்க
யோசிச்சீங்களா? நாம் சாமுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம்?
நீங்கள் சம்மதியாமல் இந்தக் கல்யாணம் நடக்காது. ஆனால் நான்
அமெரிக்கா போவதை உறுதி செய்து விட்டேன். புவனி எனக்கு அமெரிக்கா
விசாவுக்கான கட்டணத்தைக் கட்டி விட்டாள். விசா நேர்காணலுக்கு தேதியும்
கிடைத்து விட்டது. அமெரிக்கா போவதற்கு டிக்கெட்டும் வாங்கி
அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டாள். அவள் இது நாள் வரை செலவழித்த
பணத்தை இந்தியாவில் சம்பாதித்து என்னால் அவளுக்கு கொடுக்கவே
முடியாது. அவள் நேரத்தில் செய்த உதவி மிகவும் பெரியது. அதை
வார்த்தைகளில் சொல்ல முடியாது. குறைந்த பட்சமாக அவள் எனக்காக
செலவழித்த பணத்தையாவது திருப்பித்தர விரும்புகிறேன்.
அவநம்பிக்கையிலும், இயலாமையிலும் சிதைந்து கொண்டிருந்த என்
மனத்தை தன் அன்பாலும் அனுசரணையாலும் உயிர்ப்பித்த சாமுக்கு நான்
சொல்லப் போகும் பதில்தான் என்ன? ” என்று வினவினாள்.
“புவனி, உன்னைப் பணத்தை திருப்பும்படி கேட்டாளா? இது பற்றி நீ
ஏன் இவ்வளவு யோசிக்கிறாய்? அக்கா, தங்கைகள் தங்களுக்குள் செய்து
கொள்ளும் சாதாரண உதவி தானே? ” என்று கேட்ட ஜெயத்தை வெறுப்புடன்
பார்த்த பவானி, ” அம்மா! நீ மேலும் மேலும் பேசி என்னை கோபமூட்டாதே!
இந்திய ரூபாயில் அது எத்தனை பணம் என்று நீ அறியமாட்டாய். இப்போது
விஷயம் அதுவல்ல; நான் என் பலத்திலேயே அமெரிக்கா போவது நிச்சயம்.
இப்போது, சாமுக்கு நான் சொல்லப் போகும் பதில்தான் எனக்கு முக்கியம்.”
என்று சொன்னாள்.
ஜெயம் மகாதேவன் முகத்தைப் பார்க்க, ” அம்மா! பவானி! அவன்
என்ன ஜாதி; என்ன மதம்; எதுவும் தெரியாது; என்றாலும்; அவனை
மணமுடிக்க நீ தயாராக உள்ளாயா? நன்கு யோசித்து எடுத்த
முடிவெடுத்திருந்தால், எனக்கு சம்மதம். அம்மாவிடம் பேசி நான் அவளுக்குப்
புரிய வைக்கிறேன். அவன் ஃபோன் நம்பர் எங்களுக்கு கொடு. நான்
பேசுகிறேன். நீ இந்த விஷயத்தில் உறுதியாய் இருக்கும் நிலையில், என்
ஆதரவு உனக்கு கண்டிப்பாக உண்டு. நாங்கள் உன் பக்கம் இருக்கிறோம். நீ
30
கவலையை விட்டு அமெரிக்க பயணத்துக்குண்டான ஏற்பாடுகளை கவனி”
என்றார்; மகாதேவன்.
””அப்பா! நீங்கள் அவனிடம் எது வேணாடுமானாலும் தடங்கலின்றி
பேசுங்கள். ஆனால்; தயவு செய்து, அவன் என்ன சாதியைச் சேர்ந்தவன்,
என்ன மதம்; என்னும் பொருத்தமற்ற கேள்விகளை மட்டும் கேட்காதீர்கள்.
எனக்கு அதில் உடன்பாடு இல்லை” என்று சொல்லி சாமின் அலைபேசி
எண்ணை மகாதேவன் நம்பருக்கு அனுப்பி; ” என் அப்பா உன்னிடம்
பேசுவார்” என்று மட்டும் எழுதினாள்
இணையத்தில் இணைந்த இதயங்கள்
[16]
சாமும் பவானியும்
அன்று காலை சாமின் அலைபேசி அழைப்போடுதான் பொழுது
விடிந்தது. மகாதேவன், அவர்களது திருமணத்திற்கு சம்மதம் சொன்னதாக
மனம் நெகிழ்ந்து பேசினான். அவர் தனது அண்ணனுடனும் அண்ணியுடனும்
சுமார் ஒருமணி நேரம் பேசினாலும்;அவர் ஜாதியைப் பற்றியோ, மதத்தைப்
பற்றியோ ஒரு வினா கூட வைக்காது; அவர்களை ஆச்சரியத்தில்
ஆழ்த்தியது என்றான். “ஏன் பவானி! உனக்கும் நான் என்ன சாதியைச்
சேர்ந்தவன்; என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இல்லையா?” என்று
வினவினான்
பவானி, “சாம் என்பது ‘சாமுவேல்’ என்பதின் சுருக்கமாய் இருக்கும்; நீ
கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவன்; என் நினைக்கிறேன் ” என்றாள். ” சரியாப்
போச்சு “சாம் என்பது ‘இஸ்மாயில்’ என்பதின்சுருக்கமாகக் கூட
இருக்கலாமே! நான் முஸ்லிமாகக் கூட இருக்கலாம், இல்லையா? “
என்றான். பவானி, “சாம்! உண்மையில், இந்த ஒரு வருட காலத்தில்
உன்னிடம் பேசும் போது, ஒரு நாள் கூட உனது ஜாதியைப் பற்றியோ
மதத்தைப் பற்றியோ, நான் யோசிக்கக் கூட இல்லை. நீரில் மூழ்கிய
கொண்டிருந்தவளுக்கு கிடைத்த ஒரு மிதவை போல் அல்லவோ நீ
இருந்தாய். அதன் விஸ்தீர்ணத்தை நான் ஒரு நாளும் அளக்க
முயலவில்லை. நீ யாராக இருந்தாலும் உன் தன்னலமற்ற அன்பின்
பிடியில் பாதுகாப்பாக இருந்த என்னை பத்திரமாக கரை சேர்த்து விட்டாய்.
இதெற்கெல்லாம் நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்; என் உயிர்
உள்ளவரை உனக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருப்பதைத் தவிர.” என்று
மனவெழுச்சியுடன் பேசினாள்.
“பவானி! நீ ஒன்றும் செய்ய வேண்டாம். இந்த வார இறுதிக்குள் எனது
பரிசு ஒன்று வரும். அப்போது உனக்கு எல்லாம் புரியும். இப்போது கலங்கிய
31
கண்களைத் துடைத்துக் கொண்டு, சிரித்த முகத்துடன் ஒரு செல்ஃபி எடுத்து
அனுப்பு. என் அண்ணியின் அலைபேசிக்கு. அவர்கள் எண் அனுப்புகிறேன்.
அவர்கள் உன்னைப் பார்க்க ஆவலாக இருக்கிறார்கள்.” என்று அழைப்பைத்
துண்டித்தான்.
அறையை விட்டு வெளியே வந்த பவானியை எதிர்பார்த்து காத்திருந்த
பெற்றோரிடம், “அப்பா! ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். இப்போதுதான் சாம்
பேசினான். அவனோடு பேசியதில் உங்களுக்கு திருப்தி தானே! அம்மா! நீ
அவனோடு பேசினாயா? ” என்ற கேட்டாள்.
“நான்தான் பேசினேன். அம்மாவுக்கு பழகாத மனிதருடன் பேச வராது;
இல்லையா. என்னால் மட்டும் ஒரு ஃபோன் அழைப்பில் என்ன கணிக்க
முடியும்? நீ அவன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையின் பின்னால்
நாங்களும் உனக்கு ஆதரவு தருகிறோம்; அவ்வளவுதான். திருமணவாழ்க்கை
என்பது லேசுபட்டது இல்லை. ஆயிரம் மேடு பள்ளங்களை கடக்கவேண்டும்.
நீ பொறுமையாகவும் புத்திசாலித்தனத்துடனும் வாழ்க்கையை கொண்டு போக
எங்கள் அன்பும் ஆசிர்வாதங்களும் எப்போதும் உண்டு. வா! இப்போது காஃபி
குடித்து தயாராகி வா. நாம் தேனுபுரிஸ்வர் கோயிலுக்கு சென்று வருவோம்.
காலை உணவை வெளியிலேயே சாப்பிடலாம்”. என்றார் மகாதேவன்.
அன்று முழுவதும் பவானி மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தாள். அந்த
வார இறுதியில் ஜெயத்துக்கு சாந்தாவிடமிருந்து ஃபோனில் குறுஞ்செய்தி
வந்தது.”ஜெயம் நாங்கள் உங்கள் வீட்டிற்கு நாளை மாலை வருவதாக
இருக்கிறோம். வீட்டின் முகவரியும் லேண்ட் மார்க்கும் சற்று அனுப்பித் தர
இயலுமா? நேரில் பேசலாம்; அல்லவா? பவானியும் வீட்டில் தானே
இருப்பாள்?” என்பதாக இருந்த குறுஞ்செய்திக்கு பதில் அனுப்பின ஜெயம்,
‘அவர்கள் பிள்ளை அவினாஷுக்கு கல்யாணம் முடிவு பண்ணி விட்டார்களோ;
என்று நினைத்துக் கொண்டாள். எதற்கு பவானி வீட்டில் இருக்கணும்; என்று
யோசனையாக இருந்தது.
மறுநாள் மாலை நான்கு மணி அளவில் வந்த சாந்தாவும்,
சுந்தரேசனும். வெற்றிலை பாக்கு பூ பழத்தோடு ஒரு பட்டுப் புடவையை
பவானியின் கொடுத்து, ”சாம்பசிவன் எங்களுக்குப் ஃபோன் பண்ணி எல்லா
விஷயங்களையும் சொன்னான். மிகவும் சந்தோஷம். இது அவன் உனக்கு
கொடுக்கும் முதல் பரிசு. வாங்கிக் கொள். அவனை சிறு வயதிலிருந்தே
எங்களுக்குத் தெரியும். சாம் அவினாஷுக்கு ரொம்பவும் நெருங்கின
ஃப்ரெண்ட். சிறு வயதிலேயே அப்பா அம்மா காலமாகி விட்டனர். அவன்
அண்ணா சதாசிவத்துக்கும் இவனுக்கும் பதினோரு வயசு வித்தியாசம்.
சதாசிவத்தின் மனைவி காஞ்சனாவும் நல்ல பெண். இருவருமே
32
அமெரிக்காவில் டாக்டர்கள். அவர்கள்தான் இவனைப் படிக்கவைத்து
ஆளாக்கினார்கள். வருடாந்திர லீவுக்கு அமெரிக்கா போனாலும். சிறிய
லீவுகளுக்கும் பண்டிகைகளுக்கும் எங்கள் வீட்டுக்குத் தான் வருவான். ஏன்;
அவினாஷ் அமெரிக்கா போவதற்கே அவர்கள் தான் உதவியாக இருந்தார்கள்.
அவினாஷ் நல்ல மார்க் எடுத்து இன்ஜினியரிங் பாஸ் பண்ணியிருந்தாலும்,
எம். எஸ் படிப்பதற்கு எப்படி அப்ளை பண்ணணும் , எந்த யுனிவர்சிட்டியில்
அவனுக்கு அட்மிஷன் கிடைக்கும்; எப்படி ஃபெல்லோஷிப்புக்கு அப்ளை
பண்ணணும்னு எல்லாம் சதாசிவம்தான் சொல்லிக் கொடுத்தான். அவர்கள்
உதவி இல்லையென்றால், அவினாஷ் அமெரிக்கா போயே இருக்க முடியாது.
பணம்; ஒரு பொருட்டல்ல! இந்தியாவிலிருந்து ஒரு பையன் அமெரிக்காவில்
கால் ஊன்றி நிற்க இது மாதிரி உதவி இல்லையென்றால் ஒன்றும் நடக்காது.
அண்ணன் தம்பி இரண்டு பேருமே நல்ல பையன்கள். இந்த காலத்தில்
உறவினரை விட, கண்காணாத தேசத்தில் கைதூக்கி விடும் நண்பர்கள் தான்,
கடவுள் போன்றவர்கள்.” என்று சொன்னாள்.
அதைக் கேட்ட ஜெயம், “பவானி! சாந்தா அத்தைக்கு நமஸ்காரம்
செய்து ஆசிர்வாதம் வாங்கிக் கொள்” என்ற ஜெயம், சாந்தாவைப் பார்த்து
“சாந்தா! நீங்கள் முதல் நாள் பேசும் போது , இந்தக் கல்யாணம் கூடி
வந்தாலும் வராவிட்டாலும் பவானிக்கு நண்பனாக அவினாஷ் இருக்கட்டும்;
என்றீர்கள். இன்று அது உண்மை ஆயிற்று. அவினாஷ், அவளுக்கு உடன்
பிறவாத அண்ணனாய் என்றும் இருக்கட்டும்; என்று ஆசிர்வாதம்
செய்யுங்கள்” என்றாள்.
பவானி, புது புடவையை உடுத்திக்கொண்டு பெரியோர்களை
நமஸ்கரித்து, மறக்காமல் அவர்களுடன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோவை
காஞ்சனா அண்ணிக்கும் புவனா அக்காவுக்கும் அனுப்பக் தவறவில்லை.
சாந்தாவும், அவினாஷின் விருப்பப்படி பூமிகாவுடன் கல்யாணம் நிச்சயம்
ஆனதைச் சொல்லி மகிழ்ந்தாள்.
[17]
பவானி
பவானி மகாதேவனையும் ஜெயத்தையும் நமஸ்காரம் செய்து
எழுந்தாள்.
“நல்லபடியாக போய் வா. புது தேசம், புது மனிதர்கள்; கவனமாக
இரு.அங்கு உனக்கு ரசம் சாதம் பிசைந்து தர அம்மா இருக்கமாட்டாள்.
ஹாஸ்பிடல்ல நல்ல பெயர் வாங்கணும். பத்திரமா இரு… “
சொல்லும் போதே அவளை ஆரத்தழுவிய மகாதேவனுக்கு
கண்கலங்கியது. வழக்கத்துக்கு மாறாக பவானி அமைதியாகக் கேட்டுக்
33
கொண்டாள். விம்மும் ஜெயத்தின் கையை பற்றின பவானி, ”பயப்படாதே;
அம்மா! நான் போய் வருகிறேன். அப்பாவை பார்த்துக்கோ; அப்பா! நீங்களும்
தான்;அம்மாவை பார்த்துக்கோங்கோ” என்று கையசைத்துவிட்டு விமானம்
ஏறினாள்; தனது திருமண வாழ்வையும் மருத்துவ தொழிலையும்
ஒருங்கிணைத்த சாமை நேரில் சந்திக்கும் விழைவுடன்.