This entry is part 3 of 7 in the series 26 ஜூலை 2026

முல்லைஅமுதன்

கனவு இருந்தது.
அடிக்கடி வளர்த்த குருவி
ஜன்னலருகில் வந்து வாழ்வை நினைவூட்டும்.
நாம் வாழ்ந்த வீடு
கைமாறிக் கைமாறி
விற்பனைக்கு வருவதாக
அக்காள் சொன்னாள்.
மகளுக்கு கொடுக்கலாமே
மனைவி நச்சரித்தாள்.
உண்மைதான்.
அம்மாவிற்காக
அப்பா வாங்கிய வீடு.
திருமணமாகிய எனக்கும்
முதலிரவாக அமைந்த வீடு..
குழந்தகள் வளர்..
அக்காவிடம் சீதனமாய்ப் போய்…
கைமாறிக் கைமாறி…
கடைசிக்காலத்தில் அப்பாவை
கையில் தூக்கி
எதுத்துச் சென்றது முதல்..
அம்மாவை
இடுகாடு எடுத்துச் சென்றது வரை..
நினைவில் இருக்கிறது பத்திரமாய்.
வீட்டிற்குள்
காலே வைக்கக்கூடாது என சட்டமும் சொன்னது..
என் மீதான
அக்காளின் வழக்கு இன்னும் நிலுவையில் இருக்குறது.
நிறையவே வாழ்ந்த வீட்டின்
கனவுகள் இன்னமும் இருக்கிறது..
நாளை இங்கிருந்து
என்னையும் என் மகன் தூக்கிச் செல்லக்கூடும்..
அதுவரி—
அந்த வீட்டின் கனவுகளுடன் வாழ்ந்துகொள்கிறேனே..
குருவியிடம் சொன்னேன்..

முல்லைஅமுதன்
24/07/2026

Series Navigationதிருஷ்டாங்கப் பொருந்தல்.சுத்த உடல்