Articles Posted in the " இலக்கியக்கட்டுரைகள் " Category

 • கவிதையும் ரசனையும் – 14 ஆத்மாநாம்

  கவிதையும் ரசனையும் – 14 ஆத்மாநாம்

  அழகியசிங்கர்                  இந்தப் பகுதியில் இதுவரையில் ஆத்மாநாம் பற்றி எதுவும் எழுதியதில்லை.  ஏன்?  உண்மையில் நான் ஆத்மாநாம் கவிதைகளைப் பற்றி இரண்டு மூன்று கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். இந்தத் தொடரில் அவருடைய சில கவிதைகளை எடுத்து எழுத வேண்டுமென்று நினைக்கிறேன்.               ஆத்மாநாம் உயிரோடு  இருந்தபோது நான் இரண்டு மூன்று முறை பார்த்திருக்கிறேன்.  ஒரு முறை கவிஞர் வைத்தியநாதனுடன் ஆத்மாநாமைச் சந்தித்திருக்கிறேன். வேறு ஒரு நண்பர் வீட்டிற்குப் மூவரும் போனோம்.  அப்போதுதான்             நான் ஆத்மாநாமிடம் அந்தக் கவிதையைப் பற்றி அர்த்தம் கேட்டேன்.     நிஜம்   நிஜம் நிஜத்தை நிஜமாக  […]


 • எஸ்எம்,ஏ ராம் சில நினைவுகள்

  எஸ்எம்,ஏ ராம் சில நினைவுகள்

  அழகியசிங்கர் எஸ்எம்,ஏ ராம் இறந்து விட்டார் (02.04.2021) என்ற செய்தியை பாரவி மூலம் அறிந்து வருத்தப்பட்டேன். ராமைப் பல ஆண்டுகளாக அறிவேன். நானும் அவரும் மாம்பலம் ரயில்வே நிலையத்தில் விடைபெறும் தறுவாயில் பல மணி நேரம் பேசியிருக்கிறோம் அவர் அதிகம் படித்தவர். தனியார்ப் பள்ளியில் மிகக் குறைந்த ஊதியத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அவர் நாடகம், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஒரு நாவலும் கூட. பெரும்பாலும் சிறு பத்திரிகைகளில். ‘தாத்தா காலத்து பீரோ’ என்ற அவருடைய சிறுகதைப் புத்தகம் […]


 • முதல் மரியாதை தமிழில்  ஒரு செவ்வியல் திரைப்படமா ?

  முதல் மரியாதை தமிழில்  ஒரு செவ்வியல் திரைப்படமா ?

    நடேசன் –  அவுஸ்திரேலியா   —————————————————————————— இளமைக்காலத்தில்  இயக்குநர் பாரதிராஜாவின்  முதல் மரியாதை திரைப்படத்தை   பார்த்தபோது,  என்னைக் கவர்ந்தது என்னவென்றால்,   அக்காலத்தில்  சிவாஜி ரசிகனாக இருந்த  எனக்கு   மத்திய வயதான ஒரு வருக்கு  இளம் பெண்ணில் ஏற்பட்ட காதல் ஒரு புதுமையாகவிருந்தது.   இது நல்ல திரைப்படமென்ற நினைவே மனதிலிருந்தது. சமீபத்தில்  அதனை  தமிழின் செவ்வியல் படம் எனக்குறிப்பிட்டு  பலர் எழுதியதைப் படித்தபின்பு,  மீண்டும் பார்ப்போம் எனச் சமீபத்தில் பார்த்தபோது இந்தப்படம் புரட்சியானதோ புதுமையானதோ அல்ல,  படு […]


 • திருவளர் என்றாலும்… திருநிறை என்றாலும்…

  திருவளர் என்றாலும்… திருநிறை என்றாலும்…

  கோ. மன்றவாணன் நண்பர் ஒருவருக்காகத் திருமண அழைப்பிதழை எழுதி அச்சடிக்கக் கொடுத்தேன். மெய்ப்புத் தந்தார்கள். திருநிறை செல்வன் என்றும் திருநிறை செல்வி என்றும் நான் எழுதித் தந்திருந்தேன். ஆனால் அவர்கள் திருநிறைச் செல்வன் என்றும் திருநிறைச் செல்வி என்றும் தட்டச்சு இட்டிருந்தார்கள். ச் போடக் கூடாது என்று, ச் – ஐ சிவப்பு மையால் மறைத்திருந்தேன். ஆனால் அச்சகத்தார் ச் – ஐ நீக்காமல் அச்சடித்துவிட்டார்கள். ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்டதற்கு, ச் போட்டு அடிப்பதுதான் […]


 • தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

  தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                                                                                                         வளவ. துரையன்                      என்று பேய்அடைய நின்று பூசல்இட                         இங்கு நின்று படைபோனபேய்                   ஒன்று பேருவகை சென்று கூறுகஎன                         ஓடி மோடி கழல் சுடியே.               241   [பூசல்=ஆரவாரம்; பேருவகை=மகிழ்வு; மோடி=துர்க்கை; கழல்=திருவடி; சூடி=அணிந்து]   இப்படிப் பேய்கள் எல்லாம் சேர்ந்துத் தங்கள் பசித்துயர் பற்றி ஆரவாரக் கூச்சல் இட, வீரபத்திரர் படையுடன்  சென்ற […]


 • ஒரு கதை ஒரு கருத்து – தி.ஜானகிராமனின் பாயசம்

  ஒரு கதை ஒரு கருத்து – தி.ஜானகிராமனின் பாயசம்

            அழகியசிங்கர்                         ‘பாயசம்’ என்ற கதையைப் படித்தேன்.  சாமநாது என்பவரின் மன வக்கிரம்தான் இந்தக் கதை.  சிறப்பாக எழுதி உள்ளார் தி.ஜானகிராமன்.                ஆரம்பிக்கும்போதே தி.ஜானகிராமன் இப்படிக் குறிப்பிடுகிறார்.                ‘சாமநாது அரசமரத்தடி மேடை முன்னால் நின்றார்.  கல்லுப் பிள்ளையாரைப் பார்த்தார்.  நெற்றி முகட்டில் குட்டிக் கொண்டார். தோப்புக்கரணம் என்று காதைப் பிடித்துக்கொண்டு லேசாக உடம்பை மேலும் கீழும் இழுத்துக்கொண்டார்.’               இதையெல்லாம் செய்துகொண்டு வரும் தன் மனதில் வக்கிரத்தை வளர்த்துக்கொண்டு வருகிறார். […]


 • அஞ்சலை அம்மாள் – நூல் மதிப்பீடு

      கோ. மன்றவாணன்   ராஜா வாசுதேவன் அவர்கள் எழுதிய அஞ்சலை அம்மாள் என்றொரு நூல் வெளிவந்துள்ளது. அண்மையில் வெளிவந்த நூல்களில் இது முக்கியமானது. மறைக்கப்பட்டோ அல்லது மறக்கப்பட்டோ உள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரிசையில் உள்ளவர் கடலூர் அஞ்சலை அம்மாள். அவரைப் பற்றிய தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. ஆனால் கடலூரில் உள்ளவர்களுக்கே அவரைப் பற்றித் தெரியவில்லை. இத்தனைக்கும் இரண்டு முறை கடலூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். 1934 ஆம் ஆண்டு பிப்ரவரி […]


 • ஒரு கதை ஒரு கருத்து – சுப்ரமண்யராஜுவின் நாளை வரும் கதை

      அழகியசிங்கர்             எண்பதுகளில் முக்கியமான எழுத்தாளர் சுப்ரமண்ய ராஜ÷. கிட்டத்தட்ட 100 கதைகள் எழுதியிருப்பார்.  இன்னும் பிரசுரமாக வேண்டிய கதைகள் இருப்பதாக இலக்கிய நண்பர் ஒருவர் சொல்கிறார்.  சுப்ரமண்ய ராஜ÷ கதைகள் என்று கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட புத்தகத்தில் 32 கதைகள் தொகுக்கப்பட்டிருக்கிறது. அதில் இரண்டு குறுநாவல்கள்.           பொதுவாக எல்லாக் கதைகளையும் கச்சிதமாக ஆரம்பித்து கதைகளைச் சுலபமாக முடிக்கிறார் சுப்ரமண்ய ராஜ÷.           அதில் நான் எடுத்துக்கொண்டு எழுத உள்ள கதை நாளை வரும் என்ற கதை.  அம்மா வீட்டிற்கு ஊருக்குப் போக […]


 • தக்கயாகப்பரணி [தொடர்ச்சி]

  தக்கயாகப்பரணி [தொடர்ச்சி]

                                                                                வளவ. துரையன்                      சூரொடும் பொர வஞ்சி சூடிய                         பிள்ளையார் படைதொட்ட நாள்                   ஈருடம்பு மிசைந்துஉதி                         ரப்பரப்பும் இறைத்தனம்.                            231   [பொர=போரிட; வஞ்சி=வெற்றி; படை=வேல்; தொட்ட=எடுத்த; இறைத்தனம்=அள்ளிக் குடித்தல்] சூரபதுமனுடன் போரிட்டு வெற்றி மாலை சூடிய தங்கள் பிள்ளை முருகப் பெருமான் வேல் விட்ட அந்த நாளில். அச்சூரன் உடல் இருகூறாகப் […]


 • கவிதையும் ரசனையும் – 13

  அழகியசிங்கர்               சமீபத்தில் நகுலனைப் பற்றி பேச்சு வந்தது.  நகுலன் சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை என்று எழுதியிருக்கிறார்.  மிகக் குறைவான வாசகர்களுக்காகவே அவர் எழுதியிருக்கிறார்.            1987ஆம் ஆண்டு வெளிவந்த ‘சுருதி’ என்ற புத்தகத்தின் பிரதி ஒன்று கிடைத்தது.  இத் தொகுதியில் கடைசியில் இக் கவிதைத் தொகுதி பற்றி நகுலன் இவ்வாறு எழுதியிருக்கிறார்.             ‘சமீபத்தில் எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம் காரணமாகக் கவிதை, கதை, நாவல் இவைகளை எழுதுவது முக்கியமன்றி, அவைகளைப் பிரசுரிக்க வேண்டிய அவசியமில்லை என்று […]