பழமொழிகளில் விருப்பமும் விருப்பமின்மையும்

This entry is part 6 of 31 in the series 2 டிசம்பர் 2012

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com வாழ்வில் விருப்பம், விருப்பின்மை என்பது ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு செயலுக்கும் உண்டு. இவை இரண்டும் தனி நபர், மற்றும் குழுக்கள், சமுதாயம் சார்ந்தவையாக விளங்குகின்றது. சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும் விருப்பமும் விருப்பின்மையும் தொன்று தொட்டு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. சர்க்ரை நோய் உள்ள ஒருவரைப் பார்த்து, ‘‘ஐயா இந்த இனிப்பை சாப்பிடுகிறீர்களா?’’ என்று கேட்டால் அவர், ‘‘எனக்கு இனிப்புப் பிடிக்காதப்பா. அதோடு மட்டுமல்லாது மருத்துவர் இனிப்பைச் சாப்பிடக் […]

தமிழ் மகனின் படைப்புலகம் : ” ஆண்பால் பெண்பால் “ நாவலை முன் வைத்து….

This entry is part 3 of 31 in the series 2 டிசம்பர் 2012

பொதுவாக இந்திய  வெகுஜன இதழ்களில் குடும்பம், திருமணம், மணமுறிவு, மன முறிவு, பிரிவு, கூடுதல் சம்பந்தமான லட்சக்கணக்கான தொடர்கதைகள் இது வரை வெளிவந்திருக்கும்.பெரும்பாலும் இந்துவா சிந்தனைகள், சடங்குகளின் மேன்மை, இந்தியர்களின் குடும்ப்ப் பெருமை பற்றி சிலாகிப்பவை . இது தமிழிலும்  சாத்தியமாகியுள்ளது.       தமிழ் மகனின்  “ ஆண்பால் பெண்பால்” நாவலில் மணமுறிவு சார்ந்த நுணுக்கமான உளவியல் சார்ந்த விசயங்கள் ஆக்கிரமித்திருருப்பதைக் குறிப்பிடலாம். பலவீனமான குடும்ப அமைப்புகளின் அடையாளம் இந்த மண முறிவு. மேற்கத்திய நாட்டுக்குடுமபங்கள் இந்த பலவீன்ங்களைக்கொண்டவை. […]

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…. 7. சுந்தரராமசாமி – ஒரு புளியமரத்தின் கதை.

This entry is part 1 of 31 in the series 2 டிசம்பர் 2012

    இது என்னுடைய முதல் நாவல். தமிழ் இலக்கியத்தின் நாவல் மரபைத் திசை திருப்பிவிட வேண்டுமென்றோ, உத்தி இத்யாதிகளில் மேல் நாட்டுக் களஞ்சியத் திலிருந்து கொஞ்சம் கொள்ளையடித்துத்தான் தீருவது என்று ஆசைப்பட்டோ, திட்டம் வகுத்தோ எழுதிய நாவல் அல்ல இது. தமிழ் அன்னைக்கு இதோ ஒரு புதிய ஆபரணம் என்று எண்ணியும் இதை எழுதவில்லை.  எந்தக் கலைஞனும் தன் மொழியில் இல்லாததைத் தேடி அளிக்கவோ, இடைவெளிகளை நிரப்பவோ, இலக்கிய வளர்ச்சிக்குத் தோள் கொடுக்கவோ, மொழிக்குச் செழுமையூட்டவோ எழுதுவதில்லை. […]

மொழிவது சுகம் டிசம்பர் 2 -2012

  மின்னுவதெல்லாம் பெண்ணல்ல   அழகில் தேவதை, அஞ்சப்பரையும் முனியாண்டியையும் அசத்தும் சமையற் கைபக்குவம், “களவின் வழிவந்த கற்பிற் புணர்ச்சி, கிளைஞரின் எய்தாக் கேண்மையும் உடைத்தே, உடன்போய் வரைதலும் உண்மையான வாழ்க்கைத் துணை – 19 ஆண்டுகால இல்லற வாழ்க்கை -இன்று பொய்யாய் பழங்கதையாய்ப் போய்விட்டதென ஒப்பாரிவைக்கிறார் மனிதர் -பெயர் ஜான், பெல்ஜியம் நாட்டின் 64 வயது குடிமகன்.   இந்திய உபகண்டத்தில் ‘சர்தார்ஜி ஜோக்குகள்’ எத்தனை பிரசித்தமோ அத்தனை பிரசித்தம், ஐரோப்பியர்களிடையே – குறிப்பாக பிரான்சுநாட்டில் […]

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……………… 6. எஸ்.வைதீஸ்வரன் – உதய நிழல்

This entry is part 37 of 42 in the series 25 நவம்பர் 2012

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……………… 6. எஸ்.வைதீஸ்வரன் – உதய நிழல் வே.சபாநாயகம். நீங்கள் வாசிக்கப்போகும் இவைகள் – கவிதைகள். சாதாரணமானதாக பொருளற்றதாக பழகிப்பொய்விட்ட தவிர்க்க முடியாத நியதியாகத் தோன்றும் வாழ்க்கையிலிருந்து ஆசையால் அறிவால் உணர்வால் கல்லிடியடுக்கபட்ட சில கலையுண்மைகள் இவைகள். பூமியில் வெகு நாட்களாகப் பதிந்து போய்க்கிடக்கிற ஒரு பாறாங்கல்லை சலித்துப் போன வெறும் ஆத்திரத்தால் புரட்டிவிட அடியிலிருந்து திடீரென்று கொப்பளிக்கும் நீரூற்றையோ நெளியும் அநேக ஜீவராசிகளையோ கண்டு பிரமிப்படைந்து நிற்கும் நிலைகள் – எனக்கு கவிதை […]

பழமொழிகளில் காலம்

This entry is part 30 of 42 in the series 25 நவம்பர் 2012

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com      ‘‘காலம் நமக்குத் தோழன் காற்றும் மழையும் நண்பன்’’ என்ற பாடலை நாம் அனைவரும் கேட்ட பழைய திரைப்படப்பாடல் ஆகும். இப்பாடலில் வரும் காலம் அனைவரது வாழ்க்கையிலும் பல்வேறு தடயங்களை விட்டுச் செல்கின்றது. வலிமையானவர்கள் தவறுகள் செய்கின்றபோது அவரைத் தட்டிக் கேட்க முடியாத நிலைவரும்போது, ‘‘அவனுக்கெல்லாம் காலம்தான் பதில் சொல்லும். காலத்திடம் இருந்து யாரும் தப்பிக்க முடியாது’’ என்று பலரும் கூறுவதைக் கேட்டிருக்கின்றோம். இக்காலத்தை, ‘‘எனக்குப் போதாத காலம், கேடு காலம், […]

வைரமுத்துவின் எமிலி: ஏன் இந்த முரண்பாடு?

This entry is part 28 of 42 in the series 25 நவம்பர் 2012

(ஓர் அறிவியல் மாணவன்)   வைரமுத்துவின் “மூன்றாம் உலகப் போர்” நாவலில் தமிழ்நாட்டுக்கு நல்லது செய்யவரும் எமிலி என்னும் அமெரிக்க மாணவி (நியூ சயண்டிஸ்ட் புகழ்) அமெரிக்காவுக்குத் திரும்பு முன் சின்னப்பாண்டியென்னும் நமது கதாநாயகனுடன் பேசுகிறாள். அந்த உரையாடல் கொஞ்சம் காதல் போல் தொனிக்கிறது. ஆனால் காதல் இல்லை.   எமிலி: “இந்தச் சந்தர்ப்பத்தில் என்னை நம்புகிறீர்களா?”   சி.பா.: “இப்போது என் வாழ்வின் நம்பிக்கையே நீதான் எமிலி”   “நம்பிக்கையின் குரலுக்குச் செவிசாய்ப்பீர்களா?”   “நிச்சயமாக” […]

(3) – க. நா.சு. வும் நானும்

This entry is part 25 of 42 in the series 25 நவம்பர் 2012

1956 – தான் அவரது விமர்சனப் பயணத் தொடக்கமாக எனக்குத் தெரிய வந்த வருஷம். அதிலிருந்து அவர் கடைசி மூச்சு பிரியும் வரை அவர் விமர்சகராகவே  முத்திரை குத்தப் பட்டு ஒதுக்கப் பட்டு விட்டார்.  நாவல், சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு என எல்லா வடிவங்களிலும் அவர் தொடர்ந்து எழுதி வந்தார். பெரிய மனிதன், ஆட்கொல்லி, ஏழு பேர், அசுர கணம், நளினி, மயன் கவிதைகள், சமூக சித்திரம், அவரவர் பாடு மாதவி,  வள்ளுவரும் தாமஸ் வந்தார்,, அவதூதர்,. […]

(வாலிகையும்) மணலும் , நுரையும்! (5)

This entry is part 20 of 42 in the series 25 நவம்பர் 2012

Sand and Foam – Khalil Gibran (5) (வாலிகையும்) மணலும் , நுரையும்! (5) பவள சங்கரி புனையிழையவள் தம் முகத்தை புன்னகையால் முகத்திரையிடலாம். சோகத்தில் சோர்ந்த இதயமது, இன்பமான இதயத்துடன், இன்னிசை கீதமதை இதமாக இசைக்கும் அவரின் என்னே உயர் பண்பு. எவனொருவன் மாதொருத்தியை புரிந்து கொள்கிறானோ, அல்லது மேதைகளை, சோதனைகளுக்குள்ளாக்குகிறானோ, அல்லது மௌனத்தின் மர்மமதை விடுவிக்கிறானோ, அவனொருவன் மட்டுமே சௌந்தர்யமான சொப்பனத்திலிருந்து, எழுப்பி, காலை உணவு மேசையின் மீது அமரச் செய்யக் கூடியவன். […]

நாட்டார்/கிராமிய பாடல்கள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

This entry is part 19 of 42 in the series 25 நவம்பர் 2012

வெலிகம ரிம்ஸா முஹம்மத் நாட்டார் / கிராமிய பாடல்கள் என்ற தொகுதியின் ஆசிரியர் கிண்ணியாவைச் சேர்ந்த கவிஞர் பி.ரி. அஸீஸ் அவர்களாவார். நீண்ட இடைவெளிக்குப் பின் ஏப்ரல் 2011 இல் எழுதத் தொடங்கிய பி.ரி. அஸீஸ் அவர்கள் டிசம்பர் 2011 வரையான ஒன்பது மாதங்களுக்குள் ஒன்பது படைப்புக்களை வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு ஆளுமைகளைக் கொண்டிருக்கும் இவர், அண்மைக் காலங்களில் அதிகமாக இலக்கியத்தில் ஈடுபட்டு தமிழ்த் தொண்டாற்றி வருபவர். நாட்டார் / கிராமிய பாடல்கள் என்ற தொகுதி […]