இணைய வர்த்தகமும் மருந்து பொருட்கள் விற்பனையும்

This entry is part 46 of 51 in the series 3 ஜூலை 2011

(online sale & distribution of food & drugs and related problems)

கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் அதிகரித்துள்ளது இணையங்களின் மூலம் வர்த்தகமாகும். இது பல தொழில் துறைகளின், வியாபார நிர்வாகங்களின் வளர்ச்சிக்கு வழி வகுத்துள்ளது எனினும், சில பொருட்களை, குறிப்பாக மருந்து பொருட்கள், உணவு பொருட்கள் ஆகியவற்றை இணையத்தின் மூலம் விற்பனை செய்வதிலும், வாங்குவதிலும், பல சிக்கல்களும், பிரச்சனைகளும் அதிகரித்துள்ளன.
ஒன்று பொருட்களின் தரம்

: இணைய வர்த்தகங்களின் மூலம் பொருட்களின் தரம் குறித்து பொருள் உற்பத்தி செய்வோரோ, வினியோகம் செய்பவர்களோ உறுதி அளிக்க முடியாது. இரண்டாவது, உபயோகிப்பாளர்கள், பொருளின் உற்பத்தியாளர்கள் குறித்தோ, எங்கு எந்த நிலையில் அப்பொருள் உற்பத்தி செய்யபட்டது என்றோ, அனுப்பிய பொருளில் குறைபாடுகள் எதுவு இருப்பது குறித்தோ, அல்லது சட்ட வறைமுறைகள் (regulations) குறித்தோ அறிந்து கொள்ள நிபுணர்களோ, அனுபவம் பெற்றவர்க்ளோ அருகில் இருக்க வாய்ப்பில்லை.
 

மேலும்

, கடந்த சில ஆண்டுகளாக, மருத்துவ பொருட்களை இணைய வர்த்தகம் மூலம் வியாபாரம் செய்வதை ஆதரிப்பவர்கள் சொல்வது: இத்தகைய வினியோகம் மருந்து பொருட்களை வேற்று நாடுகளில் இருந்து உபயோகிப்பவர்களை நேரடியாக இறக்குமதி செய்து கொள்வதால், மருந்து பொருட்களின் விலையை குறைக்க முடியும் என்பது. இது உண்மையாயினும், இத்தகைய தடைகளற்ற, சட்ட வரைமுறைகள் அற்ற இணைய வர்த்தகம், குறிப்பாக உணவு பொருட்கள், மருந்து பொருட்கள் விற்பனை, பலவித சட்ட விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள மருத்துவர்களையும், மருத்துவ துறையையும் தூண்டுவதற்க்கு ஏதுவாகிவிடும். கடந்த சில வருடங்களில், அமெரிக்காவிலேயே பல மருத்துவர்கள் இந்த வியாபாரத்தின் மூலம் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்க்காகவும், போதை பொருள் வினியோகத்தில் ஈடுபட்டதற்க்காகவும் கைதாகியிருக்கிறார்கள்.
இது போன்ற உணவு மற்றும் மருந்து பொருட்கள் வினியோகத்தில் அதிக லாபம் ஈட்டக்கூடிய மருத்துவ பொருள் உற்பத்தி துறைகளில் இருந்து வரும் வரி

-வருமானத்தை அரசு இழப்பதோடு, சமூக விரோத செயல்களுக்கு மருத்துவ துறையை இட்டு செல்லும். உதாரணமாக, உடல் பாகங்கள் விற்பனை (human body organs sale) என்பன போன்றவை இணையத்தின் மூலம் பெருக வாய்ப்புள்ளது, ஏனெனில், இணையத்தின் மூலம் சட்ட வரைமுறைகளை எளிதில் மீற முடியும். ஏன் விஷ / நச்சு பொருட்களையும், biological weapons கூட எளிதில் கடத்தவோ, விற்பனையோ செய்ய முடியும். ஆகவே, அரசும், இணையத்தின் மூலம் மருத்துவ பொருட்கள் விற்பனை செய்பவர்களும், வினியோகிப்பவர்களும் சட்டவரை முறைகளை செயல்படுத்தவும், இத்தகைய வினியோகத்தில் ஈடுபடுவோரை கண்காணிக்கவும், தரக்கட்டுபாடுகளை செயல்படுத்தவும் (licensing & quality control), சட்டத்தை மீறுபவர்களை தண்டிக்கவும், தனி நிர்வாகத்தை ஏற்படுத்துதல் அவசியம். அமெரிக்காவில் தற்போது உள்ள, உணவு, மருத்துவ பொருள் நிர்வாக கழகத்தின் (Food & Drug Administration), கண்காணிப்பின் கீழ் இத்தகைய இணைய வர்த்தகம் நடப்பது போல் தெரியவில்லை. ஆகவே, இணையத்தின் மூலம் செய்யபடும் உணவு மற்றும் மருத்துவ பொருள் வினியோகம், இறக்குமதி ஒரு சட்டத்தை மீறீய செயல் என்றால் மிகையாகாது.

செந்தில்

Series Navigationமரணித்தல் வரம்பிம்பத்தின் மீதான ரசனை.:-
author

செந்தில்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *