மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா
++++++++++++++++++
ஒன்று, இரண்டு, மூன்று !
இன்னும் எண்ணிக் கொள்ளவா ?
நாலு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு !
நான் உம்மை நேசிக்கிறேன் !
அகரம், இகரம், உகரம், எகரம் !
தோழ னுக்கு இளநீர் தர்மம் !
நகரம், தகரம், மகரம், வகரம் !
நான் உம்மை நேசிக்கிறேன் !
நாம் யாம், நாம் தாம் எல்லாம் !
கடல் கடந்து கால்தடம் வைப்போம் !
காட்டை வெட்டி வாழ்தளம் படைப்போம் !
காற்று ஏணியில் வானைத் தொடுவோம் !
நோக்குவீர் இப்போ தெம்மை !
எல்லாம் ஒன்றாச்சு ! எல்லாம் கலந்தாச்சு !
இப்போ தொருமைப் பாட்டில் எல்லாம் !
கறுப்பு, வெளுப்பு, நீலம், பச்சை !
தீர்த்து வைப்பேன் தோழனின் இச்சை !
பழுப்பு, சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு,
பாரில் வர்ணத்தை நேசிப்பேன் !
எல்லாம் ஒன்றாச்சு ! எல்லாம் கலந்தாச்சு !
இப்போ தொருமைப் பாட்டில் புகுந்தாச்சு !
+++++++++++