முகக்கண் காணுமா ?
சி. ஜெயபாரதன், கனடா
முகக்கண் காணுமா ? சொல்
முகக்கண் காணுமா ?
அகக்கண் பேணுமா ? தோழீ
முகக்கண் காணுமா ?
முக்கண் முதல்வனை, ஆதி மூலனை
முகக்கண் காணுமா ?
அகக்கண் பேணுமா ? சொல்,
சொல், சொல், சொல் தோழீ !
முகக்கண்ணா ? அகக்கண்ணா ?
எது காணும் ?
யுகக் கண்ணனை எது காணும்
இப்பிறவியில் ?
சொல், சொல், சொல் தோழீ !
மும்முக மூலனை,
மூவினைக் காலனை
முக்கண் ஞாலனை
முகக்கண் காணுமா ? சொல்
அகக்கண் பேணுமா ? தோழீ
சொல், சொல், சொல்
முகக்கண் காணுமா ?
அகிலம் எங்கும், உயிர்களை
ஆக்குவது நீ, அழித்து
நீக்குவது நீ, அளித்து
ஊக்குவது நீ
மூவினை புரியும் மூலனை
காலனை, ஞாலனை
எப்படித் துதிப்பது நான்
எப்படி நினைப்பது நான்
சொல், சொல், சொல் தோழீ !
கண்ணிமை மூடித் தொழுவதா ?
கண்விழி திறந்து காலடி விழுவதா ?
எண்திசை நோக்கி தேடி அலைவதா ?
விண்வெளி நிமிர்ந்து நாடி விழைவதா ?
கடினம், கடினம், வெகு கடினம்
வடிவ மின்றி, உனை நாடுவது
உருவ மின்றி, உனைத் தேடுவது
ஒரு பெய ரின்றி, ஓரடை யாள மின்றி
உனைத் தேட முடியுமா ?
உனைப் பாட இயலுமா ?
உனை நாட முயில்வதா ?
ஒரு நாள் ஒரு கண மாவது
உனைத் துதிப்பேன், நான்
எனது கனவு பலித்திட,
எனது பணிகள் செழித்திட,
உனது துணை வேண்டிட
உனைத் துதிப்பேன்
உனை விளிப்பேன், அனுதினம்
மறுதினம், தினம், தினம்.
முக்கண்ணா, முகக்கண்னா
மும்முகத் தானே
முப்பணி புரிவோனே
எப்படி உனைத் துதிப்பேன்
எப்படி உனை விளிப்பேன்
எப்படி உனை நினைப்பேன்
இப்பிறவியில்.
அடுத்த பிறவியில் உனைத் தொழ
இறைவா ! எனக்கு வரம் தா
பிறப்பிடம்
மதுரை மா நகரிலே.
- பூகோள ராகம்
- அவ்வை நோன்பும் பெண் மன உளவியலும்
- பூமியின் மர்மமான முணுமுணுப்பு ஓசை நாதம் முதன்முதல் கடலடியில் பதிவானது
- ஒவ்வொரு கருந்துளைக் குள்ளே ஒரு பிரபஞ்சம் ஒளிந்திருக்கலாம்
- ஒருநாள் போதுமா [மெட்டு] by பால முரளி கிருஷ்ணா
- வடகிழக்கு இந்தியப் பயணம் : 10
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- இரங்கலுரை: பெரும்புலவர் முகமட் ஹன்ஸீர்
- லா.ச.ரா.
- பயணம் – 4