This entry is part 2 of 6 in the series 23 ஜூலை 2023

ஆர் வத்ஸலா

உன் மௌன விலகல்

கணக்கில்லா காலம்

என்னை வதைத்தது

துன்பத்தை துரத்த

கோபத்திற்காக

பிரார்த்தித்தேன்

ஒவ்வொரு நொடியும்

கோபம் செவி சாய்க்க மறுத்தது

கோபத்தின் மேல்

கோபமா கொள்ள முடியும்?

வதைத்து

வதைத்து 

அலுத்தது துன்பம்

பழக்கப்பட்ட

துன்பம்

விலகுகையில்

விவரிப்புக்கு‌ அப்பாற்பட்ட

பீதி சூழ்ந்தது

அதனிருந்தும்

மீண்டாகி விட்டது

உன் மேல்

கோபமில்லை

வருத்தமில்லை

புகாரில்லை

உனக்காக 

முன்பு போல

பிரார்த்திப்பதில்லை

யாரையும் நான் சபிப்பதில்லை

உனை நினைக்கையில்

எனக்கு எந்த உணர்வுமில்லை 

ஒரு சிறு ஆயாசத்தை தவிர

Series Navigationஎதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ?முதியோர் காப்பக  நுழைவு அனுபவம் – 4