தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

மகிழ்ச்சியைக்கையகப்படுத்துதல்: 8

மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல்: (THE CONQUEST OF HAPPINESS) அத்தியாயம் – 8 துன்புறுத்தப்படுவோமோ என்ற பேரச்சம் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்! (BERTRAND RUSSEL) ஆங்கிலத்திலிருந்து தமிழில்: லதா ராமகிருஷ்ணன் துன்புறுத்தல் சார் உளவியல்ரீதியான பெரும்பீதி துன்புறுத்தல் சார் உளவியல்ரீதியான பெரும்பீதி  அதன் ஆகத்தீவிர நிலைகளில்மனநோயாக அடையாளங்காணப்படும் ஒன்றாகும். சிலர், மற்றவர்கள் தங்களைக்கொல்லவோ, சிறையில் அடைக்கவோ, அல்லது தங்களுக்கு வேறு ஏதேனும் கடுமையானகாயத்தை ஏற்படுத்தவோ விரும்புவதாகக் கற்பனை செய்கிறார்கள். அவ்வாறு தம்மைத்துன்புறுத்துவதாய் அவர் கறபனை செய்துகொள்ளும் மனிதர்களிடமிருந்து தம்மைப்பாதுகாத்துக் கொள்ளும் விருப்பம் அவர்களை வன்முறைச் செயல்களில் ஈடுபடத்தூண்டுகிறது; இது அவர்களின் சுதந்திர இயக்கத்தைக் கட்டுப்படுத்தவேண்டியஅவசியத்தை ஏற்படுத்துகிறது. மனநோயின் பல வடிவங்களைப் போலவே இதுவும்இயல்பானவர்கள் என்று கருதப்படும் மக்களிடையே வழக்கமாகக் காணப்படும் ஒருமனப்போக்கின் மிகைப்படுத்தப்பட்ட வடிவமே ஆகும். அதன் தீவிரமான வடிவங்களைப்பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை, ஏனெனில் அவை ஒரு மனநல மருத்துவர்கையாளவேண்டியவை. நான் அதன் மிதமான வடிவங்களைப் பற்றி மட்டுமே பேசவிரும்புகிறேன். ஏனெனில், அவையே மகிழ்ச்சியின்மைக்கான காரணங்களாகின்றன.மேலும், அவை திட்டவட்டமான மனநோயை உருவாக்கும் அளவிற்குச் செல்லாததால், அவற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர் தனது பிரச்சனையைச் சரியாகக் கண்டறிந்து, அதன்ஆரம்பம் தனக்குள்ளேயே உள்ளது என்பதையும், மற்றவர்களிடம் இருப்பதாகத் தான்கருதும் கற்பனையான விரோதத்திலோ அல்லது ஈவு இரக்கமற்ற தன்மையிலோ இல்லைஎன்பதையும் கண்டறியும்படித் தூண்டப்பட்டால், அவற்றை அவராலேயேசரிசெய்துகொள்ள முடியும். மற்றவர்களிடம் இருப்பதாக அவர் கற்பனை செய்துகொள்ளும்நன்றிகெட்டத்தனம், இரக்கமின்மை மற்றும் துரோகம் ஆகியவற்றால் நிரந்தரமாகப்பாதிக்கப்பட்டவராகத் தம்மை பாவித்துக்கொள்ளும் ஆண்கள் அல்லது பெண்கள் போன்றநபர்களை நாம் அனைவரும் அறிவோம். இத்தகைய நபர்கள் பெரும்பாலும் வியக்கத்தக்கவகையில் நம்பத்தகுந்தவர்களாக இருப்பார்கள், மேலும், அவர்களை நீண்ட காலம்அறியாதவர்களிடமிருந்தும் ஆழ்ந்த அனுதாபத்தைப் பெறுவார்கள். பொதுவாக, அவர்கள்கூறும் எந்தவொரு தனிப்பட்ட கதையிலும் உள்ளார்ந்த நம்பகத்தன்மையற்ற தன்மைஎதுவும் இருப்பதில்லை. அவர்கள் புகார் செய்யும் வகையான கொடுமைகள் சந்தேகத்திற்குஇடமின்றி சில சமயங்களில் நிகழ்கின்றன. முடிவில், தாம்எதிர்கொள்ளவேண்டியிருந்ததாக அவர்கள் சொல்லும் பலவகையான கெடுமதியாளர்களின், துரோகிகளின் எண்ணிக்கையே அவற்றைக் காதுகொடுத்துக் கேட்பவரிடம்சந்தேகங்களைத் தூண்டுகின்றன. ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் வாழும் வெவ்வேறு நபர்கள், தங்கள் வாழ்நாளில் ஏறக்குறைய ஒரே அளவிலான கொடுமைகளைச் சந்திப்பதற்கானவாய்ப்புள்ளது என்று நிகழ்தகவுக் கோட்பாடு[doctrine of probability] சொல்கிறது. அப்படியான ஒரு குறிப்பிட்ட குழுவில் உள்ள ஒருவர், தான் மற்ற அனைவராலும்துன்புறுத்தப்படுவதாகக் கூறினால், அதற்கான காரணம் அவரிடமே இருப்பதற்கானசாத்தியப்பாடே அதிகம். ஒன்று, அவர் உண்மையில் அனுபவிக்காத காயங்களைக்கற்பனை செய்துகொள்கிறார், அல்லது கட்டுப்படுத்த முடியாத எரிச்சலைத் தூண்டும்வகையில் தன்னையுமறியாமலேயே அவர் நடந்துகொள்கிறார். எனவே, அனுபவ சாலிகள்,உலகத்தால் தொடர்ந்து துன்புறுத்தப்படுபவதாகக் கூறுகிறவர்கள் மீது சந்தேகம்கொள்கிறார்கள்; அத்தகையோர் மீது இரக்கம் காட்டுவதில்லை. இதுவே அனைவரும்தங்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்று குறைசொல்வோர் எண்ணத்திற்கு வலுசேர்க்கிறது. இந்தப் பிரச்சனையைக் கையாள்வது உண்மையிலேயே கடினமானது.ஏனெனில் இது அனுதாபத்தாலும் அனுதாபமின்மையாலும் ஒரே மாதிரியாகத்தூண்டப்படுகிறது. துன்புறுத்தல்சார் பெரும்பீதிக்கு ஆளான ஒரு நபர், தான் முன்வைக்கும்ஒரு துன்பக் கதை நம்பப்படுவதைக் கண்டால், நம்பகத்தன்மையின் எல்லையை அடையும்வரை அதை மிகைப்படுத்திக்கொண்டே போவார். மறுபுறம், அது நம்பப்படவில்லைஎன்பதைக் கண்டால், அது மனிதகுலம் தன்னிடம் காட்டும் கல்நெஞ்சத்தனத்திற்குமற்றொரு உதாரணமாக மட்டுமே அமைகிறது. சரியான புரிதலின் மூலம் இந்தநோய்க்கூறைக் கையாள முடியும், மேலும் இந்தப் புரிதல் அதன் இலக்கைஎட்டவேண்டுமானால் அது நோயாளிக்கு எடுத்துரைக்கப்பட வேண்டும். இந்தஅத்தியாயத்தில் எனது நோக்கம், இந்த கற்பனையான துன்புறுத்தல் தொடடர்பாய் சிலபொதுவான அவதானிப்புகளை முன்வைத்து அதன் மூலம் ஒவ்வொரு தனிநபரும், Persecution Mania எனப்படும் இந்த கற்பனைத் துன்புறுத்தல்சார் பெரும்பீதி மனநோயின்கூறுகளைத் (ஏறக்குறைய அனைவருமே இத்தகைய கற்பனையான பெரும்பீதியால்அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பாதிக்கப்படுகின்றனர்) தங்களுக்குள் கண்டறிந்து, அவற்றை அகற்ற முடியும். இது மகிழ்ச்சியைக் கையகப்படுத்துவதில் ஒரு முக்கியப்பகுதியாகும், ஏனெனில், எல்லோரும் நம்மைத் தவறாக நடத்துகிறார்கள் என்று நாம்உணர்ந்தால் நம்மால் மகிழ்ச்சியாக இருக்கவே இயலாது.  உலகளாவிய அளவில் நிலவும் பகுத்தறிவின்மையின் பொதுவான வடிவங்களில் ஒன்று, வதந்திகள், வம்புகள் குறித்து ஏறக்குறைய எல்லோரும் கொண்டிருக்கும்மனப்பான்மையாகும். மிகச் சிலரால் மட்டுமே தங்களுக்கு அறிமுகமானவர்களைப் பற்றியும், சில சமயங்களில் தங்கள் நண்பர்களைப் பற்றியும் கூட அவதூறு செய்வதை, வன்மமானவம்புப்பேச்சில் ஈடுபடுவதைத் தவிர்க்க முடிகிறது; ஆனாலும், தங்களுக்கு எதிராக ஏதாவதுகூறப்பட்டதைக் கேட்கும்போது, ​​மனிதர்கள் ஒரேயடியாக அதிர்ச்சியும் ஆத்திரமும்அடைகிறார்கள். அவர்கள் மற்றவர்களைப் பற்றி வதந்தி பரப்புவதைப் போலவே, மற்றவர்களும் அவர்களைப் பற்றி வதந்தி பரப்புகிறார்கள் என்பது அவர்களுக்கு ஒருபோதும்தோன்றியதில்லை போலும். இது துன்புறுத்தல் சார் பெரும்பீதியின் ஒரு மிதமானவடிவமாகும். இந்த உணர்வுகள் அதீதமாகும்போதுதான் அது ​​துன்புறுத்தல் சார்பெரும்பீதிக்கு வழிவகுக்கும். நாம் நம்மீது கொண்டிருக்கும்  மென்மையான அன்பையும்ஆழ்ந்த மரியாதையையும் மற்ற அனைவரும் நம்மீது கொண்டிருக்க வேண்டும் என்று நாம்எதிர்பார்க்கிறோம். நாம் மற்றவர்களைப் பற்றி நினைப்பதை விட அவர்கள் நம்மைப் பற்றிஉயர்வாக நினைக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது என்று நமக்குத்தோன்றுவதில்லை. அவ்வாறு தோன்றாததற்குக் காரணம், நமது சொந்த நற்பண்புகள்பெரியதாகவும் வெளிப்படையாகவும் நமக்குத் தெரிவதுதான். மற்றவர்களின் நற்பண்புகள்அவை இருந்தாலும் கூட, மிகவும் இரக்கமுள்ள கண்களுக்கு மட்டுமே புலப்படும். இன்னார்உங்களைப் பற்றி ஏதோ கடுமையான விஷயத்தைக் கூறிவிட்டார் என்று நீங்கள்கேள்விப்படும்போது, ​​அவரைப் பற்றிய மிகவும் நியாயமான மற்றும் தகுதியானவிமர்சனத்தைக் கூறாமல் நீங்கள் தொண்ணூற்றொன்பது முறைகள் தவிர்த்ததைநினைவுகூர்கிறீர்கள்;  ஆனால், நூறாவது முறையாக, கவனக்குறைவான ஒரு தருணத்தில், அவரைப் பற்றியஉண்மை என்று நீங்கள் நம்புவதை பிரகடனப்படுத்தியதை மறந்துவிடுகிறீர்கள். இவ்வளவுநாட்கள் எதுவும் கூறாமல் பொறுமை காத்ததற்கு கிடைத்த பரிசு இதுதானா என்றுஉங்களுக்குத் தோன்றுகிறது. ஆனால், அவருடைய பார்வையில் உங்கள் நடத்தை, அவருடைய நடத்தை உங்களுக்கு எப்படியிருக்கிறதோ அதைப்போலவே இருக்கிறது. நீங்கள் அவரைப் பற்றி விமர்சிக்காமல் மௌனம் காத்த 99 தருணங்களை அவர்அறியமாட்டார்.  நீங்கள் 100ஆவது முறை பேசிய அந்த தருணத்தைப் பற்றி மட்டுமே அவர்அறிவார். நமக்கெல்லாம் ஒருவர் மனதிலிருப்பதை பரஸ்பரம் படித்து அறிந்துகொள்ளும்சக்தி ஏதாவது மாயமந்திரத்தால் கைகூடுமானால் அதனால் ஏற்படும் முதல் விளைவு எல்லாநட்புறவுகளும் இல்லாமலாகிவிடுவதுதான். இரண்டாவது விளைவு மிக அற்புதமானதாகஅமையக்கூடும். காரணம், நட்பினரேயில்லாத உலகம் சகிக்கமுடியாததாக உணரப்படும், எனவே, நாம் ஒருவரையொருவர் அப்பழுக்கற்றவர்களாக நினைக்கவில்லை என்பதைநமக்கு நாமே திரையிட்டு மறைத்துக்கொள்ள வேண்டிய தேவையின்றி ஒருவரையொருவர்விரும்பவும்,, ஏற்றுக்கொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும். நம் நட்பினரிடம் சில குறைகள்உண்டு என்பது நமக்குத் தெரியும். இருந்தும், அவர்கள் மொத்தத்தில் நமக்கு ஏற்புடைய, நமக்கு விருப்பமான மனிதர்களே என்பதை நாம் அறிவோம்.ஆனாலும், அவர்களைப் பற்றிநமக்கிருக்கும் அபிப்பிராயத்தைப் போலவே அவர்களுக்கும் நம்மைப் பற்றிஅதேமாதிரியான அபிப்பிராயம் இருக்கும் என்பதை நம்மால் சகித்துக்கொள்ளமுடியவில்லை. மனிதகுலத்தில் மற்ற்வர்களைப் போலல்லாமல் நம்மிடம் குறைகளேகிடையாது என்று அவர்கள்  நினைக்கவேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். அப்படியில்லை, நம்மிடமும் குறைகள் உண்டு என்பதை நாம் ஒப்புக்கொண்டாகவேண்டியகட்டாயம் ஏற்படும்போது இந்த வெளிப்படையான உண்மையை நாம் மிக மிகத் தீவிரமாகஅணுகுகிறோம். யாருமே தான் அப்பழுக்கற்றவராக, உதாரண மனிதனாக இருக்கவேண்டும்என்று எதிர்பார்க்கலாகாது. அப்படியில்லை என்ற உண்மை நிலவரம் அவரை அதீதமாகஅலைக்கழிக்கலாகாது. கன்புறுத்தல் சார் பெரும்பீதி [Persecution mania] என்ற உளவியல்பிறழ்வுநிலை எப்போதுமே நமது தகுதிகள், திறனாற்றல்கள்  குறித்து நம்மிடமிருக்கும் மிகஅதீதமான நினைப்பில்தான் நிலைகொண்டிருக் கிறது. நான் ஒரு நாடகாசிரியர் என்று வைத்துக்கொள்வோம். பாரபட்சமற்ற எல்லோருக்கும்அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவர்களிலேயே நான் தான் மிகச் சிறந்த நாடகாசிரியர்என்பது கட்டாயமாக, மிக வெளிப்படையாகத் தெரிந்திருக்கவேண்டும். இருந்தாலும், ஏதோகாரணத்தால் என்னுடைய நாடகங்கள் மேடையேற்றப்படுவதில்லை, அப்படியேஅரங்கேறினாலும் வெற்றி பெறுவதில்லை. இந்த விசித்திரமான நிலைக்கு என்ன காரணம்?தரப்படும் விளக்கம் இந்தரீதியில் தான் இருக்கும். நடிகர்கள், விமர்சகர்கள், நாடகக்குழுநிர்வாகிகள் எல்லோருமே ஏதோ காரணத்தால் எனக்கு எதிராகத் திரும்பிவிட்டார்கள். நாடகத்தின் தோல்விக்கான காரணம் நான் தன்மதிப்போடு இருந்ததுதான். நாடகவுலகப்பெருந்தலைகளை நான் காக்காய் பிடிக்காததுதான்; அவர்களுக்குக் கூழைக்கும்பிடுபோடாததுதான். விமர்சகர்களை நான் விதந்தோதவில்லை. என் நாடகங்கள் பேசும்நிஜத்தின் உக்கிரம் அது யாரைச் சாடுகிறதோ அவர்களால் தாங்கமுடியாததாகஇருக்கிறது.ஆள் வெகுவாக உயர்த்திப் புகழ்வதாக அமைகிறது. எனவே என்னுடையமேலான, மேன்மையான தகுதித்திறனாற்றல் அடையாளங்காணப்படாமல்அலைக்கழிகிறது. இதுதான் எனது விளக்கமாக இருக்கும்.

நளபாக நாஜிக்கள் !

​இந்த விசித்திர உயிரினங்கள் இனி வரும் காலங்களில் நசிந்து போகலாம்(போயே தீர வேண்டும் என்பது என் அவா!) எனினும் தற்போது ஐம்பது வயதிற்கு மேல் உள்ள பெண்களுள் விரவிக் கிடக்கும் இவ்வகையினத்தின் பண்புநலன்களை எடுத்தியம்புதல் வருங்கால வரலாற்று ஆய்வாளர்களுக்குக் காறித் துப்ப வசதியாய்…

கதைகள்

இணைய இயலாத இதயங்கள்

'தேவவிரதன்' அன்புள்ள நண்பர் சேகருக்கு, உங்களை இனிமேலும் கணவர் என்ற பெயர் சொல்லி செயல் படுவது முறையானது என்றுஎன் மனதிற்கு தோன்றவில்லை. அதனால்தான் உங்கள் பெயரை ஓர் நண்பரைகுறிப்பிடுவது போல் பதிவு செய்கிறேன்.  கிட்டத்தட்ட மூன்று நீண்ட வருஷங்களுக்கு பின் நான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன்என்பதை விட தள்ளப்பட்டியிருக்கிறேன் என்ற வார்த்தையே பொருத்தமானதாக இருக்கும்என்று எனக்கு தோன்றுகிறது. நம் கல்யாணம் ஒன்றும் காதல் திருமணம் அல்ல; 'நாலும்தெரிந்ததாக' கூறிக்கொள்ளும், நம் ஊர் பெரியவர்கள் பார்த்து இணைத்த உறவுதான் இது. உண்மைதான். நம் நிச்சயதார்த்தம் ஆன பின்னர் நாம் ஓர் சில சமயங்களில் சந்ததித்துபேசியது உண்மைதான். ஆனால், அந்த பேச்சில் எந்த மன உணர்வுகளும் பகிர்ந்துகொள்ள படவில்லை என்பதும் உண்மைதான். ஏதோ பேசினோம். மகிழ்ச்சி அடைந்தோம்என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். நம்மிடையே பகிர்ந்து கொள்ள நம்அலுவலக விஷயங்கள், ஓர் சில நண்பர்கள் தவிர வேறு எதுவுமே இல்லை. எனக்கு சங்கீதம்கர்நாடகமோ, மெல்லிசையோ பிடிக்கும். உங்களுக்கு விளையாட்டு அதுவும் குறிப்பாககிரிக்கெட் என்ற விளையாட்டை தவிர வேறெதுவும் தெரியாது. அதிலும் உங்களுக்கு எந்தஆழ்ந்த ஆர்வமும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.  உங்களின் ஆர்வம் எல்லாம் பணம் சேர்ப்பதில் மட்டுமே இருந்தது. அதனால் பலநேரங்களில் நீங்கள் மிகவும் கேவலமாகவும், கருமித்தனமாகவும் நடந்து கொள்வதைஎன்னால் கட்டாயமாக சகித்து கொள்ள முடியவில்லை. என் சம்பளத்தை கூட பைசாவிடாமல் வாங்கி கொள்கிறீர்கள். இதை நான் குற்றமாக கருதுவதில்லை; ஆனால், இந்தஆக்ரமிப்பு இந்த காலத்திற்கு ஒவ்வாததாக இருக்கிறது என்பதை என்னால் மறுக்கமுடியாது.  தவிர, எந்த வகையிலும், எனக்கு உங்களுக்கும் ஓர் சந்திக்கும் புள்ளியே இல்லை. எல்லாமே வேறு வேறாகவே இருக்கிறது. இது உங்கள் குணம். அதற்கு எதிர்மறையானதுஎன் குணம். அவரவர்க்கென்று உலகில் மனதில் ஓர் 'தனி இடம்' . அதை மறுக்க எவராலும்முடியாது. ஆனால், அப்படி ஒன்று இல்லாதவர்களும் இருக்கின்றனர்.  நான் திருமணமான நாளில் இருந்து பார்த்து வருகிறேன். உங்கள் சுயநலமும், பணத்தாசையும்தான் உங்கள் எல்லா விதமான நடவடிக்கைகளிலும் எந்தவிதமானதிரைகளும் இன்றி வெளிப்படுகிறது. அது எனக்கு பல நேரங்களில், உண்மையாகசொன்னால் அருவருப்பையே தோற்றுவிக்கிறது. நான் பட்டியலாக நிகழ்ச்சிகளை விவரிக்கவிரும்பவில்லை. அது இன்னும் அசிங்கம், ஆபாசம்.  இந்த நிலையில் நாம் இருவரும் பிரிவதே நல்லது என்று தோன்றுகிறது. நான்எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி பிரிவதற்கு ஒப்பு கொள்கிறேன். நான் ஏன் இந்தகடிதத்தை எழுதுகிறேன் என்றால், உங்கள் எதிர்காலத்தில் நீங்கள் உங்களுக்கு ஏற்ற, பிடித்த வாழ்க்கையை அமைத்து கொள்ள உதவியாக இருக்கும் என்பதற்காக.  என் நிபந்தனைகள் அற்ற கடிதத்தை இதனுடன் என் நண்பரான ஓர் வக்கீலிடம் கேட்டுஎழுதி வைத்திருக்கிறேன்.  இருப்பது ஓர் பிறவி; அதில் ஏகப்பட்ட உடன்படிக்கைகள், தியாகங்கள் செய்து கொண்டுவாழ நான் கண்ணகியோ, நளாயினியோ அல்ல.  என்னை தேட முயற்சிக்க வேண்டாம். என்னை மறந்து நீங்கள் உங்கள் புது வாழ்க்கையைதொடரலாம்.  கவிதா.  ******** கடிதத்தை மடித்து ஓர் உரையில் போட்டுவிட்டு, ஹாலில் இருந்த ட்ரெஸ்ஸிங் டேபிள் மேல்வைத்தாள். தனக்கு தேவையான பொருட்களுடன் தயார் செய்து வைத்திருந்த பெட்டியைஎடுத்துக் கொண்டு, வீட்டை பூட்டி விட்டு, சாவியை தபால்களுக்காக வைத்திருந்த கதவுக்குஅருகில் இருந்த பெட்டியில் போட்டு விட்டு கிளம்பினாள் கவிதா.  ********* ஆனால், அவளுக்கு கிட்டத்தட்ட இதே போன்ற ஓர் கடிதத்தை அவள் கணவன் சோமசேகர்படுக்கையறை மேசை மேல் வைத்து விட்டு போயிருக்கிறான் என்று தெரியாது.  ********* காலை பத்து மணிக்கு திருவனந்தபுரம் செல்லும் விமானத்தில் கவிதா ஏறிய அதேநேரத்தில், அவள் கணவன் சோமசேகர் கொல்கத்தா செல்லும் விமானத்தில் அதேசென்னை விமான நிலையத்தில் ஏறி அமர்ந்திருந்தான்.

கவிதைகள்

‘ரிஷி’ [லதா ராமகிருஷ்ணன்]யின் கவிதைகள்

ரிஷி’ 1. மண்ணோடு மண்ணாய்….. ஒவ்வொரு உறவிலும் ஒருவருக்கொருவர் சாயமடித்துக்கொண்டே யிருக்கிறார்கள் _ இரண்டு வண்ணங்களின் சேர்க்கையில் தாம் நினைக்கும் மூன்றாவது நிறம் அத்தனை துல்லியமாக வந்துவிடும் என்ற நினைப்பில்.. பெரும்பாலும் மண்ணே விழுந்தபோதும் ’அவர்களிருவரின் உறவில் விழுந்தது அழுக்குப் பிடித்த உலர்மண் - எங்கள் விஷயத்தில் விழுந்தது ஈரமண் ’ என்று பெருமைபீற்றிக்கொள்கிறார்கள். விழுந்த மண் விழுந்தபடியிருக்க விளையாட்டாக ஒருவர் மீதொருவர் அவரவர் கையகப்பட்ட மண்ணை எறிகிறார்கள். இவர் எறியும் மண் அவர் சட்டையை அழுக்காக்கிவிட அவர் எறிவது இவர் கண்ணுக்குள் விழுந்துவிட நெருங்கியிருந்தவர்கள் தொலைவாகி வேகவேகமாய் வீசத் தொடங்குகிறார்கள்…

உயிர்மையின் நாடி

__________________________ காலங்களைப் பட்டைகளாக  தரு அணிந்து இருக்கிறது கனவுகளைக் கிளைகளாக  திசை எட்டும்  நீட்டுகிறது. இலைகளாக கிளைத்திருக்கின்றன அதன் நூறு இருதயங்கள். மண்ணில் ஊன்றியிருக்கும்  ஆணிவேர் வாயில் சல்லிவேர்களாய்  ஆயிரம் நாவுகள் நீர்மையை சேகரிக்கின்றன.…

என்றும் இதே நிலைகள்

   என்றும் இதே நிலைகள்    யாரோ விட்ட பட்டம்    அறுந்து இங்கே பறந்து வந்து    மின்கம்பியில் மாட்டிக் கொண்டு    என் மனத்தைப் போலத்    தத்தளிக்கிறது;    ஒடிந்து விழுவேன் என்று    பயமுறுத்திக் கொண்டே    இன்னும் ஒடியாமல்    முருங்கை ஆடுகிறது;    உச்சிக் கிளைகளில்    கட்டிய தன் கூடு  …

மழை புராணம்: 28 

மழை புராணம்: 28  மழை கரைத்துச் செல்கிறது தன்னிறம் நீங்கிசெம்மண் நிறத்துக்கு மாறும்மழை நீரைப் பருகிமரித்துக் கிடந்த சொல் விழுங்கும் கிளிமீண்டும் வானம் ஏகும்தூயதொரு தனிமை கூடி.**           …

நகைச்சுவையும் வித்தியாசமானவையும்

நளபாக நாஜிக்கள் !

​இந்த விசித்திர உயிரினங்கள் இனி வரும் காலங்களில் நசிந்து போகலாம்(போயே தீர வேண்டும் என்பது என் அவா!) எனினும் தற்போது ஐம்பது வயதிற்கு மேல் உள்ள பெண்களுள் விரவிக் கிடக்கும் இவ்வகையினத்தின் பண்புநலன்களை எடுத்தியம்புதல் வருங்கால வரலாற்று ஆய்வாளர்களுக்குக் காறித் துப்ப வசதியாய்…