கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய சர்வதேச சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற 16 சிறுகதைகள் அடங்கிய ‘சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு ஏப்ரல் மாதம், 17 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3 மணியளவில் வெளியிட இருப்பதால், இலக்கிய ஆர்வலர்களை இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். காலம்: ஏப்ரல் 17, 2022. […]
சார்ல்ஸ் டு லிண்ட் தமிழாக்கம்: மைத்ரேயன் (சார்ல்ஸ் டு லிண்ட் என்பவர் எழுதிய ஒரு அதிபுனைவுக் கதையை மொழி பெயர்த்துள்ளேன். இவர் அதிபுனைவுலகில் சற்று நன்கு தெரிய வந்தவர். கதை பற்றிய விவரங்கள் கடைசியில் கொடுத்திருக்கிறேன். தலைப்பில் உள்ள க்ரோ என்பதை மொழிமாற்றம் செய்யாததற்கு ஒரு காரணம், க்ரோ என்ற பழங்குடி அமெரிக்கர்களின் சமூகக் குழுவை அது பூடகமாகச் சுட்டுகிறது என்பது ஒரு காரணம். ஆனால் அதி புனைவு என்பதால் இந்த கனடிய/ டச்சு எழுத்தாளர் மையப் பாத்திரத்தை கருப்பினத்தவராகச் சித்திரிக்கிறார். கதைக்குள்ளும் க்ரோ என்பதை அவர் பெயர் […]
தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு என்ன? VAANAVIL issue 135 – March 2022 has been released and is now available for download at the link below. 2022 ஆம் ஆண்டு, பங்குனி மாதத்திற்குரிய வானவில்(இதழ் 135) வெளிவந்துவிட்டது. இதனை கீழேயுள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம். Please click on the link below to read the issue. இதழினை வாசிப்பதற்கு கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும். https://manikkural.files.wordpress.com/2022/03/vaanavil-135_2022.pdf கீழேயுள்ள இணைப்பில் அனைத்து வானவில் […]
அன்பாதவன் வளவ. துரையன் வாழ்நாள் முழுவதும் மனிதரைப் படிப்பவர்; தொடர்ந்து வாசிப்பவர்; எனவே சர்வ சாதாரணமாக பெருவலையோ தூண்டிலோ இல்லாமல் தோள்துண்டிலேயே அவருக்கு இலகுவாகக் கிடைத்து விடுகின்றன கதை மீன்கள். கவிதை, கதைகள், விமர்சனம், ஆன்மீக உரை, கட்டுரைகள், சிற்றிதழ் ஆசிரியர் எனப் பன்முகத் தரிசனம் காட்டும் வளவ. துரையனின் ஆறாம் சிறுகதைத் தொகுதியாக சந்தியா பதிப்பகம் “மீண்டும் ஒரு தொடக்கம்” […]
ஆ. ஸ்டாலின் சகாயராஜ். கும் இருட்டில் ஏதோ சண்டை முடிந்த போர்க்களம் போலொரு அமைதி தட தடவென கால்கள் நடநடவென படியில் மொட்டை மாடி முதுகில் நினைவுக்கு வந்ததோ இந்த நிலவு… யாரை பிரிந்து தேடுகிறது பால் ஒளியை ஊரெல்லாம் பூசிக்கொண்டு… ஐயம்? “ஊரெல்லாம் அமைதி யாரெல்லாம் வரீங்க “ ஆள் சேர்த்து மரத்தை சுத்தும் இரவின் பட்டாம்பூச்சி வொவால்கள் அருகே தீக்குச்சி பற்றவைத்த ஒளி சுற்றுவதை நிறுத்தி […]
கோ. மன்றவாணன் உலோகத் தொழில், மர வேலை செய்யும் இடத்தைத்தான் பட்டறை என்ற சொல் குறிக்கும். ஆனால் அந்தச் சொல்லைக் கொண்டு உருவாக்கும் கூத்துப் பட்டறை, செந்தமிழ்ப் பட்டறை, பேச்சுப் பட்டறை, கவிதைப் பட்டறை போன்ற சொல்கூட்டுகள் தவறானவை என்று சிலர் வாதிடுகிறார்கள். இந்தப் பட்டறை என்ற சொல்கூட, பட்டடை என்னும் சொல்லில் இருந்து வந்ததாகச் சிலர் சொல்கிறார்கள். படு என்பதுதான் அதன் வேர்ச்சொல்லாக இருக்கும். படு என்ற சொல் செயல்படுதலைக் […]
அழகியசிங்கர் 27.03.2022 அந்த நாட்களில் மழை அதிகம் என்ற அஜயன் பாலாவின் புத்தகத்தை முன் வைத்து சமீபத்தில் நடந்த சென்னைப் புத்தகக் காட்சியில் என் இலக்கிய நண்பர் அஜயன் பாலா üஅந்த நாட்களில் மழை அதிகம்ý என்ற இலக்கியக் கட்டுரைகள் புத்தகத்தை வெளியிடும் கூட்டத்தில் கொடுத்து என்னைக் கௌரவப்படுத்தினார். புத்தகக் காட்சி முடிந்தவுடன் அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டுமென்று நினைத்தேன். புத்தகம் கொடுத்தவரும் எதாவது […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 267 ஆம் இதழ், 27 மார்ச் 2022 (நான்காம் ஞாயிறு) அன்று வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற வலைத்தள முகவரியில் படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: இந்தியத் தொன்மத்தின் மனவெளியில் – நம்பி (கலாஸ்ஸோவை வாசித்தல் தொடர் – பாகம் 2) நடவுகால உரையாடல் – சக்குபாய் – (SPARROW ஆவண அமைப்பின் இந்தியப் பெண் சாதனையாளர்கள் பற்றிய கையேடுகள் தொடர்) கலைச்செல்வி – நேர்காணல் – கமலதேவி ரா. கிரிதரனின் “ராக மாலிகை” – வெற்றிராஜா (புத்தக விமர்சனம்) உள்வெளி – பானுமதி ந. பெருங்காயம் – லோகமாதேவி புவி சூடேற்றம் பாகம்-14 – ரவி நடராஜன் (விஞ்ஞான […]
ஆசிரியர்: சிந்து மேற்கு மலைத் தொடரில் ஒரு மேட்டுக் குடில் வேண்டும் நான் பார்க்கு மிடத்திலெல்லாம் நல்ல பச்சைநிறம் வேண்டும் நான்கு திசையினிலும் வளர்ந் தோங்கும் வனம் வேண்டும் அதில் ஆடி மகிழ்ந்திடவே என் அன்புச்செல்வம் வேண்டும் பாந்தளும் பேயுமிலா நல்ல பூந்தளிர்கள் வேண்டும் அதில் துள்ளிக் குதித்திடவே என் தங்கக்குட்டி வேண்டும் ஊற்று நதியினிலே தினம் காற்றுவாங்க வேண்டும் அங்கு ஊறும் அழகையெல்லாம் அள்ளிப் பாட்டு கட்ட […]
முருகபூபதியின் புதிய நூல் யாதுமாகி 28 பெண் ஆளுமைகள் பற்றிய பதிவு இம்மாதம் 26 ஆம் திகதி சனிக்கிழமை மெய்நிகரில் வெளியீடு அவுஸ்திரேலியாவில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வதியும் எழுத்தாளர் முருகபூபதி எழுதியிருக்கும் 28 பெண் ஆளுமைகள் பற்றிய பதிவுகளைக்கொண்ட புதிய நூல் யாதுமாகி. இம்மாதம் 26 ஆம் திகதி சனிக்கிழமை மெய்நிகரில் வெளியாகிறது. கலை, இலக்கியம், கல்வி, ஊடகம், நடனம், தன்னார்வத் தொண்டு, சீர்மியப்பணி, திரைப்படம், விடுதலைப் போராட்டம், […]
பின்னூட்டங்கள்