author

மண்ணில் வேரோடிய மனசோடு கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

This entry is part 17 of 28 in the series 10 மார்ச் 2013

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா பல சந்தர்ப்பங்களில் வானொலி, தொலைக்காட்சிகளின் கவிதை நிகழ்ச்சிகளை அலங்கரித்து வருகின்றவரும், ஆசிரியராக கடமையாற்றி வருகின்றவருமான கலாபூஷணம் யாழ் அஸீம் அவர்களின் மண்ணில் வேரோடிய மனசோடு என்ற தொகுதி 125 பக்கங்களி;ல் ஸூபைதா பதிப்பகத்தினால் வெளிவந்திருக்கிறது. தேசிய நூலபிவிருத்தி ஆவணவாக்கல் சபையின் அனுசரணையுடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூலில் 23 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. கவிஞரின் கன்னித்தொகுதியான இதில் காத்திரமான கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. `கவிஞர்கள் சிலர் பிறக்கிறார்கள். சிலர் உருவாகிறார்கள். யாழ் அஸீம் அவர்களால் மரபுக் கவிதையும் எழுத […]

வம்சி புக்ஸ் ஐந்து புத்தகங்கள் வெளியிட்டு விழா அழைப்பிதழ்

This entry is part 11 of 28 in the series 10 மார்ச் 2013

நாள்: 09-03-2013 இடம்: The Book Point, ஸ்பென்சர் பிளாசா எதிரில், அண்ணாசாலை… நேரம்: மாலை 5 மணிக்கு.. நண்பர்களே இந்த நிகழ்வை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.. விழா சிறப்பாக நடக்க அனைவரும் நிகழ்விற்கு அவசியம் வர வேண்டும். இப்போதே 9 ஆம் தேதியை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

காத்திருங்கள்

This entry is part 7 of 28 in the series 10 மார்ச் 2013

மு.கோபி சரபோஜி. அச்சமின்றி அமைதியாய் பதட்டமின்றி பொறுமையாய் இருங்கள். நீங்கள் தேடுவது போல எதுவும் காணாமல் போகவுமில்லை களவாடிப் போகப் படவுமில்லை. தேடுகின்ற……. போதிமரம் அகிம்சை அன்பு வீரம் விவேகம் – இவையெல்லாம் களமிறங்கி இருக்கின்றன கணக்கெடுப்பு பணிக்காக…….. நூற்றி இருபது கோடியில் எத்தனை கோடி புத்தனும் காந்தியும் தெராசாவும் விவேகானந்தரும் – கிடைப்பார்கள் என தெரிந்து கொள்ளும் ஆவலில்……… இந்த தலைமுறையில் இல்லாவிட்டாலும் அடுத்த தலைமுறையிலாவது கணக்கெடுப்பை முடித்துவிட்டு அதனதன் இடத்திற்கு அவைகள் திரும்பிவிடும். அதுவரையிலும்….. […]

ஜே.பிரோஸ்கான் கவிதைகள்

This entry is part 6 of 28 in the series 10 மார்ச் 2013

ஜே.பிரோஸ்கான் ஓணானின் உயிர் தப்புதல்..! பச்சை ஓணானின் பதுங்குதலைக் கண்டு நானும் பதுங்கலாகி ஈர்க்கில் சுருக்கை நீட்டி ஓணானின் பயந்தலாகுதலைக் கண்டு கண்விரித்து முன்னேறுகிறேன் பிடிவாதமாய் தூரமாகும் ஓணானின் தலையாட்டுதல் எனக்கான அதிகார கோபத்தினை பீறிடச் செய்தலாகி இன்னுமின்னும் அது மரத்தின் நுனி நோக்கி நகரும் போது தோற்றே போகிறது எனதான முயற்சித்தல் ஓணானின் ஆயுளின் நீள்ச்சியோடு. அடக்க முடியா ஆத்திரம்.. 5 வீட்டுப் பூனைகளின் சிலதுமான நடத்தல் பல நேரங்களில் வெருக்கத்தக்கதாகி அடிக்கவும் நேர்ந்து விடுகிறது. […]

40ஆவதுஇலக்கியசந்திப்பு-லண்டன் 06-07 (சனி,ஞாயிறு) ஏப்ரல்-2013

This entry is part 4 of 28 in the series 10 மார்ச் 2013

40ஆவதுஇலக்கியசந்திப்பு-லண்டன் 06-07 (சனி,ஞாயிறு) ஏப்ரல்-2013   மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழ் இணைப்பினை பார்க்கவும். உங்கள் நண்பர்களுக்கும்  இந்த நிகழ்வினை தெரியப்படுத்தவும்.  நன்றி 40ஆவதுஇலக்கியசந்திப்பு ஏற்பாட்டாளர்கள் லண்டன்    

வீடு பற்றிய சில குறிப்புகள்-

This entry is part 2 of 28 in the series 10 மார்ச் 2013

ஸமான் வீடு பற்றிய சில குறிப்புகள்- 1 வெறிச்சோடிய வீடு அழுக்கு செரித்த முன் சுவர் அருகே கருகி கிடக்கிறது சில மல்லிகைப் பூக்கள் 2 வெயிலும் மழையும் ஆடை மாற்றிக் கொண்டன 3 உள் அறையில் தந்தி களன்ற கிற்றாறோடு அழுது கொண்டிருந்தான் குரல்வளை நெரிக்கப்பட்ட பீத்தோபன் 4 பூட்டி தாழிடப்பட்ட வரவேற்பு அறைச் சுவரில் கொழுவப்பட்ட ஓவியத்தில் பல்லி எச்சம் காய்ந்திருந்தது வண்ணத்து பூச்சிகள் கதறி அழுதன இயற்கை தண்டிக்கப்பட்டிருந்தது 5 முற்றத்து கொய்யா […]

தன் வரலாற்றுப் பதிவுகளில் அடித்தள மக்கள்

This entry is part 30 of 33 in the series 3 மார்ச் 2013

து.ரேணுகாதேவி முனைவர் பட்ட ஆய்வாளர் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் ஒருவர் தம் வாழ்க்கை வரலாற்றைத் தாமே வரையின், அது தன்வரலாறு எனப்படும். ‘ஒரு தனிமனிதனின் வரலாறு அவனால் எழுதப்படும் அளவு முழுமையோடும் உண்மையோடும் வேறு எவராலும் எழுதப்படமுடியாது’ என்கிறார் டாக்டர்.ஜான்சன். (ப.66) தன்வரலாறுகள் வழிப் பதிவாகியுள்ள தீண்டாமை, அடிமை நிலை, மூடநம்பிக்கைகள், சாதிபேதம், மனித இன்னல்கள் ஆகியவற்றை இவ்வாய்வானது எடுத்தியம்புகிறது. மஹர்களின் அடிமைநிலை மஹாராஷ்டிராவில் உள்ள சடாரா என்னும் சிறுநகரத்திலுள்ள பால்தானைச் […]

மிரட்டல்

This entry is part 26 of 33 in the series 3 மார்ச் 2013

டாக்டர் ஜி.ஜான்சன்   அப்போது நான் தமிழகத்தில் சிவகங்கை மாவட்ட திருப்பத்தூரில் பணியாற்றினேன். அது சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை.. அது 300 படுக்கை வசதி கொண்ட பொது மருத்துவமனை. நான்தான் அதன் தலைமை மருத்துவ அதிகாரி. நிர்வாகப் பொறுப்புடன் மருத்துவப் பிரிவையும் நான்தான் பார்த்து வந்தேன். அன்று மாலை என்னைக் காண வந்த நடுத்தர வயதுடைய ஒருவர், கால் வலி என்று கூறி படுக்கையில் தங்க வேண்டும் என்றார். நான் அவரைப் பரிசோதனை செய்ததில் தங்கிப் பார்க்கும் […]

வால்ட் விட்மன் வசனக் கவிதை -13 என்னைப் பற்றிய பாடல் – 6 (Song of Myself)

This entry is part 24 of 33 in the series 3 மார்ச் 2013

வால்ட் விட்மன் வசனக் கவிதை -13 என்னைப் பற்றிய பாடல் – 6 (Song of Myself) (1819-1892) (புல்லின் இலைகள் -1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++++++++++++     இவை யாவும் மெய்யாய் எல்லா மனிதரின் சிந்தனைதான் ! எல்லா காலங் களிலும், எல்லா நாடுகளிலும் உதித்தவை தான் ! எனது மூலப் படைப்புகள் அல்ல உன்னைச் சேரா தாயினும் அவை என்னைச் சேரா தாயினும் ஒன்றும் பயனில்லை ! புதிரில்லை யாயினும், அவை புதிரை விடுவிக்கா திருப்பினும் மதிப்புறுவ தில்லை ! […]

நிழல்

This entry is part 23 of 33 in the series 3 மார்ச் 2013

    எஸ்.எம்.ஏ.ராம்     1. என் நிழலில் என் சாயல் இல்லை, யாருடைய நிழலிலும் அவர்களின் சாயல் இல்லை. என் நிழலில் என் நிறம் இல்லை, யாருடைய நிழலிலும் அவர்களின் நிறம் இல்லை. எல்லாம் சாயல் அற்று, அல்லது ஒரே சாயலாய்- எல்லாம் நிறம் அற்று, அல்லது ஒரே நிறமாய்- எதையோ உணர்த்தும் நிழல்…   2. நானும் அவளும் விலகி நிற்கிற நிலையிலும் எங்கள் நிழல்கள் கூடிச் சல்லாபிக்கின்றன. நிழல்களுக்குக் கற்பில்லை.   […]