Articles Posted by the Author:

 • முனைவர் ரெ.கார்த்திகேசுவின் “விமர்சன முகம் 2”, “நீர்மேல் எழுத்து” இரு நூல்கள் வெளியீட்டு விழா

  நாடறிந்த தமிழ் எழுத்தாளரும் புத்திலக்கிய விமர்சகருமான முனைவர் ரெ.கார்த்திகேசுவின் இரு புதிய நூல்கள் தலைநகரிலும் கெடா மாநிலத்தில் லுனாசிலும் வெளியீடு காணுகின்றன. தமிழ்ப் புத்திலக்கியத்தை உலக அளவில் கவனித்து விமர்சித்து வரும் அவருடைய சமுதாய, இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் அடங்கிய நூல் “விமர்சன முகம் 2”.  அவருடைய அண்மைய சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நூல் “நீர் மேல் எழுத்து”. இதில் அவர் மலேசிய இதழ்களிலும், இணைய இதழ்களிலும் எழுதிய புதிய கதைகளும் ஒரு குறுநாவலும் உள்ளன.   […]


 • கீரனூர் ஜாகிர்ராஜா தொகுத்த இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா

  ஆழி பப்ளிஷர்ஸ் நூல் வெளியீட்டு விழா கீரனூர் ஜாகிர்ராஜா தொகுத்த இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா இடம் – டிஸ்கவரி புக் பேலஸ் எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம், முனுசாமி சாலை, மேற்கு  கே.கே நகர், சென்னை – 600078.  தமிழ்நாடு. இந்தியா (பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்) நேரம் மாலை 5.00 மணி, ஆகஸ்ட் 19, 2012, ஞாயிற்றுக்கிழமை அழியாத கோலங்கள் தமிழின் தலைசிறந்த காதல் சிறுகதைகள் தொகுப்பாளர் – கீரனூர் ஜாகிர்ராஜா வெளியிடுபவர் […]


 • அன்புள்ள கவிப்பேரரசு. வைரமுத்துவிற்கு,

  அன்புள்ள கவிப்பேரரசு. வைரமுத்துவிற்கு,

  வீரபாண்டி   நீங்கள் மூன்றாம் உலகப் போர் என்று சமூக அக்கறையுடன் எழுதுவதால் இந்தக் கடிதம். உலக இலக்கியம் உங்களுக்குத் தெரியாததல்ல… மக்களை சுருட்டிப் போடும் திரைச்சுருளை தீக்குச்சிக்கு தின்னக் கொடுப்போம் என்ற நீங்கள், இன்று தின்னும் ஒவ்வொரு பண்டத்திலும் அந்த திரைச்சுருள் அள்ளித் தந்தது இருக்கிறது. புலவன் என்றால் பஞ்சபரதேசி, கடனாளி, கைகட்டி யாசகம் பெறுபவன் என்ற குறியீட்டை மாற்றினீர்கள், அதற்கு நிச்சயம் யாவரும் வந்தனம் சொல்ல வேண்டும்.   ஆனால், புலவனுக்கும், கவிஞனுக்கும் வேறுபாடு […]


 • முன் வினையின் பின் வினை

  முன் வினையின் பின் வினை

  எஸ்.கணேசன்     பதின்வயது மோகம் அழுக்கைத் தாங்கின வெள்ளித்திரையைத் தாண்டி உன்னையும் தாக்கக் குடும்பமே போர்க்களமாய்ப் போயிற்றே!   அளவற்ற செல்லத்தின் சுதந்திரம் புரியாது காதலின் அர்த்தத்தை உன் வழியில் தேடி நீ அலைந்த இளம்வயது தாய்தந்தைக்குச் சடுதியில் மூப்பைச் சாத்தியதே!   இளங்கலையில் தேறியிருக்க வேண்டியபோது நீ இளந்தாய் ஆகிவிட்டிருந்தாயே!   எதை இழந்து எதைப் பெற்றாய் என நீ அறியும் முன் வாழ்க்கை உன்மீது இருட்டையும் கசப்பையும் அப்பிவிட்டுச் சென்றுவிட்டதே!   அதையும் […]


 • தமிழ் ஸ்டூடியோவின் ‘ லெனின் விருது 2012 ‘ அம்சன் குமார்

  தமிழ் ஸ்டூடியோவின் ‘ லெனின் விருது 2012 ‘ சிறகு இரவிச்சந்திரன். நான்கு ஆண்டுகளாக, குறும்படங்களுக்கு ஒரு தளம் அமைத்துக் கொடுக்கும் முயற்சியில், செயல்பட்டு வருகிறது அருணின் ‘தமிழ் ஸ்டூடியோ “ ஆகஸ்டு 15 அன்று, வருடா வருடம் சிறந்த குறும்பட இயக்குனர் ஒருவருக்கு விருதும், பணமும், பாராட்டுப்பத்திரமும் கொடுத்துக் கவுரவிப்பதைத் தன் கடமையாக எண்ணி செயல்படும் அமைப்பு இது. இதோடு ‘படிமை ‘ என்றொரு திரைப்படப் பயிற்சிக் கூடமும் நடத்துகிறது. 2012 க்கான விருதைப் பெற்றவர் […]


 • பாலஸ்தீனக் கலாசாரமும், இஸ்ரேல் கலாசாரமும் : வளமைக்குக் கலாசாரம் காரணமா?

    ரிச்சர்ட் லாண்டெஸ் கலாச்சாரத்துக்கும், தேசங்களின் வளமைக்குமான தொடர்பு பற்றி  மிட் ராம்னி சரியாகத்தான் சொன்னார். இஸ்ரேலிய பொருளாதார வளர்ச்சிக்கான கலாச்சார பரிணாமங்களை பற்றி மிட் ராம்னி ஜெருசலத்தில் பேசியது ஒரு புயலை கிளப்பியுள்ளது. பாலஸ்தீன கலாச்சாரத்தை விமர்சித்ததாக சரியாக புரிந்துகொண்ட பாலஸ்தீன அதிகாரப்பூர்வ அறிவிப்பாளர் சாய்ப் எரிகட் (Palestinian spokesman Saeb Erekat), மிட் ராம்னியை ஒரு இனவெறுப்பாளர் (racist) எனவும், பாலஸ்தீனத்து பொருளாதார பிரச்னைகளுக்கு இஸ்ரேலின் ஆக்கிரமிப்பே காரணம் என்றும் கூறினார். எரிகட் அவர்களது […]


 • அமெரிக்கப் பார்வை – மீண்டும் ஒரு தேர்தல்

  டெக்ஸன்  ரோனால்ட் ரீகன் காலத்திலிருந்து பார்த்து வரும் விளையாட்டு  இது. அமெரிக்கா வந்த புதிதில், தேர்தல் பிரச்சாரங்களும், போட்டியிடுபவர்களிடையே நடைபெறும் வாக்குவாதங்களும், வார்த்தைப் போர்களும், தொலைக்காட்சியில் நிருபர்களின் புத்திசாலித்தனமான நேர்காணல்களும் பிரமிப்பை ஏற்படுத்தும். இன்று இவை எப்போது முடியுமென்று எதிர்பார்க்க வைக்கும் சடங்குகளாகி விட்டன. ரீகனுக்குப் பிறகு அப்பா புஷ், க்ளிண்டன், மகன் புஷ், ஒபாமா என்று பல தலைவர்களைப் பார்த்தாகி விட்டது. நான்கு வருடம் முன்பாவது சற்று உற்சாகம் இருந்தது. இனி எந்த புஷ்ஷையும் பார்க்க […]


 • எம்.சி. சபருள்ளா “வியர்த்தொழுகும் மழைப்பொழுது” கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

  வெலிகம ரிம்ஸா முஹம்மத் (poetrimza@gmail.com) கிண்ணியா மண்ணில் தங்களது நூல்களை வெளியிட்ட எழுத்தாளர்களான ஏ.ஏ.எம். அலி, கிண்ணியா நஸ்புல்லாஹ், ஜே. பிரோஸ்கான், ஏ.கே. முஜாராத், ஏ.ஏ. அமீர் அலி, பாயிஸா அலி, ஜெனிரா கைருள் அமான் போன்றோர்கள் இலக்கியப் படைப்புக்களை வெளியிட்டு தங்களை அடையாளப்படுத்தியது போல் வியர்த்தொழுகும் மழைப்பொழுது என்ற தனது கன்னிக் கவிதைத் தொகுதியினூடாக கவிஞர் எம்.சி. சபருள்ளாவும் இந்த வரிசையில் இணைந்துகொள்கிறார். முஹம்மது காஸிம் வெளியீட்டகத்தினூடாக, 110 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 46 கவிதைகள் […]


 • அவர் நாண நன்னயம்

  அவர் நாண நன்னயம்

  முகில் தினகரன் நீண்ட யோசிப்பிற்குப் பின் கிருஷ்ணன் அந்த யோசனையைக் கூற, சற்றும் தயக்கமின்றி அதை முழு மனதோடு ஆமோதித்தாள் பார்வதி. ‘நானே சொல்லலாம்ன்னு இருந்தேங்க….நீங்களே  சொல்லிட்டீங்க…ரொம்ப சந்தோஷம்…தாராளமாச் செய்யலாம்” என்றாள். ‘ஆமாம் பார்வதி…..விதி அரக்கன் தன்னோட அகோர பசிக்கு நம்ம மகனோட உயிரை எடுத்துக்கிட்டான்…நாம அதையே நினைச்சு…நினைச்சு…உருகி…மருகிக் கெடக்கறத விட…நம்மோட அன்பையும் பாசத்தையும் கொட்டறதுக்காக…நம்மோட வயோதிக காலத்துல நமக்குன்னு ஒரு துணை தேவைப்படும்கறதுக்காக…முக்கியமா நாம இப்ப அனுபவிச்சிட்டிருக்கிற இந்த புத்திர சோகத்திலிருந்து விடுபட…ஒரு அனாதைக் குழந்தையை […]


 • சதாசிவம் மதன் “உயிரோவியம்” கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

  வெலிகம ரிம்ஸா முஹம்மத் (poetrimza@gmail.com) கிழக்கு மாகாணம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இளம் கவிஞர் சதாசிவம் மதன் தனது கன்னிப் படைப்பாக உயிரோவியம் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். கவிஞன் என்ற காலாண்டுச் சஞ்சிகையின் ஆசிரியரே இந்த நூலாசிரியராவார். அழகான அட்டைப் படத்துடன் 61 பக்கங்களில் அன்னை வெளியீட்டகத்தின் மூலம் வெளியீடு செய்யப்பட்டுள்ள இந்தக் கவிதைத் தொகுதியானது பொதுவானவை, இயற்கை, பாவம், காதல், நட்பு, கற்பனை ஆகிய ஆறு தலைப்புக்களில் 47 கவிதைகளை உள்ளடக்கியுள்ளது. யுத்தத்தில் உறவிழந்த உறவுகளுக்கே […]