author

நிம்மதி தேடி

This entry is part 25 of 31 in the series 4 நவம்பர் 2012

மு.கோபி சரபோஜி செருப்பை எங்கு மறைவாய் வைப்பது? அர்ச்சனையை யார் பெயருக்கு செய்வது? உடைக்க வாங்கிய தேங்காய் எப்படி இருக்கப்போகிறது? தட்டோடு நிற்பவர்களுக்கு தர எவ்வளவு சில்லரை இருக்கிறது? இப்படியான குழப்பங்களோடு நிம்மதி தேடி சந்நிதி நுழைந்ததும் அர்ச்சகரின் குரல் ஒழித்தது “நடை சாத்தி நாழியாயிற்று” – என்று! மு.கோபி சரபோஜி சிங்கப்பூர்.

உல(தி)ராத காயங்கள்

This entry is part 24 of 31 in the series 4 நவம்பர் 2012

நேற்கொழு தாசன் வெற்றிடமொன்றில் நிரம்பிக்கொண்டிருந்த நினைவுகளின் வெதும்பல்கள் விளிம்பு நிலையொன்றில் முனகிக்கிடக்கும் பகலின் நிர்வாணத்தின் முன் கூனிக்குறுகிக்கிடக்கும் அவை இரவுப்போர்வைகளில் கூர்ப்படைந்து அதீதமான பிரவாகத்துடன் ஓரங்களை தின்னத்தொடங்கும். இரைமுகரும் எலியொன்றின் அச்சம் கலந்த கரியகண்களை, இரையாகும் தவளையொன்றின் ஈன அவல ஒலிகளை உள்ளெழுப்பி உணர்வுகளை சிதைக்கும். தகனமொன்றின் நாற்றங்களை பின்னான எச்சங்களை அருகிருக்கும் இலைகளில் படிந்திருக்கும் புகைகுறியீடுகளை விலகாதிருக்கும் மெல்லிய வெம்மையினை பரப்பி சூனிய தனிமையினை பிறப்பிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக உருவேற்றும் அந்த துர்தேவதைகளின் கொலுசொலிகள் நாளைமீதான […]

சந்திராஷ்டமம்!

This entry is part 4 of 31 in the series 4 நவம்பர் 2012

ரசிப்பு எஸ். பழனிச்சாமி – இன்று அவருக்கு சந்திராஷ்டமம். காலையில் டிவியில் இன்றைய ராசி பலன் நிகழ்ச்சியில் சொன்னதைக் கேட்டார். பூபாலனுக்கு எப்போதிருந்து ஜோதிடத்தின் மீது நம்பிக்கை வந்தது என்பது அவருக்கு ஞாபகமில்லை. ஆனால் அதன்படிதான் அவருடைய வாழ்க்கையில் எல்லாமே நடக்கிறது என்பதில் அவருக்கு ஆழமான நம்பிக்கை வந்து.விட்டது அதிலும் சந்திராஷ்டமம் என்றால் அவ்வளவுதான். அன்று வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். மாதத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு சந்திராஷ்டமம் வந்து விடும். என்னதான் […]

ஸ்வாத் பள்ளத்தாக்குக்கு போகும் சாலை: வெறுப்பு அழித்ததை மனிதம் மீட்கிறது.

This entry is part 26 of 34 in the series 28அக்டோபர் 2012

ஃபெர்யல் அலி கவ்ஹர் முன்பொரு காலத்தில், அச்சம் நம் கண் இமைகளில் புண்களாக அழுத்தாதிருந்தபோது, இந்த சாலையில் சாக்கலேட் ஹீரோக்கள், சர்க்கரை பாகு ஹீரோயின்களிடம் காதலுக்காக இறைஞ்சி கொண்டிருந்தார்கள். ஸ்வாத்துக்கு போகும் சாலை மருங்கில் இருக்கும் கம்பீரமான பைன் மரங்களின் நடுவேயும், போப்லார் மரங்களின் நடங்கேயும் ஓடிப்பிடித்து, தங்களது அழியாத காதல்களை பாடல்களாக கூவிக்கொண்டிருந்தார்கள். காலப்போக்கில், சமவெளியின் கடுமையான வெயிலிடமிருந்து தப்ப முயன்ற ஏராளமான பயணிகளை இந்த சாலை தாங்கியிருந்திருக்கிறது. பள்ளத்தாக்கை ஆக்கிரமித்து வெற்றிகொள்ள விரும்பியவர்களது பயணத்தையும் […]

சி.சு. செல்லப்பாவின் நூற்றாண்டு நிறைவினைக் கொண்டாடும் வகையில் தளத்தின் முதல் இதழ் சி.சு. செல்லப்பாவுக்கு அஞ்சலி

This entry is part 13 of 34 in the series 28அக்டோபர் 2012

எழுத்தாளர்கள் பாரவி(பிரக்ஞை), சாமிநாதன்(சாம்),கவிஞர் தேவகோட்டை வா.மூர்த்தி ஆகியோரின் தீவிர முயற்சியின் பயனாய்த் ‘தளம்’ என்னும் பெயரில் ஒரு கலை இலக்கியக் காலாண்டிதழ் தொடங்கப் பட்டிருக்கிறது. இதன் முதல் இதழ் அக்டோபர் மாத இறுதியில் வெளிவரும். தளம் முதல் இதழில் அம்பை, எஸ்.பொ., சுப்ரபாரதி மணியன், பெருந்தேவி,சித்தன்(யுகமாயினி),முருகபூபதி,ந.முத்துசாமி,சார்வாகன்,வே.சபாநாயகம், ஆறுமுகம் ரவிச்சந்திரன்,வீ.விஜயராகவன். தீபப்பிரகாசன், ஜி.தெய்வசிகாமணி, சிவகுமார்(இந்து நாளிதழ் இசை விமரிசகர்),எஸ்.எம்.ஏ.ராம் ஆகியோரின் படைப்புகள் இடம்பெறுகின்றன. இவை தவிர ஓவியர்கள் விஸ்வம்,ஜெயகுமார் ஆகியோரின் நவீன ஓவியங்களும் கோட்டோவியங்களும் படைப்புகளுக்கு அழகும் அர்த்தமும் சேர்க்கின்றன. சி.சு. செல்லப்பாவின் நூற்றாண்டு நிறைவினைக் கொண்டாடும் […]

மன்னை சரஸ்வதி தாயுமானவன் எழுதிய ‘நெல் மணிகள்’கவிதைத்தொகுப்பு

This entry is part 34 of 34 in the series 28அக்டோபர் 2012

மணி.கணேசன் தமிழ்க்கவிதையின் நோக்கும் போக்கும் தற்காலத்தில் நிரம்ப மாறுதல் பெற்றுவருகின்றன.பின்நவீனத்துவக் காலக்கட்ட எழுச்சிக்குப்பின் அதன் உருவம் மற்றும் உள்ளடக்கங்களில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.மேலை இலக்கியக் கோட்பாடுகளின் தாக்கம்,புத்தாக்க முயற்சி,உளவியல் சிந்தனை காரணமாக நவீனத் தமிழ்க் கவிதைகளின் பாடுபொருள் தளங்களும்,படிமம்,குறியீடு,இருண்மை முதலான உத்திமுறைகளும் விரிவடைந்துள்ளன.இவை வரவேற்கத்தக்கன என்றாலும் உப்புச்சப்பில்லாத தன்னுணர்ச்சிகளும் எளிதில் விளங்கிக்கொள்ள முடியாத தன்மைகளும் கவிதைகளைச் சாதாரண மக்களிடமிருந்;து விலக்கி வைத்துள்ளன.ஏனெனில்,புரிதலும் அதன் வழிச் செயல்படுதலும் இலக்கியப் படைப்பின் உயரிய குறிக்கோள் மற்றும் வெற்றி எனலாம். அந்த […]

மனிதாபிமானம்!!

This entry is part 30 of 34 in the series 28அக்டோபர் 2012

ரசிப்பு எஸ். பழனிச்சாமி சங்கருக்கு அந்த போன் வந்த போது காலை ஒன்பது மணி இருக்கும். அவருடைய சொந்த ஊரிலிருந்து பால்ய சினேகிதrர் ராமசுப்புதான் பேசினார். அவர் அடிக்கடி போன் பண்ணுபவரல்ல. தென்காசிக்குப் பக்கத்தில் இருக்கும் மங்களபுரம் கிராமத்தில் பத்தாவது வரை சங்கருடன் ஒன்றாகப் படித்தவர். காலேஜ் படிப்புக்காக சங்கர் கோயம்புத்தூர் வந்து, படிப்பு முடிந்ததும் இங்கேயே வேலை கிடைத்து வடவள்ளியில் வீடு வாங்கி குடும்பத்தோடு செட்டிலாகி விட்டார். எப்போதாவது ஊருக்குப் போகும்போது ராமசுப்புவை பார்த்து, பழைய […]

கற்பனைக் கால் வலி

This entry is part 29 of 34 in the series 28அக்டோபர் 2012

டாக்டர். ஜி. ஜான்சன் அன்று நான் உலு திராம் லண்டன் கிளினிக்கில் பகுதி நேர வேலைக்கு சென்றிருந்தேன். அதன் உரிமையாளர்  டாக்டர் நித்தியானந்தா  தலைநகரில் நடைபெறும் மருத்துவ மாநாட்டுக்கு  சென்றிருந்தார். எனக்கு அந்த கிளினிக் பிடித்திருந்தது. உலு திராம் பேருந்து நிலையத்தின் எதிரே அமைந்த கடைகளின் வரிசையில் அது அமைத்திருந்தது. அந்த சிறு டவுனின்   மையப்பகுதியும் அதுவே எனலாம். அங்கு நிறைய தொழிற்சாலைகள் இருந்ததால் வெளிநாட்டு ஊழியர்கள் பணிபுரிந்தனர். அவர்களின் வங்காள தேசிகள்தான் அதிகமானோர். டாக்டர் […]

வைதேஹி காத்திருந்தாள்

This entry is part 15 of 34 in the series 28அக்டோபர் 2012

கலைச்செல்வி சன்னல் வழியே சுள்ளென்று எட்டிப் பார்த்தது சூரியன்.  சன்னல் தன்னை உள்வாங்கியதால் அதற்கு கட்டுப்பட்ட சூரியன், தனது ஒளியில் சன்னல் வடிவம் காட்டி அதற்கு நன்றி கடன் செய்தது. அதன் வரிவடிவ ஒளியை இரசித்தவாறு படுத்திருந்தாள் வைதேஹி. “வைதேஹி… சன்னமாக காற்றைக் கிழித்த சத்தம். இன்னமா தூங்கறே?’ என்ற கணவர் குரலுக்கு, “ம்ம்ம் … எழுந்திருச்சாச்சு..” பதிலளித்தாள். பிரிந்திருந்த கூந்தலை அள்ளி முடிந்தாள். ஒற்றை நாடி சரீரம். மிக லேசான எழும்பிய வயிறு. நெற்றியில் ஒட்டியிருந்த […]

‘பாரதியைப் பயில…’

This entry is part 10 of 34 in the series 28அக்டோபர் 2012

அன்பார்ந்த பாரதி அன்பர்களுக்கு, வணக்கம். நமது பாரதி இணையதளத்தில் ‘பாரதியைப் பயில…’ http://www.mahakavibharathiyar.info/puthiyavai.htm வழக்கம்போல நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இத்தகவலை பகிர்ந்துகொள்ளவும். நன்றி. அன்புடன், வீ.சு.இராமலிங்கம் தஞ்சாவூர்