Articles Posted by the Author:

 • அமீரகத் தமிழ் மன்றம் சார்பில் இலவச கணினி பயிலரங்கம்

  அமீரகத் தமிழ் மன்றம் சார்பில் இலவச கணினி பயிலரங்கம்

  கணினியில் தமிழை திறம்பட பயன்படுத்துவது தொடர்பான சிறப்பு கணினி பயிலரங்கம் அமீரகத் தமிழ் மன்றம் சார்பில் துபாயில் நடத்தப்படுகிறது. தமிழை கணினியில் சரளமாக எழுதுவதற்கான நுட்பங்கள், மின்னஞ்சல், செல்பேசி, முகநூல் மற்றும் பேச்சரங்கு போன்றவற்றில் தமிழை பயன்படுத்துவது எப்படி, வீட்டு கணினிகளில் தமிழ் மென்பொருட்களை சுலபமாக பொருத்துவது எப்படி என்பது போன்ற பல்வேறு முக்கிய அம்சங்களை இப்பயிலரங்கின் மூலம் தெரிந்துகொள்ளலாம். மேலும், பயிலரங்கில் தமிழ் மென்பொருள்களும், தமிழ் எழுத்துருகளும் இலவசமாக வழங்கப்படும். இப்பயிலரங்கில் பங்கேற்க கட்டணம் எதுவும் […]


 • பாசம் பொல்லாதது

  பாசம் பொல்லாதது

  – கே.எஸ்.சுதாகர் சிவசம்பு தனது தங்கையின் திவசதினத்திற்குப் போக வேண்டும் என்ற நினைப்பில் அயர்ந்து தூங்கி விட்டார். சிவசம்புவிற்கு அறுபத்தைந்து வயதாகிறது. தனது மகன் மருமகளுடன் கனடாவில் ரொறன்ரோவில் இருக்கின்றார். கடந்த வருஷம் அவரது தங்கை பரமேசு அகால மரணமடைந்துவிட்டாள். உறக்கத்தில், சிவசம்புவிடம் தங்கை கதைத்தாள். “அண்ணா! உங்கை இருந்து என்ன செய்யுறாய்? நீயும் கெதியிலை மேலை வாப்பா. சும்மா ஜாலியா பாக்கு வெத்திலையும் போட்டுக் கொண்டு ஊர்க்கதையள், வயல்வம்புகள் கதைச்சுக் கொண்டு இருக்கலாம்.” “அது சரி. […]


 • கவிஞர் குட்டி ரேவதியின் ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் நூல் வெளியீட்டு விழா

  கவிஞர் குட்டி ரேவதியின் ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் நூல் வெளியீட்டு விழா நாள்: 06-01-2012, வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 5:30 மணிக்கு. இடம்: ஜீவன ஜோதி அரங்கம், கன்னிமாரா நூலகம் எதிரில், எழும்பூர்.   சிறப்பு அழைப்பாளர்கள்: அழகிய பெரியவன் பாலை நிலவன் யாழன் ஆதி தமயந்தி அஜயன் பாலா நர்மதா ப்ரவீண் & குட்டி ரேவதி எந்த அதிகாரத்தோடும் சமரசம் கொள்ளாமல் இயங்கும் பெண் பாலியல் மொழியைக் கொண்டாடுகிறது, தமிழ் ஸ்டூடியோ!   இந்த இயக்கத்துடன் வாசகர்களே […]


 • Learn Hindu Vedic Astrology

  Learn Hindu Vedic Astrology

  Learn Hindu Vedic Astrology Level : Beginner Duration : Jan 14th – Apr 14th 13 Classes Time : Saturday 4 pm to 6 pm Location : South Brunswick By : Jyothidarathna S. Chandrasekaran  (author of  Neegalum Jothidar Aagalam) $250 /- Medium : Tamil / English Contact : (732) 444 2237 / chandru_soma@yahoo.com http://www.tamiloviam.com/site/?p=2161


 • அழகின் சிரிப்பு

  அழகின் சிரிப்பு

   கே.எஸ்.சுதாகர் ஷோபனா நிலைக்கண்ணாடி முன் நிற்கின்றாள். தன் ஆடைகளை சரி செய்தவாறே அழகு பார்க்கின்றாள். பிறை நிலவிற்குள் செந்நிறப்பொட்டு. முகமெங்கும் மெல்லிதாக அரும்பி நின்று மினுப்புக் காட்டும் வியர்வைத் துளிகள். லிப்ஸ் ஸ்டிக்கில் கூரிய செவ்வாய். நீலநிற சுடிதாரில் அழகாய்த்தான் தெரிந்தாள். சரி! பார்த்தது போதும் என்று தனக்குள் எண்ணியவாறே பின்னால் திரும்புகின்றாள். “எப்படிடா செல்லம்! நான் வடிவா இருக்கிறேனா?” பதில் இல்லை. ஆடைகளைக் களைந்துவிட்டு அடுத்த உடுப்பை மாட்டுகின்றாள். எல்லாம் புத்தம் புதிதான பளிச்சென்ற விலையுயர்ந்த […]


 • மண் சுவர்

  மண் சுவர்

  அருண் காந்தி   ஆத்தா…ஆத்தோவ்…ஓவ்…என்னடீ…? எலி என்னத்தையோ கரண்டுது பாரு… இந்த எலிப் பண்ணையள என்னவன்றதுனே தெரியலடீ.குருதுதெல்லாம் வேற மொட்டயாக் கெடக்குறது அதுகளுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டமாக் கெடக்கு.   நானும் எவள நாளாத்தான் உனக்கிட்ட எலிப்பொறி வக்கச் சொல்லிக்கிட்டு  இருக்கேன்.கேக்குறியா நீ?   யேட்டி!யேட்டியோவ்…வாணி…   ஓவ்…என்ன த்தா… ? அங்குன யாரு மீனுக்காரனா போறான்?   இல்லத்தா கூனிப்பொடி..நிக்கச் சொல்லவா?   அடிப் போடி!”அவன் நால அள்ளிப் போட்டு 10 ருவா ம்பான்…சின்னப்பய கடத்தெருவுக்கு பொய்த்து வரும்போது வாங்கிட்டு வரச் […]


 • ஏதோ ஒன்று (கடவுள்? நேரம்? வினை)

  ஏதோ ஒன்று (கடவுள்? நேரம்? வினை)

  ப.பார்த்தசாரதி படுபயங்கரமான சாலை விபத்தொன்றில் காலும் கையும் துண்டாய் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பாதி மயங்கிய நிலையில் நசுங்கிய உடல் பிரிந்த கைகளை வேறொருவன் சாக்குப் பையில் போட அனைத்திலும் அவன் பார்வை பட காலன் வரும் ஒலியாய் ஆம்புலென்ஸ் ஒலியெழுப்ப காலத்தாமதமில்லா சிகிச்சையில் உயிர் பிழைத்த ஒருவனின் வாழ்க்கை பாதையை ஏதோ ஒன்று விளிம்பிலிருந்து நெடுந்தூரமாய் நீட்டிக்கிறது தள்ளாடியபடி பயணிக்க.


 • துளிதுளியாய்….

  துளிதுளியாய்….

  கோவை புதியவன் ஏர் பஸ் வெளிச்சத்தில் இருட்டாகிப் போனது ஏழையின் பயணம் அப்பாவின் புகையில் மூச்சுத் திணறியது பீடி சுற்றும் மகளின் வாழ்க்கை கதாநாயகன் கட்-அவுட்டுக்கு ஊற்றிய பாலில் வழிந்தோடியது ரசிகனின் முட்டாள்தனம் வாசலில் பிச்சைக்காரன் வயிறு நிரம்பியது கோவில் உண்டியலுக்கு சாதிக்க மலையேறியபின் சறுக்கி விழுந்தது பயம் மட்டுமே. thendral_venkatguru@yahoo.co.in


 • கவிஞானி ரூமியின் கவிதைகள் – எனக்கொரு குருநாதர் (கவிதை -56)

  கவிஞானி ரூமியின் கவிதைகள் – எனக்கொரு குருநாதர் (கவிதை -56)

  (1207 -1273) ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நேற்றிரவு என் குருநாதர் போதித்த அறிவுரை இது : வறுமைப் பாடத்தைப் பற்றியது எதுவுமே ஒருவருக் கில்லாமை ! எதன் மீதும் இச்சை கொள்ளாமை ! நான் அமணமாய் நிற்கிறேன் ரூபிக் கற்கள் நிரம்பிய சுரங்கத்தின் உள்ளே செந்திறப் பட்டு உடுத்தி ! மினு மினுப்பு மழுங்கிப் போனது கடலைக் காண்கிறேன் இப்போது ! ஓரே கணத்தில் நேரும் நகர்ச்சிகள் […]


 • கிறுக்கல்கள்

  கிறுக்கல்கள்

  பூப்போலத் தூங்குமென்னை பூகம்பமாய் எழுப்பியது… இன்று போய் நாளை வாருங்களென்றே என் உறக்கத்தை உடுத்திக் கொண்டேன். தூக்கத்திலே மொட்டுவிட்ட வரிகள் அதிகாலையில் துகிலுரித்துக் கிடந்தன வெந்நீரில் விழுந்து விட்ட கிருமியாய் சொற்கள் கரைந்தே போயின வெள்ளம்போல் பொங்கி வந்த பாட்டு விடிந்ததும் வடியக் கண்டேன் வெங்காயம் போல் உரித்து வந்த கற்பனை வெந்தயம் போல் கசக்கக் கண்டேன் பசுமையிலே ஓரிரவு பறிபோனாலும் இன்பா நளினமாய் வருவதை இப்போதெல்லாம் நசுக்கிடாமல் பேனாமுட்களில் கோர்த்துக் கொள்கிறேன் பொங்கிவரும் கவிதை பொசுங்கிவிடாமல்…