Articles Posted by the Author:

 • அழுகிணிராசாவும்  புளுகிணிமந்திரியும்

  அழுகிணிராசாவும் புளுகிணிமந்திரியும்

  ¬¬¬ ம.காமுத்துரை அல்லியூர் அந்தப்புரத்திலிருந்தபோதுதான், சூ கூ சுகுமாறன் நம்பியாருக்கு அதிஅற்புதமான யோசனை உதித்தது. அதன்பிறகும், ஆசை நாயகிகள், அசின்பத்மினி, நயனாதிகா, த்ரிசாம்பிகா, குஷாலினி மற்றும் ஸ்ரேயாரஞ்சனி களோடு சல்லாபிக்க முடியவில்லை. அந்தப்புரமண்டபத்தின் ஆலோசனைக் கூடத்திற்குப் பின்னால் அமைக்கப்பட்டிருந்த பஞ்சதீர்த்த வாவியில் நீட்டாமல் நெளிக்காமல் படாரெனக்குளித்து, யோசனை உலருமுன், பட்டாடை வஸ்திரங்களை உடலில் பூட்டிக் கொண்டார். பாதரட்சை அணிந்து, உடைவாளை இடுப்பில் மாட்டியபோது வாசனைத் திரவியங்களோடு சேடிபெண்கள் ஓடிவந்தனர். தாமதமாக வந்த அவர்களுக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அளிக்கும்படி […]


 • அமீரகத் தமிழ் மன்றத்தின் ‘இந்த நாள் இனிய நாள்’

  அமீரகத் தமிழ் மன்றத்தின் ‘இந்த நாள் இனிய நாள்’

  ‘கணினியில் தமிழைப் பரப்பும் முயற்சியில் கடந்த 11 ஆண்டுகளாக துபாயை மையமாக வைத்து செயல்பட்டு வரும் அமீரகத் தமிழ் மன்றம் தனது உறுப்பினர்களின் மனமகிழ்ச்சிக்காக ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற தலைப்பில் ஒரு மாபெரும் ஒன்று கூடலை கடந்த வெள்ளிக்கிழமை துபாய் முஷ்ரிஃப் பூங்காவில் வைத்து மிகச் சிறப்பாக நடத்தியது இந்த ஒன்|று கூடல் நிகழ்ச்சியில் உறுப்பினர்களும் விருந்தினர்களும் குழந்தைகளுமாக 300 பேர் கலந்து கொண்டனர் துபாய் மற்றும் சார்ஜா நகரங்களிலிருந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக […]


 • அம்மாவும் பூனக்குட்டியின் கனவுகளும்

  அம்மாவும் பூனக்குட்டியின் கனவுகளும்

  அம்மா வளர்த்த பூனையும் குட்டி ஈன்றது கருப்பும் வெள்ளையும் கலந்த நிறத்தில் காந்தக் கண்களோடு பளிச்சென்று ஓரே குட்டி பிறிதொரு நாளில்… பாட்டி அனுப்பிய பட்சணங்களோடு என்னருகில் அமர்ந்திருந்தாள் வாஞ்சையோடு தலை கோதியபடி அம்மா விண்ட பட்சணத்தை என் வாய் திணிக்கையில் ’மியாவ்’ என்றதும் தரையில் எறிந்த துண்டத்தை முகர்ந்து மேசையினடியில் உறங்கிய தாய் மடி பற்றி எம்பிப் பார்த்ததும் சாட்சாத் அம்மாவின் பூனைகுட்டியே பூனையின் கனவுகளும் நமக்கானதே! -தம்பி பிர்தோஸ்


 • விளக்கு விருது 2010 – தேவதச்சன் பெறுகிறார்

  விளக்கு விருது 2010 தமிழின் தனித்துவமான கவிஞராக அடையாளப்படுத்திக் கொண்டுள்ள கவிஞர் தேவதச்சன் 2010 -ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது பெறுகிறார். திரு சபாநாயகம், திரு சிபிச்செல்வன், பேராசிரியர் ராமசாமி ஆகியோர் கொண்ட விளக்கு நடுவர் குழுவால் கவிஞர் தேவதச்சன்தெரிவு செய்யப்பட்டுள்ளார். “அத்துவான வேளை”, “கடைசி டைனோசார்”, “யாருமற்ற நிழல்”, “ஹேம்ஸ் என்னும் காற்று”, “இரண்டு சூரியன்” ஆகிய கவிதைத் தொகுதிகள் கவிஞரது கவிதை வெளியின் பரப்பை அடையாளப்படுத்துகின்றன. ‘அவரவர் கைமணல்’ என்ற முதல் தொகுதி இவரது […]


 • மார்கழிப் பணி(பனி)

  மார்கழிப் பணி(பனி)

  அஜய் குமார் கோஷ் அறந்தாங்கி பெண்பூக்கள் மாக்கோலமிட வருகிறது மார்கழி சிரிப்புக்களுடன் தெரு நிறைகிறது வருகிறது மார்கழி மெல்லிய பனியில் மனது நனைகிறது வருகிறது மார்கழி மரபின் ஈரம் காய்ந்து போய்விடவில்லை வருகிறது மார்கழி


 • இரு வேறு நகரங்களின் கதை

  இரு வேறு நகரங்களின் கதை

  கவிதை என்ற சொல் உச்சரிக்கப்பட்ட கணமே அது மொழியின், கற்பனையின், வாழ்வின் முக மலர்ந்த தோற்றத்தைத் தான் நம் மனதில் எழுப்பும். ஈழ வாழ்க்கையில் அது அப்படியாக இருக்க வில்லை. ஈழத் தமிழர் கவிதை முக மலர்ச்சியை, வாழ்வின் குதூகலத்தைப் பேசி தலைமுறைகள் பலவாகிக்கொண்டு வருகின்றது. . இன்றைய ஈழத் தமிழ்க் கவிதை தமிழகக் கவிதையிலிருந்து முற்றிலும் வேறு பட்ட முகத்தைக் காட்டுகிறது. மாறுபட்ட மொழியை, மாறுபட்ட விதி வசத்தை, மாறுபட்ட வரலாற்றை,ப் பேசுகிறது. ஈழத் தமிழர் […]


 • பாரதிக்கு இணையதளம்

  பாரதிக்கு இணையதளம்

  பாரதி புகழ் ஓங்குக!! ஓர் நற்செய்தி! மகாகவி பாரதியாரின் 130 ஆவது பிறந்த நாளான 11.12.2011 அன்று முதல் பாரதியாரைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் வழங்க www.mahakavibharathiyar.info என்னும் இணையதளம் தஞ்சாவூர் பாரதி சங்கத்தால் தொடங்கப்பட்டு இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அதைப் பயன்கொள்ளுமாறு வேண்டுகிறோம். இங்ஙனம், வீ.சு.இராமலிங்கம், தலைவர், பாரதி சங்கம் தஞ்சாவூர். • அக்கினிக்குஞ்சைத் தேடுகின்றோம்

  அக்கினிக்குஞ்சைத் தேடுகின்றோம்

  ஸ்ருதி ரமணி ஏ, பாரதி…! பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட முயன்றவனே நீ விட்டுச் சென்ற அக்கினிக் குஞ்சை நாங்கள் இன்று தேடிக் கொண்டிருக்கின்றோம் வீரத்தைப் பறைசாற்றிய அது இன்று எங்களின் அவசியத் தேவை கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து நாங்கள் குமைந்து கொண்டிக்கிறோம் இன்று புதிதாய்ப் பிறந்தோமென உன் மக்கள் எண்ண வேண்டுமெனின் திரும்பி ராமல் இங்கே தீமைகள் அழிய வேண்டும் நீ உரைத்தது போல் மடமை, சிறுமை, துன்பம், பொய் வருத்தம் நோவு இவை […]


 • அழிவும் உருவாக்கமும்

  அழிவும் உருவாக்கமும்

  கணேஷ் நானூறு மெல்லிய கதிர்கள் ஒருங்கிணைந்து ஒற்றைக்கதிரானது. திண்மை பெருகி ஒளியின் உக்கிரம் ஆயிரம் மடங்கானது. நேர்க்கோட்டில் பயணித்தது கதிர். எதிர்வந்த திடப் பொருள்கள் கிழிந்தன. திரவப்பொருள்கள் கொதித்தன. ஏழைச்சுவர் ஒன்று அதன் பாதையில் வந்தது. சுவர் செங்குத்தாக இரண்டு பட்டது. சுவர் உடைந்ததில் செங்கல் துகளோன்று மண்ணில் வீழ்ந்தது. சில நூறு வருடங்களில் சுவரிருந்த இடத்தில் ஆறொன்று ஓடத்துவங்கியது. ஆற்று நீரின் அரிப்பில் இரண்டாக உடைந்திருந்த சுவர் முழுதும் அரிக்கப்பட்டு அடித்துச்செல்லப்பட்டது. செங்கல் துகள் மட்டும் […]