author

தலைமுறைக் கடன்

This entry is part 30 of 41 in the series 23 செப்டம்பர் 2012

முகில் தினகரன் (சிறுகதை) தான் அமர்ந்திருந்த அந்த சேரை உடகார்ந்தவாறே, அப்படியும் இப்படியுமாக இடுப்பை அசைத்து சோதித்துப் பார்த்தார் கேஷியர் வரதராஜன். ‘லொடக்…லொடக்” என ஒரு பக்கமாய் ஏறி இறங்கியது. குனிந்து பார்த்தார். அதன் அடிப்பகுதியில் ஒரு புஷ் மட்டும் இல்லாமலிருந்தது. ‘அடப்பாவி!…எல்லாச் சேருக்கும் புது வயர் பின்னியாச்சு….புஷ் போட்டாச்சுன்னு சொன்னானே அந்த வயர் பின்னறவன்!…வரட்டும்…வரட்டும்…பில் சாங்ஷன் ஆகி…பேமெண்டுக்கு என்கிட்டதானே வரணும்?…கவனிச்சுக்கறேன்!” கோபத்துடன் தனக்குத்தானே பேசிக் கொண்டார். பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு, ‘சார்…இந்தாங்க சார் பில்லு!” என்று […]

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் இன்னும் உன் குரல் கேட்கிறது கவிதை நூலின் மீது ஒரு மதிப்பீடு

This entry is part 28 of 41 in the series 23 செப்டம்பர் 2012

எம்.எம். மன்ஸுர் – மாவனல்லை என்றும் இலக்கியக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னகத்தே நிறுவனம் ஒன்றை வைத்திருக்கும் புரவலர் அல்ஹாஜ் ஹாஸீம் உமர் அவர்கள், எழுத்தாளர்களின் படைப்புக்களை நூல் வடிவில் கொண்டு வருவதில் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்பட்டு வருகிறார். 2007 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த எழுத்தாளர்களுக்கு உதவும் பணி மூலம் இதுவரை முப்பது நூல்களை இலவசமாக வெளியிட்டு வசதியற்ற எழுத்தாளர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் ஆதரவளித்து ஈழத்து இலக்கிய உலகுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். அந்த வகையில் […]

விசரி

This entry is part 27 of 41 in the series 23 செப்டம்பர் 2012

ஆதி பார்த்தீபன்  நாளாக்கிய நாளொன்றில் அவள் வந்திருந்தாள் நாளான புண்ணிடமும்-நசுக்கப்பட்ட சீழிடமும் கதை பேசிக்கொண்டிருந்தாள் சிக்கிய முடிவழி-திக்கிய பேனினத்தை சிக்கெடுத்து ஓடவிட்டாள் அவள் காதலில் தோற்று பைத்தியமானவளோ..!! விரல்களை நளினம் செய்து காற்றுடன் காதல் பேசினாள் அவள் தன் உரப்புகளை மீட்கத் தொடங்கியிருந்தாள் ஆண்கள் பற்றிய வசைகளுடனும் ஒன்றிரண்டு காமக் கூச்சலுடனும் ..!! மேலாடை களைவதற்காய் மிகைப்பட்ட முயற்சியொன்றை எடுத்துக்கொண்டாள் களைந்த ஆடைகட்கிடையில் கறைபடிந்த அந்த செய்தியை புரட்டிக்கொண்டிருந்தாள் கவர்ச்சி விழுங்கும் உலகத்திடம்…!! thitthu13@gmail.com

கவிதை

This entry is part 26 of 41 in the series 23 செப்டம்பர் 2012

மு.கோபி சரபோஜி வெட்கமின்றி நீரையெல்லாம் அம்மணத்தால் அலசி கழுவும் சாண் பிள்ளைகள்……..   அம்மாவின் சேலைதுணியை வலையாய் சுமந்து கெரண்டைக்கால் நீரில் தாவித்திரியும் கருவாச்சி தேவதைகள்…..   காற்று கூட விதேசியாய் வேண்டாமென கரையில் வந்துறங்கும் தலைமுறை கண்டவர்கள்….   இரை வரத்துக்காக ஒரு காலூன்றி மறுகால் மடக்கி தவம் கிடக்கும் வள்ளுவ கொக்குகள்…..   புறம் சென்று பொழுது சாய அகம் திரும்புகையில் தன்னழகு காண கரை இறங்கும் வாயில்லா ஜீவன்கள்…   கரை மீது […]

உலக சகோதரத்துவ விழா (190-வது வள்ளலார் அவதரித்த திருநாள்)

This entry is part 23 of 41 in the series 23 செப்டம்பர் 2012

அருட்பெருஞ்சோதி    அருட்பெருஞ்சோதி                                                                                  தனிபெரும்கருணை     அருட்பெருஞ்சோதி ஆன்மநேய அன்பர்களுக்கு வணக்கம் , இப்பிரபஞ்சத்தில்  ஆத்மிக மையம் பாரதத்திருநாட்டின்  தென்கிழக்கே இலங்கைதிருநாட்டில் சாவகச்சேரி பகுதியில்   அருட்பெருஞ்சோதி ஆண்டவர்  அருளால் ,திருஅருட்பிரகாசவள்ளலார்  தலைமையில் உலக சகோதரத்துவ விழா (190-வது வள்ளலார் அவதரித்த திருநாள்) நடக்க இருக்கின்றது. மனித பிறப்பின்  உண்மை , இறை நிலையின் ஆற்றல் இதனைஉணர்த்தும் மார்க்கம் சன்மார்க்கம் . இவ்விழாவில் தாங்கள் குடும்பத்தினர் , உறவினர்களோடு கலந்துகொண்டு ஆன்மலாபம் பெற அன்புடன் அழைக்கின்றோம். குறிப்பு : அழைப்பிதழ்  இணைக்கப்பட்டு உள்ளது.                                                                                               என் மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம் –  வள்ளலார்                                                                                                                                              […]

அ.குணசேகரனின் ‘இல்லாமல் இருத்தல்’-ஓர் அழகிய மக்கள் இலக்கியப் படைப்பு

This entry is part 16 of 41 in the series 23 செப்டம்பர் 2012

மணி.கணேசன் தமிழ்ச் சமூகம் தொன்றுதொட்டு வாழும் ஒரு கதைச்சொல்லிச் சமூகமாகும்.தம் வாழ்வியலை இரத்தமும் சதையுமாகக் கற்பனை கலந்து சுவைபட எடுத்துக்கூறுவதில் இது தன்னிகரற்றது.நாட்டுப்புறங்களில் வாய்மொழியாக வழங்கி வந்த பல்வகைப்பட்ட கதைகள் முறையாக எழுதப்படாமலும் தொகுக்கப்படாமலும் இலக்கியமாகப் பதிவுசெய்யப்படாமலும் இருந்த காரணங்களால் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச்சமூகம் மேலை இலக்கியப் புத்திலக்கிய வரவாகச் சிறுகதையைக் கருதத்தொடங்கியது. ஆதலாலே,தமிழ்ச்சிறுகதையின் பிதாமகர் வ.வே.சு.ஐயர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் எனும் சிறுகதை தமிழில் உருவான முதல் சிறுகதையாக உருவெடுத்தது என்றுதான் கூறவேண்டும்.மேலைநாட்டார் வகுத்துத்தந்த சிறுகதை […]

ஜெய் பீம் காம்ரேட் – திரையிடல் (தமிழில்)

This entry is part 15 of 41 in the series 23 செப்டம்பர் 2012

ஜெய் பீம் காம்ரேட் – திரையிடல் (தமிழில்) ஜெய் பீம் காம்ரேட் – ஆவணப்படம் திரையிடல் & டி.வி.டி. வெளியிடல் திரைப்படம் : JAI BHIM COMRADE, மூன்று மணி நேரம், 20 நிமிடங்கள் ஓடக்கூடியது. நண்பர்களே ஆனந்த் பட்வர்தன் இயக்கிய ஜெய் பீம் காம்ரேட் ஆவணப்படம் (தமிழ் சப் டைட்டிலோடு), திரையிடப்பட உள்ளது. டி.வி.டி. வெளியிடுபவர்: வழக்கறிஞர் சத்யசந்திரன் பெற்றுக்கொள்பவர்: பேராசிரியர் இளங்கோவன் திரைப்பட அறிமுகம்: ஆர். ஆர். சீனிவாசன் மற்றும் ‘தலித் முரசு’ புனித […]

ரீடெயில் தொழிலில் பன்னாட்டு நிறுவனங்கள் …

This entry is part 6 of 41 in the series 23 செப்டம்பர் 2012

புனைப்பெயரில் ——————- எனக்கு பொருளாதார, இன்பெலெஷன் ரீதியாக பேசத் தெரியாது… ஆனால், சமூக ரீதியாக சில வினாக்கள்…   என்னைப் பொறுத்தவரை பன்னாட்டு நிறுவனங்களும் இந்த இடைத் தரக பன்னாடைகளும் ஒன்றுதான்.   சில்லறை கடைக்காரரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமாம்..?   ஆனா, என் கேள்வி வேறு… நீங்கள்  காய்கறி கடையோ, பலசரக்கு கடையோ திறப்பதாக இருந்தால், ஒரு குறிப்பிட்ட ஜாதியினராக இருந்தால் தான் முடியும்… அதனால், தான் நாடார் கடைகள் இருக்கும். அதை விட்டால் முஸ்லீம் கடைகள் […]

விடுதலையை வரைதல்

This entry is part 4 of 41 in the series 23 செப்டம்பர் 2012

க. சோதிதாசன் அவள் ஓவியம் வரைபவள் கண்ணீர்க் கோடுகளை நன்றாக கீறுவாள் தனிமையை தீட்டி இருக்கிறாள் அடக்கு முறையை சித்தரிக்க முடிந்திருக்கிறதுதுன்பத்தையும் சோர்வையும் சொல்பவை பல ஓவியங்கள் பலவீனத்தை படமாக்கி இருக்கிறாள் வீடும் பணிச்செயல்களும் உயிர்ப்பானவையாக இருக்கும் இருளை இணைக்க முடிந்திருக்கிறது ஆனால் விடுதலையையும் ஒளியையும் இறுதி வரை அவளால் வரைய முடிந்திருக்கவில்லை.. க. சோதிதாசன் யாழ்ப்பாணம் இலங்கை. drsothithas@gmail.com

தங்கம்மூர்த்தி கவிதை

This entry is part 3 of 41 in the series 23 செப்டம்பர் 2012

தங்கம்மூர்த்தி எனக்கே எனக்கென்றிருந்த ஒரே ஒரு நட்சத்திரமும் நேற்றிரவு திருடு போய்விட்டது. நெடுவானில் தவித்தபடி அலையும் என்னைக் கவ்விக்கொள்கிறது இருள். இருளோடு இணைந்து பயணித்து ஒளி தேடி அலைந்து களைத்து இருளுக்குள் இருளாகிறேன் புலரும் கலை புரியாமல்.