Articles Posted by the Author:

 • ஆனந்தக் கூத்து

  நிர்மல் நான் கண்விழித்தபோது முதலில் என் பார்வையில் விழுந்தது அந்தக் குடிலின் கூரையுடைய அடிப்பகுதி தான். மிகவும் எளிமையாக நடுவில் ஒரு உச்சிப் பகுதியும், அதிலிருந்து கூம்பாகச் சாய்த்து வரிசையாக வேயப்பட்ட ஓலைகளும் எனக்கு ஒரு வண்டிச் சக்கரத்தை நினைவூட்டின. என்னைச் சுற்றி நான்கைந்து பேர் இருந்தனர். நான் கண்விழித்ததைக் கண்டதும் அவர்கள் ஆச்சரியத்துடன் முணுமுணுத்துக் கொண்டனர். என் கால்கள் இருந்த திசையிலிருந்து சூரிய ஒளி குடிலுக்குள் நுழைய ஆரம்பித்திருந்தது. குடில் முழுக்கப் பனிப்புகை சூழ்ந்திருந்தது. எனக்கு […]


 • அகஸ்தியர்-எனது பதிவுகள்

  முல்லை அமுதன் மனித நேயம் மிக்க ஒருவரை மீண்டும் நாம் நினைக்க வைத்துள்ளது.வர்க்கம் சார்ந்து,சாதிய முறைமைகளை எதிர்த்த படி தனது கற்பனைத் திறத்தால் நம்மையெல்லாம் ஆட்கொண்டவர் தான் அகஸ்தியர்.29/08/1926இல் சவரிமுத்து-அன்னம்மா தம்பதியர்க்கு மகனாக ஆனைக்கோட்டையில் பிறந்தவர். அந்தக் காலத்து எஸ்.எஸ்.சி சாதாரண தரம் வரை கல்வி கற்றிருந்தாலும் அவர் வளர்த்துக்கொண்ட தமிழ் அறிவு அவரை நல்லதொரு படைப்பாளியாக நமக்குத் தந்திருக்கிறது.தமிழ்,சிங்களம்,ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் ஆற்றல் வாய்ந்தவராகவே தன்னை வளர்த்துக் கொண்டார். எழுத்தாற்றலால் தன்னை வளர்த்துக்கொண்டாலும் பலராலும் […] • கிரிஷ் கார்னாடின் ஆறு நாடகங்கள் நூல் வெளியீட்டு விழா

  கிரிஷ் கார்னாடின் ஆறு நாடகங்கள் நூல் வெளியீட்டு விழா

  காலச்சுவடு   வணக்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை (11.11.2011) அன்று மாலை 5:45 மணிக்குச் சென்னை புக் பாயிண்ட் அரங்கில் வைத்து கிரிஷ் கார்னாடின் ஆறு நாடகங்கள் நூல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. தங்கள் வருகையை எதிர்பாக்கிறோம். தங்கள் அனைவரையும் நிகழ்வில் கலந்துகொள்ள வரும்படி அன்புடன் அழைக்கிறோம். பொறுப்பாசிரியர் காலச்சுவடு • புரிந்தால் சொல்வீர்களா?

  புரிந்தால் சொல்வீர்களா?

  சக்தி சக்திதாசன் எனக்குள்ளே என்னைப் பரப்பி அதற்குள்ளே அதனைத் தேடி எதற்காக இத்தனை ஏக்கம்? விடைகாணா வினாக்களின் முழக்கம் நினவாலே இசைத்திடும் சங்கீதம் கனவோடு கலந்திடும் சிலநேரம் முடிவோடு தொடக்கம் முடியாமல் ப்கலோடு இரவாகத் தெரியாமல் இது என்ன மாற்றம்? இதுதானா சீற்றம் ? தெரியாத ஊருக்கு ஏனோ புரியாத பயணம் புலராத் பொழுதொன்றில் முடியாத கனவு சுகமான சுமைகளை சுமந்திடும் தோள்கள் கனக்கின்ற எடைகளை களைகின்ற மேடை சொல்லொன்று தீட்டிய ஓவியத்தை கண்ணில்லா மனிதனிடம் காட்டிய […]


 • மலைபேச்சு – – செஞ்சி சொல்லும் கதை – 4

  மலைபேச்சு – – செஞ்சி சொல்லும் கதை – 4

  ஆண்டையிடத்தில் ஒருவித அச்சம் அவனுக்கு இருந்தது. அந்த அச்சம் தலைமுறை தலைமுறையாக அவனுடைய முன்னோர்களுக்கு மட்டுமல்ல அவனுடைய இனத்தோடும் பயணித்துவந்தது. அதை பராமரிக்கின்ற வகைமையை எல்லா எஜமானர்களையும்போலவே தீட்சதரும் தெரிந்துவைத்திருந்தார்.”. 6. வெயில் சற்று மட்டுபட்டதுபோலிருந்தது. தலையிற் கட்டியிருந்த சவுக்கத்தை அவிழ்த்து முகத்தைத் துடைத்தான். மார்பைத் துடைக்க எத்தனித்தபோது முந்திரிப்பழம்போல வயிற்றில் புடைத்திருந்த தொப்புளைப்பார்க்கக்கூச்சமாக இருந்தது வெட்கப்பட்டான். இனி வெட்கப்பட்டு ஆவதென்னவென்று சமாதானமும் செய்துகொண்டான். தீட்சிதருக்குகூட அப்படியொரு தொப்புளுண்டு ஆனால் அவருக்கு தொப்புளான் என்ற பெயரில்லை. இவனுடைய […]


 • மணிமேகலை குறித்தான பயிலரங்கை14-12-2011 முதல் 23.12.2011 வரை

  அன்புடையீர் செம்மொழித் தமிழாய்வுநிறுவனமும் திருச்சிராப்பள்ளி செட்டிநாடு கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து பத்துநாள் -மணிமேகலை குறித்தான பயிலரங்கை14-12-2011 முதல் 23.12.2011 வரை நடத்த உள்ளன. ஆய்வறிஞர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில் அனைவரும் பங்கு கொள்ள வரவேற்கிறோம்


 • கெடுவான் கேடு நினைப்பான்

  கெடுவான் கேடு நினைப்பான்

  வசந்தபுரி மகாராணி நோய்ப் படுக்கையில் துவண்டு கிடக்க, இளவரசன் விக்கிரமன் கண்ணீர் சிந்தியவாறு அருகில் இருக்க, மதிவாணர், முத்துராசர் ஆகிய இரண்டு அமைச்சர்களும் கைபிசைந்தவாறு நின்றார்கள்! “மதியூக மந்திரிகளே! இனி நான் பிழைப்பேன் என்ற நம்பிக்கை இல்லை. பத்து வயதே நிரம்பப் பெற்ற என் மைந்தன் விக்கிரமனை உங்களிடம் ஒப்படைத்துச் செல்லுகிறேன். நீங்கள் தான் அவனுக்குப் பாதுகாப்பாய் இருக்க வேண்டும்” என்று மகாராணி கண்ணை மூட, அதற்கான இறுதிச் சடங்குகள் எல்லாம் முடிந்த பின்பு, நல்ல நாள் […]


 • விஷ்ணுபுரம் விருது 2011 – பெறுபவர் : எழுத்தாளர் பூமணி

  தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது ஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல் “பூக்கும் கருவேலம் நூல்” வெளியீடு டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி- கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை கலந்துகொள்ளும் ஆளுமைகள் எழுத்தாளார் ஜெயமோகன், வே.அலெக்ஸ் – அயோத்திதாசர் ஆய்வு நடுவம் எழுத்தாளார் யுவன் சந்திரசேகர், எழுத்தாளார் எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளார் நாஞ்சில்நாடன் கன்னட கவிஞர் பிரதீபா நந்தகுமார், இயக்குனர் பாரதிராஜா எழுத்தாளர் பூமணி உள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுக்கு […]