author

நீரிழிவு நோயும் கால்கள் பாதுகாப்பும்

This entry is part 13 of 22 in the series 1 ஏப்ரல் 2018

டாக்டர் ஜி. ஜான்சன் நீரிழிவு நோய் கால்களை இரண்டு விதங்களில் பாதிக்கிறது. கால்களுக்கு இரத்தம் கொண்டு செல்லும் இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதால் அடைப்பு உண்டாகி இரத்தவோட்டம் தடை படுவதால், கால்களில் புண் உண்டானால், அதில் கிருமித் தொற்று எளிதில் உண்டாகி,ஆறுவதில் காலதாமதமும் சிரமமும் ஏற்படலாம். அதோடு கால் நரம்புகளும் பாதிக்கப்படுவதால் காலில் உணர்ச்சி குன்றிப்போவதால் காலில் காயம் உண்டாவது தெரியாமல் போகலாம். வலி தெரியாத காரணத்தால் புண் பெரிதாகலாம். கால்களில் வெடிப்பு, வீக்கம், புண், சதைக்குள் […]

தொடுவானம் 215. திருமண ஏற்பாடு

This entry is part 14 of 22 in the series 1 ஏப்ரல் 2018

டாக்டர் ஜி. ஜான்சன் 215. திருமண ஏற்பாடு அமைதியான இரவு நேரம். ஊரார் பெரும்பாலோர் உறங்கிவிட்டனர். பால்பிள்ளையும் வீடு சென்றுவிட்டான். நாங்கள் மட்டுமே குடும்பமாக அமர்ந்திருந்தோம். அது போன்ற வாய்ப்பு கிடைப்பது கிராமத்தில் அபூர்வம். எப்போதுமே யாராவது உறவினர் வீட்டில் இருந்துகொண்டேதான் இருப்பார்கள். அதனால் முக்கியமான குடும்ப காரியங்களை அவர்கள் இல்லாமல் தனியே பேசுவது சிரமம். அப்படி வருபவர்கள் நாங்கள் என்ன பேசினாலும் அதில் தாங்களும் கலந்துகொள்ளவே விரும்புவர். அதைத் தவிர்க்கவும் இயலாது. இது கிராமப் புறங்களில் […]

தொடுவானம் 214. தங்கைகளுக்கு திருமணம்

This entry is part 9 of 13 in the series 25 மார்ச் 2018

டாக்டர் ஜி. ஜான்சன் 214. தங்கைகளுக்கு திருமணம் கலைமகளிடம் கடிதத்தைத் தந்தேன். படிக்கும்போது முகமாற்றத்தைக் கவனித்தேன். அதில் அதிர்ச்சி இல்லை. மலர்ச்சிதான். படித்து முடித்துவிட்டு என்னிடம் தந்தாள். ” நீ என்ன நினைக்கிறாய்?” ” உனக்கு இதில் சம்மதமா? ” அதனால்தானே உன்னிடம் கேட்கிறேன்? ” ” நான் எப்படி தனியாக அவ்வளவு தூரம் போவது?” ” அதான் நானும் வருவேனே? ” நீ அங்கேயே வேலை செய்வாயா? ” ” அதற்குதான் முயற்சி செய்யப்போகிறேன்.” ” […]

தைராய்டு ஹார்மோன் குறைபாடு

This entry is part 10 of 13 in the series 25 மார்ச் 2018

டாக்டர் ஜி. ஜான்சன் தைராய்டு சுரப்பி தொண்டையின் முன்பக்கம் இரண்டுபுறத்திலும் வண்ணத்துப்பூச்சி வடிவில் அமைந்துள்ளது. சாதாரணமாக அதைக் காண இயலாது. அனால் வீக்கம் உண்டானால் தொண்டையும் முன்பக்கம் கட்டி போன்று தோன்றும். இந்த சுரப்பி தைராய்டு ஹார்மோன்களைச் சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள் உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு உறுதுணையாக உள்ளன. இவை குறைவுபட்டலோ அதிகம் கூடிவிட்டாலோ பல்வேறு மாற்றங்கள் தோன்றுகின்றன. தைராய்டு சுரப்பி போதுமான அளவு ஹார்மோன் சுரக்காத காரணத்தால் உண்டாகும் குறைபாட்டை ” ஹைப்போதைராய்டு ” ( […]

நெஞ்சு வலி

This entry is part 5 of 15 in the series 18 மார்ச் 2018

டாக்டர் ஜி. ஜான்சன் நெஞ்சுப் பகுதியில் மார்புகளுக்கு அடியில் நெஞ்சு தசைகள்,நெஞ்சு எலும்புகள், நரம்புகள், இரத்தக்குழாய்கள், நுரையீரல்கள், உணவுக் குழாய், இருதயம் ஆகிய உறுப்புகள் உள்ளன. இவற்றில் எதில் குறைபாடு உண்டானாலும் நெஞ்சு வலி வரலாம் . .நாம் பெரும்பாலும் நெஞ்சு வலி என்றாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று சந்தேகம் கொள்கிறோம். அது நல்லதுதான்.அனால் வேறு உறுப்புகளில் உள்ள குறைபாடுகள் காரணமாகவும் நெஞ்சு வலி உண்டாகலாம். இத்தகைய உறுப்புகளில் உண்டாகும் பிரச்னைகளை வைத்து நெஞ்சு வலியை […]

தொடுவானம் 213. நண்பனின் கடிதம்.

This entry is part 6 of 15 in the series 18 மார்ச் 2018

டாக்டர் ஜி. ஜான்சன் 213. நண்பனின் கடிதம். நண்பன் சென்ற பின்பு சில நாட்கள் அவன் நினைவாகவே இருந்தது. வேலையில் மீண்டும் கவனம் செலுத்தினேன். அவன் பெண் பார்க்கவே தமிழகம் வந்திருந்தான். அத்தை மகளையும் பார்த்துவிட்டான். ஆனால் அவர்களுக்கு முடிவைத் தெரிவிக்காமல் கடிதம் போடுவதாகச் சொல்லியுள்ளார். என்னிடமோ பெண் குண்டாக இருப்பதாகவும் தனக்கு ஒல்லியான பெண் வேண்டும் என்றும் சொன்னான். இரண்டு வாரங்கள் கழிந்தன. சிங்கப்பூரிலிருந்து ஓர் ஏர் மெயில் கடிதம் வந்தது. அதை கோவிந்தசாமிதான் எழுதியிருந்தான்.ஆவலோடு […]

மனச்சோர்வு( Depression )

This entry is part 7 of 10 in the series 11 மார்ச் 2018

டாக்டர் ஜி. ஜான்சன் இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் பல்வேறு மனநோய்களால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அவற்றில் ஒன்று அனைவருக்கும் தெரிந்த ” டிப்ரஷன் “.என்பது. இது இன்று சர்வ சாதாரணமாக பலரிடையே காணப்படுகின்றது. ” டிப்ரஷன் ” என்பது மனச்சோர்வு. இதன் முக்கிய வெளிப்பாடு கவலை. நம்முடைய வாழ்க்கையில் நமக்கு கவலைகள் வருவது இயல்பு. கவலை இல்லாத மனிதன் கிடையாது. பல்வேறு காரணங்களால் நாம் கவலை கொள்கிறோம். ஆனால் சிறிது நேரத்தில் அல்லது சில நாட்களில் […]

தொடுவானம் 212. ஆலய சுற்றுலா

This entry is part 9 of 10 in the series 11 மார்ச் 2018

டாக்டர் ஜி. ஜான்சன் 212. ஆலய சுற்றுலா நண்பன் என்னுடன் தங்கியிருந்த மூன்று நாட்களும் நான் விடுப்பு எடுத்துக்கொண்டேன். அவனை மீண்டும் எப்போது பார்ப்பேன் என்பது தெரியாது. அவன் சிங்கப்பூர் திரும்பிவிட்டால் அவ்வளவுதான். கடிதமும் எழுதிக்கொள்ளமாட்டோம். மீண்டும் சந்திக்க பல வருடங்கள் ஆகலாம். அவன் தங்கும் சில நாட்கள் அவனுடன் கழிக்கலாம். இந்தப் பகுதியிலுள்ள சில இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம். திருப்பத்தூருக்கு மிகவும் அருகில் இருப்பது குன்றக்குடி முருகன் கோவிலும் பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலும்தான். பின்பு காரைக்குடியும் […]

தலைச் சுற்றல் ( VERTIGO )

This entry is part 8 of 12 in the series 3 மார்ச் 2018

டாக்டர் ஜி. ஜான்சன் ” வெர்ட்டைகோ ” என்பது தலை சுற்றல். எது தலை சுற்றல் என்பதில் சிறு குழப்பம் நிலவுகிறது. மயக்கம், பித்தம் ,கிறுகிறுப்பு , கிறக்கம் என்றெல்லாம் தலை சுற்றலைக் கூறுவதுண்டு. தலைச் சுற்றல் இருவகையானது. முதல் வகையில் நாம் சுற்றுவதான உணர்வு. இரண்டாவது நம்மைச் சுற்றியுள்ளவை சுற்றுவது போன்ற உணர்வு. தலைச் சுற்றல் பொதுவாக காதில் பிரச்னை இருந்தால் ஏற்படும். பூமியின் ஈர்ப்புச் சக்திக்கு ஏற்ப நேராக நிற்பதற்கும், கீழே விழுந்துவிடாமல் நடப்பதற்கும் […]

தொடுவானம் 211. புதுக்கோட்டை பயணம்

This entry is part 12 of 12 in the series 3 மார்ச் 2018

டாக்டர் ஜி. ஜான்சன் 211. புதுக்கோட்டை பயணம் காலையிலேயே புதுக்கோட்டைக்குப் புறப்பட்டோம். அங்கு சென்றடைய ஒரு மணி நேரமாகும். போகும் வழியில் திருமயம் கோட்டை உள்ளது. கற்பாறை மலைமீது கட்டப்பட்ட கோட்டை அது. அதன் சுவர்கள் அப்படியே இருந்தன. தூரத்தில் வரும்போதே தெரியும் கோட்டை அது. கோவிந்தசாமி அதைப் பார்க்க விரும்பினான். வோக்ஸ் வேகனை ஓட்டிய கங்காதரன் கோட்டையின் எதிரில் உள்ள ஸ்ரீ பைரவர் ஆலயத்தின் அருகில் நிறுத்தினார். அங்கிருந்து கோட்டை பிரம்மாண்டமாக காட்சி தந்தது.. அந்த […]