-எஸ்ஸார்சி பெரியசாமி மீது எந்த தவறுமில்லை.எல்லாப்பிழைக்கும் எப்போதும்போல் நானேதான் பொறுப்பு. மணி முத்தாறு வலமாகச்செல்லும் திருமுதுன்றம் என்னும் ஊரில் டெலிபோன் இலாகாவில் நானும் பெரியசாமியும் வேலையில் சேர்ந்தோம் சிலர் டெலிபோன் இலாகாவில் வேலை பார்த்தோம் என்பார்கள் ஒருசிலர் வேலைசெய்தோம் என்பார்கள் ஒரு அலுவலகத்தில் வேலையைப் பார்ப்பதா இல்லை செய்வதா என்கிற ஆராய்ச்சிக்குள் போய் யாருக்கும் ஒன்றும் ஆகப்போவது இல்லை. எது எப்படி என்று கேள்விகள் எல்லாம் கேட்காதீர்கள் டெலிபோன் இலாகாவில் வேலை செய்கிறவர்களுக்கு தொழிற்சங்கம் அதன் தொடர்பான […]
கையில் ஒரு சீப்பு வாழைப்பழத்தை வாங்கி வந்த அவன் அந்தப்பெண்மணி எங்கே எங்கே என்று தேடினான்.எந்தப்பெண்மணி த்தேடினான் என்பதைச்சொல்லி ஆரம்பித்தால்தான் சரியாக இருக்கும் உங்களுக்கு தெரியாத புதிய விஷயம் ஒன்றுமில்லை. ஆண்டு தோறும் வரும் .மார்ச் மாதம் எட்டாம் தேதி இது மகளிர் தினம்.அவன் அலுவலகம் உற்சாகத்தோடு கொண்டாடும் திருநாள்.சிறப்பு அழைப்பாளராய் வந்திருந்த பெண்மணி சென்னையிலிருந்து வந்திருந்தார்.அவர் புரசைவாக்கம் ஒரு அரசு வங்கியில் வேலைபார்க்கிறார். நடுத்த்ர வயதுக்காரர்.சட்டம் படித்தவர். இந்த சமுத்திரகுப்பத்து வங்கி ஊழியர்கள் குறிப்பாக உழைக்கும் […]
அவன் எழுதிய ஒரு கட்டுரை நூல்தான் ‘படித்தலும் படைத்தலும்’ அதற்கு நெல்லிகுப்பம் பெரியவர் ஜிஜியார் விமரிசனம் எழுதியிருந்தார். த்ரமான ஒரு இலக்கிய பத்திரிகையிலும் அது பிரசுரமாகி வெளி வந்திருந்தது.. அந்த இலக்கிய பத்திரிகையைப்பிரித்து அதனைப்பார்த்ததுமே அத்தனை மகிழ்ச்சி.அதே இலக்கிய பத்திரிகையில் அவ்வப்போது அவன் எழுதிய கட்டுரைகள்தான் சமீபத்தில் இப்படி ஒரு புத்தகமாக வந்தது… அவன் எழுதி அவை வெளியும் வந்து சற்று பேசவும் பட்ட அவைகளை த் தொகுத்து ஒரு நூலாகவெளியிட சின்னதாக அவனுக்கு ஆசை. எங்கு […]
யார் வீட்டு வாசலில் சென்னை விலாசம் எழுதிக்கொண்ட ஒரு போலிஸ் வேன் வந்து நிற்கிறது.இரண்டு பெண் போலிஸ்காரர்கள் ஒரு போலிஸ் அதிகாரியும் அதனிலிருந்து இறங்கி நிற்கிறார்கள். ஹெட் கிளார்க் அந்த எபனேசர் மேடம் வீட்டு வாசலில்தான். ‘ன்’ என்றோ ‘ர்’ என்றோ ஒருவரின் பெயர் முடிந்தால் அது ஆடவரைமட்டும்தான் குறிக்குமா என்ன . அப்படி சட்டென்று யாரும் ஒரு முடிவுக்கும் வந்துவிட வேண்டாம். விஷயம் தெரிந்தவர்கட்கு இது தெரியும். கொஞ்சம் தெரியாதவர்கட்குமட்டுந்தானே நானும் எப்போதும் சொல்கிறேன். சமுத்திர […]
-எஸ்ஸார்சி அவன் ரேஷன் கடையில் சாமான்கள் வாங்கச்செல்வது ஏப்போதேனும் ஒருதடவைதான்.அனேகமாக பக்கத்து வீட்டு முத்துலச்சுமிதான் எப்போதும் சாமான்கள் அவனுக்கும் சேர்த்து வாங்கி வருவாள்.ஒரு நாள் ரேஷன் கடைக்காரர் முத்துலச்சுமியிடம்’ கார்டுகாரங்க யாரோ அவுங்க ரேஷன் கடைக்கு நேரா வரட்டும் இந்த கார்டுக்கு சாமானுங்க தர்ரது எல்லாம் அப்புறம் பாக்கலாம் இண்ணைக்கு இந்த கார்டுக்கு சாமான் தர முடியாது’ என்று சொல்லியதாக அவனிடம் சொன்னாள். முத்துலச்சுமி ஒன்றும் சும்மா போய்வருபவளும் இல்லை எங்கு போகச்சொன்னாலும் அதில் ஒரு கணக்கு […]
இந்த நெய்வேலி ரமணி கிருஷ்ணனை புரசைவாக்கம் சாலை குமுதம் பத்திரிகை அலுவல வாயிலில் வைத்து பார்ப்போம் என்று நான் நினைக்கவில்லை. அவனை நான் கடைசியாய்ப்பார்த்தது அவன் சென்னைக்கு மாற்றலாகிச்சென்ற அந்த சமயம்தான்.நானும் அவனும் திருமுதுகுன்றத்தில் அந்தக்காலத்தில் ( மொபைல் வராக்காலம்) தொலைபேசி இயக்குனர்களாக ‘நம்பர் ப்ளீஸ்’ சொல்லி கருப்பு மொத்தை டெலிபோனில் டிங்க் டிங்க் மணி அடிக்க, கைப்பிடி ஒன்று சுழற்றி சுழற்றி வேலை பார்த்தவர்கள். ஆப்ரேடரை இயக்குனர் என்று யார் முதன் முதலில் மொழி பெயர்த்துச்சொன்னார்களோ […]
எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்(90) திங்கள் அன்று (20.10.2014) சென்னையில் போருர் ராமசந்திரா மருத்துவமனையில் காலமானார். அவர் அங்கு தங்கித்தன் இறுதி நாட்களை கழித்திட வாய்ப்பு தந்தது அந்த நிறுவனம். நாம் அந்த நிறுவனத்திற்கு நன்றி சொல்லவேண்டும். ராஜம் கிருஷ்ணன் நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதிக்குவித்த எழுத்து உழைப்பாளி. .சாகித்ய அகாதெமி,சரஸ்வதி சம்மான்,பாரதிய பாஷா விருது இலக்கியச்சிந்தனை விருது என விருதுகள் அணிவகுத்து அவருக்குப்பெருமை கூட்டின. தருமமிகு சென்னையில் தான்வாழ்ந்த வீடும் தன் கணவன் கிருஷ்ணன் மறைந்த பிறகு தனக்கு […]
காயடிக்கப்பட்டுபின்னர்தான் காளைமாடுகளுக்கு கொம்பில் குஞ்சம் கட்டி அழகு பார்க்கிறார்கள். பார வண்டி இழுக்கும் வாயில்லா ஜீவனுக்கு ருசியாக மணிலா பிண்ணாக்கும் பருத்திக்கொட்டையும் பச்சரிசி தவிடும் தின்பதற்கு வைத்து, கருப்புக்குக்கயிறோடு வெண்சங்கும் அதன் கொம்பில் கொலுவிருக்கிறது என்றால் ஒன்றும் சும்மா இல்லை. அரசாங்க ஊழியர்கள் பெறும் சலுகைகள் கூட இந்த வகைதானோ என்னவோ. எத்தனையோ சலுகைகள். விடுப்பில் பயணம் என்பதும் ஒரு சலுகை.கேள்விப்பட்டுதான் இருப்பீர்கள்.நான்காண்டுகளுக்கு ஒரு தடவை இந்தியாவில் எந்த மூலைக்காவது சென்று திரும்பலாம். எந்த ஊர் […]
27.08 2014 அன்று புக் பாயின்ட் அண்ணா சாலை 160 எண் கொண்ட கட்டிடத்தில் ஆவணப்படங்கள் திரையிடல் நடந்தது இந்திய இலக்கிய ஜாம்பவான்கள் அறுவரைப்பற்றி வாழ்க்கைபடங்கள். போட்டுத்தான் காண்பித்தார்கள். சாகிதய அகாதெமியின் அழைப்பிதழ்கள் இரண்டு மூன்று சேர்ந்து கொண்டு ஒரே நபருக்கு நிகழ்ச்சி முடிந்த மறு நாள் என்கிறபடி வரும் ஆனால் இந்த முறை ரெண்டு நாட்கள் முன்னம் வந்தது. நல்ல விஷயம். அழைப்பிதழை என்றைக்கு ஏற்பாட்டாளர்கள் அஞ்சல் பெட்டியில் போட்டார்கள் என்பது விலாசத்தில் அச்சாகியிருப்பது ஒரு […]
கொல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி 07.09.2014 ஞாயிறு காலை மரணமடைந்துவிட்டார். புதுக்கோட்டைக்காரர். வயது 94.அவரின் மகளார் திருமதி உஷா பஞ்சாபிகேசன் தொலைபேசியில் இது விஷயம் தெரிவித்தார். கடந்த வெள்ளியன்று இரவு ஒன்பது மணிக்கு சுகியை தாம்பரம் ஏ ஜி மருத்துவமனையில் சந்தித்தேன். காகிதப்பொட்டலம் போல் படுக்கையில் கிடந்தார். ட்ரிப்ஸ் சொட்டு சொட்டாக சென்று கொண்டிருந்தது. என்னோடு மெதுவாகப்பேசினார். தனது பேரனின் தள்ளிப்போன திருமணம் மீண்டும் 29.09.2014 நடைபெற வேண்டும். தன் இறப்பு அதுவரை நிகழாது தள்ளிப்போகவேண்டுமே எனக்கவலையோடு இருந்தேன் […]