கோபால் ராஜாராம் ஜெயமோகன் தன் வலை தளத்தில் திண்ணை பற்றியும் மற்றும் பி கே சிவகுமார் பற்றியும் எழுதியுள்ள கீழ்க்கண்ட பத்திகள் என் கவனத்திற்கு வந்தது. ‘பி.கே.சிவக்குமார் 2000 வாக்கில் எனக்கு அணுக்கமாக இருந்த திண்ணை ஆசிரியர் குழுவைச் சேர்ந்த கோ.ராஜாராம், கோ.துக்காராம் வழியாக அறிமுகம். திண்ணை இணையதளம், பின்னர் எழுத்தும் எண்ணமும் குழும உரையாடல் வழியாக தெரியும். ஒரு சில மின்னஞ்சல்கள், மற்றபடி பொது வெளி உரையாடல்கள் மட்டுமே. இணையம் உருவான காலகட்டத்தில் அப்படித் தெரியவந்த […]
திருச்சி வாசகர் அரங்கின் முதல் கூட்டம் தொடங்கி இன்று வரை தொடரும் நட்பின் இழை. சாம் மறைவு மனதைக் கடக்க வைக்கிறது. வாழ்வைக் கொண்டாட்டமாய் எடுத்துக் கொண்டு உரையாடுவத அவருக்குக் கைவந்த கலை. திருச்சி வாசகர் அரங்கு, திருச்சி நாடகச் சங்கம் என்று அவர் இணைந்திராத கலாசார நிகழ்வு திருச்சியில் இல்லை. அவர் சென்ற இடமெல்லாம் இலக்கியம், நாடகம், சினிமா என்று பிறரை ஈடுபடுத்தி இயக்குவதில் அவருக்கு நிகர் அவரே. அதன் காரணமாக அவர் பெற்ற […]
covid-19 அல்லது coronavirus-19 (2019) என்று அழைக்கப்படும் வைரஸ் சீனாவில் வுஹான் நகரத்தில் உள்ள காட்டு விலங்கு கறிவிற்கும் சந்தையில் மனிதரிடம் தொற்றியதாய் அறியப்படுகிறது. இது இன்றைய உலகத்தின் முக்கிய செய்தியாக உள்ளது. இதனால் சீனா, ஈரான், இத்தாலி போன்ற நாடுகளில் பெரும் உயிரிழப்பு உருவாகியிருக்கிறது. இது மற்ற நாடுகளிலும் பரவி கடுமையான செயல்பாடுகளை பல்வேறு அரசாங்கங்கள் கைக்கொள்ள ஏதுவாகியிருக்கிறது. ஆசியன் ஃப்ளூ என்ற வைரஸ் நோய் 1957-1958 இல் தோன்றி சுமார் 11 லட்சம் பேர்களை […]
(வெற்றிவேல், கோபால் ராஜாராம், சமயவேல், எஸ் ராமகிருஷ்ணன்) 1991 இறுதியில் ஒரு நடுங்கும் குளிர்நாளில் நான் அமெரிக்கா சென்றடைந்தேன். புதிய பூமியில் புதிய அனுபவங்கள். டாக்டர் நா கோபால்சாமி பெங்களூரில் இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆப் சைன்ஸில் பயின்ற போது இலக்கிய ஆர்வமும், செயல்படவேண்டும் என்ற ஊக்கமும் கொண்டவராய் தமிழவனுக்கு அறிமுகம் ஆனவர். அவர் சொல்லி நான் கோபால் சாமியுடன் தொடர்பு கொண்டேன். அவருடன் பேசியபோது, அந்த வருடம் 1992ல் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாடு வாஷிங்டனில் […]
ஆச்சி என்று அன்புடன் அழைக்கப்பட்ட மனோரமா மறைந்துவிட்டார். ஆழ்ந்த இரங்கல்களை அவர்தம் குடும்பத்தினருக்கும் பர்ந்த தமிழ் சமூகத்துக்கும் தெரிவித்துகொள்கிறேன். தமிழ் சினிமா பார்க்க ஆரம்பித்த அனைவரும் அறிந்த முகம் மனோரமா. சுமார் 1300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா வரலாற்றின் இன்றியமையாத அங்கமாகவே மாறிப்போனவர் அவர். அவரது தமிழ் சினிமா பங்களிப்பு வெறுமே நகைச்சுவை காட்சிகளில் வந்து சென்றது மட்டுமல்ல. அவரது கலாச்சார பங்களிப்பும், அதன் விளைவுகளும் தமிழ் கலாச்சார சூழலில் நாம் […]
நாடகம் தொடங்கும்போது ஒரு பெண் மிகவும் பதட்டமாக போனில் தன் அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கிறாள். அவள் பெயர் ஜெயா. தன் மகன் சிறுவன் மருத்துவமனையில் இருக்கிறான் என்பதும், அவன் நிலை அவ்வளவு சரியாக இல்லை என்பதும், அந்தப் பெண் தன மகனின் உடல்நிலை பற்றி மடுமல்லாமல், அவனைக் குறித்த வேறு கவலை கொண்டுள்ளாள் என்று அறிகிறோம். அந்தக் குழந்தை உடல் நிலை சரியாக ஆகிவிட்டாலும் மீண்டும் பெற்றோரிடம் வர வாய்ப்பில்லா சூழ் நிலை உருவாகக் கூடும் எனபது […]
உயிர்மையில் வெளிவந்திருக்கும் அ முத்துகிருஷ்ணனின் கட்டுரை “விஸ்வரூபம் 300 பொய்களும் 3000 உண்மைகளும்” என்ற தலைப்பைக் கொண்டுள்ளது. திருப்பி எந்த விவாதமும் தேவையில்லை. இதை எதிர்த்துச் சொல்வதெல்லாம் பொய். நான் சொல்வதல்லாம் உண்மை என்ற ஒரு முழுமுதல் கருத்தை முன்வைத்துத் தொடங்கும் கட்டுரைக்கு என்ன பதில் சொல்ல முடியும்? கட்டுரை முதல் வரிகள் ஆங்கிலத்தில். முதல் உலகப் போரை ஆரம்பித்தது யார்? என்று தொடங்கி அமெரிக்கா மற்றும் மேற்குலகின் கொலைக் குற்றங்களைப் பட்டியலிட்டு, இதெல்லாம் முஸ்லிம்கள் செய்தது […]
விஸ்வருபம் பற்றிய தொடர்ந்த விமர்சனத்தைக் காட்டிலும் இந்தத் தொடர் விஸ்வரூபம் பற்றிய விமர்சனங்களைப் பற்றி பெரிதும் பேசுவது வருக்தம் தருகிறது என்றாலும், தமிழ் விமர்சகரின் மனநிலையை , இடதுசாரிகள் என்று தம்மைச் சுட்டும் அறிவுஜீவிகளின் மனநிலையை விசாரணை செய்ய முயல்கிறது. ஆனால் இது பெரும்பாலும் நம் கண் முன்னே தோன்றி தன்னை நிலைனாட்டிக்கொண்டு விட்ட ஒரு அவலம் என்ற முறையில் மீண்டும் மீண்டும் விமர்சிக்கப்படவேண்டிய ஒன்று என்று எண்ணுகிறேன். சென்ற வாரம் எப்படி நாம் பொதுவாக சரித்திரத்தை, […]
மீண்டும் மீண்டும் கலைஞனின் முன்னுள்ள கேள்வி எதைச் சொல்வது எதை விடுவது என்பது பற்றித்தான். இந்தக் கேள்வி கலைஞனின் முன்னாள் மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் முன்னாலும் உள்ளது. ஒரு விமர்சகனின் அணுகுமுறை ஏன் இது சொல்லப் பட்டிருக்கிறது என்பதை ஆய்வு செய்வதும், அதன் பின்னால் உள்ள மனநிலையை, செய்தியை வெளிக்கொணர்வதும் தான். ஆனால் தேர்ந்த விமர்சகர்கள் தன் மனதில் ஆழப்புதைந்துள்ள முன்முடிவுகள், வெறுப்புகள், விருப்புகள், ஆதாரமற்ற புறக் காரணிகள் இவற்றைத் தாண்டி படைப்பினை அணுகவேண்டும். தேவர் மகனும், […]
யமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியல் பற்றி விரிவாகப் பேசியதால் விஸ்வரூபம் விம்ரசனத்தைத் தொடர இயலாமல் ஆகிவிட்டது. “தமிழ் சினிமாவின் சிறந்த படங்கள் எனப் பட்டியலிட்டால் அவற்றில் “குணா” (இந்தப் படம் பற்றி ஆய்வாளர் காளி சுந்தர் ஒரு அருமையான விமர்சன ஆய்வினை எழுதியுள்ளார். அது தமிழில் மொழிபெயர்க்கப் பட்டதா என்று தெரியவில்லை.), “பேசும் படம்” (இது பற்று டி ஜி வைத்தியநாதன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.) , விருமாண்டி, தேவர் மகன் , ஹே ராம்.இவற்றின் இடம் […]