author

ஆடுகளம்

This entry is part 2 of 3 in the series 9 மார்ச் 2025

கடைசி வரை அவன் சொல்லவில்லை. காலி மைதானத்தின் நடுவில் அமர்ந்துக்கொண்டு தலையை கிழக்கும் மேற்காக  அசைத்துக்கொண்டு  உற்சாகத்தில்  துள்ளி குதித்தான்.  ம்…ம்…ஓடுங்கள். .ஓடுங்கள் என்று  விசில் அடித்தான்.  கோல் என்று துள்ளி குதித்தான். ஆடுகள் மேய்க்கவந்த  மலைச்சி  யாருமற்ற  மைதானத்தைப் பார்த்தாள்  கையசைத்து துள்ளிக்குதிக்கும் இவனைப்பார்த்தாள்.  அவளும் அவன் உற்சாகத்தில்  கலந்துக்கொண்டு  துள்ளிக்குதித்தாள்.  வறண்டுப்போன  மலச்சிக்கும்  மகிழ்ச்சி வந்தது.  கொஞ்ச நேரத்தில்  மனநல காப்பக வேனில்  அவனை ஏற்றினார்கள்  அவளையும் தான்.  மலச்சி  சத்தோஷமாக ஏறிக்கொண்டாள்.  எங்கிருந்தாலும்  […]

நன்றி

This entry is part 7 of 7 in the series 23 பிப்ரவரி 2025

உங்களிடமிருந்து  நான்  நிறையக்கற்று கொள்கின்றேன். மனம் நிறைந்த  அன்பைத்தருகின்றீர்கள்.  மற்றவர்களின்  இதயத்தை திறக்க  சாவியைத்தருகின்றீர்கள்.  கள்ளத்தனங்களின்  கால் தடங்களை காண்பிக்கின்றீர்கள்  அறிவுப்பாதைகளின்  ரேகைகளில் ஒளிந்துள்ள  ஒளியை காண்பித்தீர்கள்.  தில்லுமுல்லு நிறைந்த  உலகைக்காண்பித்து  ஏமாந்த  எழுத்தாளர்களின்  கண்ணீர் காவியங்களை காண்பித்தீர்கள்.  பதிவிரதா தர்மத்தை காண்பித்து  கூடவே  பரத்தையர் தெருக்களில்  நுழைந்த  சீமான்களின் கதைகளையும் சொல்கின்றீர்கள்.  நாலு வர்ண தெருக்களை சொல்லி  நந்தன் கதையையும் சொன்னீர்கள்.  மிட்டு மிராசுகளின்  ஜல்லிக்கட்டு வண்டிகளையும் காட்டி  தாசிகள் சதைகளின்  சரித்திரத்தை சொல்லி  அழிந்து […]

துணை

புத்தகக்கடைக்கு  மனைவியையும்  அழைத்துச்சென்றேன்  வயோதிகத்தில்.  கோயில்,குளமோ போகாமல்  புதுமைப்பித்தனையும்  கி.ரா.வையும், பிரமீளையும்,  ஜெயகாந்தனையும் காட்டியவுடன்  மிரண்டுப்போய்,  மயிலை, கபாலீஸ்வரர் கோயிலுக்கு  வழிக்கேட்டாள்.  அந்த தெய்வம்  இங்கும் இருக்கின்றது  வா, வாங்கிப்படிக்கலாம்.  இனி  படியேறி, முருகனை அடையமுடியாது.  முட்டிவலி, முதுகுவலி,  கைக்கால் குடைச்சல்.  டிவி சீரியல் ஒருபக்கம்,  யுடியூப் மறுப்பக்கம்  பார்த்தது போதும்  படி  இந்த புத்தகங்களையும்  படி.  கடற்கரை காற்று  வீணாகப்போகின்றது  நட்சத்திரங்கள்  நடைக்கட்டி ஆடுகின்றது.  குடிசையில்  கோலமயில் பாடுகின்றது.  வண்ணமயமான வாழ்க்கை  இந்த  புத்தகங்களில் விரிகின்றது.  […]

வசந்தம் வரும்

This entry is part 1 of 11 in the series 16 பிப்ரவரி 2025

அப்போதுதான் வந்தமர்ந்த  புதுப்பறவையை பார்த்தேன்.  இணைக் காண சோகம்  பாடும் தேடலில் கண்டேன்.  எங்கிருந்தோ  வந்த  வண்ணத்துப்பூச்சி  பறவையின்  முகத்தில் அமர்ந்து சென்றது.  அது கொடுத்த  மகரந்த யாழின்  பாடலில்  பல்லாங்குழி வாசித்தது  புதிய பறவை.  தேடி  நிதம் சோறு தின்னும்  எறும்பின் உரசலில்  ஒய்யாரமாக ஆடியது பறவை.  கூடு விட்டு, கிளை வந்த காக்கையாரும்  ஒரு பிடி  அமாவாசை பருக்கைப்போட்டது.  கண்ணீரோடு  தின்ற  புதிய பறவை  தன்  பாட்டியை நினைத்து கண்ணீர் விட்டது.  வந்தமர்ந்த காகம்  […]

துணை

This entry is part 1 of 3 in the series 2 பிப்ரவரி 2025

எங்கோ  தலைசாய்த்து பார்க்கின்றது  சிட்டுக்குருவி.  துணையை தேடுகின்ற காலத்தில்  வேதனையை  முழுங்கிவிடுகின்றது.  ஒற்றைக்குருவியாய்  சுள்ளிகள் பொறுக்கி  கூடும் கட்ட  உடல் வேதனை.  மனம்  இன்னும்  துணை வராமல் காத்திருக்க. பக்கத்து கூட்டில்  கொஞ்சி குலாவி  மகிழ்ந்து  உயிரோடு உயிர் கலந்து  சில்லிட்டுப்பறந்தன  ஜோடிக்குருவிகள்.  சிட்டுக்குருவியின்  ஏக்கத்தில்  என்  அக்கா  தடவிய  ஜன்னல் கம்பிகள்  தேய்ந்தே போயின  பல வருடங்கள்  துணைக்காக  காத்திருப்பு  வாழ்வின் பெரும் சோகம்.  ஜாதகக்கட்டில்  பல்லாங்குழி விளையாடினார்  புரோகிதர் சிகாமணி.  சர்ப்ப தோஷம்  செவ்வாய் […]

இலக்கியம் என்ன செய்யும். 

This entry is part 3 of 8 in the series 19 ஜனவரி 2025

ஜெயானந்தன்  வாழ்வின் தீரா நதியின் ஓட்டத்தில், மனித வாழ்வு எதிர்கொள்ளும் எல்லாவிதமான வலிகளும், மனித வாழ்வின் சாபம்.  இதில் கலைஞன் தப்பித்து சிறிது நேரம் இளைப்பாற, இலக்கியம் நிழல்தரும்.  ஏழை-எளிய மனிதர்களை எண்ணிப்பாருங்கள், எண்ணில் அடங்கா துயர் தருணங்கள். நடுச்சாமத்தில் பாலுக்காக அழும் குழந்தையின் வாயில், காய்ந்த  முலையின் காம்புகள்.  கதவே இல்லாத வீட்டில், எதற்காக சாவி  தேடி அலைகின்றான் குடிகாரன்.  அநாதையாக விட்டுச்சென்றவனின்  கையில் கபால ஓடும், காவியும் எதற்கு? தப்பித்துக்கொள்ள, புத்த மடத்தையா தேடுவது.  சாமியார்தனங்களில், […]

போதி மரம்

This entry is part 4 of 4 in the series 12 ஜனவரி 2025

எனக்கு  ஞாபகமில்லை  அவரை.  அவர்  எனைப்பார்த்து  புன்னகையை சிந்தினார்  நானும்  சிந்தினேன்.  அருகில்  வந்தார். நானும்  அவரருகே சென்றேன்.  நினைவில்லையா…., இழுத்தார்.  கொஞ்சம்  நெற்றியை தடவினேன்.  “அதான் சார். … போனமாசம்  இதே இடத்தில்  நான்  வாந்தி எடுத்த போது  ஓடோடிச்சென்று , கோலி சோடா  வாங்கி கொடுத்திங்களே. ..” ஏதோ  ஒரு இடத்தில்  சிந்திய  புன்னகை  இன்னொரு  இடத்தில்  விருட்சம்.  யார் யாரோ  வருகிறார்கள், போகிறார்கள்.  அன்பே  போதிமரம்.

கடைசி ஆள்

This entry is part 7 of 10 in the series 6 ஜனவரி 2025

ஜெயானந்தன்  எல்லா  அறைகளையும் பூட்டி  சாவி கொத்தை  சிங்கார வேலர்  எடுத்து விட்டு  ஒவ்வொரு பூட்டையும்  இழுத்துப்பார்த்தார்.  ஸ்டேசன்  அடைவதற்குள்  மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்  பறந்துவிட்டது.  பிளாட்பார ஓரத்தில்  எட்டணா டீயோடு  காத்திருப்பார்  அடுத்த வண்டிக்கு. இடையே  மூன்றாவது  அறையை  பூட்டினோமா  சந்தேகம் வரவே  கால்கடுக்க ஓடினார்  வீட்டுக்கு.  எல்லா அறைகளும்  பூட்டித்தான் இருந்தன.  ஸ்டேசன்  அடைவதற்குள்  அடுத்த வண்டியும் சென்றுவிட்டது.  காலியான  ஸ்டேசனில்  அடுத்த வண்டிக்காக  காத்திருக்கும்  கடைசி ஆள்  இவரோ. – ஜெயானந்தன் 

உடைந்து போன நிலா

This entry is part 5 of 8 in the series 29 டிசம்பர் 2024

ஜெயானந்தன் உடைந்து போன  ஞாபக கண்ணாடிகளில்  நழுவி சென்றது  சித்திரை நிலா.  போன நித்திரையில்  ராமகிருஷ்ணன்  வீடகன்று போனான்.  போனவன்  வெளிச்சத்தையும்  கொண்டு போய் விட்டான்.  வீடு  இருளாகத்தான்  காய்ந்து கிடக்கின்றது.  இன்று வந்த  நிலாவும்  அவனைத்தான் தேடியது  கூடவே அவனது கவிதைகளும்.  பெட்டி நிறைய  தழும்புகிறது  அவனது  இலக்கிய தாம்பத்யம்  எதிர் வீட்டு  சன்னலிலிருந்து  எட்டி பார்க்கும்  பத்மனி  குட்டிக்கூட  என்னை பார்க்க வருவதுபோல்  அவனை  ஓரக்கண்ணால்  பார்த்து சென்றது  என் கடந்த போன  யவனத்திற்கு […]

தி.ஜானகிராமன் – 100 கடந்த,  காவ்ய நாயகன் 

This entry is part 1 of 8 in the series 29 டிசம்பர் 2024

தி.ஜா.வின் ஆன்ம பலம்தான் அவருக்கு லெளகீக வாழ்வின் சூட்சமமான மோகத்தின் மீதான, மனிதர்கள் கொண்ட ஆர்வத்தினை, இலக்கியமாக படைக்க முடிந்தது.  இவரது எழுத்துக்கள், ஒரு வகையான  Mystism, மாயாவாத காமத்தை, காமரூபணியாக காண்பித்து, மனதை பித்து நிலைக்கு கொண்டு செல்லும்.  மேலும், இவரது எழுத்துக்கள், வாலிப பருவத்தின் வாசலை தொடுவோர்க்கு காமரூபனின் காட்சி சாலையாக மாறி, உடலின் மிருகத்தை தட்டி எழுப்பிவிடும். கூடவே, தி.ஜா.வின் சாட்டை, காமக்குதிரையை அடக்க, கதையின் அடுத்த கட்டத்தில், அம்பாளையும் , சங்கீத கீர்த்தனைகளையும் சேர்த்து மிருதுவாக தடவி கொடுத்து, […]