புதை குழி புகுந்த பின்னரும் உயிர்த்தலின் பாவனைகள் நெஞ்சு தேக்கி வைத்திருந்த தாத்தாவின் ஆவலாதிகளை யார் தீர்ப்பார்கள் எனும் தீர்மானத்துள் மூழ்கித் தவிக்கும் வேர்களிடம் தொடங்குகிறது அவரின் முதல் குற்றச்சுமை அனுபவித்த உலகின் பொக்கைவாய் பொய் பூசிய வெற்றிலை பாக்கு மென்று துப்பியிருந்ததென்று உவகையின் கைக்கோல் இடரும் களமாகத்தான் உலவிக் கொண்டிருக்கும் ஊமை நிழல்கள் என்று வயோதிகக் கனவுகள் வன்மை உபாதைகள் சுமக்கச் செய்தனவென்று பார்வையின் மாயை புரைவிழுந்து நவீனங்களின் காட்சி மங்கலாய் புராதானத்திரையில் மெழுகியிருந்ததென்று ஒன்று, […]
திருந்த செய் பிழைகளெல்லாம் பழைய பித்தளை பாத்திர துளைகள் திருத்தங்கள் ளெனும் ஈயம் பார்த்து அடைத்தல் சிஷ்டம் முலாம் பூசி மறைத்தல் கஷ்டம் அம்மா மழை கொட்டி மலை சொட்டும் அருவியாய் நிலம் தொட்டு கடலெட்டும் நதிகளாய் கடன் பட்டும் தயை காட்டும் அம்மா
இரவு வானம் சூரியன்- பகலில் மத்தாப்பெரிக்கிறான். நெருப்பு பொறியில் துளைகளாகி போகிறது இரவு வானம் . களவாணி இதமான மௌனத்தை பெயர்த்து களவாடத் தூண்டும் இரவு வானில் சிதறி கிடக்கம் நட்சத்திரங்கள் மனசுக்காக … இருபதாயிரம் துளைகள் வியர்வை சொரிய எங்கேனும் இரு துளையுண்டா? இனியவளின் இதயம் நுழைய … நிலா முத்தம் கிண்ணம் நிறைய நீரெடுத்து கால்கள் நனைத்து கொள்கிறேன் நழுவி விழுகிறது நிலா ! புத்தகம் நல்ல புத்தகம் தேடி நாமெல்லாம் அலைகிறோம் வளர்த்தவர்கள் […]