author

ஜென்

This entry is part 26 of 30 in the series 28 ஜூலை 2013

ஜென் ஊஞ்சல்   காலி ஊஞ்சல் காற்றில் ஆடுகிறது முன்னும் பின்னும்   சத்தமிடாதீர்கள் அவன் கல்லறையிலாவது நிம்மதியாக உறங்கட்டும்   ஆயுளில் ஒரு முறையாவது ஆணியில் அறையப்படுகிறோம்   விரிசலடைந்த சுவரில் ஆணி இறங்குகிறது கையை காயப்படுத்தி   கிளிஞ்சல்கள் பொறுக்கும் முன்பு கடலைப் பாருங்கள்   யாருமற்ற அறையில் காற்று புரட்டுகிறது புத்தகங்களின் பக்கங்களை   எப்படி குடை பிடித்தாலும் நிழல் நனைகிறது   கடக்க கடக்க தொலைவு குறைகிறது நடக்க நடக்க கால்கள் […]

ரூபம்

This entry is part 15 of 42 in the series 25 நவம்பர் 2012

தோட்டத்துப் பூக்கள் பிணம், கடவுள், மணமக்கள் அலங்கரிப்பது எதை என்று தெரிந்து கொண்டா மலர்கிறது முலைப் பாலின் போதை மது புட்டியில் முடியும் நடுநிசி தூக்கம் இல்லை கனவுத் தொல்லை கை கதவைத் தட்ட உள்ளேயிருந்து பதிலில்லை படுக்கைவிரிப்பில் அவள் வந்து சென்ற சுவடுகள் நாய் காலை நக்குவது தெரிகிறது எனக்கு குவார்ட்டர் பத்தாது சுயத்தை இழக்கவே ஏதோ ஒரு போதை இரவில் நான் சாப்பிட்ட பாத்திரத்தை நக்கிக் கொண்டிருக்கும் பூனை போதையில் தெரியவில்லை நேற்றிரவு பெய்த […]

நிகழ்வு

This entry is part 35 of 44 in the series 22 ஏப்ரல் 2012

வெளி அனைத்தையும் உள்ளடக்கி இருக்கிறது உள்ளக்கிடக்கையை முகிலாகித் தணித்தது கூண்டுப் பறவை இறக்கையைக் கோதிக் கொள்ளும் வான விதானத்தைப் பார்த்தபடி கருடன் நிழலைக் கண்டு அஞ்சும் கோழிக் குஞ்சுகள் பரிதி முளைக்கும் வானம் தங்க நிறத்தில் மின்னும் ஒரு மிடறு நீர் உள்ளே சென்றவுடன் உடல் ஆசுவாசம் கொள்ளும் மழையின் ரூபம் விழும் இடத்தைப் பொறுத்து மாறும் ருசி கண்ட பூனை நடுநிசியில் பாத்திரத்தை உருட்டும்.

சவக்குழி

This entry is part 33 of 41 in the series 8 ஏப்ரல் 2012

இருசக்கர வாகனத்தில் செல்லும் போது எதிர்ப்படும் சவ ஊர்வலக் காட்சியைக் காணும் போது நாமும் ஒரு நாள் என்று நினைக்கத் தவறுதில்லை என்றோ ஒரு நாளுக்காக எல்லா நாளும் துயரப்பட என்னால் முடியாது ஆனால் அந்த ஒரு நாள் மிகச் சமீபமாய் இருந்தால் விடைபெறுதல் எளிதல்ல எப்போது மரணம் அழைத்தாலும் செய்வதற்கு ஏதாவது வேலை இருந்துகொண்டேதான் இருக்கும் நமக்கு என்றேனும் உயிர்த்தெழுவேனென்று எனதுடலை பாதுகாக்காதீர்கள் உயிர்த்தெழுதல் ஒரு முறையே நிகழும் தேவ காரியங்களுக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பேன் என்பது […]

வேடிக்கை

This entry is part 5 of 38 in the series 10 ஜூலை 2011

வீதியின் வழியே சென்ற பிச்சைக்காரனின் தேவை உணவாய் இருந்தது வழிப்போக்கனின் தேவை முகவரியாய் இருந்தது கடந்து சென்ற மாணவர்களின் கண்கள் மிரட்சியுடன் இருந்தது குறிசொல்பவள் தேடினாள் தனது பேச்சுக்குத் தலையாட்டும் ஒருத்தியை சோப்பு விற்பவள் யோசித்துக் கொண்டே வந்தாள் இன்று யார் தலையில் கட்டலாமென்று தபால்காரரின் கையிலிருக்கும் கடிதங்களின் கனம் சற்றே குறைந்தது நடைப்பயிற்சி செய்பவர்கள் எய்யப்பட்ட அம்புபோல விரைந்து சென்றார்கள் ஐஸ்கிரீம் வணடியில் எண்பதுகளில் வெளிவந்த பாடல்கள் ஒலித்தது காய்கறிகாரனின் கவனமெல்லாம் வியாபாரத்திலேயே இருந்தது குழந்தைகளின் […]

யார்

This entry is part 25 of 42 in the series 22 மே 2011

நேற்று பார்த்த முகங்களில் ஒன்று கூட நினைவடுக்குகளில் தங்கவில்லை தோற்றப் பொலிவுக்கு எத்தனை மதிப்பு இவ்வுலகில் எச்சில் இலை பொறுக்கும் பிச்சைக்காரி்க்குத் தான் தெரியும் பசியின் விஸ்வரூபம் குறளி வித்தைக்காரனிடம் பணத்தை பறிகொடுத்து நிற்பார்கள் இரத்தம் கக்குவதற்குப் பயந்து சில அப்பாவிகள் வன்முறையை எதிர்க்கும் திரைப்படத்தில் அரிவாள் தான் கதாநாயகன் பறவைகளின் எச்சத்தில் தான் அந்தக் காடுகளில் விருட்சங்கள் முளைத்தன உடலில் நிழல் போலல்லாமல் மனதின் நிழல் மண்ணில் விழுந்தால் நீங்கள் என்ன விலங்கென்ற புதிர் அவிழ்ந்துவிடும். […]

யாளி

This entry is part 12 of 48 in the series 15 மே 2011

 தீப்பந்தத்தை வேகமாகச் சுழற்றும் போதுதோன்றும் வட்டம் மெதுவாகச் சுழற்றும் போது காணாமல் போகும் முதல் சுவாசம் இழுக்கும் சிசு தாயின் அரவணைப்பில் சுகம் காணும் நகராமல் அமர்ந்திருந்தாலும் பூமியின் பயணத்தில் நாமும் ஒரு பிரயாணியே நாள்தோறும் சந்திரனின் தோற்றம் வளர்வதையும், குறைவதையும் கண்டு வியக்கும் குழந்தைகள் சிறிய அலைகள் முத்தமிட்டுச் செல்லும் பெரிய அலைகள் மணல் வீட்டை இடித்து சுவடில்லாமல் செய்துவிட்டுத் திரும்பும் இரவு, பகல்களாய் ஆனது வாழ்க்கை கனவுகள் மட்டும் இளைப்பாறுதல் தரவில்லை என்றால் கைதிகளாகிப்போவோம் புவியெனும் […]