ஒரு பேய் நிழ‌ல்.

ஒரு பேய் நிழ‌ல்.

ருத்ரா     அடர்மரத்தின் அடம்பிடிக்கும் கிளைகளின் கூரிய‌ ந‌க‌ங்க‌ள் வான‌த்தை கிழிக்கும்.   நீல‌ ர‌த்த‌ம் மௌன‌ம் பீச்சும். என்னை உமிழும் நிமிட‌ங்க‌ளில் எல்லாம் காறி காறி விழுந்தது ஒரு பேய் நிழ‌ல்.   மரம் அல்ல இது. ஒரு…

அம்மா என்றொரு ஆயிரம் கவிதை

==ருத்ரா வாந்தியெடுக்கும் போதே எனக்கு தூளி மாட்ட‌ உத்திரம் தேடுகிறாய். கற்பனை என்றாலும் கருச்சிலை என்றாலும் உன் உயிரே நான். தன் நிழல் வேண்டாம் என்று கள்ளிப்பால் ஏன் தேடினாய்? நீ வேண்டாம் உன் கருப்பை மட்டுமே போதும் எனும் அரக்கர்கள்…

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு

==ருத்ரா எத்தனை தடவை தான் இந்த ஜன்னலை திறந்து மூடுவது? அந்த முகம் நிழலாடியதே சரேலென்று எப்படி மறைந்தது? திறந்தே வைத்திருந்தால் முகம் காட்ட மாட்டாள் என்று தான் இந்த சன்னல் கதவுகள் கூட‌ அவள் இமைகள் பட படப்பது போல்…

குழியில் விழுந்த யானை

......... ருத்ரா ============= அந்தக்குழியில் விழுந்த யானை தவிக்கிறது. உருள்கிறது..புரள்கிறது. தும்பிக்கையை வானம் நீட்டுக்கிறது. பார்த்துக்கொண்டே இருந்து மயங்கி இந்தக் குழியில் விழக் காரணமான அந்த நிலவை நோக்கி நீட்டுகிறது. அருகில் உள்ள திராட்சைக்கொடியின் கருங்கண் கொத்துகள் போன்ற‌ கனிக்கொத்துகளையும் அந்த…

மாவின் அளிகுரல்

  ===ருத்ரா பெண்ணை நுங்கின் கண்செத்தென‌ பனிநீர் இழிபு கல்சுனை நாட‌ உழுவைத் தீவிழி பொறி படுத்த வேங்கை காணில் வெரூஉம் கருவி குன்றம் ஓர்ந்தகண் கலிமா வெறியொடு தொலைச்சும். இறைந்த எச்சக் குடர்படு அஞ்சினை அகவிய மாவின் அளிகுரல் எதிர…

நெடுநல் மாயன்.

==ருத்ரா. மயிர்த்திரள் தீற்றி உருவுகள் செய்து நெய்வண்ணம் நேரும் நெடுநல் மாயன் என்னுரு வரைதர மின்னுரு கண்டனன். காந்தள் பூக்கஞல் நளிதிரைக் கண்ணே தீண்டும் இன்பம் பருகும் பூக்கோல். குவளை உண்கண் என்கண் தாஅய் குமிழ்க்கும் அந்தீ இன்பம் கனல‌ படுதிரை…

மெல்ல மெல்ல…

ருத்ரா  மெல்ல மெல்ல.. புல் தரை ஸ்பர்சிக்கிறது. பட்டாம்பூச்சிகள் ஏறி ஏறி வழுக்கி சருக்கி ஆடுகின்றன. மேக்னா தீக்குழம்பும் தாண்டி வெண்டைக்காய் பிஞ்சு விரல்களின் நகப்பூச்சு கிலு கிலுப்பையை குலுக்குகிறது. அதிலிருந்து ஒரு கள்ளச்சிரிப்பு வெறுமைக்குள்ளும் பூவாணம் சிந்துகிறது. பொட்டு பொட்டு…

இன்னுரை தடவினும் என்னுயிர் மாயும்.

ஒல்லெனத் திரைதரும் புரிவளைப் பௌவம் முத்தம் இமிழ்தர மூசு வெண்கரை முத்தம் பெய்தென்று நுண்மணல் சிவப்ப‌ எக்கர் திரள நெடுங்கரை ஞாழல் அஞ்சினைச் சேக்கை அடையும் குருகு ஆலும் முளிக்குரல் கூர்த்த நெஞ்சில் அந்துறைச்சேர்ப்பன் மீள்மணி இரட்டும். பொலங்கிளர் பொறிவளை பொதிமணல்…

இதயம் துடிக்கும்

  நூறு ரூபாயில் தெரியும் புன்னகை சொல்லும் நம்மின் சுதந்திர மாளிகை. நான்கு வர்ணம் தகுமோ என்றான் தாழ் ஜனம் எல்லாம் ஹரிஜனம் என்றான். வெள்ளையன் தந்ததை மூவர்ணம் ஆக்கினோம். அடுத்தவர் மதமும் நம்மவர் மதம் தான் மானுடமே உயர் மதமெனச்…

காய்நெல் அறுத்த வெண்புலம்

  காய்நெல் அறுத்த வெண்புலம் போல‌ நோன்ற கவின் நெகிழ்ப்ப நோக்கி வீழும் வளையும் கழலும் புலம்ப‌ அளியேன் மன்ற காண்குவை தோழி. கொழுமுனை தடா நிற்கும் நிலத்தின் கண்ணும் ஆறு படரும் நீர்த்தட நாடன் சுரம் கடந்ததென். புல்லிய நெற்பூ…