விஷயத்தைக் கேள்விப் பட்டவுடன் என் அப்பா ஸ்வீட்டோடு வந்திறங்கி விட்டார். கண்கள் கசிய சரஸுக்குட்டீ! என்று வந்து அணைத்துக் கொண்டவர், உணர்ச்சியில் அழுதேவிட்டார். எதையோ படித்துக் கொண்டிருந்த என் கணவர் பெட்ரூமிலிருந்தபடியே எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு மனசு நிறைந்திருந்தது.இப்பத்தான் நீண்ட நாட்களுக்கப்புறம் அப்படி இப்படியென்று இரண்டு மாதங்கள் பீரியட் தள்ளிப் போயிருக்கிறது. பத்து வருஷ பிரார்த்தனை. இனிமேல் இந்த வீட்டில் ஒரு மழலை கொஞ்சி விளையாடுவதைப் பார்த்து அனுபவிக்க நமக்கு ப்ராப்தமில்லை என்ற விரக்திக்கு நாங்கள் […]
நாகேந்திரன் எனும் நாகு என்னைத் தேடிக் கொண்டு வீட்டுக்கு வந்த போது, காலை பத்து மணி. விஷயமில்லாமல் வரமாட்டானே. இது அவனுடைய பிஸி நேரமாச்சே. நாங்கள் டா போட்டு பேசிக் கொள்ளும் பால்யகால சினேகிதர்கள். “டேய்! வேணு! ரெட்டேரியில வெளிநாட்டுப் பறவைங்க எக்கச்சக்கமாய் வந்து எறங்கியிருக்காம்டா. கெளம்பு.”. வேலைகளை அப்படியப்படியே போட்டுவிட்டு சந்தோஷமாய் கிளம்பிவிட்டேன்.நான் ஒரு பறவை நேசன். ஆர்னித்தாலஜி சம்பந்தமாய் நிறைய தெரியும்..கோல்டன் ஈகிளைப் பற்றி உங்களுக்குக் கூட தெரிஞ்சிருக்கலாம்,ஆனால் அது வருஷத்திற்கு ஒரு முட்டைதான் […]
”மச்சான்! விஷயம் தெரியுமா? சுஷ்மா டிவோர்ஸ்டு கேஸாம்ல?.”——திவாகர் உற்சாகமாய் அடித்தொண்டையில் கத்த, மற்ற சீட்களில் இருந்தவர்கள் ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொண்டனர். ஆஹா அப்படியா?.இப்பவே பழம் நழுவி பாலில் விழுந்து, அது நழுவி இவன்க வாயில் விழுந்திட்டதுன்னு ஒவ்வொருத்தனுக்கும் நெனைப்பு. அப்ப சுஷ்மா ருசி கண்ட பூனையா?.வெரிகுட்…..வெரிகுட்…சுலுவாய் அமுக்கிடலாம் அந்த நொடி முதலே அவளை வீழ்த்துவதற்கான வியூகங்கள் ஒவ்வொருத்தனுக்குள்ளும் ஓட ஆரம்பித்தன. அது கனிமவள சர்வே டிபார்ட்மெண்ட்டின் துணை இயக்குநர் அலுவலகம்,ஹெட் ஆபீஸ் மும்பையில் இருக்கிறது. இங்கே எம்ப்ளாயிஸ் […]
அது ஒரு நீண்ட மினி ஹால் மாதிரியான அறை.. உள்ளே நுழைந்தவுடன் ஜிவ்வென்று கவ்வும் ஏ.ஸி.யின் குளிர்…அதையுந்தாண்டி மூக்கில் உறைக்கும் சேவ்லான் நெடி.வரிசையாய் கட்டில்களில் பல நிலைகளில் அபாய கட்டங்களில் நோயாளிகள். சிலர் ஆக்ஸிஜன் மாஸ்க் வைத்த பின்பும் மூச்சுத் திணறலுடன் கிடந்தார்கள்.அதில் சிலருக்கு கோமா மயக்க நிலை. சொல்லி வைத்தாற்போல அல்லது யூனிஃபார்ம் போல எல்லாருக்கும் தலையில் பெரிய கட்டு. இதுதான் சென்னை பொது மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை.யின் ஐ.ஸி..யூ. இண்டென்சிவ் கேர் […]
இச்சிறுகதை எழுத தகவல் தந்து உதவிய சில குறிப்புகள்:—-. 1)= ’உடையாளூரில் பள்ளிப்படையா?.— கட்டுரை எழுதியது இரா.கலைக்கோவன்.—– நன்றி வரலாறு.காம்.இணையதளம் 2) =நன்றி— தமிழர் பார்வை இணைய தளத்தில்— கருவூர் தேவரின் சாபம் பற்றி மூத்த பத்திரிகையாளர் திரு அய்யப்பன் அவர்களின் தகவல். 3)= ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?.இணையதள ப்ளாக் ல் எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு திரு. நிர்மல் அவர்கள் ஒரு கடித வடிவில் விவாதித்த ஒருகட்டுரை 4) =‘ சோழர்கள் ‘வரலாற்று நூல் எழுதியது […]
சாளரம் வழியாகப்பார்க்கும்போது எதிர்வாடையில் வெளித்திட்டில் தேவகிஉட்கார்ந்திருப்பது தெரிகிறது வேலையை விட்டு இப்போதுதான் வந்திருக்க வேண்டும். உடல் முழுக்க சிமெண்ட் வெள்ளை பூத்திருந்தது. பாவப்பட்ட ஜென்மம்.. அவள் புருஷன் ஒரு மொடாக்குடியன். தினந்தினம் அவர்களுக்குள் ஓயாமல் சண்டை நடக்கும். உச்சக் கட்டத்தில் தம்திம் என்று அடி விழும். கொடுப்பது யாராகவும் இருக்கலாம்.. இவள் கை ஓங்கியிருந்தால் அப்புறம் மூன்று நாட்களுக்கு அவன் இந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டான். அறுத்துக் கொண்டு ஓடிய மாடு எப்போது பட்டி […]
”பீப்…பீப்…பீப்….”.—என் காதருகில் கர்ணகடூரமாய் போன் சத்தம்.,என் தூக்கத்தைக் கலைத்தது.. “சனியனே! உன் வாயை மூடித் தொலை.” மூடிக் கொண்டது. என் குரலுக்குக் கட்டுப்படும். வாய்ஸ் ரெகக்னேஷன் சிப்—ன் ஜாலம்.. கணினியில் எக்ஸ்பர்ட் சிஸ்டமும், நாலெட்ஜ் இன்ஜினியரிங்கும், நுழைந்ததிலிருந்து ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜன்ஸ் துறை வெகுவாகத் தேர்ச்சி பெற்று விட்டது.நேனோ டெக்னாலஜியும் கை கொடுக்க, இன்று அதன் வளர்ச்சியை கணிக்க முடியாது. இப்போதெல்லாம் மனிதர்கள் அதிகம் யோசிப்பதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. இன்று நமக்காக அவைகள் யோசிக்கின்றன.. ஸோ யோசிக்காமல் […]
வழக்கம் போல இன்றைக்கும் நான் ஆபீஸுக்கு லேட். என்ன பண்றது?.எனக்கு வாய்ச்ச மகராசி எட்டு மணிக்குத்தான் டிபன் தருவாள்.எட்டரை மணிக்குத்தான் லஞ்ச் பாக்ஸ் ரெடியாகும்.அதுக்கு மேல இந்தக் கூட்ட நெரிசலில் பஸ் பிடிக்கணும்.எங்கே?,கண்ணதாசன் நகரிலிருந்து வேளச்சேரி போவணும். ஆபீஸ் அமைதியாக இருந்தது.டைரக்டர் ஏற்கனவே வந்துவிட்டிருக்கிறார்,அறையில் ஃபேன் ஓடிக்கிட்டிருக்கு. “ வாய்யா! எவர் லேட் ஏகாம்பரம்.”—இது ஏ4 ன் நக்கல். “டிராஃபிக்ஜாம்யா.” “இது வழக்கமா சொல்றது. எதையாவது புதுசா சொல்லப்பா.நாங்க 8-30க்கே ஆஜர் தெரியுமில்லே?.” “ அதிசயம்தான் சரீ […]
அடியே அலமு! மளிகை ஐட்டங்களுக்கு லிஸ்ட் போட்டுட்டியோன்னோ? குடு போய் வந்துட்றேன். அப்புறம் நான் சொல்றாப்பல நடந்துக்கோ.இனிப்புக்கு கேசரி கிளறிடு. போறும். வேலைக்கு சுலுவு. வேணும்னா முந்திரி பருப்பை சித்த உபரியா சேர்த்துக்கோ. பசு நெய்யை தளற வார்த்துக்கோ. .கையிலெடுத்தா நெய் சொட்டணும். “சும்மா படுத்தாதேள்.. நம்மாத்து கொழந்தைகள்னா வர்றது?. கேளுங்கோ! அதிரசம்,பாசந்தி, கைமுறுக்கு, அப்புறம் ‘மலாய்கஜா’ன்னு பால்கோவால ஒரு ஐட்டம் செய்வேனே.போன தடவையே மஞ்சுஆசைப்பட்டா. பதம் இளகலா பிசுபிசுன்னு வரணும். அவளுக்கு சரியாவே வரலியாம்.. வர்றச்சேஒரு […]
காலையிலிருந்தே டாக்டர் இளமாறனிடமிருந்து நாலைந்து போன் கால்கள் வந்துவிட்டன.. .அவருடைய வயசுக்கு அந்தகாலங்களில் சுப்பிரமணி,முருகன்,முனுசாமி,வேணு,அல்லதுமுரளீதரன்,முகுந்தன், ஸ்ரீநிவாசன், இப்படித்தான் பெயர் வெச்சிருக்கணும். வித்தியாசமாய் டாக்டர்.இளமாறன்.?. அவங்கப்பா தமிழ் வாத்தியா இருந்திருக்கணும்..இளமாறன் தான் .. டிபார்ட்மெண்ட் ஆஃப் ஜெனெட்டிக் ரிசர்ச் அண்டு அனலைஸஸ் என்கிற எங்கள் துறையின் தலைவர்.. .நிறைய மூளை,நிறைய படிப்ஸ்.—மாலிக்யூலர் பயாலஜியில் போஸ்ட் கிராஜுவேட், ப்ளஸ் கலிஃபோர்னியா ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி கல்வி நிலையத்தில், ஜீன் ம்யூட்டேஷனில் நான்கு வருட ஆராய்ச்சி டாக்டரேட். அதைவிட நிறைய முன்கோபம், கொஞ்சம் […]