ஸிந்துஜா மல்லேஸ்வரம் சர்க்கிள் சிக்னலில் நிறுத்தப்பட்டிருந்த வண்டிகளில் ஒன்றாக அவர்களதும் இருந்தது. காரோட்டியின் பக்கத்தில் அவன் உட்கார்ந்து வெளியே வேடிக்கை பார்த்தான். நடைபாதையின் மேல் எல்லாவிதமான கடைகளும் பரவிக் கிடந்தன. சிக்னல் கிடைத்து வண்டிகள் நகர ஆரம்பித்தன. சிக்னலைக் கடக்கும் போது அவள் அவன் பார்வையில் பட்டாள். அவன் துள்ளியெழுந்து அவள்தானா என்று ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான். காரோட்டி ஏய், ஏய், ஒளுங்கா உக்காரு. உனக்குப் பயித்தியமா பிடிச்சிருக்கு? என்று சத்தம் போட்டான். வெளியே தென்பட்ட ஒரு போலீஸ்காரர் அவன் தலையைப் பார்த்துக் கன்னடத்தில் […]
தமிழில் :ஸிந்துஜா
தமிழில்: ட்டி.ஆர். நடராஜன் இரக்கம் பால் லாரன்ஸ் டன்பர் அந்தக் கூண்டுப் பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத் தெரியும் காயமுற்ற அதன் இறகு , துடிக்கின்ற அதன் நெஞ்சு – கதவுக் கம்பிகளில் அதன் படபடப்பு – எக்களிப்போ மகிழ்சியோ அல்ல வெளிவருவது . இதயத்தின் ஆழத்திலிருந்து அது இறைஞ்சுகிறது : சொர்க்கத்தை நோக்கி மேலே என்னைப் பறக்க விடு. அந்தக் கூண்டுப் பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத் தெரியும் ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்குக் கொண்டு வருகையில் பில்லிஸ் வீட்லி கருணை என்னை அந்தக் காட்டிலிருந்து கூட்டி வந்தது. வெளிச்சம் […]
ஸிந்துஜா “அவர் கதைகள் மேகம் போன்றவை. அவற்றின் உருவ ஒரங்கள் விமர்சகர்களின் வரைபடக் கோடுகளை ஒட்டி வராமல் துரத்திக் கொண்டோ உள் தள்ளியோ இருக்கலாம். ஆனால் அதுவே வடிவமாகி விடும். தனித்தன்மை பெற்றவையாக இருக்கும்… வாசகனை நிமிர்த்தி உட்கார வைக்கும் அதிர்ச்சியும் ஆற்றலும் உள்ள எழுத்து அது” என்று “இலக்கிய வட்டம்” ஜூலை 1964 இதழில் எம் .வி. வெங்கட்ராம் பற்றி தி. ஜானகிராமன் எழுதுகிறார். இந்த வரிகளில் காணப்படும் நிச்சயத்தையும் சந்தோஷத்தையும் வெங்கட்ராம் தன் எழுத்தில் நிதானமாகவும் அழுத்தமாகவும் ஸ்தாபித்திருக்கிறார், அவரது அறுபது வருஷ இலக்கிய வாழ்வின் பரிபூரணத்தை அவரது கதைகளில் நாம் காணமுடிகிறது. இதற்கு முன்பு “நிதானம்” என்று ஒரு […]