ஸிந்துஜா பாப்பாவுக்குப் பரிசு குழந்தைகளின் உலகத்தில் உள்ளே நுழைவதே கஷ்டம். அதிலும் அவர்கள் சற்று விவரம் அறிந்து கொண்ட பருவத்தில் இருக்கும் போது அவர்களின் பார்வை,எண்ணம் எல்லாம் திகைக்கும் வண்ணம் மாறி விடுவது ஆச்சரியத்தை சதா அள்ளித் தெளிக்கும் விஷயம்தான். எட்டு வயதுப் பாப்பாவின் (பாப்பாவின் பெயரே பாப்பாதான் !) உள்ளத்தில் ஜானகிராமனைப் போன்ற எழுத்தாளர் நுழைந்து விடும் போது என்னென்ன சாகசங்கள்,நிகழ்ந்து விடுகின்றன ! குழந்தையின் மனோலயத்தைப் புரிந்து கொண்டு அவள் மீது பரிவுடன் ஜானகிராமன் சித்தரிக்கும் செயலோடு இணைந்த தோற்றம் சிலிர்ப்பு, சத்தியமா ஆகிய அவரது கதைகளை நினைவில் […]
ஜானகிராமன் எந்த ஊரில் , தேசத்தில் இருந்தாலும் அவர் உடம்பு மட்டுமே அங்கே நிலை கொண்டிருக்கும் ; மனது என்னமோ தஞ்சாவூரில்தான் என்று பல பேர் பல முறை பேசியும் எழுதியும் காண்பித்திருக்கிறார்கள். அவர் சென்னையில், தில்லியில் இருந்த போதும் செங்கமலமும் பூவுவும் ஆறுகட்டியிலும், செல்லப்பா தாழங்குடியிலும், காமேச்வரனும் ரங்கமணியும் நல்லூரிலும் , சட்டநாதனும், புவனாவும் செம்பானூரிலும் அம்மணியும் கோபாலியும் அன்னவாசலிலும் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தார்கள். தஞ்சையையும் காவிரியையும் மனதுக்குள் வைத்துப் பூஜித்து ஒரு ரிஷி போலத் தபஸ் பண்ணிக் கொண்டிருந்தார் […]
எழுதிய / பிரசுரமாகிய காலமோ, இதழ் பெயரோ குறிப்பிடப்படாத பதினைந்து கதைகளை உள்ளடக்கி ஐந்திணைப் பதிப்பகம் “தி. ஜானகிராமன் படைப்புகள்” என்று இரண்டு தொகுதிகள் கொண்டு வந்தது. அந்தப் பதினைந்து கதைகளுள் ஒன்றுதான் “23இ பேருந்தில்” முதல் தடவை வாசிக்கும் போது இந்தச் சிறுகதையில் உள்ளடங்கியிருக்கும் சூக்ஷ் மம் என்ன என்று தெரிவதில்லை. ஒரு பஸ்ஸில் சில பிரயாணிகளுக்கு இடையே நடக்கும் மனஸ்தாபத்தின் காரண காரியங்களையும் அது எவ்வாறு முடித்து வைக்கப்படுகிறது என்பதையும் பற்றிய கதை போலத் தோற்றமளிக்கிறது. ஆனால் கதையின் முடிவில் தி.ஜா.ஒரு குறிப்பு தருகிறார். அதனால் இப்போது இந்தக் கதையை இரண்டாம் முறை, மூன்றாம் முறை படிக்கத் […]
கால தேச வர்த்தமானங்களைக் கடந்து நிற்பதுதான் இலக்கு என்று இலக்கியம் வளர்ந்து கொண்டு வருகிறது. ஒரு சீரிய இலக்கியவாதியின் பார்வை, நட்டு வைத்த மைல்கல் போல அன்றும் அதற்கு அப்புறமும் தான் முதலில் கொண்ட அபிப்பிராயத்தையே ஒரு சுமையாக முதுகில் ஏற்றிக் கொண்டு, கண் திறந்து பார்க்காத நிரட்சரகுட்சியாக இருப்பதில்லை. மாறுதல்களின் வர்ணஜாலத்தில் மனதைப் பறி கொடுப்பவன்தான் எழுத்தை ஆராதிக்கும் இலக்கியவாதியாக மிளிர்கிறான். கோஷங்கள், கட்சி ஈடுபாடுகள், ஜாதிப் பிரேமை, மேற்கைப் பார்த்துக் கூவும் ‘இச’ வழிபாடுகள் போன்ற பிசுநாரிகளைத் தவிர்த்துக் கலை எழுகிறது. கலைஞனும். ஜானகிராமன் 1982ல் காலமானார். […]
ஸிந்துஜா கோபால் வாசலுக்கு வந்து இருபுறமும் திரும்பிப் பார்த்தான். உள்ளிருந்து வந்து கொண்டிருந்த வாலாம்பா “என்ன தேடறேள்?” என்று கேட்டாள். “அப்பாவை எங்க காணம்?” “அவர் அவசரமாக புஜ்ஜிக்கு கலர்பென்சில் வாங்க மளிகை கடைக்கு போயிருக்கார்” என்றாள். கோபால் மனைவியை உற்றுப் பார்த்தான். அவள் செய்வது சரியில்லை என்பது போல். “நான் என்ன பண்ணறது? ஒரு போன் போட்டுச் சொன்னா சுப்பிரமணியா ஸ்டார்ஸ்லேந்து பறந்துண்டு வந்து கொடுத்துட்டுப் போவான்னு அடிச்சிண்டேன். கேட்டாத்தானே? லேட்டாகும்னு விறு விறுன்னு ஓடிப் போயிருக்கார்” என்றாள். “என் மாமனாரை நீ […]
காவலுக்கு ஒரு நடைச்சித்திரத்தை அழகிய சிறுகதையாகக் கொண்டு வருவது எப்படி? மனிதர்களில்தான் எத்தனை வகை? ஆனால் எல்லோரையும் எல்லாவற்றையும் இருவரின் பேச்சில் வெளிக் கொணரும் கலைத்திறமை தி. ஜானகிராமனிடம் பளிச்சிடுகிறது. வெத்திலைக்கார வேதாந்தி (மனுஷன் பாம்பாட்டிச் சித்தரின், சிவவாக்கியரின் சிந்தனைத் தெறிகளை உள்வாங்கிக் கொண்ட சாயபு !) வாடிக்கையாளரின் வீட்டுக்கு வெத்திலை கொடுத்து விட்டுப் போக வருகிறார். அங்கே அவர் சந்திப்பது,பொல்லென்று வெளுத்த தலை, நெற்றியில் சந்திர வளையம் போல் திருமண், தள்ளாடித் தள்ளாடி முந்தானை பக்கம் தொங்கத் தொங்க […]
அவனது அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த மீரா “சார், உங்களுக்கு போன் வந்திருக்கு, கொடுக்கட்டான்னு ரிசப்ஷன்லேந்து அமலா கேக்கறாங்க” என்றாள். மீரா அவனுடைய பி.ஏ. அவனிடம் கைபேசி தவிர அவனுக்கென்று தனிப்பட்ட தொலைபேசி இணைப்பும் இருக்கிறது. தனிப்பட்ட தொலைபேசியின் இன்டெர்காம் இணைப்பு மீராவிடம் உள்ளது. இந்த இரண்டையும் விட்டு விட்டு அலுவலகத்தின் பொது எண்ணில் அழைப்பது யார் என்று முத்துக்குமாருக்கு ஆச்சரியமாக இருந்தது. “யாராம்?” என்று அவளிடம் கேட்டான். “பெயர் சொல்லலையாம். மதுரேலேர்ந்து கால்னு அமலா சொன்னாங்க” […]
மறதிக்கு ……. “தாத்தாச்சாரி, நாலு கார்டு வேணும்யா!” “எனக்கு ஒரு மணியார்டர் இருக்கணுமே, தாத்தாச்சாரி? “ஓய் தாத்தாச்சாரி, நாளைக்கு வர போது ஒரு பொடிப்பட்டை வாங்கிண்டு வாரும்.மறந்து போயிடப்படாது. உம்மைத்தான் நம்பியிருக்கேன்.” ” தாத்தாச்சாரி , இன்னிக்கி துவாதசியாச்சே. இங்கேதான் சாப்பிட்டுப் போயிடுமே.” ” தாத்தாச்சாரி, போகிறபோது இந்த லேகிய டப்பாவைச் சிங்கார உடையார் கிட்டே கொடுத்துடுமே.” “வெயில் கண்கொண்டு பார்க்க முடியலே. ஏனையா இந்த அபர வயசிலே, இந்த அவதி? ரொம்ப கௌரவமான உத்தியோக மாச்சீன்னு விட மனசு வல்லியா?” “சாமி, நம்ப மவன் அக்கரையிலேர்ந்து எளுதியிருக்குறானா?” ” […]
சித்துராஜ் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி எட்டரை என்றது. பாரில் உட்கார்ந்திருந்தான்.சித்துராஜ். மனோகரனிடம் அவனைச் சந்திக்க வேண்டும் என்று அன்று காலையில் கேட்டான். இருவரும் சந்தித்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகியிருக்கும். மனோகரன் சித்துராஜுவுக்கு அறிமுகமானது அவனுடைய கம்பெனிக்கு சித்துராஜுவின் பாக்டரியில் தயாரான பொருட்களை வாங்கிய போதுதான். அந்த நட்பு நீடித்ததால் வியாபாரம் தொடர்ந்ததா அல்லது வியாபாரத் தொடர்பால் நட்பு பலமடைந்ததா என்று சித்துராஜ் அவ்வப்போது நினைத்துக் கொள்வான். “ராத்திரி வீட்டுக்கு வாயேன்” என்றான் மனோகரன். அவன் சித்துராஜுவிடம் எதற்காகத் தன்னைப் பார்க்க […]
‘பழுத்துப் போன வேட்டி. தோளில் அழுக்குத் துண்டு. வெறுங்கால். தலையில் கட்டுக் குடுமி. முன் தலையில் அந்தக் காலத்துச் செட்டியார் மோஸ்தரில் ‘ப’ போல சவரம் செய்த தலை. ‘ப’ வைச் சுற்றி கருகருவென்று கொஞ்சம் அலைபாய்கிற தலைமயிர். இப்போதெல்லாம் நாமம் கூட இல்லை. காலை, பகல், மாலை – எந்த வேளையிலும் நாமம் இல்லை.குளிக்கக் கூட அவருக்கு மனசு வரவில்லை.மாநிறத்துக்கும் குறைந்த தவிட்டு அல்லது சாலைமண் நிறம். இப்போது குளிக்க மறந்ததாலோ என்னவோ,தோலுக்கு அசல் மண் நிறமே வந்து விட்டது. தி. ஜா. பத்து செட்டியை வருணிக்கும் விதத்தில் உங்கள் மனக்கண்ணில் அடி […]