தமிழ்நாட்டு கல்வியின் அவல நிலையின் மோசமான உதாரணம் — சீமான்

This entry is part 11 of 11 in the series 13 செப்டம்பர் 2020

. விவசாயம் சார்ந்த பொருளாதாரத்துக்கு தமிழ்நாட்டை அனுப்ப கோரும் சீமானின் பேச்சு இங்கே. அவ்வப்போது அவர் “நாயே நாயே” என்று  திடீர் திடீர் என்று கத்துவதால் உங்களது இதயத்துக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நான் பொறுப்பில்லை என்று கூறிகொண்டு இந்த வீடியோவை பார்க்கும் படி கேட்டுகொள்கிறேன் இதய பலகீனமானவர்கள் அதனை பார்க்கமுடியாவிட்டால்,  அவர்களுக்காக இவரது சில கருத்துக்களை இங்கே படித்துகொள்ள எழுதுகிறேன்.1. ஆங்கிலப்பள்ளிகளை மூடவில்லை, ஆனால் இதற்குமேல் திறக்க அனுமதி இல்லை  2. ஆங்கில பள்ளிகள் எத்தனை […]

செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 2 – திறல்

This entry is part 9 of 11 in the series 13 செப்டம்பர் 2020

    சித்துராஜ் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி எட்டரை என்றது. பாரில் உட்கார்ந்திருந்தான்.சித்துராஜ். மனோகரனிடம் அவனைச் சந்திக்க வேண்டும் என்று அன்று காலையில் கேட்டான். இருவரும் சந்தித்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகியிருக்கும். மனோகரன் சித்துராஜுவுக்கு அறிமுகமானது அவனுடைய கம்பெனிக்கு சித்துராஜுவின் பாக்டரியில் தயாரான பொருட்களை  வாங்கிய போதுதான். அந்த நட்பு நீடித்ததால் வியாபாரம் தொடர்ந்ததா அல்லது வியாபாரத் தொடர்பால் நட்பு பலமடைந்ததா என்று சித்துராஜ் அவ்வப்போது நினைத்துக் கொள்வான்.  “ராத்திரி வீட்டுக்கு வாயேன்” என்றான் மனோகரன். அவன் சித்துராஜுவிடம் எதற்காகத் தன்னைப் பார்க்க […]

நாம்

This entry is part 8 of 11 in the series 13 செப்டம்பர் 2020

புஷ்பால ஜெயக்குமார் தெருவில் நடந்தவன் நட்ட மரத்தில் வீசும் காற்றில் தென்றல் எனும் பழைய வார்த்தை சாட்டிலைட் படத்தில் தெரியாது நடப்பது உருளும் பூமி நகரும் நிலவு என்றுமே இருக்கிற காலம் சாலையாய் விரித்த பாய் கால்களை மிதிக்கும் ஓடும் வண்டியின் அனைத்து கோளாறுகளையும் உலோக ஜாஸ்  இசைப் பாட்டினை பதிவு செய்யும் வாலென வளைந்து  நீளும் என் அயர்ச்சி பயணத்தில் கப்பல் தரும் தனிமை மற்றும் எதிர்பார்ப்பு அதுதான் வழி அதுதான் திசை என முரசு கொட்டும் பாகை மானியின் பல்சக்கரத்தை […]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 11 – பத்து செட்டி

This entry is part 10 of 11 in the series 13 செப்டம்பர் 2020

  ‘பழுத்துப் போன வேட்டி. தோளில் அழுக்குத் துண்டு. வெறுங்கால். தலையில் கட்டுக் குடுமி. முன் தலையில் அந்தக் காலத்துச் செட்டியார் மோஸ்தரில் ‘ப’ போல சவரம் செய்த தலை.   ‘ப’ வைச் சுற்றி கருகருவென்று கொஞ்சம் அலைபாய்கிற தலைமயிர். இப்போதெல்லாம் நாமம் கூட இல்லை. காலை, பகல், மாலை – எந்த வேளையிலும் நாமம் இல்லை.குளிக்கக் கூட அவருக்கு மனசு வரவில்லை.மாநிறத்துக்கும் குறைந்த தவிட்டு அல்லது சாலைமண் நிறம். இப்போது குளிக்க மறந்ததாலோ என்னவோ,தோலுக்கு அசல் மண் நிறமே வந்து விட்டது. தி. ஜா. பத்து செட்டியை வருணிக்கும் விதத்தில் உங்கள் மனக்கண்ணில் அடி […]

ப.தனஞ்ஜெயன் கவிதைகள்

This entry is part 7 of 11 in the series 13 செப்டம்பர் 2020

             ப.தனஞ்ஜெயன்   1.கணித சமன்பாடுகளோடு காயும் வெயில் பெய்யும் மழை வீசும் காற்றுக்கிடையில் தவிக்கும் செடிகளின் வேர்களுக்கிடையில் ஏற்படுத்தும் பௌதீக களைப்பால் அழுதுகொண்டிருக்கும் வேர்களின் துன்பங்களை அறியாமல் உதடுகளும் இதயங்களும் சொல் களிம்பை தடவி காற்றில் பறக்கவிட்டு நீடித்து எழுத முயல்கிறது சில பொருந்தாத முடிவுகளை. 2.என்னைச்சுற்றியிருக்கும் இயற்கையின் அணைப்புக்காக இதயத்தைப் பிழிந்து அன்பைத் திரட்டி சலனமின்றி மழையாய் பெய்கிறேன் எப்பொழுதும் ஒரு பறவையின் வழிபாடு என்னைப் பரவசம் அடையச்செய்யும் மழைக்கு மேகம் ஆடையாய் இருப்பதை விலக்கி […]

ஐங்குறு நூறு — உரை வேற்றுமை

This entry is part 6 of 11 in the series 13 செப்டம்பர் 2020

                                                               ஐங்குறு நூறு என்பது ஒவ்வொரு திணைக்கும் நூறு பாடல்கள் வீதம் என்னும் வகையில், ஐந்து குறுகிய நூறு பாடல்கள் அடங்கிய தொகுதியாகும். இந்நூலின் நெய்தல்திணைப் பாடல்களை அம்மூவனார் பாடி உள்ளார். அப்பாடல்களில் ஆறாவது பிரிவாக ‘வெள்ளாங்குருகுப் பத்து’ என்பது அமைந்துள்ளது.  வெள்ளாங் குருகு என்னும் பறவையைப் பற்றிய செய்திகள் இப்பத்துப் பாடல்களிலும் பயின்று வருதலால் இப்பகுதி வெள்ளாங்குருகுப் பத்து என்று பெயர் பெற்றது. வெள்ளாங்குருகு என்பது நீர்ப்பறவை இனத்தைச் சேர்ந்தது. வயிற்றுப்புறத்தில் வெண்மை நிறமும், […]

“ஞானப்பால்” – ந.பிச்சமூர்த்தி – சிறுகதை வாசிப்பனுபவம்

This entry is part 5 of 11 in the series 13 செப்டம்பர் 2020

                                              உஷாதீபன்,                                                                                 வெளியீடு=’ந.பிச்சமூர்த்தியின்                                           தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – சாகித்ய அகாதெமி வெளியீடு.                                                   தொகுப்பு – வெங்கட் சாமிநாதன் லௌகீக வாழ்க்கையில் உழல்பவர்கள் ஞானம் பெறுவது எப்போது? எப்படி? அந்த வாழ்க்கையை முழுவதும் முறையாக வாழ்ந்து கழித்தலே அதற்கான வழிமுறை. மன முதிர்ச்சி என்பது அந்த அனுபவங்களிலிருந்தே கிட்டுகிறது. எல்லோருக்குமா கிட்டி விடுகிறது? முறையான நியமங்களோடு, கடமையைச் செய்-பலனை எதிர்பாராதே என்கிற தாத்பர்யத்தேயாடு  வாழ்ந்து கழித்தவனுக்கு அது ஓரளவு சாத்தியமாகிறது. […]

கள்ளுண்டு தள்ளாடும் தமிழ்

This entry is part 4 of 11 in the series 13 செப்டம்பர் 2020

கோ. மன்றவாணன்       கள் என்றாலே மயக்கம் தருவது. “கள்” விகுதியும் நம் புலவர் பெருமக்களுக்கு மயக்கம் தந்துள்ளது.       எழுத்துகள் என்று எழுத வேண்டுமா? எழுத்துக்கள் என்று எழுத வேண்டுமா? வாழ்த்துகள் என்று எழுத வேண்டுமா? வாழ்த்துக்கள் என்று எழுத வேண்டுமா? என்றெல்லாம் இலக்கணப்போர் நடத்தி வருகின்றனர்.       இந்தப் போர் முடிவதுபோல் தெரியும். ஆனால் முடிவது இல்லை.       “முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்” என்றொரு திரைப்பாடலைக் கண்ணதாசன் எழுதி இருந்தார். “சித்திர மண்டபத்தில் […]

கண் திறப்பு

This entry is part 3 of 11 in the series 13 செப்டம்பர் 2020

  மஞ்சுளா ஒரு மழைத் துளிக்குள் கண் விழிப்பது  எத்தனை விதைகளோ?  இந்த மண்  ஒவ்வொரு கண்ணாய்  திறக்கும் மாயத்தை  செய்பவருண்டா?  மரமாவது  நட்டு  வை  அல்லது  ஒரு  சிறு  செடியாவது  ஊன்று                    -மஞ்சுளா

சொன்னதும் சொல்லாததும் – 1

This entry is part 2 of 11 in the series 13 செப்டம்பர் 2020

          அழகியசிங்கர்     நான் தினமும் கவிதை வாசிப்பது வழக்கம்.  அப்படி வாசிக்கும் போது கவிதையைப் பற்றி எதாவது தோன்றும்.  ஆனால் படிப்பதோடு சரி.  அப்படியே விட்டு விடுவேன்.      திடீரென்று தற்சமயம் ஒரு எண்ணம்.  வாசிக்கிற கவிதையைக் குறித்து எதாவது சொல்ல முடியுமா என்று.    முதலில் எதாவது ஒரு கவிதையை எடுத்துக்கொள்வோம்.    ஞானக்கூத்தனின் ‘கல்லும் கலவையும்’  என்ற கவிதையை எடுத்து  வைத்துக்கொண்டேன்.     முதலில் கவிதையை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். கல்லும் கலவையும்கல்லும் கலவையும் கொண்டுகரணையால் தடவித் […]