author

பெண்கள் பெண்கள் பெண்கள்

This entry is part 6 of 7 in the series 5 ஏப்ரல் 2020

ஸிந்துஜா   1 உங்களிடம் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் எனக்கு எதிரே வரும் போது  என்னைப் பார்க்காமல் செல்லுங்கள்.. 2 எனக்கு அவர்கள் ஸாரி அணிந்து கொண்டு வருவதுதான் பிடிக்கும் என்று எப்படியோ தெரிந்து கொண்டு மற்ற எல்லா ஆடைகளையும் அணிந்து வருகிறார்கள். 3 எதிரே வருபவளைப் பார்க்காமல் போகிறவன் காதுகளில் துப்புகிறாள் எரிச்சலுடன்: மூஞ்சியைப் பாரு. 4 பெண்ணென்னும் மாயப் பிசாசு எனறவனைக் கூப்பிட்டு உதைக்க வேண்டும். பிசாசை அவமதிக்க அவனுக்கென்ன உரிமை இருக்கிறது ? 5 […]

அழுத்தம் நிரம்பிய அடங்கிய குரல்

“இதுகள் ஸ்கூல் விட்டா வீடு, வீடு விட்டா ஸ்கூல்னு தான்னு கிடக்குகள். வெளில போய் மத்த குழந்தைக ளோட விளையாடலாம்னு பாத்தா அதுக்கும் இவரே பெரிய எதிரி. ராத்திரி எட்டு மணிக்கு குடிச்சுட்டு வந்து மாடிப்படில வாயிலெடுக்கறதும், வாசல்ல வந்து மயங்கி விழுந்து கிடக்கறதும் மத்த குழந்தைகள் பாக்காமலா இருக்கா? மறுநாள் ஒவ்வொண்ணும் இதுகளைக் கேலி பண்றதே பெரிய விளையாட்டா எடுத்துண்டு.. எனக்குத்தான் பகவான் நரகத்திலே விழுந்து கிடன்னு தலேல எழுதி அனுப்பிச் சிட்டான், இந்த புஷ்பங்கள்எதுக்கு […]

மனதைத் திறந்து ஒரு புத்தகம் அழகியசிங்கரின் கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து

This entry is part 3 of 10 in the series 29 ஜூலை 2018

ஸிந்துஜா முகநூல் ஒரு முகமூடி அணிந்தவர்களின் விளையாட்டு அரங்கமாகி விட்டது. பெரும்பாலோருக்கு அணிந்திருக்கும் முகமூடிகளைக் களைந்து ‘சட்’டென்று இன்னொன்றை எடுத்து அணிவதில் சிரமமும் இல்லை. தயக்கமும் இல்லை. முகநூலில் கரை புரண்டு ஓடும் வார்த்தை வெள்ளத்துக்கு உற்பத்தி ஸ்தானம் இவர்களே. சிலருக்கு ஜாதி, சிலருக்கு மதம், சிலருக்குப் பொறாமை, பலருக்கு டைம் பாஸ் என்று இந்த விளையாட்டு அரங்கத்தில் கூவம் விரிந்து ஓடுகிறது. சற்று விவரமான ஆட்கள் ,அவர்கள் விவரமான ஆட்கள் என்பதால், உண்மையைப் பேசுவதற்கு வெட்கப்படாதவர்களாகவும் […]

கடைசி பெஞ்சு அல்லது என் கதை அல்லது தன்னைத்தானே சுற்றி உலகம் வந்த வாலிபன்

This entry is part 1 of 9 in the series 1 ஜூலை 2018

  முன்னெச்சரிக்கை : இதுதான் என்னால் கொடுக்க முடிந்த சிறிய தலைப்பு இது சிறு அல்லது நெடுங்கதை ? இல்லை ! குறுநாவல்,நாவல் ? ஊஹூம் ! ரெகுலராக வரலாம் அல்லது வராமலும் கூட . ஸிந்துஜா 4   இந்தக் காலத்தில்தான்  அரைக் கிளாஸ் தாண்டுவதற்கு முன்பே ட்யூஷன் வைக்கும் பழக்கம் வந்து விட்டதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. இது தொன்று தொட்டு வரும் பழக்கம்தான். இராமாயண காலத்தில்  குருகுல வாசம் வழக்கில் இருந்த […]

இரு கவிதைகள்

This entry is part 1 of 8 in the series 24 ஜூன் 2018

ஸிந்துஜா   1. நிழல்கள்   இருளின் பிரம்மாண்டம்  இருளில் இருக்கிறது. ஒளிக் கத்தி   எதிர்பாரா வலிமையுடன் கூராகப் பாய்ந்து   பிளக்க வருகிறது இருளை.   ரத்தமின்றி  ரணகளம் அடைந்து  சாய்கிறது இருள். சாய்வு மட்டும்தான். சாவு அல்ல.   வெட்டுப்பட்டுத் தடுமாறி அலைக்கழியும்  தருணம்  ஒளியின் கீழ்ப் படரும்  இருளின் குழந்தைகள்.   ஒளி அவற்றை  விரட்டிப் பிடிக்க  ஓடி வரும் பொழுதில்  சிக்காமல்  முன்னேயும்  பின்னேயுமாய்  நகர்ந்து ஆர்ப்பரிக்கின்றன  மழலைக்  கூட்டம் . ————————————— 2. […]

அம்பலம் – 2

This entry is part 11 of 13 in the series 2 ஏப்ரல் 2017

தமிழ் இலக்கிய உலகில் சில தப்பபிப்பிராயங்கள் தலை நிமிர்ந்து உலா வருகின்றன: ஏழ்மையைப் பற்றி எழுதுபவர்கள்  ரியலிச எழுத்தாளர்கள். செக்ஸ் பற்றி எழுதுபவர் மரபை உடைக்கும் தைரியசாலி. ஆண்களைத் தூக்கியெறிந்து எழுதினால் பெண்ணியப்போராளி. நாலைந்து தலையணைகளின் உயரத்திற்குப் போட்டி போட்டு எழுதும் நாவல்கள்  தமிழின் தலை சிறந்த நாவல்கள். சிறு பத்திரிகைகளில் எழுதுபவன்  தீவிர இலக்கியவாதி. இன்னும்  இத்யாதி இத்யாதி. இத்தகைய கோட்பாடுகளில் அடைந்து கிடக்கும் எழுத்தாளன் அக் கோட்பாடுகளின் கைதியாக வாழ்ந்து வருவதுதான் குரூரமான நகைச் சுவை. […]

அம்பலம்

This entry is part 14 of 14 in the series 26 மார்ச் 2017

    ஸிந்துஜா    சொல்வனம் லேட்டஸ்ட் இதழில் 1996ல் அம்பை எழுதிய தி. ஜானகிராமனின் மரப்பசுவைப் பற்றிய கட்டுரை போட்டிருக்கிறார்கள். பசுவைப் பற்றிய மிக நல்ல பயனுள்ள கட்டுரை அது.       சில “இலக்கியஎழுத்து”க்களை படிக்கும் போது அச்சம் வந்துவிடுகிறது.கீழ்க்கண்ட வரிகளை படிக்கும் போது என்ன ஒரு ‘உதார்’ என்று தோன்றவில்லை? “முன்னகர வேண்டும் என்னும் விழைவோ ஒரு வித திருப்தியின்மையோ மனதிற்குள்ளாக உழன்றாலும், அம்மாற்றம் நிகழ்கையில் மேல்மட்டத்தில் மிதக்கும் பிரக்ஞை அதை உற்று நோக்குவதில்லை. […]

புத்தகங்கள் புத்தகங்கள் !! ( 5 ) வா. மு . கோமுவின் ” அழுவாச்சி வருதுங் சாமி “

This entry is part 12 of 16 in the series 28 ஆகஸ்ட் 2016

  ஸிந்துஜா   “அழுவாச்சி வருதுங் சாமி ”  சிறுகதைத் தொகுப்பு வா. மு. கோமுவின் ஆரம்ப காலக் கதைகளை உள்ளடக்கியிருக்கிறது. முதல் பதிப்பு ஜனவரி 2007ல் வந்தது. இப்போது மணல்வீடு இரண்டாம் பதிப்பாக  ஜூலை 2016ல் கொண்டு வந்திருக்கிறார்கள் . இக் கதைகளில் வளைய வரும் மனிதர்கள் சாதாரண வாழ்க்கையில் நாம் தினமும் காணும் பூச்சிகள் , பொட்டுகள்தான். அவர்கள் லட்சிய தாகம்  எடுத்து அலைகிறவர்களாகவோ  தங்கள் தலைக்குப் பின் சுழலும் ஒளிவட்டங்களை  அணிந்தவர்களாகவோ நடமாடவில்லை . சங்கடப்படாமல் இருக்கக் கற்றுக் கொள்வது […]

கடைசி பெஞ்சு அல்லது என் கதை அல்லது தன்னைத்தானே சுற்றி உலகம் வந்த வாலிபன் -3

This entry is part 2 of 17 in the series 7 ஆகஸ்ட் 2016

ஸிந்துஜா 3   இரண்டாம் வகுப்புக்குப்  போனவுடன் ஏதோ சாதித்து விட்ட மனப்பான்மை எப்படியோ வந்து விட்டது. அதன் முதல் படியாக அகல்யாவுடன் ஸ்கூலுக்கு சேர்ந்து போக மாட்டேன் என்று அடம் பிடித்தேன் . ஆனால் வீட்டில் யாரும் என் சுதந்திரத்தை  ஒத்துக்  கொள்ள விரும்பவில்லை. நான் எதிர் வீட்டில் இருந்த இன்னொரு பையனான மணியுடன் போகிறேன் என்று அழுது ஆகாத்தியம் பண்ணினேன். அவன் அப்போது மூன்றாவது படித்துக் கொண்டிருந்தான். அவன் தனது சுதந்திரத்தைக் காத்துக் கொள்ளும் விதமாக என்னை ஸ்கூலுக்கு ” […]

முயல்கள்

This entry is part 12 of 17 in the series 10 ஏப்ரல் 2016

ஸிந்துஜா அம்மிணியைப் பார்த்தேன் இன்று . கட்டுக்குள் அடங்கிக் கிடந்த முயல்கள் இரண்டும் சீறி எழுந்து வந்தன என்னைக் கண்டதும் . கைகளின் பிடிக்குள் அடங்க மறுத்துக் குதித்து நின்றன . முயலின் இரு கருநீல திராட்சைக் கண்களை அழுத்தமாய் முத்தமிட முயன்றேன் . என் இதழ்களை மீறி வாய்க்குள் இரண்டும் வழுக்கிச் சென்றன மாறி மாறி . அம்மிணியை அடக்கி விடலாம் . ஆனால் அவளது முயல்களை அல்ல . —————————————————-