ஸிந்துஜா நகரம் தின்ற இரை அடுக்கு மாடிக் கட்டிடத்தில் மகளின் மனை . கதவைத் தட்டும் சத்தம் கேட்டுத் திறந்தேன் . தாடியுடன் ஒரு அறிமுகமற்றவர் . சிரித்தபடி “குப்புச்சாமி என்று இங்கே ? ” “இல்லை. இங்கே யாரும் அப்படியில்லை . ” “பக்கத்து, எதிர் ப்ளாட்டில் ? ” ” ஸாரி எனக்குத் தெரியலை . ” “தேங்க்ஸ் ” என்றார் செய்யாத உதவிக்கு . மரக் .கதவை அடைத்தேன் . மனக் கதவு […]
முகநூலை நான் ‘லெவ் ‘ பண்ணுகிறேன் எனக்கு முகநூல் மிகவும் பிடித்திருக்கிறது . அதை நான் ‘லெவ் ‘ பண்ணுகிறேன் . எனக்குப் பிடிக்காதவர்களை மற்றவர்கள் திட்டித் தீர்க்கிறார்கள். மனதுக்கு ரொம்பவும் இதமாக இருக்கிறது . பெண்களை நான் மிகவும் மதிப்பவன் . அவர்கள் வீர சக்ரா வாங்கும் அளவுக்குத் தைரியசாலிகளாக முகநூலில் வளைய வருகிறார்கள் . அவர்கள் பேட்டை ரௌடிகளை போலீசில் ஒப்படைப்பதும் எச்சில் ஒழுக எழுதுபவனை வார்த்தைகளால் கண்டதுண்டமாக்குவதும் […]
வழியில் போகிறவனும் வழிப்போக்கனும் வழியில் போகிற உனக்கு பாதை குறுகியது. உன் பார்வையைப் போல . போவதும் ஒரு சந்திலிருந்து இன்னொன்றுக்கு . குறுகிய வட்டம் செக்கு மாட்டுச் சுழல் . திராணியற்ற கால்கள் நடையின் அனுபவம் உணர்ந்திறாதவை . உன் திறத்தால் (திறத்தின்மையால் ? அளக்க முயலாதே வழிப் போக்கனை . ஊர் விட்டு ஊர், நாடு விட்டு நாடு தேடலில் முழுமை காணும் கால்கள் – அவை அவன் […]
சிவக்குமார் வீட்டுக்குள் வரும் போது , நாச்சியார் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தாள் . ‘ ஒ, நல்ல வேளையா டயத்துக்கு வந்துட்டேள் .கிச்சன்ல டிகாக் ஷன் இறக்கி வச்சிருக்கேன் .ஏற்கனவே பால் காய்ச்சி வச்சாச்சு . அதை சுடப்பண்ணி காப்பி கலந்து குடியுங்கோ . நான் கோயிலுக்கு கிளம்பிண்டு இருக்கேன் ” என்றபடி வாசல் கதவுக்குப் பக்கத்திலிருந்த செருப்பு ஸ்டாண்டிலிருந்து செருப்பை எடுத்துப் போட்டுக் கொண்டாள். அவன் பதிலை எதிர்பார்க்கிறமாதிரி அவனைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள் . […]
ஸிந்துஜா கவிஞரும் , விமரிசனக் கட்டுரையாளரும் , சிறுகதைக்காரரும் , மொழிபெயர்ப்பாளருமான க. மோகனரங்கன் தான் தேர்ந்தெடுத்த அ . முத்துலிங்கத்தின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்புக்கு, அவரே மிகச் சிறந்த முன்னுரையும் தந்திருக்கிறார் . . முத்துலிங்கத்தின் எவரையும் மயக்கும் எழுத்தில் மோகனரங்கன் மயங்கி இருப்பது ஆச்சரியத்தைத் தரவில்லை . வாழ்வில் எதிர்ப்பட்ட பல்வேறு நிலப் பரப்புகளில், கதை சொல்லி தான் கண்ட, கேட்ட, உய்த்துணர்ந்த விவரணைகளை , கலாச்சார முரண்பாடுகளை புதிய அழகுடன் , விளக்க முடியாத கவர்ச்சியுடன்,ஒரு விதப் பெருமிதத்துடன் கதைகளாக மாற்றி வாசக […]
லா. சா. ரா.வின் ” பிராயச்சித்தம் ” சமுத்திரத்தைக் காணச் சென்ற கண்களுக்கு கிடைத்த ஒரு வாளி தண்ணீர் தரிசனம் ஸிந்துஜா லா.ச.ரா.வின் நாவல் என்று ” பிராயச்சித்தத்”தை ஆவலுடன் அணுகும் ஒரு தேர்ந்த வாசகருக்கு , அது ஏமாற்றத்தைத் தரும் எழுத்தாகவே அமைந்திருக்கிறது . இதற்கு முன்னுரை எழுதியவர் அதை எழுதத் ” தனக்கு என்ன தகுதி உள்ளது என்று தெரியவில்லை ” என்கிறார் ! முன்னுரையை முடிக்கும் போது “இந்தப் புத்தகத்தைப் படிப்பதன் மூலம் […]
வெங்கட் சாமிநாதன் (1933-2015) எப்போதும் ஒற்றை ஆள் போர்ப் படையாகத்தான் இருந்து வந்திருக்கிறார். அவரைப் பெயர், புகழ், பணம், சமூக அந்தஸ்து ,கூட்டம் இத்தியாதிகளால் நெருங்க முடியவில்லை. இதற்குக் காரணம் அவரது இயல்புதான். ஐம்பது வருஷங்களுக்கும் மேலாகப் பேனா பிடித்த கை சஞ்சலத்துக்கு ஒரு பொழுது கூட ஆளானதில்லை. விமரிசனம் என்றால் விமரிசனம்தான் என்ற கறார்த்தனம் மேலோங்கிக் காணப்படும் எழுத்து அவரது. இதனால் நட்புக்கள் நொறுங்கிப் போயின. அப்படிச் சொல்வது கூட சரியில்லை. நட்புக்கள் என்று […]
ஸிந்துஜா கோகர்ணேசன் ஒரு வழியாகப் பஸ்ஸிலிருந்து பிதுங்கி வழிந்து வெளியே வந்து விழுந்தார். அவர் ஏறின பஸ் ஸ்டாப்பிலேயே பஸ் நிறைய ஜனம் இருந்தது. ஏதோ கல்யாணக் கூட்டம். பிச்சியும், மல்லியுமாக ஒரு கதம்ப வாசனை சுற்றி நிறைந்திருந்தது.உட்கார இடமில்லையே என்று சுற்றிப் பார்த்த கண்கள் கவலையுடன் தெரிவித்தாலும்,உள்ளே வந்து நிற்கவாவது இடம் கிடைத்ததே என்று ஒரு மூலையில் இருந்து நன்றிக் குரல் முனகிற்று. பதினைந்து நிமிஷமும் அவர் கம்பியைப் பிடித்து நின்றவாறே பஸ் பிரயாணத்தை முடிக்க வேண்டியதாய் இருந்தது. அவர் பாக்டரியை நோக்கி நடக்கஆரம்பித்தார்.வெய்யில் கருணை இன்றி அடித்தது.ரொம்ப நேரம் நின்று கொண்டே வந்ததால் இப்போது நடக்கும் போது கால்கள் கெஞ்சின. அவர் இடது கையில் இருந்த கைப்பையை வலது கைக்கு மாற்றிக் கொண்டு நடந்தார். கைப்பையில், கமலாம்பா கட்டிக் கொடுத்த தயிர் சாதம் இருந்தது, இந்த வெய்யிலுக்கு அந்த […]