சிறுகதை, நாவல் வடிவங்களைக் கையாளும் பெருமாள் முருகன் (1966) தந்துள்ள மூன்றாவது கவிதைத் தொகுப்புதான் ‘நீர் மிதக்கும் கண்கள்’. இதில் 52 கவிதைகள் உள்ளன. இவற்றுள் சில காலச்சுவடு, தீராநதி, கவிதாசரண், குதிரைவீரன் பயணம், உயிர்மை, உலகத்தமிழ் . காம் ஆகிய இதழ்களில் பிரசுரமானவைஃ வாழ்க்கை அனுபவங்கள் மொழியில் கிடந்து ஊறிக் கவிகைளாய் வெளிவந்துள்ளன. வுpத்தியாசமான கருப்பொருட்கள் பாடு பொருளாகியுள்ளன. புதிய சிந்தனை, கோட்பாட்டுத்தாக்கம் எனக் கவிதைப் பரப்பு விரிகிறது. ‘அப்பாவின் வேலி’ வித்தியாசமானது ; பாசயிழைகள் […]
-ஸ்ரீரங்கம் சௌரிராஜன். மனுஷ்ய புத்திரனின் பத்தாவது கவிதைத் தொகுப்பு ‘அருந்தப் படாத கோப்பை’. இதில் 60 கவிதைகள் உள்ளன. இவரது கவிதைகளின் சிறப்பம்சம் பாடுபொருள் ஆகும். அதைத் தேர்வு செய்வதில் காணப்படும் கூர்மை நிச்சயம் வாசகர்கள் கவனத்தை ஈர்க்கும். இவர் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கையால் பல கவிதைகள் உரைநடையாய் நீர்;த்துப் போகின்றன. கவிதைகளின் எண்ணிக்கை அதிகமானால் தரம் குறைவது இயல்பு. விக்கிரமாதித்தன் கவிதைகளும் இப்படித்தான் பாதிக்கப்பட்டன. ‘தனிமை என்று எதுவும் இல்லை’ […]
-ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ‘சவ்வு மிட்டாய்க்காரனின் கை தட்டும் பொம்மை’ என்ற கவிதைத் தொகுப்பைத் தந்துள்ளார் உசிலம்பட்டிக்குப் பக்கத்து கிராமத்துக்காரரான திலீபன் கண்ணதாசன்; தற்போது மதுரைவாசி! நா.முத்துக் குமார், முகுந்த் நாகராஜ் போன்ற யதார்த்தக் கவிஞர்கள் வரிசையில் இவருக்கும் ஓர் இடம் உண்டு. கிராமத்தின் அழகை, ஜீவா சொன்னதுபோல ‘வேரோடும் வேரடி மண்ணோடும்’ எடுத்துவந்து நம்முன் கவிதைகளாகத் தந்துள்ளார். யதார்த்தக் கவிதைகளில் உண்மையே கவித்துவமாகச் செயல்படும். பாடுபொருள் முன்நிற்க மொழி பின்னால் நிற்கும். திலீபன் கண்ணதாசன் […]
-ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ‘வானம் தொலைந்து விடவில்லை’ என்ற கவிதைத் தொகுப்பை த.மு.எ.ச. சார்ந்த ஜீவி எழுதியுள்ளார். இதற்கு ‘சுகத்திற்காக… கவிதைக்காக’ என்ற தலைப்பில் கந்தர்வன் சிறிய அணிந்துரை தந்துள்ளார். உரைநடையை இவ்வளவு அழகாக எழுத முடியுமா? என்று வியப்பு தோன்றுகிறது. அம்மாவின் பொறுப்புணர்ச்சி, கிராம வாழ்க்கை அழகுடன் போட்டி போடுகிறது. கந்தர்வனின் தமிழ் விரல் நெருடலில் சிக்கிய பட்டுத்துணி போல நேர்த்தியாக உள்ளது. ‘இந்த ஒரு மாதத்தில் ரெண்டாயிரம் தடவையாவது அம்மா […]
ஸ்ரீரங்கம் சௌரிராஜன். சக்திஜோதி கவிதைகளில் காதல், காமம், பெண்ணியம் மற்றும் தத்துவம் பேசப்படுகின்றன. இக்கவிதைகள் உயிர் எழுத்து, காலச்சுவடு, புதிய பார்வை, அவள் விகடன், சிக்கிமுக்கி.காம் எனப் பலவற்றில் வெளியாகியுள்ளன. மொழியைச் சாதாரணமாகவும், தனித்தன்மையுடனும் கையாளுகிறார். ஆங்காங்கே புதிய சிந்தனைகளும் காணப்படுகின்றன. ‘தேவ வார்த்தைகள்’ என்ற கவிதையில் நளினமும், எளிமையும் உயிர்ப்புடன் நல்லியல்புகளாகக் காணப்படுகின்றன. அவைதாம் தலைப்பாகியுள்ளன. பகலின் வெளிச்சத்தை மழைத் துளிகளை பூவின் வாசத்தை உயிரின் காமத்தைக் கடத்தும் இந்தக் காற்று சில நேரங்களில தானே […]
-ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ‘கல் தூங்கும் நேரம்’ தொகுப்பை விக்ரமாதித்யன் தந்துள்ளார். இதில் ‘கவி மனம்’ என்ற தலைப்பில் கே.ராஜேஷ்வர் அணிந்துரை தந்துள்ளார். கவிஞனைப் பற்றித் தத்துவப் பின்னணியில் மிக அழகாக எழுதியுள்ளார். கரடி சைக்கிள் விடும்போது நாம் வாழ்க்கையை அர்த்தப்படுத்த முடியாதா? என்ற கேள்வி எவ்வளவு நம்பிக்கை தருகிறது! அணிந்துரையின் முடிவில், உரைநடையில் கவித்துவம் சுனாமி வேகத்தில் பாய்ந்துள்ளது. தத்துவ விசாரம் உச்சம் பெறுகிறது! ‘வார்த்தை’ என்பது பலமுறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. […]
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் புதுவை மாநிலத்தைச் சேர்ந்த மாலதி மைத்ரியின்(1968) முதல் கவிதைத் தொகுப்பு ‘சங்கராபரணி’ இதில் 50 கவிதைகள் உள்ளன. புதிய சிந்தனைகள் வழி அழகான படிமங்கள் உருவாக்குதல், மொழியை லாவகமாகக் கையாளும் திறன் குறிப்பிடத்தக்கவை. எனினும் இருண்மையும் அமைந்துள்ளது. கருப்பொருள் தேர்வில் வித்தியாசம் காணப்படுகிறது. ‘தெய்வ உடல்’ வித்தியாசமான– நான் அறிந்தவரை எந்தப் பெண் கவிஞரும் கையாளாத கருப்பொருள்.– பூப்பெய்திய ஒரு பெண் தனியே படுத்துறங்கும் முதல்நாள் அனுபவம் இதில் […]
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் உமா மகேஸ்வரி (1971) மதுரையில் பிறந்தவர். சிறுகதை வடிவத்தைச் செம்மையாகக் கையாண்டு வருபவர். இவருடைய நான்காவது கவிதைத் தொகுப்புதான் ‘இறுதிப் பூ’! வீடு, வீட்டின் உறவுகள், குழந்தைகளின் உலகம் பற்றிய பதிவுகள் கொண்டவை இவரது கவிதைகள். இத்தொகுப்பில் 71 கவிதைகள் உள்ளன. புதிய பார்வை, அம்ருதா, புதிய காற்று, உன்னதம், புதுவிசை, சஞ்சாரம், அமுதசுரபி, காலச்சுவடு, தீராநதி, உயிர் எழுத்து போன்ற இதழ்களில் வெளியாகி உள்ளன. ‘நீரோடு போகும் பூ’ – […]
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ‘அம்மா என் உலகம்’ கவிதைத் தொகுப்பை எழுதியவர் திருச்சியில் அரசு பணியில் உள்ள தனலெட்சுமி பாஸ்கரன். இதில் சுமார் 130 சிறு கவிதைகள் உள்ளன. கவிதைகள் எளிமையானவை. நேர்படப் பேசுபவை. வாழ்க்கையின் சாதாரண சம்பவங்களின் மறுபக்கத்தை நமக்குக் காட்டுபவை. உற்று நோக்குதலைத் தொடரும் படைப்பாற்றலால் கவித்துவம் தெறித்து விழுகிறது. கிணற்றில் நீர் இறைப்பது சாதாரண செயல்தான். அதை இவர் பார்க்கும்போது கவிதையாகிறது. கவிமனம் இவருக்கு இயல்பாக அமைந்துள்ளது. ஒவ்வொரு முறையும் உரசி அமிழ்ந்து மேலெழும்பும் […]