author

வெயில் விளையாடும் களம்

This entry is part 41 of 41 in the series 13 மே 2012

வையவன் வெயில் விளையாடும் களத்து மேட்டில் பதரடிக்கும் போது தலை காட்டலாமே தவிர முளைக்கச் சுதந்திரமில்லை புல்லுக்கு.

பிறந்தாள் ஒரு பெண்

This entry is part 17 of 44 in the series 22 ஏப்ரல் 2012

வையவன் பிறந்தாள் ஒரு பெண் அடுத்தடுத்து ஐந்தாறு பெண்கள் பிறந்த பண்ணை வீட்டின் வழிநடையில் அந்தியிருள் சூழ்ந்த அரைக் கருநிழலில் கூடியிருந்த கும்பல் விலக்கிப் பேறு பார்க்கச்சென்ற மாது நிசி கழிந்து முகம் தொங்கி திரும்பி வரக் கண்டு கூட்டத்தில் நிசப்தம். அடுத்து அழுகுரல். பின் ஓர் ஓலம் மீண்டும் பிறந்தது ஒரு பெண் குழந்தை பெண்ணுரிமை பெண் சமத்துவம் பேசலாம் வீரமாய் பிறந்ததும் திறக்கின்றன அடைத்து மூட முடியாத கவலையின் கதவுகள் கறந்து காட்டியது காராம்பசு […]

சற்றே நீடிக்கட்டும் இந்த இடைவேளை

This entry is part 41 of 53 in the series 6 நவம்பர் 2011

வையவன் எல்லாக் கைதிகளுமே சின்னஞ்சிறு சிசுக்களாகத்தான் தென்படுகிறார்கள் தூங்கும் போது கைமடித்து ஒருக்களித்து கவிழ்ந்து மல்லாந்து கருப்பைக்குள்ளும் வெளியிலும் ஒரு பாவமும் அறியாது இருந்த அதே நிலையில்.. துயிலின் தாலாட்டில் துவண்டு போன தோற்றத்தில் .. காவலர், நீதிபதி , வழக்கறிஞர் தண்டனை, பாதிக்கப்பட்டோர் மற்றும் தம் குடும்பம் என்று வளரும் சமூகத்தில் அடப் பாவிகளா என்ற சாபம் உறங்குவோருக்குக் கேட்காது விழித்தபின் தான் வெளிப்படுவான் மூத்து முற்றி முதிர்ந்த அந்த ஆதி மனிதன் சற்றே நீடிக்கட்டும் […]