வளவ. துரையன் வட பகீரதி குமரி காவிரி யமுனை கௌதமை மகரம்மேய் தட மகோததி இவை விடாது உறை தருண மாதர்! கடை திறமினோ. [31] [பகிரதி=கங்கை; கௌதமை=கோதாவரி; மகரம் மேய்=மீன்கள் உலாவும் இடம்; தடம்=அகன்ற; மகோததி=கடல்; தருணமாதர்=இளம்பெண்கள்] வடக்கில் ஓடும் கங்கை, தெற்கே பாயும் காவிரி, யமுனை, கோதாவரி ஆகிய ஆறுகளையும், மீன்கள் நிறைந்த விரிந்து அகன்ற கடல்களையும், வசிப்பிடமாகக் கொண்ட தேவருலக இளம்பெண்களே! கதவைத் திறவுங்கள். ==================================================================================== […]
ஈரும் மதியம்என முதிய மதிவெருவி ராசராச நாயகர் முடிச் சேரும் மதியம் என இளைய மதியொடுற[வு] உடைய மகளிர் கடைதிறமினோ. [21] [ஈர்மை=வருத்தம்; மதியம்=முழுநிலவு; வெருவி=பயந்து; உறவு=நேசம்] இளமையான காதலர்கள் தங்களை முழுநிலவு துன்புறுத்தும் என எண்ணி, அதை விடுத்து, இராசமாபுரத்து இறைவரான சிவபெருமான் திருமுடியில் இருக்கும் பிறைச்சந்திரனுடன் சேர்ந்திருக்க விரும்பி இங்கு வந்துவாழும் தேவர் உலகப் பெண்களே! கதவைத் திறவுங்கள். ===================================================================================== போய பேரொளி அடைத்து வைத்த […]
வளவதுரையன் கடைதிறப்பு கடை என்பதை வாசல் எனப்பொருள் கொண்டு கடைதிறப்பு என்பதை வாசல் திறப்பு எனக் கொள்ள வேண்டும். தக்கனது யாகத்தைச் சீரழித்து அவனை வெற்றி கொண்ட வீர்ராக வரும் வீரபத்திரரின் பெருமையைப் பாடும் பெண்கள் இல்லத்தினுள் இருக்கும் பெண்களிடம் அவர்களின் வாயிலில் நின்று வாசல் கதவு திறக்கப் பாடுவதே கடைதிறப்பு பகுதியாகும். இன்றைய கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் அந்தக் காலத்தில் இரண்டாம் இராசராச சோழனின் தலைநகராக விளங்கியது. அந்நகரத்தில் தேவமாதர்களும் கடவுளர்களும் […]
வளவ. துரையன் தக்கன் [தட்சன்] சிவபெருமானை அவமதித்துச் செய்த யாகத்தைச் சிவபெருமானின் ஆணைப்படி அவரால் உருவான வீரபத்திரர் அழித்து வந்த கதையைப் பாடுவது தக்கயாகப் பரணியாகும். ===================================================================================== வைரவக் கடவுள் வணக்கம் தற்போது பைரவர் என அழைக்கப்படும் கடவுளே அப்போது வைரவர் எனும் பெயரால் அழைக்கப்பட்டிருக்கிறார். தான் மேற்கொளும் செயல் நன்கு நிறைவேறி முடிய கடவுளை வேண்டல் ஒரு மரபாகும். தக்கயாகப் பரணியை எழுதப் புகுமுன் ஒட்டகூத்தர் வைரவக் […]
தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் முதல் முதலில் பதிப்பித்தது சீவகசிந்தாமணியாகும். பதிப்புத்துறை அவருக்குப் புதிய துறையாதலால் “ஆரம்பத்தில் எல்லா விஷயங்களும் தெளிவாக விளங்கவில்லை” என்று அவரே குறிப்பிடுகிறார். சில பாடல்களை ஆராயும்போது சில தொடர்களுக்குப் பொருள் புரியாமல் அவரே திகைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அத்தகைய நிலை ஏற்படுகையில் அத்தொடர் அவர் மனத்தில் பதிந்துவிடுகிறது. சிந்தாமணிக் காப்பியத்தில் சீவகன் யாழிசைத்துப் போட்டியில் காந்தருவதத்தையை வென்றான். இதனால் கட்டியங்காரன் பொறாமை கொண்டு அங்கிருந்த மன்னர்களை நோக்கிச் சில சொற்களைக் […]
இராமபிரானின் தூதனாக இலங்கை சென்ற சிறிய திருவடியாகிய ஆஞ்சநேயர் அசோகவனத்தில் தவம் செய்த தவமாம் சீதாபிராட்டியைக் கண்டார். பின் அசோகவனத்தை அழித்தார். இலங்கையைத் தீக்கிரையாக்கி அயோத்தி வள்ளலை அடைந்தார். எம்பெருமானிடம் “கண்டனன் கற்பினுக்கணியைக் கண்களால்’ என்று மாருதி கூறினார். அண்ணனுக்கு மொழிந்த நீதிகள் பயனளிக்காததால் வீடணன் இலங்கையை விட்டு நீங்கி இராமபிரானிடம் அடைக்கலமானார். பின்னர் சுக்ரீவனும், அனுமனும், வீடணனும் உடன் வர இராம இலக்குவர் இருவரும் இலங்கையை அடைய வேண்டி கடற்கரையை அடைந்தனர். அப்பொழுது […]
எம்பெருமானுக்கே பல்லாண்டு பல்லாண்டு எனப் பல்லாண்டு பாடி மகிழ்ந்தவர் பெரியாழ்வார். அதோடு நில்லாமல் கண்ணபிரானைக் குழந்தையாக்கிப் பிள்ளைத் தமிழ் பாடிப் போற்றியவர் அவரே. பிள்ளைத் தமிழின் பத்துப் பருவங்களில் ஒன்றான செங்கீரைப் பருவத்தைப் பாடும்போது, நம்முடை நாயகனே, நான்மறையின் பொருளே, நாவியுள் நற்கமல நான்முக னுக்குஒருகால் தம்மனை யானவனே, தரணி தலம்முழுதும் தாரகை யினுலகும் தடவி யதன்புறமும் விம்ம வளர்ந்தவனே, வேழமும் ஏழ்விடையும் […]
தலைவன் தான் மேற்கொண்ட செயலை வெற்றிகரமாக முடித்துத் தன் வீடு திரும்புகிறான். அதனால் மிகவும் மகிழ்ந்த தலைவி தன்னை எழில் புனைந்து அவனையே சுற்றிச் சுற்றி வருகிறாள். அதைக் கண்ட மற்றவர்கள் மகிழ்ந்து தங்களுக்குள் பேசிக்கொள்கின்றனர். தலைவனின் வரவினால் ஏற்பட்ட சிறப்பாலேயே இப்பேச்சுகள் அமைந்த பகுதி என்பதால் இப்பெயர் பெற்றது. இதில் முதல் ஐந்து பாடல்கள் தலைவனின் கூற்றாகவும், அடுத்த நான்கு பாடல்கள் தோழி தலைவிக்குச் சொல்வது போலவும், அடுத்த 500-ஆம் பாடல் தோழி […]
தலைவன் எதற்காகச் சென்றானோ அந்த வினை முடித்துத் தேரில் திரும்பி வருகிறான். வலிமையான குதிரைகள் பூட்டப்பட்ட தேர் விரைவாகத்தான் செல்கிறது. இருந்தாலும் அவளைப் போய்ப் பார்க்கும் ஆசையால் அவன் தேர்ப்பாகனிடம் இன்னும் விரைவாகச் செலுத்துமாறு பணிக்கிறான். இப்படி அவன் தேர்ப்பாகனிடம் கூறும் பத்துப் பாடல்கள் கொண்டதால் இப்பகுதி இப்பெயர் பெற்றது. வியங்கொள்ளுதல் என்பது தேரினைச் செலுத்தும் செயலிலிலே விரைவைக் கொள்ளுதல் என்னும் பொருளைத் தரும். ===================================================================================== 1.சாய்இறைப் பணைத்தோள், அவ்வரி அல்குல், சேயிழை மாதரை […]
பாணனின் தொடர்பாக இப்பத்துப் பாடல்களும் அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்றது. பாணர்கள் பலவகையான தொழில்களைச் செய்து வாழ்ந்தவர் ஆவர். இதில் சொல்லப்படும் பாணன் யாழ் வாசிப்பவன். தலைவன், தலைவி ஆகியோர்க்குப் பணிகள் செய்வதோடு தூதும் சொல்ல வல்லவன். அவர்கள் இருவரும் சினந்தாலும் வருந்தாதவன். அவர்களின் வாழ்வுக்குத் தன்னால் முடிந்த மட்டும் உதவி செய்பவன். ===================================================================================== 1.எல்வளை நெகிழ மேனி வாடப் பல்இதழ் உண்கண் பனிஅலைக் கலங்க, துறந்தோன் மன்ற, மறம்கெழு குருசில்; அதுமற்று உணர்ந்தனை போலாய் […]