தலைவன் பிரிந்த காலத்தும், பிரிவு நீட்டித்து அவன் வராத போதும் தலைவி வருத்தமுடன் வாட்டமுற்று இருப்பாள். அவளிடம் தோழியானவள் கார்காலம் வந்துவிட்டது குறித்தும், தலைவனின் அன்பு குறித்தும் கூறி ஆற்றுப் படுத்தும் பாடல்கள் கொண்டதால் இப்பகுதி இப்பெயர் பெற்றது. இதில் உள்ளப் பத்துப் பாடல்களுமே தோழியின் கூற்றாக அமைந்துள்ளன. ===================================================================================== 1.வான்பிசிர்க் கருவியில் பிடவுமுகை தகைய, கான்பிசிர் கற்பக் கார்தொடங் கின்றே; இனையல் வாழி, தோழி! எனைய தூஉம் நிற்துறந்து அமைகுவர் அல்லர், வெற்றி வேந்தன் பாசறை […]
6. பருவங்கண்டு கிழத்தி உரைத்த பத்து முல்லை நிலத்துக்கே உரியது கார்காலம். அக்காலத்தில் தலைவன் தன் வினை முடித்து வருவதாகச் சொல்லிச் சென்றான். ஆனால் அவன் வரவில்லை. அவனை நினைத்து நினைத்து அவள் வருந்தும் பகுதி இது. இதில் உள்ளப் பத்துப் பாடல்களும் தலைவி உரைப்பதாக இருப்பதால் இப்பகுதி இப்பெயர் பெற்றது. ============= 1.கார்செய் காலையொடு கையறப் பிரிந்தோர் தேர்தரு விருந்தின் தவிர்குதல் யாவது? மாற்று அருந்தானை நோக்கி ஆற்றவும் இருத்தல் வேந்தனது தொழிலே! […]
போருக்காகச் சென்றிருக்கும் அரசரும், படைத்தலைவர்களும் தங்கியிருக்கும் இடமே பாசறையாகும். அங்கே போர் குறித்த திட்டங்கள் தீட்டப்படும். போருக்கான பயிற்சிகளும் அளிக்கப்படும். அங்கே இருப்பவர்கள் போரில் புறங்கொடாமல் வீழ்ந்தாலும் புகழை விரும்புவோரே ஆவார். இப்பத்துப் பாடல்களும் பாசறையில் நிகழ்வும் நிகழ்ச்சிகளைக் காட்டுவதால் இப்பெயர் பெற்றது. =====================================================================================1. ஐயஆயின, செய்யோள் கிளவி; கார்நாள் உருமொடு கைஅயறப் பிரிந்தென, நோய்நன்கு செய்த எமக்கே; யாம் உறு துயரம் அவள் அறியினோ நன்றே. [ஐ=அழகு; செய்யோள்;செம்மையானவள்; கிளவி=தூதிடம் சொல்லி விட்ட […]
போருக்காகச் சென்றிருக்கும் அரசரும், படைத்தலைவர்களும் தங்கியிருக்கும் இடமே பாசறையாகும். அங்கே போர் குறித்த திட்டங்கள் தீட்டப்படும். போருக்கான பயிற்சிகளும் அளிக்கப்படும். அங்கே இருப்பவர்கள் போரில் புறங்கொடாமல் வீழ்ந்தாலும் புகழை விரும்புவோரே ஆவார். இப்பத்துப் பாடல்களும் பாசறையில் நிகழ்வும் நிகழ்ச்சிகளைக் காட்டுவதால் இப்பெயர் பெற்றது. =====================================================================================1. ஐயஆயின, செய்யோள் கிளவி; கார்நாள் உருமொடு கைஅயறப் பிரிந்தென, நோய்நன்கு செய்த எமக்கே; யாம் உறு துயரம் அவள் அறியினோ நன்றே. [ஐ=அழகு; செய்யோள்;செம்மையானவள்; கிளவி=தூதிடம் சொல்லி விட்ட […]
புறவு என்பது முல்லை நிலக் காட்டைக் குறிக்கும். கார்காலத்தில் அந்நிலம் அழகாக விளங்கும். அவன் அரசர் பொருட்டு வினை மேற்கொண்டு அவளைப் பிரிந்தான். அப்பிரிவைப் பொறுக்க முடியாமல் அவள் வருந்துகிறாள். அவன் செல்லக்கூடிய வழி கொடுமையானதாயிற்றே என அவள் அஞ்சுகின்றாள். அப்பொழுது, “இல்லை காடு அழகாக விளங்குகிறது” என்று புறவின் அழகு நலங்களைச் சொல்வதால் இப்பகுதி இப்பெயர் பெற்றது. =========== 1.நன்றே, காதலர் சென்ற ஆறே அணிநிறை இரும்பொறை மீமிசை மணிநிற உருவின தோகையும் உடைத்தே. […]
இப்பகுதியில்முல்லைத் திணைக்குரிய பல ஒழுக்கங்கள் விரவி வருவதால் இப்பெயர் பெற்றது. பிரிந்து வாடலும், அப்படி வாடுபவரைத் தேற்றலும், அவன் மீண்டு வரும்போது கொள்ளும் உணர்வுகளும் அதுபற்றிய பிறரின் பேச்சுகளும் இப்பகுதிப் பாடல்களில் அமைந்துள்ளன. ===================================================================================== 1.மாலை வெண்காழ் காவலர் வீச நறும்பூம் புறவின் ஒடுங்கு முயல்இரியும் புன்புல நாடன் மடமகள் நலங்கிளர் பணைத்தோள் விலங்கின, செலவே. [வெண்காழ்=வயிரம் பாய்ந்த மரம்; நறும்பூம் புறவு=மணம் மிக்க பூக்கள் நிறைந்த காட்டுப் பகுதி; விலங்கின=தடுத்தன; இரியும்=அஞ்சி ஓடும்; […]
கிழவன் என்பது தலைவனைக் குறிக்கும் அவன் கார்காலத்தில் வருவேன் என்று கூறிப் பிரிந்து சென்றான். ஆனால் வினை முடித்துக் கார்காலம் வருவதற்கு முன்னமே வந்து விட்டான். அப்படி வந்தவன் கார்காலத்தைப் பாராட்டிக் கூறும் பத்துப் பாடல்கள் உள்ளதால் இப்பகுதி இப்பெயர் பெற்றது. இப்பத்துப் பாடல்களும் தலைவன் கூற்றாகவே இருக்கின்றன. =====================================================================================1.ஆர்குரல் எழிலி அழிதுளி சிதறிக் கார்தொடங் கின்றால், காமர் புறவே; வீழ்தரு புதுப்புனல் ஆடுகம் தாழிருங் கூந்தல்! வம்மதி, விரைந்தே! [ஆர்குரல்=மிக்க ஒலி; எழிலி=மேகம்; […]
“மாயோன் மேய காடுறை உலகமும்” என்று தொல்காப்பியம் கூறும் நிலப்பகுதி முல்லையாகும். இது காடும் காடு சேர்ந்த பகுதிகளயும் கொண்டதாகும். தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் பிரிந்து தனித்து இருக்கும்போது நினைந்து நினைந்து இரங்குவதே முல்லைத் திணையாகும். ==================================================================================== செவிலி கூற்றுப் பத்து 1.மறிஇடைப் படுத்த மான்பிணை போல, புதல்வன் நடுவணன் ஆக, நன்றும் இனிது மன்றஅவர் கிடக்கை; முனிவின்றி நீல்நிற வியலகம் கவைஇய ஈனும், உம்பரும், பெந்றலருங் குரைத்தே [மறி=குட்டி மான்=ஆண்மான்; […]
கடலூர் துறைமுகம் பகுதியில் மாலுமியார்ப் பேட்டையில் ஒரு திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. அது சோழர் காலத்தில் எழுப்பப்பட்ட பழைமையான ஆலயமாகும். அங்கு தீமிதித் திருவிழா தொடர்ந்து 177 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். திருவிழாவின்போது பாரதம் படிப்பது நடக்கும். இப்பொழுதுதான் சொற்பொழிவு முறை வந்தது. அக்காலத்தில் பாரதம் மற்றும் இராமாயணங்களையும் ஒருவர் படிக்க மற்றவர்கள் குழுமியிருந்து கேட்பதுதான் வழக்கம். இன்றும் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகில் உள்ள விராச்சிலையில் என் மருமகன் இராமநவமியை […]
வலம்புரி லேனாவின் மூன்றாவது ஹைக்கூத் தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ள “நிழல்தேடும் வெயில்? என்பதாகும். இயற்கை, சமூகச்சிந்தனை ஆகியவற்றின் வெளிப்பாடாக இத்தொகுப்பில் பல ஹைக்கூக் கவிதைகள் அமைந்துள்ளன என்று சொல்லலாம். நம் வாழ்க்கையில் பல பேரைச் சந்திக்கிறோம். அவர்களில் ஒரு சிலர்தாம் அவர்கள் மறைந்த பின்னரும் நம் மனத்தில் நிற்கின்றனர். திடீர் திடீர் என அவர்களின் நினைவு வந்து மனத்தில் சத்தம் போடுகிறது. நல்ல நிகழ்வோ அல்லது சோக எண்ணங்களோ வரும்போது கூடவே அவர்களும் வருகிறார்கள். இதை ஓர் […]