அன்பு நண்பர்களே அறிவியல் தமிழின் அடுத்த பெ.நா.அப்புசாமி பேரா. ஜெயபாரதன் எழுத்துகளைத் திண்ணையில் வாசிக்கத் தவறுவது இல்லை. தமிழில் முதல் தடவையாக முதியோர் இல்லம் சேர்ந்த மூத்தோர் ஒருவரின் (அவரே தான்) முதியோர் இல்லக் குறிப்புகளை அவர் எழுதுவது சிறப்பாக உள்ளது. வானப்பிரஸ்தம் பற்றி விரிவாகச் சொல்லும் இந்த கட்டுரைத் தொடருக்கு என் வாழ்த்துகள். டாக்டர் ஜெயபாரதனுக்கு இன்னுமொரு நூறாண்டு கிளரொளி இளமையோடு சூழட்டும். அன்புடன் இரா.முருகன்
சுலோச்சனா அருண் சென்ற சனிக்கிழமை 22-7-2023 கனடா, மிஸஸாகாவில் உள்ள ஜோன்போல் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற பீல்பிரதேச சொப்கா குடும்பமன்றத்தின் கலை நிகழ்வின்போது பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் ‘சாக்லாட் பெண்ணும் பண்ணை வீடும்’ என்ற எழுத்தாளர் குரு அரவிந்தனால் தமிழில் எழுதப்பட்ட வெளிநாட்டுச் சிறுகதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பும், மாலினி அரவிந்தனின் ‘பறவைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளியிட்டு வைக்கப்பட்டன. கலை, இலக்கிய ஆர்வலர்கள் பலர் மண்டபம் நிறைந்த இந்த நிகழ்வில் கலந்து கொண்டு […]
அன்புடையீர், ஜூலை 11, 2023 சொல்வனம் இணையப் பத்திரிகையின் 298 ஆம் இதழ், கடந்தஜூலை 9, 2023 அன்று வெளியானது. இதழை https://solvanam.com/ என்ற வலைத்தள முகவரியில் சென்று படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கவிதைகள்: டகாஹாமா க்யோஷி: இலையுதிர் காலம் இன்னும் ஆழமாகிறது – நந்தா குமாரன் (தமிழாக்கம்) ஆமிரா கவிதைகள் ஜூலை பாடல்கள் – கு. அழகர்சாமி நாவல்கள் மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்பது – இரா. முருகன் உபநதிகள் – அத்தியாயம்: பத்து – அமர்நாத் தெய்வநல்லூர் கதைகள் – 6 –ஜா. ராஜகோபாலன் அதிரியன் நினைவுகள் -17 – மார்கெரித் யூர்செனார் (ஃப்ரெஞ்சிலிருந்து தமிழாக்கம்: நா. […]
குரு அரவிந்தன் சென்ற ஞாயிற்றுக் கிழமை 10-7-2023 சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தின் ஒன்று கூடல் ஸ்காபரோவில் உள்ள மோணிங்சைட் பூங்காவில் நடைபெற்றது. சண்டிலிப்பாய் மக்களின் நலன் கருதி 2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஐக்கிய மன்றம் 21 வருடங்களை நிறைவு செய்திருக்கின்றது. தாயகத்திலும், கனடாவிலும் உள்ள சண்டிலிப்பாய் மக்களின் நலன்களில் அக்கறை கொண்டு, அதற்கேற்ற அட்டவணைப்படி சேவை நலன் கொண்டு இயங்குகின்றது. கனடாவில் வசிக்கும் சண்டிலிப்பாய் மக்கள் பிள்ளைகளுடன் குடும்பமாக வந்து ஒன்று கூடியிருந்தனர். பொதுவாக […]
அன்புடையீர், 25 ஜூன் 2023 சொல்வனம் இணையப் பத்திரிகையின் 297 ஆம் இதழ் இன்று வெளியானது. பத்திரிகையைப் படிக்க விரும்புவோர் செல்ல வேண்டிய முகவர்: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: இற்றைத் திங்கள் அந்நிலவில்-1 – கமலதேவி ஒரே ஒரு முத்தம் – குமரன் கிருஷ்ணன் ஊர்வசி காதலில் கண்விழித்தாள்! – மீனாக்ஷி பாலகணேஷ் ராகஜலதி என்ற நாவல்– டாக்டர் காத்யாயனி வித்மஹே (தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்) சொல்லாத காதல் எல்லாம்– கமலக்கண்ணன் (ஜப்பானியப் பழங்குறுநூறு தொடர் – பாகம் 27) பப்பைரஸ் – லோகமாதேவி நாவல்கள்: மிளகு அத்தியாயம் நாற்பத்தெட்டு- இரா. முருகன் தெய்வநல்லூர் கதைகள் – 5 – ஜா. ராஜகோபாலன் அதிரியன் நினைவுகள் – 16 – மார்கரெத் யூர்செனார் (தமிழாக்கம்: நா.கிருஷ்ணா) உபநதிகள் – ஒன்பது – அமர்நாத் கதைகள்: உள்ளிருத்தல் – ஆதித்ய ஸ்ரீநிவாஸ் போர் – ஜெகன்மித்ரா […]
”மற்றமை” யின் இரண்டாவது வெளியீடாக மார்ச்-08 மகளிர் தினத்தை முன்னிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு-2023. சிறகுகளே ஆயுதமாக… இத்தொகுப்பில் இடம் பெற்ற பெண் கவிஞர்கள் அனார், தினுஷா மகாலிங்கம், சஞ்சிகா லோஜன் சித்தி ரபீக்கா பாயிஸ், க.ஷியா, அஸ்ரபா நூர்டீன் மின்ஹா, அம்பிகை கஜேந்திரன், கெக்கிராவ ஸூலைஹா பாலரஞ்சனி ஜெயபால், அஸ்மா பேகம், தாட்சாயணி மரீனா இல்யாஸ் ஷாபி, தயானி விஜயகுமார், தம்பிலுவில் ஜெகா, ஜென்சி கபூர் மிஸ்ரா ஜப்பார், எஸ்தர் மலையகம் […]
வணக்கம்,காற்றுவெளி மின்னிதழ் விரைவில் ஈழத்து எழுத்தாளர்.அமரர்.செம்பியன்செல்வன் ஞாபகார்த்த சிறப்பிதழ் ஒன்றைக் கொண்டு வரவுள்ளது.எனவே,அவரின் நூல்கள் பற்றிய ஆய்வுகள்,அவரின் படைப்பாழுமை,அவரின் இதழியல் சார்ந்த கட்டுரைகளை படைப்பாளர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.படைப்புக்கள் 4 பக்கங்களுக்கு அதிகமாகாமல்,வேறெங்கும் பிரசுரமாகாமலும் இருத்தல்வேண்டும்.படைப்புகள் கிடைக்க வேண்டிய கடைசி நாள்:18/08/2023.அன்புடன்,முல்லைஅமுதன்mahendran1954@hotmail.com
கோபால் ராஜாராம் ஜெயமோகன் தன் வலை தளத்தில் திண்ணை பற்றியும் மற்றும் பி கே சிவகுமார் பற்றியும் எழுதியுள்ள கீழ்க்கண்ட பத்திகள் என் கவனத்திற்கு வந்தது. ‘பி.கே.சிவக்குமார் 2000 வாக்கில் எனக்கு அணுக்கமாக இருந்த திண்ணை ஆசிரியர் குழுவைச் சேர்ந்த கோ.ராஜாராம், கோ.துக்காராம் வழியாக அறிமுகம். திண்ணை இணையதளம், பின்னர் எழுத்தும் எண்ணமும் குழும உரையாடல் வழியாக தெரியும். ஒரு சில மின்னஞ்சல்கள், மற்றபடி பொது வெளி உரையாடல்கள் மட்டுமே. இணையம் உருவான காலகட்டத்தில் அப்படித் தெரியவந்த […]
அன்புடையீர், 12 ஜூன் 2023 சொல்வனம் இணையப் பத்திரிகையின் 296 ஆம் இதழ்,12 ஜூன் 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: எலிசபெத் பிஷப்: இரு மொழிபெயர்ப்புகளும் சில குறிப்புகளும் – நம்பி ‘ஊர்வசி – விக்ரமோர்வசீயம்’ – மீனாக்ஷி பாலகணேஷ் (அரவிந்தரின் ஆக்கங்களும் கவிதைகளும் தொடர்-3) தமிழ் நாவலின் விரியும் எல்லைகள் – ப. சகதேவன் ஒழிக தேசியவாதம்–2 – கொன்ராட் எல்ஸ்ட் (தமிழாக்கம்: கடலூர் வாசு) கனி மரம் – லோகமாதேவி தென்னேட்டி ஹேமலதா– பொது உலக பரிச்சயம் அல்லது மேதமை பிரபஞ்சம் – காத்யாயனி வித்மஹே (தமிழில்: ராஜி ரகுநாதன்) தெலுங்கு புதினங்களில் பெண்கள் தொடர் –18 ஆம் அத்தியாயம் இறை நின்று கொல்லுமோ? – கமலக்கண்ணன் – (ஜப்பானியப் பழங்குறுநூறு-26) சகோதரி நிவேதிதையின் பார்வையில் இந்தியா – எஸ்ஸார்சி கதைகள்: மூங்கில் காடு – கமலதேவி தேவகுமாரன் – சியாம் வாசம் – பாஸ்கர் ஆறுமுகம் சிதறும் கணங்கள் – காந்தி முருகன் குறுநாவல்கள் மார்க் தெரு கொலைகள்– பகுதி 4 – எட்கர் ஆலன் போ (தமிழாக்கம்: பானுமதி ந. ) நாவல்கள்: மிளகு – அத்தியாயம் நாற்பத்தேழு –இரா. முருகன் அதிரியன் நினைவுகள் –15 –மார்கரெத் யூர்செனார் (ஃப்ரெஞ்சு – தமிழாக்கம்: நா. கிருஷ்ணா) உபநதிகள் – 8 -அமர்நாத் தெய்வநல்லூர் கதைகள் –4 – ஜா. ராஜகோபாலன் கவிதைகள்: பார்வையற்றவனின் பார்வை – கோலி ஸ்லிப்பர் (தமிழாக்கம்: இரா. இரமணன்) ஆமிரா கவிதைகள் புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள் சர்க்கஸ் – ந. பெரியசாமி இதழைப் படித்தபின் உங்கள் கருத்துகள் ஏதும் உண்டெனில், அவற்றைப் பதிவு செய்ய ஒவ்வொரு படைப்பின் கீழேயும் வசதி செய்திருக்கிறோம். தவிர மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்கலாம். முகவரி: Solvanam.editor@gmail.com எழுத்தாளர்கள் படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான். உங்கள் வருகையை எதிர்நோக்கும், சொல்வனம் பதிப்புக் குழு
குரு அரவிந்தன் சென்ற ஞாயிற்றுக்கிழமை 4 ஆம் திகதி கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா ரொறன்ரோவில் இடம் பெற்றிருந்தது. ஆரம்பகால உறுப்பினரும், தற்போதைய செயலாளருமான எழுத்தாளர்; அ. முத்துலிங்கம் அவர்கள் நேரடியாக இந்த நிகழ்வுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த அமைப்புத் தொடங்கிய காலத்தில் இருந்து இந்த நிகழ்வுக்காக எனக்கு அவர் வருடாவருடம் அழைப்பிதழ் அனுப்பிவிட்டுத் தொலைபேசியிலும் அழைத்துச் சொல்லுவார். இம்முறை அவர் அழைத்த போது நான் குறோசியாவில் இருந்தேன், […]