மழைப்பாடல்

This entry is part 28 of 44 in the series 16 அக்டோபர் 2011

  தாங்கவொண்ணாக் காதலின் வலி தவிர்க்க சூழ்ந்திருந்த எல்லாவழிகளையும் இறுக மூடித் திறப்புக்களைத் தூர வீசி என்னை சிறையிலிட்டுக் கொண்டேன் வெளியேற முடியா வளி அறை முழுதும் நிரம்பி சோக கீதம் இசைப்பதாய்க் கேட்ட பொழுதில் மூடியிருந்த யன்னலின் கதவுகளைத்தட்டித் தட்டி நீரின் ரேகைகளை வழியவிட்டது மழை   – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

கவிதை

This entry is part 27 of 44 in the series 16 அக்டோபர் 2011

  இல்லாத எல்லைக்குள் சொல்லாத சொல்லைத் தேடும் யாத்ரீகனின் கைவிளக்கு   எண்ண ஊடல்களின் சொற்கூடல்   கடக்கும் காலனின் நிழல்   கனவுக் கடலை கடக்கும் தோனி   சிந்தனை நிலங்களடியில் கணக்கற்ற கனிகளின் எதிர்காலம் தேக்கியிருக்கும் ஒற்றை விதை   வாழ்வின் அர்த்தம் வேண்டும் வார்த்தை யாகம்   கவிஞனின் இருப்பின் சாட்சி   அனைத்துமளித்த அகிலத்துக்கு அவனது நினைவுப் பரிசு   ஒரு வாழ்க்கையில் ஓராயிரம் வாழ்வை வாழத் துடிக்குமவன் பேராவலின் நீட்சி. […]

முடிவுகளின் முன்பான நொடிகளில்…

This entry is part 26 of 44 in the series 16 அக்டோபர் 2011

வெற்றியின் நொடிகளை கொண்டாடலாம் தோல்வியின் நொடிகளை தேற்றலாம் முடிவுகள் அறிவிக்கும் முன்புள்ள, மனதை கவ்வி முறுக்கும் நொடிகளை என்ன செய்வது? ஜெயிக்க வைக்க சொல்லி ஜபிப்பதா? ஆசீர்வதிப்பாரோ , மாட்டாரோ என்ற நிழல் தடுக்கி இடறுகையில் – கண்களை இடுக்கி வேகம் கூட்டி ஜபித்தாலும் மனக்கரைசல் திப்பிகளாய் தங்குவது நிற்பதில்லை சரித்திர நாயகர்களின் சாதனைகளின் நினைவுகளை துணைக்கு அழைத்தாலும் இறுகி விடுகிற நொடிகளில் ,உள்இறங்காமல் ஒழுகி ஓடி நழுவுகிறது நம்பிக்கைகள்.. மண்டை ஓட்டை அடைகாத்து என்னவாக போகிறது […]

சவப்பெட்டியில் பூத்திருந்த மலர்கள்

This entry is part 25 of 44 in the series 16 அக்டோபர் 2011

  இலையுதிர்காலத்தின் பிற்பகுதியில் டர்னிப் இலைகள் கருகிப் போயிருந்தன ஜன்னல் எரிந்து கொண்டிருந்தது. அறையைப் புகை நிறைத்தது.   ரத்தச் சிவப்பாயிருந்த ஒரு ரோஜாவின் இதழைப் பிய்த்துச் சாப்பிட்டேன் புகைபோக்கியில் புகைக்குப்பதில் ரத்தம் வந்து கொண்டிருந்தது.   ஸ்தாரே மெஸ்தோ’வின் தெருக்களில் ஒரு கசாப்புக்காரனிடம் இரந்து பெற்ற ஒரு ராத்தல் மாட்டிறைச்சி மெல்லக் காய்ந்து ஈக்கள் மொய்த்துக்கிடந்தது.   எழுதுவது என்பதே ‘இயற்கையான வகையில் வயோதிகத்தை அடைவதாகும்’ என்று கஃப்கா என் காதுகளில் ஓதிக்கொண்டே எழுதியவற்றை தானே […]

கிளம்பவேண்டிய நேரம்.:

This entry is part 21 of 44 in the series 16 அக்டோபர் 2011

– ********************************** காலம் கடந்துவிட்டது நீங்கள் கிளம்பவேண்டிய நேரம் வந்துவிட்டது. நொடிக்கணக்குடன் துல்லியமாய். ஒரு புத்தக வாசிப்பு பாதிப்பக்கங்களில் சுவாரசியம் தீர்க்காமல் உங்களிடமிருந்து பிடுங்கப்படுகிறது. உங்கள் புத்தகத்தையே கடைசிப் பக்கம்வரை வாசிக்க அனுமதிக்கப் படுவதில்லை நீங்கள். நீங்கள் சேர்த்த மூட்டை முடிச்சுக்கள் கட்டப்பட்டுவிட்டன., நீங்கள் உருவாக்கிய எண்ணம் தவிர்த்து. யாருக்கு சேர்க்கிறோம் எதற்கு சேர்க்கிறோம் யார் யாரோ எடுத்துக் கொண்டால் என்ன செய்வது என பதட்டமடைகிறீர்கள். இது இன்னாருக்கு என உயில் எழுத நினைக்கிறீர்கள். உங்கள் பேனாக்களில் […]

விடுவிப்பு..:-

This entry is part 20 of 44 in the series 16 அக்டோபர் 2011

நீங்கள் அவளை அனுப்பத் தீர்மானித்து விட்டீர்கள்.. முதல்கட்டமாக அவளது வேலைகளைப் பிடுங்குகிறீர்கள். சமைக்கக் கற்கிறீர்கள்.. துலக்கிப் பார்க்கிறீர்கள். பெட்டிபோடுபவனை விடவும் அழகாய்த் துணி மடிக்கிறீர்கள். குழந்தைகளைப் படிக்கவைக்கும் வித்தை கைவருகிறது. அவள் செய்வதை விடவும் அட்டகாசமாய் செய்வதாய் மமதை வருகிறது உங்களுக்கு. இதுவரை வாழ்ந்ததற்கான பணத்தைக் கணக்கிட்ட தூக்கி வீசுகிறீர்கள்.. அவள் முன்.. அவளைப் போல.. இரவுகளில் உங்கள் கழிவுகளையும் பகலில் உங்கள் பேச்சுக்களையும் உள்வாங்கியவள் அவள். உங்களிடம் இருக்கும் பணத்துக்கு அவளை விட இளமையானவர்கள் கிடைக்கிறார்கள் […]

இதற்கு அப்புறம்

This entry is part 18 of 44 in the series 16 அக்டோபர் 2011

சாவை எதிர்த்தானா சாவை ஏற்றுக்கொண்டானா என்று சடலத்தின் முகம் காட்டிக் கொடுத்துவிடும் பிறந்த நொடி முதல் மரணத்தை நோக்கியே மனிதனின் பயணம் மரண பயத்தை எதிர் கொள்ள அஞ்சியே ஏதோவொரு போதையில் தினம் தினம் மிதக்கிறோம் மனிதனை எடை போடத் தெரிந்தவர்களெல்லாம் மாட்டிக் கொள்கிறார்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள் எந்த ஊருக்கான பயணம் என்று தெரியாமல் தான் புறப்பட்டு வருகிறோம் உயிர்த்தெழுதல் சாத்தியமில்லை தேவ மைந்தர்கள் அரிதாகவே பூமி வயலில் விளைகிறார்கள் ஆன்மாவுக்கு அழிவில்லை என்று உபன்யாசம் […]

படங்கள்

This entry is part 17 of 44 in the series 16 அக்டோபர் 2011

அம்மா வீட்டில் சுவர்களே தெரியாமல் மகளின் படங்கள்தான் மகள் வீட்டில் அலசி அலசிப் பார்த்தாலும் அம்மா படமே இல்லை அம்மா கேட்டார் மகளிடம் ‘என் படம் மட்டும் ஏனம்மா இல்லை’ மகள் சொன்னார் ‘உங்கள் வீட்டில் ‘உங்கள் அம்மா படம் ஏனம்மா இல்லை’ அமீதாம்மாள்

இங்கே..

This entry is part 14 of 44 in the series 16 அக்டோபர் 2011

. பொய்கள் எல்லாம் மெய்யென்று மேடையேறி நடிப்பதாய்.. புரியாத வாக்குறுதிகள் புதிதுபுதிதாய் அரசமைத்திட ஆதாரமாய்.. ஏமாற்றுதல் என்பது ஏகமனதாய் ஏற்றுக்கொண்ட கொள்கையாய்.. ஏணிகளை எட்டி உதைப்பது என்றும் காணும் காட்சியாய்.. சுரண்டல் என்பது சுதந்திரத்தின் ஒரு பாகமாய்.. சூழ்ச்சியுடன் காலை வாருதல் கைவந்த கலையாய்.. எல்லாம் நடப்பது இங்கே அரசியலில்தான்…! -செண்பக ஜெகதீசன்…

அதில்.

This entry is part 13 of 44 in the series 16 அக்டோபர் 2011

ஓர் எண்ணம் மன தொலைவுகளை கடந்து கொண்டிருக்கிறது இக்கணம் . அதில் நம் கனவுகள் மீதம் கொண்டு உருவாக்கப்படுகிறது இந்த இரவு. அதில் சிதறல் கொண்டிருந்த ஒரு மவுனம் மன ஒலிகளில் விழுங்கப்படுகிறது . அதில் ஒன்றும் நிகழ்த்தியிருக்கவில்லை ஒரு அக மவுனமே அனைத்தும் சாத்தியமாக்கியது . அதில் என்னை விதைக்கும் பிரபஞ்சத்தில் இயக்கமாவேன் உணர்த்துவதற்கு காலம் பின் தொடரும் பிறகு நீயும் . அதில் நிறைவு தன்மையற்ற பகிர்வுகள் நேற்றைய மீதம் கொண்டு வளர்த்தெடுக்கப்படுகிறது . […]