கை மாறும் கணங்கள்

முகராத பூ காற்றின் வாசத்தோடு பேசிவிடுகிறது இழுபறி நிலை இறுதி முடிவிற்குவருகிறது ரகசியமொன்று நெகிழ்ந்துபோய் எல்லாவற்றையும் திறந்து காட்டுகிறது உதற இயலாதவொன்று நிழலின் சாயாலாகி அச்சமூட்டுகிறது யாரும் காணதகணமொன்று சட்டென கைமாறிவிடுகிறது பிறகு சேவல் சிறகை பூனையின் காலடியில் காண நேர்ந்து…

கூடிக்களிக்கும் தனிமை

கழுத்தைக் கவ்விக்கொண்டு தொட்டிலாடுகிறது மனிதர்களற்ற வீட்டில் உடனுறங்கும் தனிமை… இரவு முழுதும் எண்ணச்சேற்றுக்குள் முதுகுதூக்கி முன்னோக்கி ஊர்ந்து நெளிந்து நெளிந்து நகர்கிறது ஒரு மண்புழு போல நள்ளிரவு விழிப்பில் புத்திக்கு முன் துயிலெழுந்து இடவலமாய்த் துழாவும் கைகளில் தாவி அப்பிக்கொள்கிறது சன்னலோர…

தோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்

தோட்டத்துக் காவல்காரன் நித்திரையிலயர்ந்த கணமொன்றில் தனித்துவிழும் ஒற்றை இலை விருட்சத்தின் செய்தியொன்றை வேருக்கு எடுத்துவரும் மௌனத்திலும் தனிமையிலும் மூழ்கிச் சிதைந்த உயிரின் தோள்களில் வந்தமர்ந்து காத்திருக்கிறான் இறப்பைக் கொண்டுவரும் கடவுளின் கூற்றுவன் நிலவுருகி நிலத்தில் விழட்டுமெனச் சபித்து விருட்சத்தை எரித்துவிடுகிறேன் மழை…

வாப்பாவின் மடி

ஹெச்.ஜி.ரசூல் எனக்கு தொப்புள் கொடியறுத்த அம்மச்சியைப் பார்த்ததில்லை … கர்ப்பப் பையிலிருந்து கிழித்தெடுக்கப்பட்டு பூமியின் முதற்காற்றை சுவாசித்தபோது என்காதுகளில் பாங்கு இகாமத் சொன்ன எலப்பையின் குரல் ஓர்மையில் இல்லை… சுட்டுவிரலால் சேனைதண்ணி தொட்டுவைத்தபோது அந்த முதல்ருசி எப்படி இருந்திருக்கும்… நோட்டுப் புத்தகங்களின்…

தலைமை தகிக்கும்…

_____________ சூரியனை சூழ்ந்த கோளங்கள் சுற்றி திரிகின்றன தனி சுதந்திரத்தோடு தன்னை வட்டமடிக்கிற நிலா பெண்களோடு.. தலைமை பதவியின் தனிமையால் கலகலப்பாய் பழக ஆளில்லாமல் தனித்த தலைமை தகிக்க சூரியனின் பெருமூச்சும் உஷ்ணமாய் பூமியை நேருக்கு நேர் நிறுத்தி கேள்வி கேட்டால்,…

குறுங்கவிதைகள்

பேருந்தின் இரைச்சல் ஓசையில் பேச்சு வராத தமையனைப் பற்றி ஓயாமல் பேசிக்கொண்டு வந்தாள் ஒருத்தி. எனக்கென்னவோ அவளே அவனுக்கும் சேர்த்து பேசிக்கொண்டிருப்பது போல் இருந்தது. 0 ஒன்றே போல்தான் உன் குழந்தை கைகளின் ஸ்பரிசமும். O கண்கள் சொருகும் அதிகாலைப் பொழுதில்…

அந்த நொடி

அந்த நொடி எப்போதும் நிரப்பபடாமலே உள்ளது அந்த நொடி எதை கொண்டு நிரப்ப அதை நிரம்பிவழியும் எனது நினைவுகளைகொண்டு அதன் முனையை கூட நிரப்ப முடிவதில்லை கதைகளையும் கவிதைகளையும் ,வார்தைஜாலங்கலையும் கொண்டு நிர்ப்பிவிடலமா? மழையையும் வண்ணத்தையும் கொண்டாவது! பதற்றமான பல பொழுதுகளில்…

பா. சத்தியமோகன் கவிதைகள்

பா. சத்தியமோகன் கவிதைகள் அதாகப்பட்டது..! என்னிடம் ஒரு பேனா உள்ளது உள் சட்டைப் பையில் வைக்கிறேன் வெளியில் வைத்தால் வரவு செலவு கணக்கு எழுதவே கேட்கிறார்கள் அதுவோ காவியம் எழுதும் காப்பியம் பழகும் அன்பு பேசும் என்னிடம் அழகிய மாலைப்பொழுது உள்ளது…

பம்பரம்…

படைவீடு அமுல்ராஜ் . கென்னிப்பன் வூட்டு ஐயப்பன மிஞ்சரதுக்கு ஒருத்தனும் இருந்ததில்ல ஊருல ... அவங் செதுக்கித்தர பொம்பரத்துக்கு ஒரு கூட்டம் எப்பயும் அவங்கூட சுத்தும் ... பொம்பரத்துக்கினே காட்டுக்குப் போவாங் ... பொர்சிமரம்தான் பொம்பரத்துக்கு எத்ததுன்னுவாங் ... சிலநேரத்துல அவுஞ்ச,…

கவிதைகள்: பயணக்குறிப்புகள்

11 தொடக்கப்புள்ளியிருந்து வெகுதூரம் வந்தாயிற்று- போகவேண்டிய தூரம் அதிகம் என்ற தெளிவோடு. சிறுகற்கள் மலைமுகடுகளாய் வழியடைத்த நிலை மாறி பெரும்பாறைகளும் இன்று துகள்களாகிவிட்ட ரசவாதம்! கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்!! புரியாமல் கருத்துப்போர்வையில் கற்களைச் சுருட்டியெடுத்துவந்து கைபோனபோக்கில் என் ஆறெங்கும் இறைத்துக்கொண்டிருக்கும்…