உறுதியின் விதைப்பு

This entry is part 33 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

தன் உறுதின் மீது கலைந்திருக்கும் சிறு சிறு நம்பிக்கைகளை சேகரிக்கிறேன் . நாளையின் மீது அவை இன்னும் நிர்பந்திக்கவில்லை இன்றைய இப்பொழுதைய கடக்கும் நிமிடத்தில் தனக்கு உண்டான கட்டமைப்பை சரி பார்த்து கொள்கிறது . இயங்குதலில் கவலை கொள்வதில்லை அது என் பிரபஞ்சம் பார்த்து கொள்கிறது . என் இருப்பின் என்றைக்குமான அவசியம் தன் எண்ணத்தின் உறுதியில் திளைத்திருப்பது வெறும் கற்பனை கொண்ட கனவல்ல என்பதை நிருபணம் செய்வதே . பகடை செய்யப்பட்ட வாழ்வு அல்ல மற்றவர்கள் […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (ஓங்கிப் பாடு பாட்டை) (கவிதை -45)

This entry is part 31 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஆலோசனை எதுவும் உதவாது காதலர் தமக்கு ! மலை நெடுவே ஓடும் நீரோட்டம் போலில்லை அவருக்குக் குறுக்கிடும் அணையின் திறம் ! குடிகாரன் உணர்ச்சி ஒரு ஞானிக்குத் தெரியாது ! காதலருக்குள் தம்மை இழந்தவர் அடுத்தென்ன செய்வார் என்றறிய முயலாதே ! மேற்பதவி யாளன் தன் பதவியைக் கைவிடுவான் தனியாகக் காதலியுடன் வீட்டில் மாட்டிக் கொண்டால் ! +++++++++ மலை ஊடே ஒருவன் […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -2)

This entry is part 30 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “ஏழ்மையில் உழலும் என் தோழனே ! செல்வீகம் ஏழ்மைத் தீங்கை நிவர்த்தி செய்தாலும், வறுமைதான் ஆன்மாவின் பெருந்தன்மையைத் தோன்ற வைக்கிறது. துயர் ஏழ்மையின் உணர்ச்சிகளை மிதமாக்குகிறது. களிப்பு இதயத்தின் காயங்களை ஆற்றுகிறது. வறுமையும், துயரும் நீக்கப் பட்டால், மனித ஆன்மா தன்னலம், பேராசை சின்னகளாய்த் தெரியும் ஒரு சூனிய வில்லை போல் ஆகிறது.” கலில் கிப்ரான் (அன்பு மயமும் சமத்துவமும்) என் ஆத்மா […]

காதலாகிக் கசிந்துருகி…

This entry is part 29 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

தோற்ற மயக்கம் தொற்றாகி மொட்டை மாடியில் மல்லாந்து கிடந்த கல்லூரிக் காலங்களில் அவளை வருணிக்க வாய்த்திருந்த நிலா காய்ந்திருக்கும் நிலா நுகர்ந்த முல்லையெனவும் என் நெஞ்சுக்குள் அடைபட்ட காலங்களே அகிலத்தாருக்கு அமாவாசை யெனவும் ஒளிந்தும் ஒளிர்ந்தும் நிலா நிலவியதை அவளோடு ஊடல் கூடல் என் ஒப்பிட்டும் கசிந்துருகிய காலங்களிலும் நிலா காய்ந்திருக்கும் கலைந்திறாத கூந்த லொதிக்கிய கையினூடே கழட்டியனுப்பிய கடைக்கண் பார்வை குறித்து கிறுக்கித் தள்ளிய கவிதைகளிலும் நிலா இருக்கும் மேலேப் பார்த்தபோது நிலா உதிர்ந்துகொண்டிருக்கும் பெள்ர்னமி! […]

தேனம்மை லட்சுமணன் கவிதைகள்

This entry is part 26 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

இடறல்:- *********************** ஹாய் செல்லம் மிஸ்யூடா அச்சுறுத்துகிறது., குறுங்கத்திகளாய் கண்களைக் குத்துமுன் மடக்கிக் குப்பையில் போடும்வரை. யாரும் படித்திருக்கக் கூடாதென எண்ணும்போது அப்ப உனக்குப் பிடித்திருக்கிறதா என்ற கேள்வி கத்தி முனையாய் இடறிக் கொண்டே.   சகிப்பு:- ************* கர்ண குண்டலங்களைப் போல கனமாக இருந்தாலும் கழட்டி வைத்துவிட முடிவதில்லை அவைகளை. அறுத்தெறிந்தாளாம் மறத்தமிழச்சி பால்குடித்தவன் வீரனில்லை என்பதால். வீரன் கை வைத்தாலும் வெட்டி எறிய முடிவதில்லை மார்பகங்களையும் கைகளையும் நாய்கள் தின்னும் பிணமானதால். கசியும் வியர்வையூடான […]

நிலாச் சிரிப்பு

This entry is part 25 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

நாளுக்கு நாள் கூட்டிக் குறைத்து சிரித்தாலும் வாயை அகல விரித்து சிரித்தாலும் பிறையாக வளைத்து சிரித்தாலும் முகம் முழுக்க விரிய சிரித்தாலும் மற்றவர்கள் நம்மோடு சிரித்தாலும் சிரிக்காமல் புறக்கணித்தாலும் சிரிப்பானது எல்லோருக்கும் குளுமையாக்த்தான் இருக்கிறது.   சதா புன்னகைத்துக் கொண்டே இருக்கும் நிலவை பார்த்துத்தான் சொல்கிறேன்.

வெளியே வானம்

This entry is part 24 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

மற்றுமொரு இரவு உறக்கத்தை வரவழைக்க முஸ்தீபுகளில் ஈடுபட வேண்டியுள்ளது மது புட்டிகளின் சியர்ஸ் சத்தங்களைத் தவிர இரவு அமைதியாக இருந்தது அன்று பகலில் சந்தித்தவர்களில் சில நபர்களின் முகங்களே ஞாபகத்தில் இருந்தது படுக்கையை பகிர்ந்து கொள்ள பணத்தை நீட்ட வேண்டியுள்ளது எதையாவது செய்து தன்னிலை மறக்க வேண்டும் தன்னைப் பற்றிய சிந்தனை தற்கொலைக்கு தூண்டுகிறது அவமானங்களும், உதாசீனப்படுத்தல்களும் குறுவாளால் வயிற்றைக் கிழிக்கிறது மரண சர்ப்பம் வேகமாக என்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறது மது அருவியில் என்னை நனைய […]

தவளையைப் பார்த்து…

This entry is part 23 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

வலியில்லாமல் தொ¢த்த தசைகள். நிண ஆற்றை உருவாக்கிய தேகம். வீச்சம் நாறிய மூளை. விஸ்வரூபம் எடுத்த உன்னால் இனியும் வாழக் கற்கிறேன். நடு ரோட்டில் கால் நைந்து போன தவளையைப் பார்த்து. Chandrasekaran S.s.n.

என்று வருமந்த ஆற்றல்?

This entry is part 18 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

நள்ளிரவுக் கருமை; மூழ்கிக் கிடக்குமுலகு; தண்ணொளி பாய்ச்சும் நிலவு; ‘கெக்க’லித்துச் சிரிக்கும் சுடரு. விரிவான் விரிவெளி. ‘புதிர் நிறை காலவெளி. வெறுமைக்குள் விரியும் திண்ம இருப்பு. பரிமாண விலங்குகள் தாங்கும் அடிமை. பன்முறையெனினும் மீறி வியப்பதற்கெதுவுண்டு. படியளக்கும் படைத்தவரே! படைத்ததேன்? பகர்வீரா? அறிவுத்தாகம் மிகுந்த அலைவு; தாகசாந்திதான் எப்போது? அலையெனப் பரவும் நிலை வரும் வரையிலா? என்று வருமந்த நிலை? அன்றி ‘அதிவெளி’ கடக்கும் ஆற்றல் வரும் வரையிலா? என்று வருமந்த ஆற்றல்? ngiri2704@rogers.com

எதிர்பதம்

This entry is part 12 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

வெறுக்கப்பட்ட அத்தியாயங்களின் வழியே ஊடுருவும் ஒரு வெறுப்பு இன்றைய பொழுதினை நிலைகொள்ளாமல் செய்யும் வலிமை கொண்டது. மேலெழும் உவர்ப்பின் சுவையை ருசிபார்க்க ஆவல் கொள்கிறது கண்கள்,காரணம் அறிந்த மனமும் அதி தீவிரமாய் எதையெதையோ, மற்றவர்கள் சுடும் சொற்களுக்கு இடையே அமைதியாய் நகர்கிறது நாட்கள் ,இடையேனும் நற்செய்தி கிடைக்குமா என்று செவிப்பறைகள் தங்களின் கூர்மையை சோதித்து கொள்கின்றன. எதிர்பார்ப்பின் தீவிரம் தன் இருப்பை ஒரு பொழுதேனும் மாற்ற முயற்சிக்கிறது , விடைகள் அனைத்தும் ஏமாற்றம் எனும் முடிவை மட்டுமே […]