நிலவின் வருத்தம்

This entry is part 35 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

இரவைத் துளைத்து வானத்தைத் தொட்டுக் கொண்டிருந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் இரவுக் குளியல் நடத்தியது ஒரு காகம். அதில் அருகே குளித்துக் கொண்டிருந்தது பௌர்ணமி நிலா… நிலா கேட்டது காகத்திடம் இந்த நேரத்தில் இங்கே எப்படி என்று. கால நேரம் பார்த்தால் என் தாகமும் தீராது தேகமும் தகிப்பிலிருந்து தணியாது என்றது காகம் தன் சிறகுகள் அடித்து. நிலா சொன்னது.. அப்போதெல்லாம் இந்த இடத்தில் ஒரு பெரிய குளம் இருந்தது. மீன்கள் […]

கூடியிருந்து குளிர்ந்தேலோ …

This entry is part 34 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

______________________ சூழ்ந்திருந்த மாமரமும் சிறகடிக்கும் பட்டாம்பூச்சியும் ரீங்காரமிடும் தட்டான்பூச்சியும் மத்தியிலிருந்த நானும் – ஆளுக்கொரு கை உண்டு குளிர்ந்தோம் இடை-வெளியிலிருந்த நிச்சலனத்தை… – சித்ரா (k_chithra@yahoo.com)

இருப்பு!

This entry is part 33 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

முற்றத்துக் கயிற்றுக் கொடிக்கும் வீட்டிற்கு மென மாறிமாறி உலர்த்தியும் விட்டுவிட்டுப் பெய்த தூறலின் ஈரம் மிச்ச மிருந்ததால் இரண்டு ஆண்டுகளுக்குமுன் இறந்துபோன வாப்பாவின் சட்டை யொன்றை உம்மாவிடம் கேட்க ‘வாப்பாவுக்கு ரொம்பப் பிடித்த’தாக தந்தச் சட்டை… நான் பிரயோகித்துப் புறக்கனித்துக் கழட்டிப்போட்ட ஒன்று! தென்னந் தோப்பில் கரும் பச்சையாய் செழிப்பா யிருந்த ஒரு வரிசை மரங்களைக் காட்டி புருவம் சுருக்க ‘அவை வாப்பா நட்ட’வை என்றான் தோட்டக் காப்பாளன்! முன் முற்றத்தில் தலைவாசலுக்கு வலப்புறம் பந்தல் பிடித்து […]

காகிதத்தின் மீது கடல்

This entry is part 32 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

சிறுமி காகிதத்தின் மீது ஏழு கடலின் சித்திரத்தைத் தீட்டுகிறாள் அதில் ஏழு மீன்களை நீந்தவிடுகிறாள் ஏழு மலைகளின் சித்திரத்தைத் தீட்டுகிறாள் அதன் முகடுகளில் ஏழு பஞ்சு மேகங்களை மிதக்கவிடுகிறாள் ஏழு மேகங்கலிருந்து சில மழை துளிகளை உதிர விடுகிறாள் மழைத் துளிகள் விழுமிடத்தில் ஒரு பூவின் சித்திரத்தைத் தீட்டுகிறாள் அதனடியில் தன் பெயரை எழுதுகிறாள் இனி அவளை காண்பதென்றால் ஏழு கடல் ஏழு மலைளைத் தாண்டி பயணிக்க வேண்டியிருக்கும் நமக்கு. ரவிஉதயன் raviuthayan@gmail.com

நாளை ?

This entry is part 22 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

காத்திருக்கும்  இறுதி கொண்ட  வாழ்வை மற்றவர்கள்  தீர்மானிக்க  என் பிறப்பின்  உறுதி  இருள் கொண்ட  ஒளியினை கொண்டது . அதன் அசைவுகள்  கட்டளை இடும்  முன்னரே  மறுத்துவிடுகிறது  சுய ஒளி. அதன்  நிறப்பிரிகை  கவன சிதறலாகிறது. கணமேற்றும் நாட்களை  என் பருவங்கள்  கூட  அறிந்திருக்கவில்லை . குற்றசாட்டின் உண்மை  குற்றங்களில்  ஒருபோதும்  இருந்ததில்லை  சட்டங்கள் இயற்றும்  மேதமையில்  இருக்கபோவதில்லை  மனிதம் மறக்க  செய்யும்  மனித நேயத்தில்  மலிந்து கிடக்கிறது . மக்களின் பெருங்கூட்டம் இரைச்சலின் மிகுதி  வருத்தம் கொள்ளும்  அன்பின் பரிதவிப்பு […]

மொழிபெயர்ப்பு

This entry is part 21 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

  பகற்பொழுதில் நாம் அந்தப் பூங்காவில் அமர்ந்து பேசியவைகளை நிலவொளியில் இரவு மொழிபெயர்த்து வாசித்துவிடுகிறது மின்மினிகளாய்!   –          இலெ. அ. விஜயபாரதி

ஆர்வம்

This entry is part 19 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

தேர்வு எழுதி முடித்த அடுத்த வினாடி என் மகன் என்னிடம் குதூகலித்தான் விடுமுறை விட்டதென்று படிக்கையில் என்னை பக்கம் வர அனுமதிக்காதவன் பென்சில் எடுக்கக் கூட அவன் அம்மாவை விரட்டியவன் தேர்வு முடிந்ததும் பாட நூல்களை அலமா¡¢யில் நேர்த்தியாக அடிக்கி வைக்கிறான் புத்தகங்களை அடுத்த ஆண்டு இலவசமாகக் கூட யாருக்கும் கொடுக்க வேண்டாம் என்கிறான் புத்தகங்கள் அவனை மிரட்டியிருக்கும்போலும். உருவேற்றுவதில் இருந்து மீண்டு வந்தவன் படிப்பதற்கு எந்த உதவியையும் இதனை நாளும் எதிர்பார்க்காதவன் விளையாட்டுத் திடலை நோக்கி […]

எங்கே போகிறோம்

This entry is part 17 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

  திகைக்கின்றன திகார் கம்பிகள்- ஊழலும், எதிர்ப்பும் ஒரே சிறையில்.. போதி மரமே போதையில் தள்ளாட்டம்.. காணாமல்போய்விட்டது காந்திஜியின் கைத்தடி.. எங்கே போகிறோம் நாம், மறுபடியும் கற்காலத்திற்கா- ஏழை இந்தியன் புலம்பல் !         -செண்பக ஜெகதீசன்  .. 

தீர்ந்துபோகும் உலகம்:

This entry is part 16 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

  துணி மாட்டும் கவ்விகளில் முனைப்பாய் தன் நேரத்தை விதைக்கிறது அந்தக்குழந்தை ஒன்றோடோன்றை பிணைத்து பிரித்து வீடு கட்டி மகிழுந்து ஓட்டி அரைவட்டம் தீட்டி கோபுரம் எழுப்பி எழுத்துகள் பரப்பி எண்கள் அமைத்து தம்பிப்பாப்பாவுக்கு கிலுகிலுப்பை செய்து பறவைக்கு இறக்கை பொருத்தியென….   நிமிடங்களுக்கு நிமிடம் மாற்றிமாற்றி சிருஷ்டிக்கிறது அதற்கானதொரு அழகிய உலகத்தில்…   அழகிய உலகம் அவ்வப்போது தீர்ந்துபோவதுமுண்டு விளையாட்டு அலுத்துப்போகும் தருணங்களிலும் உலரும் துணி உதிராமல் இருக்க அம்மா பிடுங்கிச்செல்லும் தருணங்களிலும்

உரையாடல்.”-

This entry is part 14 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

மீன் சுவாசம் போல் உள்ளிருந்து வெடிக்கும் ஒற்றைப் புள்ளியில்தான் துவங்குகிறது ஒவ்வொரு உரையாடலும். குளக்கரையின் எல்லைவரை வட்டமிட்டுத் திரும்புகிறது., ஆரோகணத்தோடு. மேலே பெய்யும் மழையோ முள்க்ரீடம் பதித்து அவரோகணம் செய்கிறது குளத்தின் மேல். தத்தளிகிறது குளம் ஊசியாய்க் குத்தும் அபஸ்வரத்தின் குணங்களோடு. ஒளிய முடியாமல் தவிக்கும் குளம் மீன்களைத் துரத்துகிறது. ஒளியும் மீன்களாய் உள்ளோடிப் போகிறது உரையாடலும்.