வீடழகு

எனக்கான வீடு அதென்று மையலுற்றுத் திரிந்து கொண்டிருந்தேன். வெள்ளையடிப்பதும் சித்திரங்கள் வரைவதுமாய் கழிந்தது என் பொழுதுகள். நீர் வடியும் தாழ்வாரங்கள் தங்கமாய் ஜொலிக்கும் பித்தளையின் தகதகப்போடு. மழைத் தூரிகை பூசணம் சூரியக்குடைத் தடுப்புதாண்டி வரவிட்டதில்லை ஒரு தேன்சிட்டோ., குருவியோ. காலைப் பனியும்…

பூனைகள்

அலுவலகம் செல்கின்றன. தொழில் செய்கின்றன. கடைகள் நடத்துகின்றன. சில சமைக்கவும் செய்கின்றன. முக்கால்வாசி நேரம் மூலையில் முடங்கிக் கிடந்து பெரும் வேலை செய்ததாய் நெட்டி முறிக்கின்றன. வீட்டுக்காரி அள்ளி வைக்கும் மீனில் திருப்தியடையும் அவை வளர்ப்புப் பிராணிகள்தாம் காவல் காப்பவை அல்ல.…

சிற்பம்

  ‘பாவம் காகம், பசிக்குமென்று ஒரு வடை கொடுத்தாள் பாட்டி..’ என்று தொடங்கிற்று உன் காக்கா கதை!   பார்த்துப் பிடிக்கவில்லை, பழகிப்பார்த்துப் பிடித்தது, சின்ட்ரெல்லாவை உன் இளவரசனுக்கு!   ‘ரெயின் ரெயின் கம் அவர் வே’ என்றும் ‘நிலா நிலா…

சுதேசிகள்

அம்மணக்குண்டியுடன் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் ஊரிலுள்ள அனைவரும் ஆபத்பாந்தவர்களான அடிடாஸு'ம் ,ப்யூமா'வும் வந்து தம் மானம் காக்க வேண்டி நிற்கின்றனர்   தங்கம் தவிர்த்த வேறு உலோகங்கள் மனித இனத்திற்குக்கிஞ்சித்தும் பயனற்றவை 'ஆதலால் காதலை'ச்சொல்ல இப்போதெல்லாம் ஆதாமும்  தங்கம் தேடி அலைகிறான்.…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன ? (கவிதை – 50 பாகம் -1)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா தோன்றியது முதல் இங்கிருக்கிறேன் முடிவு வரை நானி ருப்பேன் முடிவில்லை எனது வசிப்புக்கு ! படைப்பின் போது இறைவன் தன்னிட மிருந்து பிரித்து வைத்து ஒரு பகுதி…

முற்றும்

முன் பெற்ற காலமொன்றில் தன் நிலையினை  அளவிடுவதற்கு தூற்றும் நினைவினை கொண்டு எடுத்து ஆளும் நிறைவு உண்டு . முதல் அன்பின் வீச்சு பார்வையை கூச செய்த தன்மை இனி வருவதற்கில்லை இயங்கலாமல் போன காலமொன்றில் சேகரித்து வைக்கிறேன் முதலின் அனைத்தும் . இங்கு தான்…

கள்ளன் போலீஸ்

நிலவும் நானும் கள்ளன் போலீஸ் விளையாடினோம் நான் போலீசாக நிலவு மேகத்தில் மறைந்து கொள்ளும் நிலவு போலீசாக நான் வீட்டில் மறைந்து கொள்ளுவேன் இப்படி மாறி மாறி இரவெல்லாம் விளையாட்டு சூரியன் தன்னையும் விளையாட்டில் சேர்க்க சொல்லி சண்டையிட எங்கள் விளையாட்டை…

நிதர்சனம்

என்ன தான் தங்க கோவில் என்றாலும் இடிதாங்கி என்னவோ அலுமினியத்திலும் தாமிரத்திலும் தான் இருக்கிறது. அ.லெட்சுமணன்

த்வனி

இன்றைக்கு என்ன கிழமை வெள்ளியா, சனியா மாத்திரை விழுங்காமல் எங்கே தூக்கம் வருகிறது தேர் நிலைக்கு வந்துவிட்டது போல வேட்டுச் சத்தம் கேட்கிறது இத்தனை வயசாகியும் வாய் சாகமாட்டேன் என்கிறது புத்தனுக்கு ஞானம் தந்த அரசமரம் எங்கள் வீட்டுக் கொல்லையில் இருக்கிறது…

பறவையின் இறகு

வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் 67 -ம் பக்கஎண் அடையாளமாக ஒரு பறவையின் இறகை செருகி இருந்தேன். மீண்டும் வாசிக்கஎடுத்தபோது 83  -ம்பக்கத்தில் பறவையின் இறகு இருந்தது. இப்பொழுது பறவையின் இறகை கையில்வைத்துக்கொண்டு கற்க ஆரம்பித்திருக்கிறேன் 67 -ம் பக்கத்தில் இருந்து 83…