யாதுமாகி

கோவிந்த் பகவான் ஒருக்களித்து காம்புகள் தெரிய உறங்கும் இணை இணையாத இளம் வீதி நாயின் கனவினைப்போல் விரிகிறாய் துருவேறி செதிலுதிர்க்கும்  குளியலறை ஜன்னல் கம்பிகளின் மீது படர்ந்த  அணில்கொடியின் சொரசொரப்பாய் படர்கிறாய் நான்கு வழிச் சாலையில் குருதி வழிய துடித்துப் புலம்பும்…

உனக்குள் உறங்கும் இரவு

கோவிந்த் பகவான் உனக்குள் உறங்கும் இரவு எலுமிச்சைச் சாறு பிழியும் கருவியைப்போல் பிழிந்தெடுக்கிற இந்த இரவு துயர் மிகுந்த நம் நினைவுகளை கசியவிடுகிறது புளிப்பேறிய சுவைடர்ந்த அவை தலைக்கேறி தள்ளாடச் செய்கின்றன அடுக்களை டப்பாவில் அடைக்கப்பட்ட மீத நினைவுகளையும் சில தேக்கரண்டி…
எப்போதும் சாத்தி கிடக்கும் வீடு

எப்போதும் சாத்தி கிடக்கும் வீடு

கோவிந்த் பகவான் அது ஒரு வீடு உட்தாழ்ப்பாளிட்டு எப்போதும் சாத்தி  ஜன்னல் மட்டும் திறந்தே கிடக்கும் அது துர் சக்திகள் வெளியேறும் மார்க்கம் என எல்லோராலும் பரவலாக பேசப்பட்டு நம்பப்பட்டது அதனருகில் சென்றவர்கள் யாரும் திரும்பியதில்லை மனிதர்கள் வாழ்ந்ததற்கான எவ்வித அடையாளமுமற்று…
பாழ்நிலம்

பாழ்நிலம்

கோவிந்த் பகவான் ஓர் ஊழிக்காலத்தின் இறுதியில் பெய்த மழையொன்றில் நனைந்த பறவை அடுத்த ஊழிக்காலத்தில் சிறகுலர்த்திய போது  அதன் ஈரம் தோய்ந்த இறகுதிர புவியின் மீதான பாரம் கூடி விசை செயலிழக்கிறது பறவையினால் சபிக்கப்பட்ட பாழ்நிலமென இப்பெருங்கோள் ஏதோவொரு காலத்தில் பெயர்…

நியூட்டன் இயக்கும் பிரபஞ்சம்

சி. ஜெயபாரதன், கனடா சூரிய மண்டலத்தில்பூமி, நிலாகடல், காற்று, கதிர்க்கனல்,புல்லினம், உயிரினம், புள்ளினம்,மானிடம் அனைத்தும்காரண நிகழ்ச்சி.ஆரம்பம் உள்ள நிகழ்வுகள்.இறுதி முறிவுஎந்திராப்பி முடிவு.அதுவின்றிஎதுவும் இயங்காது !அண்ட சராசரங் களைதொட்டிலில்ஆட்டுவது அன்னை.முற்பிறப்புஇருந்தால்தான்இப்பிறப்புநிகழும்.இறப்பில் முடியும்இப்பிறப்பு.ஆன்மாவுக்குபிற்பிறப்பு உள்ள தெனஞானிகள் கூறுவர்.முற்பிறப்பு, இப்பிறப்புபிற்பிறப்புசூரிய குடும்ப மானிடசுழற்சி !அணுவோ, அண்டமோ,…
புதுவித உறவு

புதுவித உறவு

சி. ஜெயபாரதன், கனடா தாமரை இலைமேல்தண்ணீர்போலொரு வாழ்வு.கண்டது உன்கண்ணீர் !சிறகு ஒன்றில் தினம்பறக்க முயன்றுதவிக்கும்பெண் புறா ! உனக்கும் எனக்கும்உறவில்லை.பந்த பாசம் பிணைப்புகணஒன்று மில்லை.உனக்கு உதவி செய் என்றுஉசுப்பியதுஎதுவெனத் தெரியாதுஎனக்கு.எவ்வளவு எனத் தெரியாதுகணக்கு !நமக்குள் வாராதுபிணக்கு !
நிறைவு

நிறைவு

பா. ராமானுஜம் பந்தலிலேயே நின்றுவிட்டேன்.'நான் இங்கேயே இருக்கிறேன்,நீ போய்ப் பார்த்துவிட்டு வா.''என்ன ஜென்மமோ! ஆனால்இது ஒன்றுதான் நிஜம் –மெய்யுறுதி,'கடிந்துகொண்டே உள்ளே சென்றாள்அந்த வேதாந்தி.மூப்பு, இறப்பு இரண்டுமேஎனக்கு ஒவ்வாதவை.உரமிழந்த உடலாகட்டும்,உயிரற்ற உடலாகட்டும்,இரண்டுமே என்னைஅருவருக்க வைக்கின்றன. 'ஆகிவிட்டதா?' என்றார்.என்னது ஆகிவிட்டதா?குழப்பத்துடன் 'இல்லை' என்றேன்.'அப்ப வாங்க,…
நான் எனதாகியும் எனதல்லவே!

நான் எனதாகியும் எனதல்லவே!

பிரகாஷ் தேவராஜு . 'நான்' நேசிக்கின்றேன் ….'என்' நண்பர்களை'என்' குடும்பத்தை'என்' மக்களை'என்' நாட்டை'என்' உலகத்தை'என்' பிரபஞ்சத்தை பிரபஞ்ச வெளியில் பறந்த பின்னரே உணர்கின்றேன்… 'நான்' நேசித்த யாவும் எனதில்லை.'நான்' அவற்றினுள்ளே -கலந்து போன கலவையாய், கரைந்து போன கரைசலாய்.கண் காணும் காட்ச்சித்துளியை…

நிழலின் இரசிகை

செ.புனிதஜோதி அண்டைவீட்டுக்காரியின் பால்கனியை என் சாளரத்தின் வழியே இறக்கிப்போட்டு விளையாடுகிறது நிழல் தொட்டிச்செடியில் அசைந்தாடும் மலர்கள் கொடிகயிற்றோடு உறவாடும் உடைகள் கூண்டுகிளியென என் வரவேற்பறையில். நிஜத்தை நிழற்படம் எடுத்து ஒட்டிக்கொண்டிருக்கிறது ஒளிப்படக்காரனாய் அவர்கள் என் வீட்டிற்குள்ளிருந்துதான்  அவர்கள்  வீட்டிற்குள் செல்கிறார்கள்  அன்னியர்கள்…

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) ஆடுகளம் அடுத்தடுத்துத் தொடர்ச்சியாய் வெற்றிகளைக் குவித்தும் ஆட்டவீர்ர் முகத்தில் அதற்கான குதூகலமில்லை. காரணங்கேட்டவரிடம் கூறினார்: கோமாளிகளும் குயுக்திமூளைக்காரர்களும் குரோதம் நிறை வஞ்சக நெஞ்சங்கொண்டோரும் சிறுமதியாளர்களும் செத்த உயிர் தாங்கியோரும் சாக்கடையை சந்தனமணங்கமழ்வதாக சாதிப்போரும் சக உயிரைப் பகடையாக்கும் சூதாடிகளும்…