உறங்கத் தாமதமாகும் ஒவ்வொரு இரவும் சுமந்து வருகிறது உழைப்பின் களைப்பை அலுவலகம் உறிஞ்சிச் சுவைத்த நேரத்தை பார்களில் அமர்ந்து பீராக உறிஞ்சியபடி அதிக வேலை பற்றியும் அதிகப்படியாயோ குறைந்தோ கிடைத்த போனஸ் பற்றியும் கடுகடுத்த மேலதிகாரியை கிண்டலடித்தபடியும் சக ஊழியனை ஜால்ராக்காரனாகவும் ஐஸ்துண்டங்கள் கரைய கரைய மனதைக் கரைத்தபடி வண்டியில் ஏறும்போது தூக்கமற்று முறைக்கும் மனைவி முகம் எதிர்கொள்ள கரைந்த கவலையெல்லாம் திரும்ப வயிற்றைக் கலக்கியபடி..
ஒரு மரம் விடவில்லை ஒரு சுவர் விடவில்லை ஊரெல்லாம் விழா பற்றி ”காகித” போஸ்டர்ஸ் முதல்வர் கலந்து கொள்கிறாராம் ஊரே விழாக்கோலம் பூண்டது சிறுவன் படித்துக்கொண்டிருந்தான் காகிதம் மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது விழாவின் பெயர் ஏதோ “மரம் நடுவிழாவாம்”. அ.லெட்சுமணன்.
ஆள்காட்டி மழை ஜன்னல் கம்பிகளில் தொற்றிக்கொண்டிருந்த மழை நீரை ஆள்காட்டி விரல் கொண்டு ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை அழுத்தி வடித்து விட்டேன். மறு நாள் மழை வரவில்லை. ஆள்காட்டி விரல் காரணமாயிருக்குமோ ? அஞ்சறைப்பெட்டி அஞ்சறைப்பெட்டியில் அம்மா போட்டு வைத்த மீதக்காசில் சீரகத்தின் மணமும் கடுகின் வாசமும் வெந்தயத்தின் நெடியும் மஞ்சள்பொடியின் கமறலும் மிளகின் காரமுமாக அடித்த வாசம் இன்னும் என் மனதினுள் வட்டமடிக்கிறது அந்தக்காசில் வாங்கித்தின்ற மிட்டாயின் மணம் ஏனோ நினைவில் இல்லை. சின்னப்பயல் […]
பூகோள வரைபடங்கள் இல்லாமல் திசையை அவதானித்து தேசங்களைக் கடப்பதாய் பறந்தும் மிதந்தும் மின்னல் வேக இறக்கத்தில் ஒரு மீனைக் கொத்திச் செல்வதாய் வளாகங்களின் சாளர மேற்புறத்து வெயில் மறைப்புகளில் ஒடுங்கிப் பெருகுவதாய் மலரினுள் நுழைந்து தேனெடுத்து மரத்தைக் கொத்தி இரை தேடி ஜீவிப்பதாய் வணங்கப் படுவதாய் உண்ணப் படுவதாய் ஒரு வலையை விடவும் நுண்ணிய கூடு கட்டும் திறனாளியாய் இன்னும் பலவாய் அறியப்பட்ட பறவையின் நாள் முழுதுமான இயங்குதல் அனைத்தும் காணக் கிடைப்பதில்லை உதிர்ந்த சிறகுகளும் சிதறிய […]
மணல் வீடு வானக்கூரையை தொட்டுக் கொண்டு நிற்கும் கலங்கரை விளக்கம் படகுகளைத் தாலாட்டும் கடலலைகள் கடலில் நீந்தும் மீன்கள் வலையில் அகப்பட்டால் பாத்திரத்தில் பதார்த்தமாய் கிடக்கும் கடலின் ஆழத்தில் பனித்துளி முத்தாக உருமாறும் கடலலைகள் எழுப்பும் ஓசை ஆர்மோனியத்திலிருந்து வெளிவரும் சுதியைப் போலிருக்கும் பால்யத்தில் கிளிஞ்சல்கள் பொறுக்கிய நாம் தான் கடற்கரையிலும் கைபேசியில் உரையாடுகிறோம் கட்டிய மணல் வீட்டை அடித்துச் சென்ற கடலலையைப் பார்த்து குதூகலித்தனர் குழந்தைகள். […]
பொன்னை துரத்தும் பந்தயம் காலம்-நான்-பொன் ஒருவர் பின் ஒருவர் துரத்தியபடி . ஓடினால் அள்ள முடியாதென குதிரை மேல் சவாரி . ஏறியதும் தெரிந்தது – இது பொன் இடும் குதிரை மட்டுமல்ல பொன் தேடும் குதிரையும் கூட . தலை தெரிக்க ஓடுகிறது அது பாய்கிற பாய்ச்சலில் கழுத்திலிருந்த பிடி நழுவி சவாரி வாலை பிடித்தபடி அது போகிற இடமெல்லாம் … கழுத்தில், குதிரை சலங்கைகளுடன் ! மன்னிக்கவும் – மென்பொருள் தொழிலக அடையாள அட்டையுடன். […]
மணல் குன்றில் விளையாடுகின்றன குழந்தைகள். மலை ஏற்ற வீரர்களைப்போல் அதன் உச்சியில் ஏற நெகிழ்ந்து மண் சரிய சிரிக்கின்றன . மணலில் மலை செய்து அதில் குகைகளைக்குடைந்து கூழாங்கற்களை வாசலுக்குப்பதிக்கின்றன மணலில் சித்திரங்களை,பெயர்களை வரைந்து அழிக்கின்றன. மணலில் செடியை நட்டு நீர் வார்க்கின்றன. அதட்டும் அழை குரல் அவசரத்தில் எழும் குழந்தைகளின் மடியிலிருந்து கொட்டங்குச்சி ஈரமண் இட்லிகள் வீழந்து உடைகின்றன. குழந்தைகளின் கால்களை மணல் அலைகள் தழுவிக்கொள்கின்றன. வீடு மீளும் குழந்தைகளின் உடலில் பிரிய மறுத்த மணற்த் […]
இருளை உள்ளடக்கியே பரவிக்கொண்டிருக்கின்றன வெளிச்சக் கீற்றுக்கள் எங்கும் துளை போட இயலாமல் காற்றுவெளியில் இறுகி கோளங்களாய் உருண்டு வீசப்படாத எரிபந்துகளாய் அந்தக் கோள்கள்… வழி எனும் விடை தெரிந்தோ தெரியாமலோ திசை எங்கிலும் விரவிக் கொண்டே தனித்தொரு பாதையமைத்து எதிலும் படாமல் விலகியே செல்லும் என்றும் விடை தெரிவதே இல்லை சில கேள்விகளுக்கு மட்டும் ஷம்மி முத்துவேல்
தலையால் நடந்து கொண்டிருக்கும் ஒரு வினோத பட்சியின் பின்னே துரத்தப்பட்டு அலைக்கழிக்கப் படுகிறேன் கைகால் முளைத்த மரங்கள் ரத்தம் சிதறும் நரம்புகளின் வேதனையை பூமியில் வரைந்து செல்கிறது எனக்கென தென்பட்ட திசையெங்கும் வருடிப் புணர்ந்த கனவின் துளிகள் ஒன்றின் மேல் மற்றொன்றாகி சமாதிகளில் புதைக்கப்பட்ட உடல்களின் பெருங்கூட்டம் எங்கும் அலையடித்து கிளம்பும் பரவெளியில் மூங்கில் காடெங்கும் சாய்ந்தலைந்து அறுபட்ட காதுகள் தொங்க விழிகளற்ற கொடிமர வேலிகள் உமிழ்நீர் துப்பல் சிதறல்களில் துருப்பிடித்து கருகி சாம்பலாகின. பேராறுதல் சொல்ல […]
என்றுமே தோன்றிடாத பல புன்னகையை இன்று இக்கணம் சுமக்கிறேன் . இது எவ்வளவு மிகைமை உடையவையாக இருந்தும் இன்னுமும் சிரிக்கப்படுகிறது. மீண்டுமொரு தடவை இந்த நிகழ்வு வராமல் போகவும் கூடும் அதன் பொருட்டே ஏற்று கொள்கிறது புறமுகம். புன்னகையின் சிதறல் வெளியே செல்லாமல் இருக்குமாறு கவனமாக்குகிறது. அவையும் மீறிய சிதறிய துளி வெள்ளமென பாய்கிறது எந்நிலை உடையவர்கள் பிரதியை போல பொய்மை கொண்டு மேலும் மேலும் பொழிவை கூட்டுகின்றனர். -வளத்தூர் .தி.ராஜேஷ் .