என் இரவின் கழுத்தைக் கவ்விச் செல்கிறது பூனை. நெஞ்சை யழுத்து மந்த இரவினோசை திசையறியாச் சிறகுகளின் படபடப்பு. இருளின் முடியாத சுரங்கக் குழாயினுள் தலையற்ற தேவதை அசைத்துச் செல்லும் வெள்ளை யிறக்கைகளாய் தோட்டத்திலிருந்த வளர்ப்புப் புறாவின் போராட்டம். இறுக்கமாய்ப் பற்றி மரணத்திற்கு அழைத்துப் போகும் சிறு வேட்டை மிருகத்தின் எச்சில் நூல் காற்றில் நீண்டு அறுந்த போது என்னில் ஏதோ ஒன்று தொடர்பிழக்கும். சில நினைவுகளை எட்டி உதைத்துப் புறந்தள்ளி நடக்கும் காலத்தின் பாதங்கள் ஒரு […]
போதைக்காக அல்லாமல் பொழுதைக் கழிக்கவே புகைக்கிறான் மதுவின் துளிரசம் அருந்தியதில்லை இதுவரைக்கும் போதையில் உளறும் தந்தையாலே குடியை வெறுத்தான் என்றபோதிலும் புகைக்கும் அவரது தோரணையே அவனது சிகரெட் ஈர்ப்புக்கும் காரணம் என்ற செய்தி ரசிப்பிற்குரியதாய் இல்லை அவருக்கு அன்றிலிருந்து அப்பா சிகரெட்டை ஒழித்தார் என்ற ஒற்றை வரியோடு டைரியை மூடிவிட்டு தொடர்ந்து புகைத்துக் கொண்டிருக்கிறான் ஒவ்வொரு சிகரெட்டுக்கு பின்னாலும் இருக்கிறது ஒரு தீக்குச்சி இருக்கட்டும் அதுவல்ல இக்கவிதையின் கருப்பொருள் அவன் புகைத்து அணைத்த முதல் சிகரெட் இப்பொழுது கண்விழித்து […]
“நீதி மன்றத்துக்கோ அல்லது பல்கலைக் கழகங்களுக்கோ நான் போகும் போது அங்கேயும் திருவாளர் பிதற்றுவாய் தன் தந்தை, தாயோடு பட்டாடையும், அழகிய தலைப்பாகையும் அணிந்து வஞ்சக அங்கி போர்த்திக் கொண்டு காணப்படுவார் !” கலில் கிப்ரான். (Mister Gabber) +++++++++++ இசை தனித்துவ மொழி +++++++++++ இசைக்கும் ஓர் ஆத்மா உள்ளது அது உயிரூட்டும் உணர்வு ! இசைக்கும் பஞ்சு மனம் உள்ளது அதுவே அதன் நெஞ்சு ! […]
1.மச்சம் இடது ஆள்காட்டிவிரலின் மேற்புறம் புதிதாக முளைத்த மச்சத்திற்கும் ஆரூடங்கள் உண்டுதான். நிலைக்காத போதிலும் நாளையே அழிந்துபோகுமென்றாலும் ஒவ்வொரு புதிய மச்சமும் பழைய (தலை) எழுத்தின் தொடர்ச்சியாய் புதியதோர்(தலை) எழுத்தாய் உருமாறிக்கொள்ள, மீள்வரவாகக்கூடும் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகள் புதிய விரல்களை நாடியவாறு… 2. பசி தச்சன் கை உளி செதுக்குவதும் பிச்சைப்பாத்திரத்தை நிரப்பக்கூடும் அன்னதானங்களால் ஆகாதவாறு ஒன்றாகவும் பலவாகவும் ஆகிய காதலே போல் அவரவர் பசியும் அவரவருக்கேயானதாக. 3.உயிர் வெல்லம்; அல்ல- வெண்கலம்; இன்னும்- வெங்காயம்; […]
‘கோவலன் கொலையுண்டான்’ செய்தி வந்ததும் காற்று மௌனித்து அஞ்சலி செலுத்தியது. * * * * * * * இரவுக்கு வெள்ளையடிக்க நிலவு பொழிந்தாலும் -தேச இருட்டுக்கு அஞ்சி காரைபெயர்ந்த குடிலுக்குள்-அவள் கந்தல் சாக்கிலே சுருண்டுகிடந்தாள். கண்முன் கணவனின் சடலமிருந்தும் அடையாளம் காட்டி அழமுடியாது உணர்வுகளைப் புதைத்திட்ட நேற்றைய அவலத்தில் நொறுங்கியிருந்தாள். * * * * * * * கண்ணகி தேவிக்கு கண்கள் சிவந்தன கூந்தல் அவிழ்ந்து’காற்றில் அலைந்தது முகத்தினில் ரௌத்திரம் தாண்டவம் […]
* வார்த்தைகளின் வேலிப் படலைத் திறந்து வைத்திருக்கிறேன் என் மனவெளியை சூறையாடிக் கொள் நேற்றிரவு உரையாடலின் குளம் இன்னும் தளும்பிக் கொண்டிருக்கிறது அதில் உன் மௌனக் கொக்கு ஒற்றைக் காலில் நி ற் கி ற து.. நீ சுருள் பிரிக்கும் உன் கைத் தூண்டில் முனையில் ஒரு எழுத்து நெளிகிறதே மீன் பிடிக்கவா..? தூ..! கொக்கை விரட்டு கொக்கை விரட்டு..
தினம் தினம் தேடப்படும் நினைவுகளின் வழியே ஊடுருவிசெல்லும் பார்வைகள் அவளுடயதாகின் நேரங்கள் பார்வைக்கு சற்று அப்பாற்பட்டவையாக தோன்றுகின்றன. கரையும் நேரங்களின் கடைசி துளியின் ஓரத்தில் தேடப்படும் அவளின் முகங்கள் ஓவியதீட்டை போலவே இருக்கின்றன கனவா எனும் சொல்லை கூட யோசிக்க நேரமில்லாமல் அவளை பார்கிறேன் மெய்மறப்பது என்பது இதுதானோ., அவள் அருகில் இருப்பதாக பெறப்படும் கற்பனையே அன்றி இது வேறு என்னவாக இருக்ககூடும். இருப்பினும் பார்வைகள் அடிக்கடி அவளை நோக்கியே செல்லும் இது விசித்திரமான நோயாக இருக்க கூடாதென்பதற்காகவே […]
ஹெச்.ஜி.ரசூல் இலைகளும் வேரும் வள்ளியுமாய் விசித்திரத்தை தன் உடலில் பெருக்கிய கொடி ஒவ்வொரு மூச்சின் போதும் காற்றில் மிதந்து மெளனம் காட்டியது. தொற்றிக் கொண்டதொரு பெரண்டையின் தீண்டலில் கசிந்த உதிரம் சிறுபூவாய்விரிந்தது. கமுகந்தைகள் பற்றிப் படரும் நல்லமிளகு கொடிகள் துயரத்தின் வாசத்தை காற்றில் மிதக்கவிடுகின்றன. அதிகாலைப் பனியில் உதிர்ந்த ஒரு கொத்து கறுப்பு பூக்கள் பூமியின் இதழ்வருடி வலிபட முனங்குகின்றன. பனியூறிய மேகங்கள் கவிந்த வேளிமலையின் உருவம் மெல்லத் தெரியத் துவங்கி ஒரு கனவாக உதிர்ந்திருந்தது. […]
* ஒரு கணம் மகிழ்வெனத் திகழ்ந்ததோர் ஒளியென் கனவுகளைப் பிளக்கும் தெளிவற்ற பாதையின் குழியொன்று நகைப்புடன் எனதிந்த பாதையை விழுங்கி விடக்கூடும் பாதங்களின் தீண்டல் பயணிக்கவேண்டிய பாதைகளை நிர்ணயித்துக் கொண்டிருக்க இந்த இருளென்னை மிகவும் அழுத்துகிறது * *** கலாசுரன்
அமீரின் தாத்தா தாடிக்கு வயது எழுபத்தைந்து என்பார் அப்பா. அண்டை வீட்டுத் தாத்தாவின் தாடியலைகளில் மிதப்பது பிடிக்கும் காஷ்மீர் பையனுக்கு. உள்ளே அழுத்தும் துயரங்களைத் தேக்கி வைத்திருக்கும் பள்ளத் தாக்குகளான முகச் சுருக்கங்களுக் கிடையே வெள்ளையருவியாய்த் தொங்கும் தாடி. தாத்தா தன் பேரன் அமீருடன் விளையாடும் போது சிரிப்பார். காஷ்மீர் பையனோ பரமபத விளையாட்டில் பாம்புகளிடையே எப்போதும் உருண்டு கொண்டிருப்பான். “எனக்கும் ஒரு நாள் தாடி வளருமா?” “பரமபத விளையாட்டில் காய்கள் பிழைப்பது பகடைக் காய்கள் […]